Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thallupadi Dhandapani...
Thallupadi Dhandapani...
Thallupadi Dhandapani...
Ebook177 pages1 hour

Thallupadi Dhandapani...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதற்கு ஒருவர் தீர்வாக இருப்பார். அதுபோல்தான் ஐடியா அய்யாச்சாமியும் சிவலிங்கத்தின் குடும்ப பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறார். இதுபோல் குடும்பத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க சிறிய வழிமுறைகளை நகைச்சுவையுடன் சொல்லும் கதை பற்றியும், ஏதாவது பொருட்களை வேண்டுமானால் நாம் தள்ளுபடியில் வாங்கியிருப்போம். ஆனால் தனக்கு வரப்போகும் மருமகனையே தள்ளுபடியில் வாங்கும் தண்டபாணி. இவ்வாறாக சிரித்து, சிந்திக்கத்தக்க சில நாடகங்களை வாசிப்போம் நாமும் கோவை அனுராதாவின் நகைச்சுவை பாணியில்...

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580136909095
Thallupadi Dhandapani...

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Thallupadi Dhandapani...

Related ebooks

Reviews for Thallupadi Dhandapani...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thallupadi Dhandapani... - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    தள்ளுபடி தண்டபாணி...

    (நகைச்சுவை நாடகங்களின் தொகுப்பு)

    Thallupadi Dhandapani...

    (Nagaichuvai Nadagangalin Thoguppu)

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மழையின் கண்ணீர்...

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    அல்ட்ரா மாடர்ன்... அலமு பாட்டி...

    A to Z... எழுசுவை நம்பிராஜன்...

    ஐடியா அய்யாச்சாமி

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    கட முடா கங்கப்பா...

    தள்ளுபடி தண்டபாணி...

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    மழையின் கண்ணீர்...

    கதைச்சுருக்கம்

    தன் குடும்பம் முழுவதையும் ஒரு சாலை விபத்தில் இழந்த சாமிநாதன் தன் இரண்டு வயது பேத்தி தாரிணியை ஒரு தாயாக இருந்து வளர்க்கிறார்.

    தன் தாத்தா... தன் உலகம் என்று தாரிணியும் தாத்தாவின் மேல் அன்பைப் பொழிந்து அவரின் பொக்கை வாய் சிரிப்பில் பூரித்துப் போகிறாள்.

    அவள் படிப்பு, அவள் காதல், அவள் கல்யாணம் எதிலும் பேத்தி வைத்ததுதான் சட்டம் என்று சந்தோஷப்படுகிறார் சாமிநாதன்.

    புகுந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பை அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட தாரிணி தன் மாமியாரிடம் ஒரு மகளைப்போல நடந்து கொள்கிறாள். அந்த வீட்டை கோவிலாக்குகிறாள்.

    பேத்தியை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக அவள் வீட்டிற்கு பக்கத்திலேயே வீடு வாங்கி தனியாக இருந்து வருகிறார் சாமிநாதன்.

    தன் சம்பந்தி வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார். தன் பேத்தி தாரணிக்காக சம்பந்தியம்மாள் அப்படி இப்படி பேசினாலும் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் போய்விடுகிறார்.

    பணத்தாலும், உடல் உழைப்பாலும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்த சாமிநாதன் ஒரு நாள் உடல்நலம் குன்றி தன் வேலையைத் தானே செய்ய முடியாத நிலை வரும்போது, பேத்தி தாரிணி அவரைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள நினைத்தபோது, மாமியார் தடுத்து தாத்தாவை முதியோர் இல்லம் அனுப்பச் சொல்கிறாள். கணவனும் அம்மாவுக்கு பரிந்து பேச, கொதித்து எழுந்த தாரிணி என் தாத்தாதான் என் உலகம் என்று அந்த குடும்பத்தையே உதறித் தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறாள். தாத்தாவுடன் அவர் வீட்டிற்கு சென்று விடுகிறாள்...

    மனதால் ஒன்று சேரமுடியாத அவர்கள் அடித்த பெருமழையால் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் கதை...

    ஆமாம்... சமீபத்தில் அடித்த சென்னை பெருமழை... பலரின் மனிதநேயத்தை தூண்டிவிட்டது என்னவோ உண்மைதான்...

    கதாபாத்திரங்கள்:

    1. சாமிநாதன் – தாத்தா - வயது 80

    2. தாரிணி – பேத்தி - வயது 30

    3. மங்களம் - தாரிணியின் மாமியார் - வயது 55

    4. பரமசிவம் - மங்களத்தின் கணவன் - வயது 60

    5. செல்வம் - தாரிணியின் கணவன் - வயது 35

    6. ஜோசப் - சிலிண்டர் பையன் - வயது 20

    காட்சி 1

    பாத்திரங்கள்: பரமசிவம், மங்களம், தாரிணி, சாமிநாதன், செல்வம்.

    சாமிநாதன்: அம்மா தாரிணி... அம்மா... தாரிணி. தாத்தா வந்திருக்கேம்மா.

    மங்களம்: வாங்க சம்பந்தி... தாரிணி பூஜை பண்றா... உட்காருங்க...

    (பூஜை மணி சத்தம் கேட்டல்.)

    சாமிநாதன்: நீங்க நல்லாயிருக்கீங்களாம்மா... ராத்திரி நல்லா தூங்கினீங்களா?

    மங்களம்: எங்க தூங்கறது...? வயசாச்சே... ஆயிரம் வியாதி உடம்பை படுத்துது... காலம்பற டிபனே மாத்தரைதானே...

    சாமிநாதன்: (லேசாக சிரித்தபடி) உடம்புன்னு இருந்தா வியாதிகள் வரத்தான் செய்யும்... இந்த எண் சான் உடம்புல அதுக்கு ஒரு எடம் கொடுத்துட்டு, நாம் நம்ப வேலையைப் பார்க்க வேண்டியதுதான்...

    மங்களம்: நீங்க மிலிட்டரி பாடி... சொல்லுவீங்க...

    சாமிநாதன்: ஏம்மா... மிலிட்டரிகாரன் எப்படி ஆரோக்கியமா இருக்கான்? எக்ஸ்சர்சைஸ் பண்றதுலதான்... இப்பவெல்லாம் சாதாரண மனுஷங்களும் எக்ஸ்சர்சைஸ், யோகான்னு பண்ணி உடம்பை நல்லா வச்சிருக்காங்களே...

    மங்களம்: நடக்கறதே பாடா இருக்கு. இதுல யோகா வேறயா? நைட் கொஞ்சம் அசந்து தூங்கலான்னா... ஒரே கொசுக்கடி... வீட்டை சுத்தி இத்தனை செடி வச்சா கொசு வராம என்ன பண்ணும்? எல்லாம் உங்க பேத்தி வேலைதான்...

    தாரிணி: அம்மா... கொசு இல்லாத எடம் எது? செடிகளை வளர்க்கறதுனால எத்தனை ஆக்சிஜன் கிடைக்கறது தெரியுமா? இந்த செடிகளும் இல்லேன்னா அடிக்கிற வெய்யிலுக்கு மனுசங்க வெந்துபோக வேண்டியதுதான்...

    மங்களம்: ஆமா... அந்தக் காலத்துல எல்லாம் எங்க தாத்தா பாட்டி இவ்வளவு மரம் செடியா வச்சாங்க... அவங்க எல்லாம் நல்லா பொழைக்கலையா?

    தாரிணி: அவங்க வச்சாங்களோ... இல்லையோ... இருந்த மரங்களை வெட்டாம இருந்தாங்களே...

    சாமிநாதன்: அம்மா... தாரிணி... அவங்க பெரியவங்க... தன்னோட அபிப்ராயத்தை சொல்றாங்க... விடும்மா... இந்தா... அகத்திக்கீரை... வாங்கிட்டு வந்திருக்கேன்...

    தாரிணி: தாத்தா நான் சமையல் பாதி முடிச்சாச்சு... அகத்திக்கீரையை ஆஞ்சு சமைக்கணும்னா ஆபீசுக்கு நேரமாயிடுமே...

    சாமிநாதன்: அது தெரிஞ்சுதான் நான் கீரையை நறுக்கியே எடுத்துட்டு வந்துட்டேன்... மாப்பிள்ளையும், நீயும் கம்ப்யூட்டர்ல வேலை செய்யறீங்க... உடம்பு சூடு... அகத்திக்கீரை உடம்பு சூட்டை தணிக்கும்... இந்தாம்மா...

    தாரிணி: தேங்ஸ் தாத்தா...

    சாமிநாதன்: என்னம்மா... என்னையே அப்படி பார்க்கறே?

    தாரிணி: இல்லே... எப்பவுமே என் ஞாபகம்தானா தாத்தா...?

    சாமிநாதன்: ஒரு வயசுல நீ தத்தக்கா புத்தக்கான்னு நடக்கறதை பார்த்து ரசிச்ச தாத்தாம்மா... இன்னிக்கு வரைக்கும் உன்னோட ஒவ்வொரு அசைவையும் ரசிக்கறவன்... உன்னைத் தவிர எனக்கு யாரும்மா இருக்காங்க?

    மங்களம்: (மனதிற்குள்) இந்த கிழவர் பக்கத்து தெருவுலயே ஒரு பிளாட் வாங்கிட்டு வந்தாலும் வந்தாரு... தினமும் காலங்கார்த்தால வந்து பேத்தி கூட போடற சென்ட்டிமெண்ட் சீன் இருக்கே... தாங்கமுடியலேடா சாமி...

    தாரணி: இருங்க தாத்தா... உங்களுக்கு மோர் கொண்டு வரேன்...

    பரமசிவம்: (வந்துகொண்டே) வாங்க... வாங்க... என்னடா... ஒரு பாசிடிவ் எனர்ஜி... வீட்டுக்குள்ள பரவுதேன்னு பார்த்தேன்... சம்பந்தி வந்திருக்காரு... எப்படி இருக்கீங்க...?

    சாமிநாதன்: ஃபைன்... நீங்க எப்படி இருக்கீங்க?

    மங்களம்: (மனதிற்குள்) ஒரு நாளைக்கு மூணுதரம் பார்த்துக்கறாங்க... என்னவோ இன்னிக்குத்தான் லண்டன்ல இருந்து வந்தா மாதிரி விசாரிப்பை பாரு...

    தாரிணி: அப்பா... இந்தாங்க காப்பி... தாத்தா... மோர் எடுத்துக்குங்க...

    சாமிநாதன்: தேங்ஸ்ம்மா...

    பரமசிவம்: சம்பந்தி... உங்களை ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு ஆசை... எப்பவுமே உங்களால் எப்படி சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியுது?

    சாமிநாதன்: ரொம்ப சிம்பிள்... நேத்தைக்கு நடந்ததைப் பத்தி கவலைப்படமாட்டேன்... நாளைக்கு நடக்கப்போறதைப் பத்தி பயப்பட மாட்டேன்... கடவுள் குடுத்த இந்த நேரத்தை சந்தோஷமா யூஸ் பண்ணிப்பேன்... தட்ஸ் ஆல்...

    பரமசிவம்: கரெக்ட்... ஆனா சம்பந்தி... சில விஷயங்களை மறக்கவே முடியலையே... என்னோட ஃபர்ஸ்ட் ஆஃப்ல கடவுள் என்னை ஏமாத்திட்டாரே... ஆனா, செகண்ட் ஆஃப்ல ஒரு நல்ல மருமகளைக் குடுத்து காம்பன்சேட் பண்ணிட்டாரு...

    மங்களம்: மனுசனுக்கு இந்த வாய் இல்லேன்னா ஒரு பெட் அனிமல் கூட சீந்தாது...

    பரமசிவம்: உறி... உறி... என் பொண்டாட்டி ரொம்ப புத்திசாலி... மறைச்சு சொன்னாலும் புரிஞ்சிக்குவோ...

    மங்களம்: இத்தனை வருஷம் உங்ககூட குப்பை கொட்டி, நீங்க மறைச்சு பேசறதை புரிஞ்சிக்க முடியாதா? பாராட்டி பேசறதுதான் உங்க பரம்பரையிலயே கிடையாதே...

    பரமசிவம்: இப்படித்தான் நாங்க தமாசா சண்டை போட்டுக்குவோம்...

    சாமிநாதன்: நான்தான் தினமும் ரசிக்கிறேனே... சம்பந்தி... இதெல்லாம் பெரிய விஷயமே இல்லே... இப்போ ஃபேஸ்புக், வாட்சப்புல எல்லாம் புருசன் பொண்டாட்டியை கலாய்க்கறான்... வீட்டுல பொண்டாட்டி புருசனை கலாய்க்கறா. இதுதான் சுவாரஸ்யமான குடும்ப வாழ்க்கைங்கறேன்...

    பரமசிவம்: அப்படிங்கறீங்களா?

    சாமிநாதன்: அப்புறம் சம்பந்தியம்மா... நான் இன்னைக்கு ரேஷன் கடைக்கு போறேன்... உங்க கார்டையும், பணத்தையும் குடுங்க... நான் சர்க்கரை, பாமாயில் வாங்கிட்டு வந்துடறேன்... அப்புறம் இந்த இலவச அரிசி வேணுமா?

    மங்களம்: வாங்கிட்டு வாங்க... இட்லி தோசைக்கு நல்லாயிருக்கு...

    சாமிநாதன்: கரண்ட் கார்டும் குடுங்க... என் கார்டோட சேர்த்து கட்டிடறேன்...

    பரமசிவம்: ஏன் மங்களம்... வயசானவர்... அவரை ஏன் தொந்திரவு பண்றே?

    சாமிநாதன்: இருக்கட்டும் சம்பந்தி... நான் என்ன மூணாவது வீட்டுக்கா செய்யறேன்... என் பேத்திக்குத்தானே செய்யறேன்...

    பரமசிவம்: இல்லே... நான் சும்மாத்தானே இருக்கேன்... நான் ரேஷன் கடைக்கு போகமாட்டேனா?

    மங்களம்: நீங்க ஒரு மாசம் ரேஷன் கடைக்கு போனதைப் பத்திதான் இந்த அபார்ட்மெண்டே சிரிச்சிதே... நாலு கிலோ...

    Enjoying the preview?
    Page 1 of 1