Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalin Jaadaiyellam Kannazhagile...
Kaadhalin Jaadaiyellam Kannazhagile...
Kaadhalin Jaadaiyellam Kannazhagile...
Ebook123 pages44 minutes

Kaadhalin Jaadaiyellam Kannazhagile...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மானசா, திலகன் இருவரும் காதலர்கள். மானசா, திலகன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த அன்பால் திலகன் மானசாவை வெறுக்க ஆரப்பித்தான். இவர்கள் இருவரின் காதல் மானசாவின் அப்பாவிற்கு தெரிய, அவருடைய அக்கா வீட்டிற்கு அனுப்பி, அக்கா பையன் பிரவீனை கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். இவர்கள் நினைத்தது போன்று, மானசா பிரவீன் இணைந்தார்களா? இல்லை, மானசா திலகன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை காண்போம்!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580140610868
Kaadhalin Jaadaiyellam Kannazhagile...

Read more from R. Manimala

Related to Kaadhalin Jaadaiyellam Kannazhagile...

Related ebooks

Reviews for Kaadhalin Jaadaiyellam Kannazhagile...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalin Jaadaiyellam Kannazhagile... - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே…

    Kaadhalin Jaadaiyellam Kannazhagile...

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-1

    எப்பவாவது மாமியார் வீட்டுக்கு வந்துச் செல்லும் மருமகனைப் போல கதிரவன் வந்திருந்தான். என்னதான் ஆக்ரோஷம் காட்ட முயன்றாலும்... அவனின் வீச்சு மூணாறின் கிளைமேட்டின் முன் எடுபடவில்லை.

    பேரிக்காய், பலா மரங்களின் இண்டு இடுக்குகளின் வழியே நுழைந்து... தரையில் தங்கக் காசுகளாய் சிதறியிருந்தது... சன்னமான சூரியக் கதிர்கள்.

    தோட்டம் முழுக்க ரம்மியமான சூழ்நிலை.

    பங்களாவின் எதிரே கார் செல்ல பாதை விட்டு இரு பக்கமும்... அந்த ஊரின் சீதோஷ்ணத்திற்கு ஏற்றபடி வளரும் அத்தனை மரம், செடி, கொடிகளும் வளர்ந்திருந்தன.

    சற்று தூரத்தில் மழை மேகத்தை சுமந்து வந்து கொண்டிருந்தனக் குளிர்காற்று! அதை சங்கடமாய் பார்த்து முகம் கருத்தான் சூரியன்.

    வாசுதேவன்... உதட்டிற்கிடையே சிகரெட்டை கவ்விக் கொண்டிருந்தார். புகையை வளையம் வளையமாக விடும் மூடில்லாததால் ஊதித் தள்ளிக்கொண்டிருந்தார்.

    மரங்களினூடே யோசித்தபடி நடந்தார்.

    உயரமாய் வளர்ந்திருந்த மரத்தை அணைத்தபடி மிளகுக்கொடி படர்ந்திருந்தன.

    பத்துக்கு பத்தடி நிலத்தில் வனஜா ஆசையாய்ப் பயிரிட்டிருந்த காபிச் செடியில் காபி கொட்டைகள் சிறு திராட்சையைப் போல் சிவந்துக் காய்த்திருந்தன.

    அதன் அடிவேரில் சட்டென அசைவு தென்பட... சிகரெட்டை காலடியில் போட்டு நசுக்கி உற்று கவனித்தார்.

    சிவப்பு கலரில் பாம்பு!

    காபி செடியின் வாசனைக்கு அடிக்கடி வந்து வாசம் செய்பவைதான்.

    விஷம் உள்ளதோ, அல்லாததோ! பாம்பு பாம்பு தானே?

    இயல்பான பதற்றம் தொற்றிக்கொள்ள...மாரிமுத்து... மாரிமுத்து... டேய் மாரி...!சத்தமாய் அழைத்தார்.

    எங்கிருந்தோ முளைத்து... அவர் எதிரே வந்து நின்ற மாரிமுத்து விடமிருந்து வடகறி வாசனை மோதியது.

    சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பான் போல...

    ஐம்பது வயதைத் தாண்டியவன். இருபது வருடங்களாய் இங்கே வேலை செய்பவன்.

    ஐயா...!

    அங்கே பார்... காபி செடிக் கீழே...!

    பார்த்தவன் கண்கள் விரிந்தது.

    பாம்...பு!

    இந்த காபிச் செடி வேணாம்னாலும் கேக்கிறாளா? வீட்டுக்குள்ளே எதுக்கு? அதான் தனியா, காபி, டீ எஸ்டேட்லாம் வச்சிருக்கோமே! அடிச்சு போட்ருவியா? ஆளை வர வைக்கவா?

    ரெண்டு நாள் முன்னாடிக் கூட வந்துச்சே? அடிச்சுப் போட்டேனே... வாரம் ஒரு முறையாவது வருதுங்களே... இதுக்கு எதுக்கு ஆள்?

    இல்லே... பாம்பை கொல்லக்கூடாது. ஃபோன் பண்ணா அவங்களே பிடிச்சுப் போய் காட்டுல விட்ருவாங்க!

    ஐயா... இந்தக் குளிர் பிரதேசத்தில வீட்டுக்கு வீடு அவங்க அவங்க இருக்கிற இடத்தைப் பொறுத்து சின்னதோ, பெருசோ தோட்டம் போட்டுக்கிறாங்க. இந்த ஊர்ல பாம்புகளும் அதிகம். வீடு தேடி நிறைய வருதுங்க. நாம ஆள் வர வைக்கிற வரைக்கும் சில விஷப்பாம்புகள் காத்திருக்கிறதில்லைங்கய்யா! பாம்பை விட மனுஷங்க உயிர் பெரிசு!

    எனக்கே பாடம் சொல்லித்தர்றே!நக்கலாய் சிரித்தார்.

    ஐய்யய்யோ... அப்படியெல்லாம் இல்லைங்கய்யா!

    சரி... சரி... சீக்கிரம் வேலையை முடி. வெளியே கிளம்பணும்!

    இதோ... இப்பவே...!

    அப்படியே... பழுத்து கீழே விழுந்து கிடக்கிற பலாப்பழத்தையெல்லாம் யாருக்காவது எடுத்துக் குடுத்துடு. அதை சாப்பிட யானை வந்துவிடப் போகுது!

    ***

    உள்ளே நுழைந்தவர் எதிரே வனஜா வந்தாள்.

    எங்கே போயிட்டீங்க அதுக்குள்ளே? டிபன் ரெடியாயிருக்கு!

    தோட்டத்துல...!

    குப்பென்று மோதிய புகை நாற்றத்திற்கு மூக்கைப் பொத்திக் கொண்டாள்.

    சிகரெட் பிடிச்சிங்களா? டாக்டர் அறவே இந்த பழக்கத்தை விடணும்னு சொல்லியும்...!

    உடனே விட்ற முடியுமா சொல்லு? கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு தானே வர்றேன்? சரி இதை விடு... இந்த காபி செடியெல்லாம் வீட்ல வளர்க்க வேணாம்னு சொல்றேன். கேட்டா தானே? இப்பவும் பாரு... பாம்பு வந்திருக்கு!

    கடவுளே... மாரிமுத்து இருக்கான்ல?

    மாரிமுத்துக்கெல்லாம் காத்திருக்காம ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுச்சுன்னா அப்ப தெரியும் உனக்கு?

    பயமுறுத்தாதீங்க... காபிச்செடின்னு இல்லே... தோட்டம்னு இருந்தாலே... அதுங்க வரத்தான் செய்யும். வராத அளவுக்கு ஏதாவது வழியிருக்கான்னு என் சித்தப்பா கிட்ட கேக்கறேன். அவர் அக்ரிகல்ச்சர் ஆபீஸரா இருந்தவராச்சே!

    அப்பக் கூட அந்த செடிய கழிச்சிடலாம்னு வார்த்தை வருதா பாருசலித்துக் கொண்டார்.

    ஏங்க... இப்ப இந்த விஷயமா முக்கியம்? நானே மானசாவை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன்.என்ற வனஜா பணக்கார பெண்மணிக்கே உரிய தோரணையுடன் இருந்தாள்.

    சாப்பிட்டாளா?

    இன்னும் ரூம்லேர்ந்து வரலே. லக்கேஜ் மட்டும் செல்வி எடுத்துட்டு வந்துட்டா.அவள் கைகாட்டிய இடத்தில் மூன்று பெரிய சூட்கேஸ் அமர்ந்திருந்தது.

    கூப்பிடு அவளை... சாப்பிடலாம்!வாசுதேவன் டைனிங் டேபிள் நோக்கிச் சென்றார்.

    வனஜா மகளை அழைக்க முற்பட, அவளே படியிறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

    பளிங்குப் போன்ற முகத்தில்... மறைக்க முயன்றும் வேதனை அப்பிக் கிடந்தது.

    இருவரையும் பார்த்துவிட்டு மௌனமாய் அமர்ந்தாள்.

    அவளே தனக்கு தட்டு எடுத்து வைத்துக்கொண்டு பீங்கான் பாத்திரத்தின் மூடியைத் திறந்தாள்.

    இரு...நான் வைக்கிறேன்!வனஜா அவள் தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்ற... மானசா தடுத்தாள்.

    சாம்பார் வேண்டாம்... கொஞ்சமாய் சட்னி!

    சிறு விள்ளலை மெல்ல மென்று... விழுங்கும் போது தொண்டை வலிக்க... முகம் சுருங்கியது மானசாவிற்கு.

    தேவையா இதெல்லாம்? யாரோ ஒருத்தனுக்காக!வாசுதேவனுக்கு கோபம் கொப்பளித்தது.

    ப்ச்!வனஜா கணவனை கண்களால் கெஞ்சினாள்.

    ‘இந்த நேரத்தில் இந்த பேச்சு அவசியமா?’என்பது போல.

    முடியலை வனஜா! பார்த்து பார்த்து வளர்த்த நம்மளை பத்திக் கவலைப்படாம, எவனோ ஒரு பொறுக்கிக்காக சாகத் துணிஞ்சவளை கொஞ்சவா முடியும்? பொழைப்பாளா, மாட்டாளான்னு ஹாஸ்பிடல்ல நாம துடிச்சோமே... அதை இப்ப நினைச்சாலும் உயிர் போய் உயிர் வருது! இப்ப வரை அவளால சரியா சாப்பிட முடியுதா, முழுங்க முடியுதா பார்!வார்த்தையில் உஷ்ணம் குறைந்தபாடில்லை.

    சரிங்க... இப்ப பழசையேப் பேசி என்னாகப்போகுது? அவதான் தன் தப்பை உணர்ந்துட்டாளே! திரும்ப பேசி சங்கடப்படுத்தாம சாப்பிடுங்க!

    இதோ பார் வனஜா! இவகிட்ட சொல்லி வை. என் அக்கா வீட்ல யாருக்கும் இவ கதை தெரியாது. தொண்டை வலிக்கு காரணம் விஷம் குடிச்சது காதலுக்காகன்னு அவங்களுக்குத் தெரிஞ்சது... அப்புறம் நான் விஷம் குடிச்சிடுவேன்... சொல்லிட்டேன்!

    முதல்ல இப்படி அடாவடித்தனமாக பேசுறதை நிறுத்துங்க. வாயில நல்ல வார்த்தை வருதாப்பாருங்க. எல்லாம் மானசாவுக்குத் தெரியும். நாம சொல்லணும்ங்கற அவசியமில்லை. என்ன மானசா... புரியுதுல்லே?

    மானசா தட்டிலிருந்து கண்களை அகற்றவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1