Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயம் என்னும் கோவில்…
இதயம் என்னும் கோவில்…
இதயம் என்னும் கோவில்…
Ebook153 pages57 minutes

இதயம் என்னும் கோவில்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் கையில் கரும்பு வைத்திருப்பது போல அழகான கோலம் வரைந்து அதற்கு அழகாக கலர் கொடுத்து நிமிரவும் முதுகு பெயர்ந்தது போல் வலித்தது. தள்ளி நின்று தான் போட்ட கோலத்தை ரசித்து பார்த்த துர்கா... திருப்தியுடன் அனைத்து கலர் பொடி டப்பாக்களையும் எடுத்து அதனிடத்தில் வைத்து விட்டு உள்ளே வர மணி ஐந்தரை...

"ஏய்... துர்கா... கோலம் போட்டு முடிச்சிட்டியா போய் குளிச்சி ரெடியாகி வா... முற்றத்தில்... பொங்கல் வைக்கணுமில்லே" என்றார் பஞ்சவர்ணம். 

"சரிம்மா" என்றவள் குளியலறைக்குள் போக எத்தனிக்க... "நான் குளிச்சதுக்கப்புறம் நீ குளிக்கலாம்" என்றவாறு உள்ளே போன கனகா... திரும்பிப் பார்த்து... 

"ஏண்டி துர்கா வேலைக்கு போயிட்டு வர்ற எனக்கே இவ்ளோ களைப்பு இருக்காது. நீ ஏன் இவ்ளோ தளர்வா தெரியுறே" என்றாள் கனகா. துர்காவின் தங்கை... ஒரு வயது இளையவள். 

"கோலம் போட்டு முகுது விண்டுடிச்சி..." 

"ஏண்டி சும்மா நாலு புள்ளி வைச்சி ஒரு கோலத்தை போட்டா போதாது? இப்படி விடிகாலமே எழுந்து ரொம்ப வேலை செய்யறேன்னு சீன் போடறே?" 

"ஏய்... கனகா... என்னடி பேசறே இன்றைக்கு பொங்கலாச்சே அதான் ஸ்பெஷலா கோலம் போட்டேன்" 

"அதற்கு உனக்கு அவார்டா தரப்போறாங்க" 

"அதுக்கில்லை..." 

"ஏய் கனகா' என்னடி காலங்காத்தாலே... துர்காகிட்டே மல்லுக்கட்டறே... போய் குளிச்சிட்டு வேற வேலை இருந்தா பாரு... துர்கா நீ மேலே போய் குளிச்சிட்டு வா... இவகிட்டே சண்டை போடலைன்னா அவளுக்கு பொழுது போகாதே! ஏதாவது சொல்லி இவளை அழ வைக்கணும். என்றைக்கு தான் அக்கான்னு பாசமா இருக்கப் போறாளோ தெரியலை... ? ரெண்டையும் இதே வயிற்றில்தான் பெற்றேன். இளையவ... எல்லாத்திலும் நான்தான் முதல்ல வரணும்... யாரும் தன்னைத்தான் பாராட்டி, சீராட்டணும்னு... மூத்தவளை மட்டம் தட்டிகிட்டே இருப்பா... சின்ன வயசில் இருந்தே மூத்தவ தன்னைவிட எதிலும் சிறப்பா இருந்திட கூடாதுன்னு அடம்பிடிப்பா... கடவுளே... நீதான் சின்னவளுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்... என்று தனக்குள் பேசிக் கொண்ட பஞ்சவர்ணம்... தன் கணவர் ராஜாமணியை எழுப்பிவிட்டு 'போய் குளிச்சிட்டு வாங்க' என்று அனுப்பி வைக்க... 

அதோ இதோ என்று ஏழு மணிக்குள் பொங்கல் பொங்க... 'பொங்கலோ பொங்கல்' என்று சப்தமிட்டு ஒரு வழியாய், ஆதவனுக்கு படையலிட்டனர். 

'அப்பாடா...' என்று பெரு மூச்சுவிட்டவாறு நின்றிருந்த கனகாவின் கைபோன் ஒலிக்க அதனை எடுக்க விரைந்தாள். 

மாலை மூன்று மணி... "அப்பாடா! அவியல் அபார ருசி வயிறு புடைக்க ஒரு பிடி பிடிச்சாச்சு" என்றவாறு ராஜாமணி ஒரு கரும்பை வெட்டி அதனை சுவைக்கத் துவங்கினார். 

"என்னப்பா வயிறு புடைச்சிடுசின்னு கரும்பை கடிக்க ஆரம்பிச்சாச்சு?" என்ற கனகாவிடம். 

"கரும்பு சாப்பிட்டா நல்லா ஜீரணமாகும்... அதான்... இந்தா இந்த துண்டை எடுத்து நீ கடி" என்றவரிடம்... "ஏங்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எப்போ போறோம்?" என்றவாறு வந்தாள் பஞ்சவர்ணம்.

"நீங்கள் பெண்கள் ரெடியானதும் கிளம்ப வேண்டியதுதான்..."

"சரிங்க" என்றவாறு துர்கா... கனகா இருவரையும்அவசரப்படுத்தினாள்.

"ஏம்மா எல்லா வருஷமும் பொங்கல் அன்று திருச்செந்தூர்தான் போறோம்... இந்த வருஷமாவது குற்றாலம், கொடைக்கானல்னு போலாமே..." 

"அடியேய்... உங்கப்பா வைச்சிருக்கிறது காய்கறிகடை! காலையில் வியாபாரத்தை எப்படி விட முடியும்?" 

"அம்மா இப்படி சொல்றதை முதல்ல நிறுத்து! பொங்கல் நாளாவது அதிகாலையில் புறப்பட்டு போகலாமே என்னப்பா சொல்றீங்க..." 

"வாஸ்தவம்தான் நாம மட்டும் தனியா போறதை விட இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து போனா நன்றாக இருக்கும்." 

"அடபோங்கப்பா நாம போறதைப் பற்றி பேசினா நீங்க... அடுத்தவங்க கூட போறதைப் பற்றி பேசறீங்க..." 

"அப்படியில்லம்மா..."

"அவ சொல்றதில் தப்பில்லைங்க... இப்பல்லாம் பக்கத்து வீட்ல உள்ளவங்க முன்ன மாதிரி இல்ல... நாம பேசினாகூட அவங்களுக்கு பேச நேரமில்லை. அப்படியே நேரம் இருந்தாலும் பேச மனமில்லை... பட்டும், படாமலும்தான் பழகறாங்க... நாமும் அப்படிதான் இருக்க வேண்டியிருக்கு." 

"சரி... இப்ப கோவிலுக்கு போகலாம் கிளம்புங்க... வாடகை காரை வரச் சொல்லியிருக்கேன். இப்ப வந்திடும்" என்று ராஜாமணி சொல்ல அனைவரும் புறப்பட ஆயத்தமாயினர் ராஜமணியும் புறப்பட தன்னறைக்குள் நுழைய... 

வாசலில் வாடகை... கார் வந்து நிற்க... குதூகலத்துடன் திருச்செந்தூர் கிளம்பினர். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223274810
இதயம் என்னும் கோவில்…

Read more from Sundari Murugan

Related to இதயம் என்னும் கோவில்…

Related ebooks

Reviews for இதயம் என்னும் கோவில்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயம் என்னும் கோவில்… - Sundari Murugan

    1

    ஒரு பெண் கையில் கரும்பு வைத்திருப்பது போல அழகான கோலம் வரைந்து அதற்கு அழகாக கலர் கொடுத்து நிமிரவும் முதுகு பெயர்ந்தது போல் வலித்தது. தள்ளி நின்று தான் போட்ட கோலத்தை ரசித்து பார்த்த துர்கா... திருப்தியுடன் அனைத்து கலர் பொடி டப்பாக்களையும் எடுத்து அதனிடத்தில் வைத்து விட்டு உள்ளே வர மணி ஐந்தரை...

    ஏய்... துர்கா... கோலம் போட்டு முடிச்சிட்டியா போய் குளிச்சி ரெடியாகி வா... முற்றத்தில்... பொங்கல் வைக்கணுமில்லே என்றார் பஞ்சவர்ணம்.

    சரிம்மா என்றவள் குளியலறைக்குள் போக எத்தனிக்க... நான் குளிச்சதுக்கப்புறம் நீ குளிக்கலாம் என்றவாறு உள்ளே போன கனகா... திரும்பிப் பார்த்து...

    ஏண்டி துர்கா வேலைக்கு போயிட்டு வர்ற எனக்கே இவ்ளோ களைப்பு இருக்காது. நீ ஏன் இவ்ளோ தளர்வா தெரியுறே என்றாள் கனகா. துர்காவின் தங்கை... ஒரு வயது இளையவள்.

    கோலம் போட்டு முகுது விண்டுடிச்சி...

    ஏண்டி சும்மா நாலு புள்ளி வைச்சி ஒரு கோலத்தை போட்டா போதாது? இப்படி விடிகாலமே எழுந்து ரொம்ப வேலை செய்யறேன்னு சீன் போடறே?

    ஏய்... கனகா... என்னடி பேசறே இன்றைக்கு பொங்கலாச்சே அதான் ஸ்பெஷலா கோலம் போட்டேன்

    அதற்கு உனக்கு அவார்டா தரப்போறாங்க

    அதுக்கில்லை...

    "ஏய் கனகா’ என்னடி காலங்காத்தாலே... துர்காகிட்டே மல்லுக்கட்டறே... போய் குளிச்சிட்டு வேற வேலை இருந்தா பாரு... துர்கா நீ மேலே போய் குளிச்சிட்டு வா... இவகிட்டே சண்டை போடலைன்னா அவளுக்கு பொழுது போகாதே! ஏதாவது சொல்லி இவளை அழ வைக்கணும். என்றைக்கு தான் அக்கான்னு பாசமா இருக்கப் போறாளோ தெரியலை... ? ரெண்டையும் இதே வயிற்றில்தான் பெற்றேன். இளையவ... எல்லாத்திலும் நான்தான் முதல்ல வரணும்... யாரும் தன்னைத்தான் பாராட்டி, சீராட்டணும்னு... மூத்தவளை மட்டம் தட்டிகிட்டே இருப்பா... சின்ன வயசில் இருந்தே மூத்தவ தன்னைவிட எதிலும் சிறப்பா இருந்திட கூடாதுன்னு அடம்பிடிப்பா... கடவுளே... நீதான் சின்னவளுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்... என்று தனக்குள் பேசிக் கொண்ட பஞ்சவர்ணம்... தன் கணவர் ராஜாமணியை எழுப்பிவிட்டு ‘போய் குளிச்சிட்டு வாங்க’ என்று அனுப்பி வைக்க...

    அதோ இதோ என்று ஏழு மணிக்குள் பொங்கல் பொங்க... ‘பொங்கலோ பொங்கல்’ என்று சப்தமிட்டு ஒரு வழியாய், ஆதவனுக்கு படையலிட்டனர்.

    ‘அப்பாடா...’ என்று பெரு மூச்சுவிட்டவாறு நின்றிருந்த கனகாவின் கைபோன் ஒலிக்க அதனை எடுக்க விரைந்தாள்.

    மாலை மூன்று மணி... அப்பாடா! அவியல் அபார ருசி வயிறு புடைக்க ஒரு பிடி பிடிச்சாச்சு என்றவாறு ராஜாமணி ஒரு கரும்பை வெட்டி அதனை சுவைக்கத் துவங்கினார்.

    என்னப்பா வயிறு புடைச்சிடுசின்னு கரும்பை கடிக்க ஆரம்பிச்சாச்சு? என்ற கனகாவிடம்.

    கரும்பு சாப்பிட்டா நல்லா ஜீரணமாகும்... அதான்... இந்தா இந்த துண்டை எடுத்து நீ கடி என்றவரிடம்... ஏங்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எப்போ போறோம்? என்றவாறு வந்தாள் பஞ்சவர்ணம்.

    நீங்கள் பெண்கள் ரெடியானதும் கிளம்ப வேண்டியதுதான்...

    சரிங்க என்றவாறு துர்கா... கனகா இருவரையும்அவசரப்படுத்தினாள்.

    ஏம்மா எல்லா வருஷமும் பொங்கல் அன்று திருச்செந்தூர்தான் போறோம்... இந்த வருஷமாவது குற்றாலம், கொடைக்கானல்னு போலாமே...

    அடியேய்... உங்கப்பா வைச்சிருக்கிறது காய்கறிகடை! காலையில் வியாபாரத்தை எப்படி விட முடியும்?

    அம்மா இப்படி சொல்றதை முதல்ல நிறுத்து! பொங்கல் நாளாவது அதிகாலையில் புறப்பட்டு போகலாமே என்னப்பா சொல்றீங்க...

    வாஸ்தவம்தான் நாம மட்டும் தனியா போறதை விட இரண்டு மூன்று குடும்பங்கள் சேர்ந்து போனா நன்றாக இருக்கும்.

    அடபோங்கப்பா நாம போறதைப் பற்றி பேசினா நீங்க... அடுத்தவங்க கூட போறதைப் பற்றி பேசறீங்க...

    அப்படியில்லம்மா...

    அவ சொல்றதில் தப்பில்லைங்க... இப்பல்லாம் பக்கத்து வீட்ல உள்ளவங்க முன்ன மாதிரி இல்ல... நாம பேசினாகூட அவங்களுக்கு பேச நேரமில்லை. அப்படியே நேரம் இருந்தாலும் பேச மனமில்லை... பட்டும், படாமலும்தான் பழகறாங்க... நாமும் அப்படிதான் இருக்க வேண்டியிருக்கு.

    சரி... இப்ப கோவிலுக்கு போகலாம் கிளம்புங்க... வாடகை காரை வரச் சொல்லியிருக்கேன். இப்ப வந்திடும் என்று ராஜாமணி சொல்ல அனைவரும் புறப்பட ஆயத்தமாயினர் ராஜமணியும் புறப்பட தன்னறைக்குள் நுழைய...

    வாசலில் வாடகை... கார் வந்து நிற்க... குதூகலத்துடன் திருச்செந்தூர் கிளம்பினர்.

    2

    "ஏய்... அண்ணா... என்ன இது கண்ணாடி முன்னே மூணுமணி நேரமா நிற்கிறே! நாம என்று பெண் பார்க்கவா போறோம்? இப்படி ஒரேயடியாய் அலங்கரிச்சுக்குறே!" என்று காயத்ரி கலாய்த்தாள்.

    குமணனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...

    ஏய்... வாயாடி... நான் என் அறையில் என்னவோ செஞ்சிட்டுப் போறேன் உனக்கென்ன வந்தது... இங்கே வந்து என்னை வேவு பார்க்காம உன்னால் இருக்க முடியாது இல்ல… என்றவாறு அவளது காதை பிடித்து திருக...

    ஆ... வலிக்குது... விடுண்ணா... ஐயோ... அம்மா... காப்பாத்து என்று அவள் போட்ட கூச்சலில் ஓடி வந்தாள் காமாட்சி... என்னடி இது கலாட்டா...

    அம்மா இந்த அண்ணனை நல்லா திட்டும்மா... என் காதை பிடித்து திருகியதில் காதே கையோடு வந்திடும் போல வலியில் உயிர் போகுது...

    என்னடா குமணா...!

    அவதான் என்கிட்டே வம்புக்கு வர்றா... நானில்லே...

    டேய்... அவ சின்னப் பொண்ணு... உன்னை ஆசையா கலாய்க்கிறா... இதுக்கு போய் அவளுக்கு வலிக்கிற மாதிரி கிள்ளறே...

    சரிம்மா... தாயே... இந்தக் குட்டி பிசாசை இந்த அறையில் இருந்து கூட்டிட்டுப் போ...

    ஏண்டி... எப்போதும் கலாட்டாதானா...? பள்ளிக்கு போகணும்ல சாப்பிட்டுட்டு கிளம்புற வழியை பாரு...

    ம்ம்... முதல்ல இடத்தை காலி பண்ணு என்று குமணன் கூறவும். அவனிடம் பழிப்பு காட்டியவள்... அவன் திரும்பவும் காதை பிடிக்க வர அவன் கையில் சிக்காமல் சிட்டாய் பறந்து ஓடி விட்டாள்.

    என்ன காமாட்சி டிபன் ரெடியா? என்றவாறு சாப்பாட்டு டேபிள் முன் வந்து அமர்ந்த மகேஷ்வரன் கேட்டார்.

    ஆமா... காயத்ரி பள்ளிக்கூடம் போயிட்டாளா?

    ம்ம்... இப்பதான் போறா... என்றவள் சாப்பாட்டு மேஜையில் இட்லி... சட்னியை கொண்டு வைக்க... தட்டில் எடுத்து போட்டு சாப்பிட துவங்கினார் மகேஷ்வரன்.

    என்ன காமாட்சி உன் அருமை புத்திரன் சாப்பிட்டானா? என்று கேட்கவும்... அப்போது தான் அங்கு வந்த குமணன் அருகில் வந்து அமர்ந்தான்.

    நான் இன்று விடுமுறை எடுத்திருக்கேன். என் நண்பர் சங்கர் திருமணம்

    ஓ... அப்படியா... சரி தர்மதுரை வர்றானா

    ஆமாம்பா நாங்க ஒரே செட்டுதானே...

    ம்ம்... தர்மனை நினைச்சாதான் கவலையா இருக்கு... இங்கே நம்ம வீட்டுல தங்கிக்கன்னு கூப்பிட்டாதன் வீட்டை விட்டு வர மறுக்கிறான் ம்க்கும்... அவனுக்கு அனாதையா இருக்கத்தான் ரொம்பபிடிச்சிருக்கு என்றாள் காமாட்சி.

    ஏய்... காமாட்சி... அவனை அனாதைன்னு சொல்லாதே

    ம்க்கும்... சின்ன வயசிலேயே தகப்பனை இழந்தவன். சமீபத்தில்தன் தாயையும் முழுங்கிட்டு தனிமரமா நிற்கிறான் அவனை அனாதைன்னு சொல்லாம்... வேறென்ன சொல்றது?

    அவனோட சித்தப்பா நானிருக்கேனே!

    அடேங்கப்பா... நாமதான் அவனை மகனா நினைக்கிறோம்... அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு கூட இருக்கிற மாதிரி தெரியலை... அம்மாக்காரி செத்ததும் நீங்க எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேட்டானா... இங்கே வர்றேன்னு சொன்னானா?

    அவன் அப்பா வாழ்ந்த இடம்... அவனும், அவன் அம்மாவும் பார்த்து, பார்த்து கட்டின வீட்டை விட்டு வர மனசில்லே... இருந்துட்டுப் போறான். உனக்கும் நல்லதுதானே பண்ணியிருக்கான்... இல்லைன்னா அவனுக்கும் சேர்த்துல்ல நீ சமைக்கணும்...

    ஆமாமா... ரொம்பதான் என் மேல கரிசனம்

    அவன் அப்படி என்னடி உனக்கு கெடுதல் செய்தான்? அவனைக் கண்டாலோ... அவனது பேச்சை எடுத்தாலோ உனக்கு எரிச்சல் வருது?

    ம்ம்... அப்படியே அவனோட அம்மாவைக் கொண்டு பொறந்திருக்கான்... குணமும். அவளைப் போலவே... அதே போலதான் ராசியும்... அவ முகத்தில் முழிச்சா... நரி முகத்தில் முழிச்ச மாதிரி...

    ஏய்... நிறுத்து. விட்டா ஓவரா பேசிட்டுப் போறே... என் அண்ணியோட ராசிக்கு என்ன கொறைச்சல்...?

    உம் கல்யாணமான உடனே... உங்கண்ணனை அழைச்சிட்டு தனியா போயிட்டா... ஐந்தே வருஷத்திலே அவரை வாரிக் குடுத்திட்டு சின்னப் பிள்ளையோட தனியா நின்னா... இப்போ பையனுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிப்பார்க்கிற நேரத்திலே மார்வலியில் போய் சேர்ந்திட்டா... இந்த ராசிதான் இந்தப்பய தர்மதுரைக்கும்

    "அவனுக்கென்ன... அரசாங்க வேலை பார்த்துகிட்டு ராசா கணக்கா தோட்டம், துறவுன்னு பார்த்திட்டு இருக்கான். பெரிசா

    Enjoying the preview?
    Page 1 of 1