Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Podhu Nalam Ponnusamy
Podhu Nalam Ponnusamy
Podhu Nalam Ponnusamy
Ebook265 pages1 hour

Podhu Nalam Ponnusamy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பொதுநலம் பொன்னுசாமி' என்னும் இந்த நாவல் தலைப்பில் வரும் 'பொன்னுசாமி' என்பவர்தான் கதையின் நாயகன். பொதுநல விரும்பியான இவர் நல்லது செய்யப்போய் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சிரிக்க சிரிக்க சொல்லிருக்கிறார் நாவலாசிரியர் கோவை அனுராதா அவர்கள். தனது மனைவியை கிண்டல்செய்வதும், எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் இருந்து வெளிவர யோசித்து செயல்படுத்துவதிலும் பொன்னுசாமியின் அறிவுத்திறன் படிப்பர்களுக்கு சிரிக்கவும், சுவாரசியம் ஏற்படுத்துவதற்கும் நாவல் முழுக்க பல விஷயங்கள் நிறைந்திருக்கிறது. எனவே, படிக்க ஆரம்பித்தால் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமா அப்படியானால் நிச்சயம் 'பொதுநலம் பொன்னுசாமி'யை படியுங்கள்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136906116
Podhu Nalam Ponnusamy

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Podhu Nalam Ponnusamy

Related ebooks

Related categories

Reviews for Podhu Nalam Ponnusamy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Podhu Nalam Ponnusamy - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    பொதுநலம் பொன்னுச்சாமி

    Podhunalam Ponnusamy

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அம்மா… தாயே…! அன்னபூரணி… பசி காதை அடைக்குது… மிஞ்சின டிபன் இட்லி, தோசை ஏதாவது இருந்தா போடுங்கம்மா…

    அம்மா… தாயே…!

    வாசலில் நின்று ஓயாமல் கத்தினான் அந்தப் பிச்சைக்காரன்.

    காலம் கெட்டுப் போச்சுன்னு சும்மாவா சொல்றாங்க… காலம்பற பத்துமணிக்குப் பிச்சைக்கு வந்து நிக்கறான்… அதுவும் இட்லி, தோசை வேணுமாமே… கூத்துதான்! போடா… போ… ஒண்ணும் இல்லே…

    வீட்டினுள் இருந்தபடியே விரட்டினாள் கஜலட்சுமி.

    வெளியே போய் அவனை விரட்ட அவளுக்கு ஆசைதான். ஆனால் அப்போதுதான் தட்டில் இருபது இட்லிகளை வைத்து, பக்கத்தில் மிளகாய்ப் பொடியை நல்லெண்ணையில் குழைத்து வைத்துக்கொண்டு, டைனிங் டேபிளில் உட்கார்ந்தாள். பெரிய உடம்பை அசைத்து எழுந்திருக்க அரைமணி நேரமாவது ஆகும். ஆகையால், வால்யூமை அதிகமாக்கி, வாசலுக்குக் கேட்கும்படி கத்தினாள்.

    வெளியே நின்றவன் விடாக்கண்டனாக இருந்தான்.

    அம்மா… தாயே! இல்லாத பழையதையா கேட்டேன், இருக்கற டிபனைத்தானே கேக்கறேன்… போற வழிக்கு புண்ணியமாப் போகும்… கொஞ்சம் போடு தாயே…

    கஜலட்சுமிக்கு எரிச்சலாக வந்தது.

    வெள்ளிக்கிழமையும் அதுவுமாக, கோலம் போட்ட வாசலில் வந்து நின்று, போற வழி, போற வழி என்கிறானே நாசமாய்ப் போக…

    இங்க பாருப்பா… நான் இப்போதைக்கு போடப் போறதில்லே… போய்ச்சேரு…

    அப்படிச் சொல்லாதீங்கம்மா… மூணு நாளா காணாமல் போன உங்க வீட்டுக்காரர் திரும்பி வந்துடுவார். தாயே… தருமம் பண்ணுங்க… இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே… இட்லி செஞ்சிருப்பீங்களே… ஒரே ஆள் இருபது இட்லி தின்னா உடம்புக்கு ஆகாது… எனக்கு நாலு போடுங்க தாயே… சாம்பார் வேணுமானா பக்கத்து ஓட்டல்ல வாங்கிக்கறேன்…

    கஜலட்சுமிக்கு வாயில் போட்ட ஒரு இட்லி உள்ளேயும் போகாமல், வெளியேயும் வராமல், சிக்னலில் ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவைப் போல தவித்தது.

    ‘இவன் என்ன பிச்சைக்காரனா… இல்லை… முக்காலத்தையும் உணர்ந்த ஞானியா? அப்படியே வீட்டில் நடக்கும் விவகாரங்களைச் சொல்லுகிறானே…?’

    வீட்டை விட்டுப் போன அவளின் கீழ்படிந்த கணவன் பொதுநலம் பொன்னுச்சாமியை நினைத்ததும் அவளுக்கு பொத்துக்கொண்டு வந்தது. எதிர்கடைக்குப் போய் கருவேப்பிலை வாங்கி வரச் சென்றாலும், கஜா… போயிட்டு வரேன் கஜா போயிட்டு வரேன்… என்று சங்கீதமாகச் சொல்லிவிட்டுத்தானே செல்வார்…

    அப்படிப்பட்டவர் மூணு நாளாகக் காணாமல் போய்விட்டார். போலீஸ் ஸ்டேஷன் ஆஸ்பத்திரி என்று ஒரு இடம் விடாமல் தேடியாய் விட்டது. பொன்னுச்சாமி போனதிலிருந்து கஜலட்சுமிக்கு சாப்பாடே பிடிப்பதில்லை. நாலு வேளையும் டிபனே தின்று காலத்தை ஓட்டிவந்தாள். அப்படிப்பட்ட கணவனைப்பற்றி ஏதோ ஒரு பிச்சைக்காரன் துப்பு சொல்கிறான் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்…!

    மெதுவாக ஒரு கையை ஊன்றிக்கொண்டு எழுந்தாள், சர்க்கஸ் யானையைப் போல வாசலுக்கு ஓடினாள். அவள் நடந்தாலே ஓடுவது போலத்தான் இருக்கும்.

    வாசற்கதவைத் திறக்காமல் பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியே வந்திருப்பவர் யாரென்று எட்டிப் பார்த்தாள்.

    அம்மா… தாயே… சோதிக்கிறீங்களே, நாலு வீடு போகணும்மா…

    அவன் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். தலையை மொட்டை அடித்து, குல்லாய்போட்டது போல, முழுவதும் சந்தனம் பூசியிருந்தான். ஈரம் கூட காயவில்லை, நேராகப் பழனியிலிருந்து வருகிறான் போல இருக்கிறது.

    இந்த மொட்டைத்தலையன் எப்படி குடும்ப சமாச்சாரத்தை அப்படியே சொல்கிறான்?

    கண்களை ஆச்சர்யத்தால் அகல விரித்தபடி, கதவைத் திறந்தாள் கஜலட்சுமி.

    ஏம்ப்பா… உன்னைப் பார்த்தா பரதேசி மாதிரி இருக்கே… எங்க வீட்டுக்காரர் தொலைஞ்சு போன விஷயம் எப்படித் தெரிஞ்சது… அவரை எங்கயாவது சந்திச்சியா…? நான் டி.வியில் காணாமல் போன அறிவிப்புல கூட குடுக்கலையே…

    ஹ்… ஹா… ஹா… ஆ… ஹா… ஹா… நடந்தது… நடப்பது… நடக்கப் போவது அனைத்தும் யாம் அறிவோம்… நான்தான் சுருட்டி மலைப் பள்ளத்தாக்கு பால்குடி சாமியார்…

    கன்னத்தில் போட்டுக்கொண்டாள் கஜலட்சுமி.

    லால்குடியில் அவளுக்குத் தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். இது என்ன புதுசா… பால்குடி சாமியார்?

    உற்றுப் பார்த்தாள். எங்கேயோ பார்த்த முகம்தான்! இந்த காவிப்பல் சிரிப்பு ரொம்பப் பழக்கமானது தான்…

    சாமீ… உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்… ஞாபகம் வரமாட்டீங்குது.

    நெற்றியைச் சுருக்கினாள். இல்லாத மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டாள்.

    நினைவுக்கு வரவில்லை.

    மொட்டைத் தலைச் சாமியார் அவளை இன்னும் ஓரடி நெருங்கினான்.

    கஜலட்சுமி… என்னைத் தெரியவில்லையா…? நன்றாகப் பார்… என்னை உற்றுப் பார்…

    காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அழகிய மனைவியை சாமியார் ஒருவன் மெஸ்மரிசம் செய்து கடத்திக்கொண்டு போய் விட்டானாம்.

    நேற்றுத்தான் பத்திரிகையில் படித்தது கஜலட்சுமிக்கு நினைவுக்கு வந்தது.

    ஆனால் தன்னை ஒருவன் அவ்வளவு எளிதாகக் கடத்திக்கொண்டு போக முடியாது, என்பது அவளுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அந்த நம்பிக்கையையும் மீறி, உடல் முழுவதும் நீர்யானை போல வியர்க்க ஆரம்பித்தது.

    தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டே பின்வாங்கினாள்.

    ஏய்… யார் நீ… எங்க வீட்டுக்காரர் இல்லாத நேரம்… பசங்களும் ஆபீஸ் போயிட்டாங்க… சாமியார் மாதிரி வந்து வம்பா பண்றே…? ஏதோ வந்ததுக்கு ரெண்டு இட்லி சட்னி வச்சி தந்து தொலைக்கிறேன்… போய்ச் சேரு… இல்லே… போலீசுக்கு போன் பண்ணுவேன்…

    கஜா… போலீஸ் என்ற வார்த்தையை உபயோகித்ததும் மொட்டைத் தலையன் உஷாரானான்.

    ஏய்… கஜா… அப்படி பின்னாலேயே போயி தடுக்கி விழப்போற… நின்ன வாக்குலேயே விழுந்துவச்சே… கல்யாண பூசணிக்காய் மாதிரி உடைஞ்சு போவே… என்னைக் கூடவா அடையாளம் தெரியலே… முண்டம்…

    இந்தக் குரல்… சிரித்தபோது தெரிந்த காவிப்பல்… இப்போது அவளுக்கு அடையாளம் தெரிந்தது.

    அட… நீங்களா…? எவ்வளவு திறக்க முடியுமோ அவ்வளவும் திறந்து தன் ஆச்சர்யத்தை வெளிக்காட்டினாள்.

    ஆமா… ஆமா… நானேதான்… வாயை ரொம்ப அகலமா திறக்காதே… சாக்கடைக் கொசுவெல்லாம் உள்ள போயிடப் போகுது… உள்ள வா…

    தொலைந்து போயிருந்த கணவன் மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்ததும் கஜலட்சுமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    சரி… சரி… உள்ளே வாங்க என்றாள் ஆனந்தக் கண்ணீருடன்.

    என்ன அண்ணே… பொன்னுச்சாமிண்ணே… எங்க போயிட்டீங்கண்ணே…?

    வீட்டிற்குள் நுழையப்போன பொன்னுச்சாமியை வெண்கலக் குரல் தடுத்து நிறுத்தியது.

    சைக்கிள் ஹேண்டில் பாரில் இரண்டு கோழியைத் தலைகீழாகத் தொங்கவிட்டபடி, வீட்டு வாசற்படியில் வந்து காலை ஊன்றினான் சலூன் கடை ஏழுமலை.

    பொன்னுச்சாமியின் நெருங்கிய நண்பன்.

    ஏய்யா… நான் லண்டனுக்கா போயிட்டு வரேன்… இப்படி ஆளு ஆளுக்கு குசலம் விசாரிக்கிறீங்களே…

    அதுசரி… இந்த வட்டாரத்துல பொதுநலம் பொன்னுச்சாமியைத் தெரியாத ஆளு யாரு…? எத்தனையோ காணாம போன புள்ளைங்களை கண்டுபிடிச்சிக் குடுத்த நீங்களே மூணு நாளா காணாம போனா ஒருமாதிரியாத்தானே இருக்கும்ணே.

    ஏழுமலை சொல்வது உண்மைதான். இந்த வட்டாரத்தில் பொன்னுச்சாமியைத் தெரியாதவர்கள் அதிகமாக இருக்க முடியாது. எந்தப் பொதுக் காரியத்திலும் அவரைப் பார்க்கலாம். இந்தக் காலத்திலும் சம்திங் எதிர்பார்க்காமல், பொதுப் பணத்தை சுரண்டாமல், தேர்தலுக்கும் நிக்காமல் மாடு மாதிரி உழைக்கும் ஒரு ஏமாளி.

    நான் முப்பது வருடங்களாகப் பழகும் கணவனை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. தூரத்தில் சைக்கிளில் வரும்போதே ஏழுமலை அடையாளம் தெரிந்துகொண்டு விட்டானே…?

    ஏம்ப்பா… எனக்கே ஐயாவை அடையாளம் தெரியலே? நீ என்னடான்னா தூரத்திலே இருந்து வரும்போதே கண்டுபிடிச்சிட்டாயே…? எப்படி?

    கஜலட்சுமி ஆர்வத்துடன் கேட்டாள்.

    இது ஒரு அதிசயமாடீ… அவன் ஒரு நாளைக்கு என்னைப்போல எத்தனை மொட்டைகளை கடையில் பார்க்கிறான்… இல்லே ஏழுமலை.

    ஆமா… பொன்னுச்சாமிண்ணே… எங்கே போனீங்க… பழனிக்கா?

    நான் எதுக்கு பழனிக்குப் போகணும்…? பிரார்த்தனையா என்ன? சொன்ன வாக்கை காப்பாத்தறதுக்காக திருநீர்மலைதான்… அதுதானே போட்டி…

    போயும்… போயும் - பொறம்போக்கு ஒருத்தன்கிட்ட பந்தயம் கட்டி இப்படி முடியைத் துறந்து நிக்கறீங்களேண்ணே…

    சிரிப்பை அடக்கிக்கொண்டான் ஏழுமலை.

    பொறம்போக்கு… பந்தயம்… என்ன சொல்றே ஏழுமலை? புரியாமல் கேட்டாள் கஜலட்சுமி.

    அப்போதுதான் பொன்னுச்சாமி இது விஷயமாக வீட்டில் ஒன்றுமே சொல்லவில்லை என்று அவனுக்குப் புரிந்தது.

    விஷயத்தை வெளியே சொல்லி, குட்டை உடைத்து விட்டோமே என்று அசடு வழிந்தான்.

    "அது ஒண்ணும் இல்லம்மா… நம்ம கசாப்புக்கடை கந்தசாமி எலெக்‌ஷன்ல நின்னாரே…

    கழுதைப்பொட்டி கந்தசாமி…

    ஆமா… அவரேதான்… அவரு பொன்னுச்சாமி அண்ணனுக்கு வேண்டியவரு… கந்தசாமிதான் ஜெயிப்பார்னு அண்ணன் பொட்டிக்கடை நாடார்கிட்ட பந்தயம் கட்டினாரு… ஜெயிச்சா பிரியாணி… தோத்தா மொட்டை…"

    ஐயையோ… தோத்துட்டாரா?

    நீ வாயைத் திறக்காதடீ… உன்னோட அரசியல் அறிவைப் பார்த்து ஊர் ஜனங்க பாராட்டு விழா எடுத்துடப் போறாங்க… ஆளைப்பாரு… தேர்தல் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு… தோத்துட்டாரான்னு மெதுவா இழுக்கறா… இந்த மாதிரி ஆளுங்க ஓட்டுப் போடறதுனாலதான் ஜனநாயகம் இந்த நொண்டு நொண்டுகிறது…

    கந்தசாமிக்கு டெபாசிட்டே போயிடிச்சேம்மா… அதுதான் சொன்ன வாக்குப்படி அண்ணன் மொட்டை போட்டுகிட்டாரு…

    நல்லா இருக்கப்பா… தோத்தவன் சுருட்டை முடியோட கார்ல போறான்… ஓட்டுப்போட்டவன் மொட்டைத் தலையோட ரோட்டுல போகணுமா…? அழகுதான்…

    ஏண்ணே… இனிமே ஏதாவது பந்தயம் வச்சா என் கடையிலே வந்து மொட்டை போடறேன்னு போடுங்கண்ணே, எல்லா ஊர் சாமி படமும் கடையிலேயே வச்சிருக்கேன்… அத்தனை சாட்சியாகவும் வச்சி, சுத்தமா எடுத்துவிட்டுடறேன்… வரட்டுமா…?

    ஒரு மாதிரியாகச் சிரித்துக்கொண்டே நகர்ந்தான் ஏழுமலை.

    ஒரு ஆபீஸ்ல வேலை செய்யறீங்க கௌரவமா இருக்காம, இப்படி தேர்தலுக்கெல்லாம் பந்தயம் வச்சி, மொட்டை போடறீங்களே…! இது உங்களுக்கே நல்லாயிருக்கா…?

    தலையில் அடித்துக்கொண்டாள் கஜலட்சுமி.

    நானாவது மொட்டை… போறானே… ஏழுமலை… நாடார்கிட்ட கோழி பிரியாணி பந்தயம் கட்டினான்… அதுதான் சைக்கிள் ஹேண்டில் பார்ல, ரெண்டு கோழி சிரசாசனம் பண்ணிக்கிட்டு போகுது.

    சரி… சரி… உள்ள வாங்க… ரோட்டுல எல்லாரும் உங்க தலையையே வேடிக்கை பார்த்துட்டு போறாங்க… அவமானமா இருக்கு…

    பார்த்துட்டுப் போகட்டுமே… தலையே போனாலும் சொன்ன வாக்கை காப்பாத்துவான் இந்த பொன்னுச்சாமிண்ணு ஊருக்குத் தெரிய வேண்டாம்?

    மொட்டைத் தலையை சாய்த்துக் கண்ணடித்தார் பொன்னுச்சாமி.

    தலையைப் பாரு… சகிக்கலை… ஏதோ தண்ணியில்லாத கிணத்துல தவறி விழுந்த தகர பக்கெட் மாதிரி எவ்வளவு அதுக்கல்… நெளிசல்… வெளியே போறதா இருந்தா ஒரு தொப்பி போட்டுகிட்டு போங்க…

    மேலும் வெளியே நிற்கப் பிடிக்காமல், கணவனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே உள்ளே போனாள் கஜா.

    மனுசன் உடம்புல நெளிவு சுளிவு இருக்கம்ணுடி. அதுதான் அழகு… உன்னை மாதிரி தலையிலே இருந்து கால் வரைக்கும் ஒரே அளவுல இருந்தா பீப்பாய் மாதிரிதான் இருக்கும்.

    கஜலட்சுமியின் உடம்பை ஒரு நாளைக்கு ஒரு தரமாவது கிண்டல் பண்ணாவிட்டால் அவருக்குத் தூக்கம் வராது.

    என்ன செய்வது? கல்யாணத்தின் போது கிள்ளி எடுக்க சதையில்லாமல் இருந்த கஜலட்சுமி இரண்டு குழந்தைகளைப் பெத்து, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குப் பிறகு இப்படி குறுக்கே வளர்ந்துவிட்டாள். ஆனால் முகம் மட்டும் அப்படியே குழந்தைத்தனமாக இருந்தது.

    ஐயா கதிர்போல… அம்மா குதிர்போல… என்பது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும், சட்டை போடாமல், பொன்னுச்சாமியை யாராவது இரவு நேரத்தில் பார்த்தால், பயந்துவிடுவார்கள். அவ்வளவு கட்டுமஸ்த்தான எலும்புக்கூடு திரேகம்.

    பொன்னுச்சாமியின் குடும்ப டாக்டர் மாத்ருபூதம்… இவர் எக்ஸ்ரேயே இல்லாமல், வைத்தியம் செய்வேன் என்று வேடிக்கையாகக் கூறுவார்.

    உள்ளே வந்த கஜலட்சுமி, நேராக டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்துகொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

    சுவர் ஆணியில் தன் கதர்ச் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு, அவள் அருகே வந்து ஆதரவாக உட்கார்ந்தார் பொன்னுச்சாமி.

    ஏய், ஏன் இப்போ அழறே…? நான்தான் வந்துட்டேனே அக்கம் பக்கம் யாராவது நீ அழறதைப் பார்த்தா என்ன நினைப்பாங்க…? பொன்னுச்சாமிதான் பொண்டாட்டியை இந்த வயசுக்கு மேல அடிக்கிறாண்ணு தப்பா நினைக்க மாட்டாங்க?

    தலையைத் தொட வந்த கணவனின் கையைத் தட்டிவிட்டாள் கஜா.

    இங்க பாருங்க… என்னைத் திட்டுங்க… அடிங்க… பொறுத்துக்குவேன்… ஆனா சொல்லாம, கொள்ளாம வீட்டை விட்டுப் போயி மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க.

    கஜா… உண்மையிலே நான் வீட்டை விட்டுப் போனதுல உனக்கு வருத்தமா?

    பின்ன இருக்காதா…? உங்களை நம்பி ரெண்டு லிட்டர் அரிசி ஊற போட்டிருந்தேன். நீங்க போனதுனால நானே ஆட்ட வேண்டியதாப் போச்சு… ரேஷன் கடை க்யூவுல பாமாயிலுக்கு நின்னு இடுப்பே போச்சு…

    சே… இதுக்குத்தான் வருத்தப்பட்டாயா…? சப்பென்று போய்விட்டது அவருக்கு.

    பெட்ரூம்ல நான் தனியா படுத்தேன். மூணு நாளா தூக்கமே வரலே…

    இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த சமாச்சாரம் பேசுகிறாளே என்று பொன்னுச்சாமிக்கு ஒரு கிளுகிளுப்பு.

    ஆசையுடன் மனைவியின் கைகளைப் பற்றினார்.

    கஜா… நீ ஒரு அசடு… இத்தனை ஆசையை மனசுல அடக்கி வச்சுக்கிட்டா இத்தனை நாளா பிடிக்காத மாதிரி நடிச்சே?

    ஆசையா… ரொம்ப அழகுதான் போங்க… மொட்டைதான் அடிச்சீங்களா…? இல்லே மூளையையும் கழட்டி வச்சிட்டு வந்துட்டீங்களா? பெட்ரூம்ல ஒரே கொசுக்கடி. நாம ரெண்டுபேரும் படுத்தா சரி சமமா புடுங்கும். நான் ஒருத்தி மட்டும் படுத்தா என்னை மட்டும்தானே கடிக்குது… அதைத்தான் தூக்கம் வரலேண்ணு சொன்னேன்…

    சிரிக்கக் கூட முடியாமல், அவருக்கு வயிறு பசித்தது.

    தட்டில் வைத்திருந்த இட்லிகளை அப்படியே நகர்த்தி சாப்பிடச் சொன்னாள் கஜா.

    எலெக்‌ஷன் மொட்டையினால் அவமானப்பட்டு, ரெண்டு நாளாக வீட்டுக்கு வராமல் வனவாசம்… ஓட்டல் சாப்பாட்டில் அவஸ்தை எல்லாம் சேர்ந்து ஏகமாக பசிக்க, முழு இட்லிகளாக வாய்க்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1