Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathichoodi Nadagangal
Aathichoodi Nadagangal
Aathichoodi Nadagangal
Ebook66 pages22 minutes

Aathichoodi Nadagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஔவையின் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆத்திசூடி கதைகள், ஆத்திசூடி பாடல்கள், ஆத்திசூடி கட்டுரைகள் என்று பல பரிணாமங்களில் பல நூல்கள் வெளிவந்துள்ளதைப் போன்று ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு நாடக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதே இந்த ‘ஆத்திசூடி நாடகங்கள்' என்ற இந்நூல். இதன் ஆசிரியர் திரு. அவர்கள்.
அறம் செய விரும்பு' முதல் 'அஃகஞ் சுருக்கேல்' வரை உள்ள பதிமூன்று ஆத்திசூடிகளுக்கும் பதிமூன்று நாடகங்களை உருவாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நாடகங்கள் ஒவ்வொன்றும் சிறுவர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய மாணவ சமூகத்தினர் படித்து பயனையும், பண்பையும் பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாடகத்தையும் அதன் கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் ஆத்திசூடி பாடல் கருத்துக்கு ஏற்றாற்போல் திறம்பட வடிவமைத்துள்ள இந்நூலாசிரியரின் போக்கு போற்றுதற்குரியது. அனைவரும் இந்நூலினை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
நன்றி!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136906121
Aathichoodi Nadagangal

Related to Aathichoodi Nadagangal

Related ebooks

Reviews for Aathichoodi Nadagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathichoodi Nadagangal - Kalaimamani Kovai Anuradha

    http://www.pustaka.co.in

    ஆத்திச்சூடி நாடகங்கள்

    Aathichoodi Nadagangal

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அறம் செய விரும்பு

    2. ஆறுவது சினம்

    3. இயல்வது கரவேல்

    4. ஈவது விலக்கேல்

    5. உடையது விளம்பேல்

    6. ஊக்கமது கைவிடேல்

    7. எண் எழுத்து இகழேல்

    8. ஏற்பது இகழ்ச்சி

    9. ஐயம் இட்டு உண்

    10. ஒப்புரவு ஒழுகு

    11. ஓதுவது ஒழியேல்

    12. ஔவியம் பேசேல்

    அவ்வையின் ஆத்திசூடி

    1. அறம் செய விரும்பு

    (நற்பணிகள் செய்ய விரும்பு.)

    காட்சி - 1

    இடம் : பூஜா, தேஜா வீடு - சிறிய பங்களா வாசலில் அவ்வை இல்லம் என்ற போர்டு.

    (பூஜை அறையில் விநாயகர் சிலைக்கு அழகிய ரோஜா மாலை போடப்பட்டுள்ளது. அக்கா பூஜாவும், தம்பி தேஜாவும் அருகருகே நின்று கொண்டு சாமி கும்பிடுகின்றனர். அவர்கள் பள்ளிக் கூடத்திற்குப் புறப்படத் தயாராக யூனிஃபாமுடன் நிற்கின்றனர்.)

    இருவரும் : (பாடுகின்றனர்)

    பாலும், தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்…

    (குழந்தைகளின் அம்மா அம்சவேணி, டைனிங் டேபிளில் காலை உணவு பறிமாற ஏற்பாடு செய்து கொண்டிருத்தல்)

    (பாட்டு) கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!

    குழந்தைகள் : நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா…

    (குழந்தைகள் கை கூப்பி வணங்க. நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் அப்பா ஞானவேல், பெருமையுடன் தன் குழந்தைகளைக் கவனிக்கிறார். டைனிங் டேபிள் அருகே நின்று கொண்டிருக்கும் அம்மா அம்சவேணி.)

    அம்சவேணி : பூஜா… தேஜா… சாமி கும்பிட்டாச்சுன்னா வாங்க… டிபன் சாப்பிடலாம். பள்ளிக் கூடத்துக்கு நேரமாச்சு…

    (பூஜை அறையில் இருக்கும் குழந்தைகள் திரும்பி,)

    பூஜா : இதோ வந்துட்டோம்மா… வாடா தேஜா…

    (பூஜாவும், தேஜாவும் நடந்து அப்பாவைக் கடந்து செல்லும்போது,)

    இருவரும் : குட் மார்னிங் டாடி…

    பூஜா : வெரி குட் மார்னிங்…

    (பூஜாவும், தேஜாவும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவாறு,)

    இருவரும் : குட் மார்னிங்ம்மா…

    அம்சவேணி : குட் மார்னிங்…

    பூஜா : இன்னிக்கு என்னம்மா டிபன்?

    அம்சவேணி : சாரி! பூஜா… இன்னிக்கு உன் தம்பிக்குப் புடிச்ச இட்லி செஞ்சுட்டேன். நாளைக்கு உனக்குத் தோசை… ஓ.கே.வா… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா…

    பூஜா : பரவாயில்லைம்மா…. இட்லிதான். காலையில நல்ல உணவுன்னு எங்க மிஸ் சொன்னாங்க…  நான் பழக்கப்படுத்திக்கிறேன்.

    அம்சவேணி : நல்ல பொண்ணு!

    தேஜா : அம்மா… இனிமே தேஜா அக்காவும், என்னை மாதிரி இட்லி சாப்பிட்டு ஸ்ட்ராங்கா, குண்டாயிடுவாங்க… இல்லையாம்மா…?

    (கையை

    Enjoying the preview?
    Page 1 of 1