Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanthaiyumanaval
Thanthaiyumanaval
Thanthaiyumanaval
Ebook281 pages1 hour

Thanthaiyumanaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருணா என்ற பெண் கணவனே இல்லாதவள்! ஏமாந்தவள் அல்ல; இடறி விழுந்ததை அறிந்தே ஏற்றுக்கொண்டவள். வாரிசைக் காட்டி உரிமைப் போர் தொடுத்தவள் அல்ல; வாரிசைக் கொடுத்தவனைக் காட்டிக் கொடுக்காமலே அதற்குத் தந்தையுமானவள். ஆனால் கடைசிவரை அவளால் தன் வைராக்கியத்தை, வீம்பைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா?

அதற்காக அவள் எத்தனை எத்தனை சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது! எப்படியெல்லாம் போராட வேண்டியிருந்தது! எங்கெங்கெல்லாம் அலைய வேண்டியிருந்தது! வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580152007961
Thanthaiyumanaval

Read more from Punithan

Related authors

Related to Thanthaiyumanaval

Related ebooks

Reviews for Thanthaiyumanaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanthaiyumanaval - Punithan

    https://www.pustaka.co.in

    தந்தையுமானவள்

    Thanthaiyumanaval

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    என்னுரை

    தாயுமானவர் கருணையின் பிறப்பிடம். தெய்வதம்! அவரை மானுடம் பிரதிபலிப்பது அரிது.

    அவரை நினைத்துத்தான் இவளை உருவாக்கினேன். ஆமாம், தந்தையுமானவளைத்தான் சொல்கிறேன்.

    இந்தச் சமுதாய அமைப்பில் 'தந்தையுமானவள்'கள் விரவியிருக்கிறார்கள். தந்தையை இழந்த பிள்ளையைத் தாய், தந்தையாகவும் இருந்து நாட்டின் குறிப்பிடத்தக்க புள்ளியாய், மேதையாய், தொழிலதிபராய், நடிகராய்த் திரட்டித் தந்திருக்கிறாள் என்பதற்கு நடைமுறை வாழ்க்கை வரலாற்றை நீங்கள் அவ்வப்போது படித்திருப்பீர்கள்.

    என் 'தந்தையுமானவள்' முந்தைய பாராவில் விவரிக்கப்பட்ட வகையைச் சார்ந்தவள் அல்ல. இவள் கணவனை இழந்தவள் அல்ல; கணவனே இல்லாதவள்! ஏமாந்தவள் அல்ல; இடறி விழுந்ததை அறிந்தே ஏற்றுக்கொண்டவள். வாரிசைக் காட்டி உரிமைப் போர் தொடுத்தவள் அல்ல; வாரிசைக் கொடுத்தவனைக் காட்டிக் கொடுக்காமலே அதற்குத் தந்தையுமானவள்.

    ஆனால் கடைசிவரை அவளால் தன் வைராக்கியத்தை, வீம்பைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

    அதற்காக அவள் எத்தனை எத்தனை சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது! எப்படியெல்லாம் போராட வேண்டியிருந்தது! எங்கெங்கெல்லாம் அலைய வேண்டியிருந்தது!

    என் படைப்புகளிலே ஒரு கதாநாயகியை இந்த அளவுக்குப் புரட்டி எடுத்தது இரண்டொரு நாவல்களில்தான்.

    இந்த நாவலைத் தொடராக எழுதத் தினமலர் வாரமலரில் இடம் கொடுத்த பொறுப்பாசிரியர் ரமேஷ் அவர்கள், இடையிடையே யார் யாரோ பாராட்டுத் தெரிவித்ததாகச் சொன்னது எனக்கு உற்சாக டானிக். அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

    எழுதும்போது என் பேனாவில் உட்கார்ந்து மானசீக வழிகாட்டியாய் இருக்கும் எங்கள் எடிட்டர் எஸ். ஏ.பி. அவர்களுக்குத் தோத்திரம்.

    அண்ணன் தமிழ்வாணன் அவர்களின் வாரிசுகள் என்னிடம் அன்பு கொண்டு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது ஆசியுடன் கூடிய நன்றி.

    சென்னை: 600010

    அன்பு,

    புனிதன்

    1

    உன்னால் முடியும் சஞ்சய். சொல்லு, நான் சொல்றதை அப்படியே சொல்லணும். என்ன?

    உம்...

    இதோ, என் வாயைப் பாரு, ஸண்டே, மண்டே...

    ஸண்டே மண்டே...

    ட்யூஸ்டே...

    டி... உஸ்...

    சேர்த்துச் சொல்லணும். உம்... ட்யூஸ்டே...

    டி... உஸ்... ஊஹும். டியூஸ்... சரியாம்மா?

    குட், கரெக்ட்.

    மூன்று வயது மகன் சஞ்சய்யின் கொழுவிய கன்னத்தை வருடிப் பெருமையாய் நெட்டி முறித்தாள் அருணா. அவனைக் கான்வென்ட்டில் சேர்த்தாக வேண்டும். சமர்த்துப் பிள்ளை.

    எதற்குத்தான் இன்டர்வ்யூ வைப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. ப்ரீகேஜியில் அப்போது தான் எழுத்தறிவுக்குச் சேரவரும் இளம் குருத்துக்கு இன்டர்வ்யூவாம்.

    அங்கே என்னென்ன கேட்பார்கள் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள். போன வருஷம் இதே க்ரேசி கான்வென்டில் தன் பிள்ளையைச் சேர்த்த அனுபவத்தை இவளுக்குப் பிழிந்து கொடுத்திருந்தாள் அனுபமா, இவளுடன் உத்தியோகத் தோழியாய் ஒட்டிக் கொண்டிருப்பவள்.

    மெக்கானோ டெஸ்ட். சதுரக்கட்டைகளை ஒழுங்குபடுத்தி அடுக்குவது. ஒன், டூ, த்ரீ எண்ணிக்கை கோப்பது. அப்புறம் ஸண்டே, மண்டே... அப்பா, அம்மா பேர், உத்தியோகம் பற்றி நறுக்குத் தெறித்த கேள்விகள்... அந்த இடம்தான் கொஞ்சம் இடறிற்று. இருந்தாலும் இடறலை எப்படிச் சமாளித்து மீளலாம் என்று மனசுக்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.

    ஏம்மா, நான் ஸ்கூலுக்குப் போனா... உன்னை மம்மின்னு கூப்பிடவா? கேட்ட சஞ்சையைப் புதிராக பார்த்தாள் அருணா.

    ஏன்... ஏன் அப்படிக் கூப்பிடணும்?

    இந்தப் பொடிசுக்கு வயசுக்கு மிஞ்சின பேச்சு.

    ரமேஷ் இல்லே ரமேஷ் அவன் ரிக்‌ஷா ஏறி ஸ்கூல் போறான். அவன் மம்மி...கூப்படறான்.

    முகத்தில் பொய்க் கடுமை காட்டினாள் அருணா. ஊஹும். எனக்கு அதெல்லாம் பிடிக்காது. என்னிக்கும் நான் உனக்கு அம்மாதான். இந்த மம்மி அம்மியெல்லாம் நமக்கு வாணாம்.

    அப்ப டாடி...?

    இப்போது நிஜமாகவே அவள் முகத்தில் கடுமை ஏறிற்று. டாடியுமில்லை, தாடியுமில்லை. மூடுடா வாயை இந்தா எழுது. அகல பிளாஸ்டிக் காகிதத்தில் அச்சிட்டிருந்த ஆங்கில அரிச்சுவடிப் புத்தகத்தை அவன்முன் திடுதிப்பென்று விரித்துப் பிரித்துக் காட்டினாள்.

    தாயின் சாடலில் நொடி சிறுத்திருந்த சஞ்சய்யின் முகத்தில் அந்தப் புத்தகத்துப் பளபளப்பும் வண்ணக் கலவை ஓவியங்களும் விகசிப்புத் தடவிப் பரவசம் ஏற்ற, ஹாய்... என்று குதூகலத்துடன் வாங்கிக் கொண்டான்.

    ஏண்டீம்மா, உன் அருமை மகனோட இன்னிக்கெல்லாம் கொஞ்சிட்டே இருக்கப் போறியா? ஆபீஸ்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டியா? என்று டைனிங் மேசைப் பக்கமிருந்து கேட்ட குரலுக்குத் திரும்பினாள்.

    அவளுடைய அம்மா கர்ம சிரத்தையாய் அவளுக்குச் சிற்றுண்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். முறுகல் தோசை, வெங்காய சட்னி. அந்தக் காம்பினேஷன் அவளுக்குப் பிடித்தமானது.

    உன் தங்கச்சி, வீட்டுலதானே இருக்கா? அவ பார்த்துக்க மாட்டாளா? நீ வந்து சாப்பிடு, நேரமாகுது...

    ஏன், கஸ்தூரிக்குக் காலேஜ் இல்லையா? என்று கேட்டுக் கொண்டே டைனிங் மேசையில் வந்து அமர்ந்தாள் அருணா. எங்கேம்மா கஸ்தூரி? சாப்பிட ஆரம்பித்தாள்.

    அவ இப்பத்தான் உள்ளே புகுந்து மினுக்கிக்கிட்டு இருக்கா... இல்லே எல்லாத்துக்கும் நான் அலைய வேண்டியிருக்கு.

    எல்லாத்துக்கும்னா... புரியலையே?

    அடியம்மா. நான் வீட்டு வேலை எல்லாத்துக்கும்னு சொன்னேண்டியம்மா. இல்லே, வயசுக்கு வந்த பொண்ணுதானே? நீதான் உத்தியோகத்துக்குப் போறவ. இவ வீட்டிலே இருக்கறப்பவாவது கூடமாட ஒத்தாசை பண்ணலாம் இல்லே? இன்னிக்குப் பார்த்து இந்த வேலைக்காரப் பீடையையும் காணோம்!

    அதென்ன இன்னிக்கு பார்த்து...? இன்னிக்கு அப்படி என்ன விசேஷம், எனக்குக் கூடத் தெரியாம?

    ஒண்ணுமில்லே... என்று தயங்கினாள் தாய்.

    அதற்குள் அடுத்த அறைக் கதவைப் படீரென்று திறந்து கொண்டு கஸ்தூரி ஆவேசமாய் வந்தாள். என்ன சொன்னே சுடிதாருக்கு மேல் போட்டிருந்த துப்பட்டாவை இறுக்கிக் கொண்டே தாயிடம் பாய்ந்தாள். மினுக்கிக்கிட்டிருக்கேனா? நானா மினுக்கிக்கிறேன்னு சொன்னேன்? நீதானே மினுக்கிக்கிட்டிருக்கச் சொன்னே? சொல்லு, நீ சொல்லலை?

    ஏண்டி, கொஞ்சம் டீசன்டா டிரெஸ் பண்ணிக்கோன்னு சொன்னா, அதுக்கு மினுக்கிக்கிறதுன்னு அர்த்தமா? தாயின் சுதி இறங்கிற்று.

    பார்த்தியா அக்கா, என் மேலயே திருப்பறதை? நீ என்னைப் பத்திக் கேட்டப்ப அம்மாதானே சொன்னாங்க உள்ள பூந்து மினுக்கிக்கிட்டிருக்கான்னு? நானா சொன்னேன்?

    சரி, சரி. ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு ஏன் இப்படி லகலகன்னு பிடிச்சிக்கிட்டே? போகட்டும், கமிங் டு த பாயிண்ட், அம்மா எதுக்கு உன்னை டீசன்டா டிரெஸ் பண்ணிக்கச் சொன்னாங்க? ஏதாவது ஷாப்பிங் போகப் போறாங்களா? இல்லே. கில்ட் ஆப் சர்வீஸ்ல ஏதாவது ஹோம் எக்ஸிபிஷனா?

    ஹும்... நானும் இந்த காப்பர் பாட்டம் கடாய் ஒண்ணு வாங்கணும், எக்ஸிபிஷன்ல கன்ஸெஷன் ரேட்ல தருவான்னு ரொம்ப நாளாச் சொல்லிட்டிருக்கேன், விடியவே மாட்டேங்குது, என்று ஏக்கப் பெருமூச்சை நெட்டியவள், பயப்படாதேம்மா. நான் ஒண்ணும் உனக்குச் செலவு வைக்கமாட்டேன். நான் வெளில எங்கேயும் போகலை..." என்று நீட்டி நிறுத்தினாள்

    பின்னே?

    இல்லே... ஊர்லர்ந்து உன் அத்தை முறையாகணும்... வரப்போறதாச் சொல்லியனுப்பியிருந்தா. பாரு...

    நான் யாரையும் பார்க்க வேணாம்.

    அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டுச் சொன்னாள் அம்மா, உன்னை ஒருத்தரையும் பார்க்கச் சொல்லலை. அவ பேரு பார்வதி. பாருன்னு கூப்பிடுவோம். அதைச் சொன்னேன்.

    எதைச் சொன்னாலும் சரி. தேவையில்லாம் உறவுமுறை கொண்டாடிக்கிட்டு நம்ம வீட்டுக்கு யார் வரதும் எனக்குப் பிடிக்காது, தெரியுமில்லே? நொடித்தாள் அருணா.

    சற்றுத் திணறலோடு குரல் தாழப் பேசினாள் அன்னை. சாதி சனம்னு நமக்கும் நாலு பேர் வேணும் அருணா. நல்லது கெட்டது நடந்தா அவங்கதான் முன்னால நிப்பாங்க, தெரிஞ்சுக்கோ.

    எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட வரைக்கும் போதும், என்றாள் அவள் விட்டேற்றியாக. இத பாரம்மா, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க. நாம நல்லா இருக்கறதைக் கண்டு நிஜம்மா சந்தோஷப்படறவங்க நூற்றிலே ஒருத்தர் இருந்தாலே அதிகம். மற்றவங்க நம்மகிட்ட ரொம்ப அக்கறை காட்டறாப்பல விசாரிப்பாங்க. வாயைப் பிடுங்குவாங்க. நாமும் நம்மை அறியாம அவங்ககிட்ட நம்ம பலவீனத்தை உளறி வைப்போம் அவங்களுக்குத் தேவை அதுதான். நம்ம முதுகுக்குப் பின்னால அதைச் சொல்லித்தான் அதுக்குக் கண்ணு மூக்கு வச்சு ஊருக்குள் பரப்பித்தான் சந்தோஷப்பட்டுக்குவாங்க. அவங்க அரிப்பைத் தீர்த்துக்குவாங்க. இதை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.

    அம்மா ஆழமாக அவளை ஊடுருவினாள். அந்தப் பேச்சு அவள் மனசைப் பிழிந்தது. அருணா. நீ ஏன் இப்படியெல்லாம் பேசறேன்னு எனக்குப் புரியுது. என் பெத்த வயிறு பத்தி எரியுதுடி. எத்தைத் தின்னா பித்தம் தீரும்கிற நிலைமையிலே நான் இருக்கேன். அவள் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

    அம்மாவிடம் நிறையப் பேசி அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பேச வாயெடுத்தாள் அருணா. ஆனால் இதற்கு முன் பேசாத தாய், புதிதாய் என்ன எடுத்துச் சொல்லிவிடப் போகிறோம் என்று விரக்தி வந்து மூடிக் கொள்ள, என்னமோ பார்த்து நடந்துக்கோம்மா. வரேன், என்று டைனிங் மேசைமேல் அம்மா வைத்திருந்த லஞ்ச் சம்புடத்தை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு புறப்படுமுன் தங்கை கஸ்தூரியிடம் சொன்னாள். கஸ்தூரி, இன்னிக்கு உனக்கு நேரமிருக்குமா? அந்த கிரேசி கான்வென்ட்டில் சஞ்சய்க்கு அப்ளிகேஷன் பார்ம் ஒண்ணு வாங்கி வர முடியுமா?

    இன்னிக்கு தரதா சொல்லியிருக்காங்க அக்கா. வாங்கி வந்து ஃபில் அப்பண்ணி...

    நோ. ஃபில் அப் பண்ணாதே. அதிலே சில சிக்கல் இருக்கு. நான் பார்த்துக்கறேன். நீ வாங்கி வந்து வை, போதும்.

    அருணா வெளியேறினாள். அவளையே பரிதாபமாகப் பார்த்தபடி வாசலில் நின்றாள் கஸ்தூரி.

    ***

    அருணாவுக்கு வேண்டாத விருந்தாளி, அம்மா தெய்வநாயகிக்கு வேண்டிய விருந்தாளி. பார்வதி ஒரு நகை ஸ்டாண்டு போல் சரியான சாப்பாட்டு நேரத்துக்கு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினாள். கையில் கல்யாணத் தாம்பூலப் பை சற்றே கர்ப்பம் தரித்திருந்தது. கல்யாணப் பலகாரம் போலும்.

    "தெய்வநாயகி... தெய்வம்... இருக்கியாடி அம்மா?... ஆட்டோவுக்குப் பக்கத்தில் நின்றபடியே குரல் கொடுத்தாள்.

    வா பாரு, உள்ள வா. என்ன, அங்கியே நின்னுட்டே? வாயெல்லாம் பல்லாகப் படிவிட்டு இறங்கி வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டாள் தெய்வநாயகி அருணாவின் தாய்,

    இது என்ன மீட்டரோ, கண்ணும் தெரியலே, ஒரு மண்ணும் தெரியலை. என்ன ஆச்சு பாரு, தன் இரட்டை நாடி உடம்பைத் தூக்கிக் கொண்டு திரும்பியவள் கைப் பையைத் திறக்கப் போன போது உபசாரத்துக்கு தெய்வநாயகி தடுத்தாள்.

    கஸ்தூரி... ஏய் கஸ்தூரி, இங்கவாடி, என்ற அம்மாவின் குரலுக்கு எட்டிப் பார்த்த கஸ்தூரியிடம், அத்தை சைதாப்பேட்டையிலிருந்து வர்றாங்க, என்று மீட்டரைப் பார்த்தவள், என்னப்பா, அநியாயமா இருக்குது. இருபது ரூபா காட்டுதே. இவ்வளவு ஆகாதே! என்று கை பிசைந்தாள்.

    உம்... புது மீட்டர்மா. பார்த்துக்க. எங்கே வேணா செக் பண்ணிக்க. உனக்குச் சந்தேகம் இருந்தா வண்டியிலே ஏறிக் குந்து. புறப்பட்ட இடத்துக்கே ஓட்டறேன். மீட்டர் பார்த்துக்கோ. சரியான சாவு கிராக்கி... என்று அவன் பேசிக்கொண்டே போக மிரண்டுபோன பார்வதி, தெய்வம், இவன் கூடவெல்லாம் எதுக்கு வேண்டாத தகராறு? இந்தாப்பா, நீ போ. எங்களுக்கு செக் பண்றதுக்கெல்லாம் நேரமில்லை, என்று இருபது ரூபாய் நோட்டை நீட்டினாள்.

    ஏம்மா, ஏர்றப்பவே ரெண்டு ரூபா மேல போட்டு. கேக்கலை? என்று முரண்டு பண்ணினான் ஆட்டோ டிரைவர்.

    கஸ்தூரி இறங்கி வந்தாள். அனாவசியத் தகராறு பண்ணணும்னே வந்திருக்கியா? இப்ப எதுக்கு ரெண்டு ரூபா எக்ஸ்ட்ரா? லக்கேஜ் எதுனா இருக்கா? இல்லே. நைட்டா? மீட்டர்படி வாங்கிட்டுப் போறியா... இல்லே...

    ஆட்டோ ஆவேசமாய்க் குறுக்கிட்டது. இல்லேன்னா... இல்லேன்னா என்ன பண்ணுவே?

    இன்னிக்குக் கூட கமிஷனர் அறிக்கை வந்திருக்கு படிக்கலியா? இந்த மாதிரி தகராறு பண்ற ஆட்டோ டிரைவரை என்ன பண்ணணும்னு விலாவாரியாப் போட்டிருக்கு.

    அவளுடைய அமர்த்தலான பேச்சில் சற்றே ஜகா வாங்கி, ஏதோ கெட்ட வார்த்தையில் அடுத்தவருக்குக் கேட்காமல் முணுமுணுத்துக் கொண்டே நோட்டைப் பறித்துக் கொண்டு விலுக்கென்று ஓர் உதை ஆட்டோவுக்குத்தான்-கொடுத்து ஓட்டிச் சென்றான்.

    இத்தனையும் படியில் நின்று பரக்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த அத்தை சற்று பிரமிப்புடன் கஸ்தூரியைப் பார்த்தவள், உன் பெரிய பெண்ணா? ரொம்பத்தான் தைரியம்டி இவளுக்கு, என்று பாராட்டினாள் பார்வதி அத்தை.

    இவள் சின்னவள். பெரியவ இன்னும் தைரியசாலி உத்தியோகம் பார்க்கிறா. இவ காலேஜ்ல படிக்கிறா. ஆம்பிளைத் துணை இல்லாத வீடாச்சே! இந்தத் தைரியம் இல்லாட்டா குப்பை கொட்ட முடியுமா? வந்தவளுடன் வீட்டுக் கூடத்தை அடைவதற்குள் தன் வீட்டு இருப்பைச் சுருக்கமாகக் கொட்டித் தீர்த்து விட்டாள் தெய்வநாயகி.

    கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு அந்த ஹாலின் நறுவிசை ஜாடையாக ரசித்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். சுவரில் ஒரே ஒரு டிஜிட்டல் கடிகாரம்.

    சோபாவில் சாய்ந்து பார்க்க வாகாக ஒரு டி.வி. பக்கவாட்டில் மார்புயர புத்தக அலமாரி. அதன்மேல் சில மாடர்ன் பொம்மைகள் இந்தப் பெண்ணுடன் இன்னொருத்தி அவள் கையில் ஒரு குறுகுறு குழந்தையுடன் ஒரு வண்ண ப்ளோ அப். திரை தொங்கும் இரண்டு வாசல்கள். படுக்கை அறையாய் இருக்க வேண்டும். சமையல் வேலை செய்தபடியே வாசலில் கண்ணோட்டம் செலுத்தும் அமைப்பில் சமையல் அறை.

    முதலுபசாரமாய்க் கொடுத்த தண்ணீரைப் பருகிக் கொண்டே அந்தப் படத்தில் பார்வையை நட்டிருந்தாள் பார்வதி. முகத்தில் லேசாக முடிச்சுகள் விழுந்து அவிழ்ந்தன.

    என்ன சாப்பிடுறே, காப்பியா, டீயா?

    அதெல்லாம் இந்த நேரத்துக்கு ஏன்? சமையல் கட்டிலேர்ந்து வாசனை ஆளைத் தூக்குது. கல்யாண வீட்ல சம்பாரும், ரசமும், கூட்டும் போட்டுக்கிட்டு நாக்கு செத்துக் கிடக்கு. நான்வெஜ்தானே?

    "தெரியுமே! சின்னப்ப இருந்தே கொந்திக்கு அலைவியே! செய்து வச்சிருக்கேன். ஆமா, இந்தக் கல்யாணம்... எனக்கு யாரையும் தெரியுமா?'

    இல்லே. இது கொண்டான் கொடுத்தான் வழிச்சொந்தம். - இவங்க கோயம்புத்தூர் பக்கம் சம்பந்தி உறவுக்காரங்க. தீராது. போயே ஆகணும். நீதான் ஊர் பக்கம் வந்து அஞ்சாறு வருஷம் ஆச்சே! வரப் போக இருந்தா எல்லாம் தெரியும். கடைசியா உங்கண்ணன், சாவுக்கு வந்தே...

    எங்கே ஒழியுது பாரு. வயசுக்கு வந்த பொண்ணுங்க இந்தப் பத்து வருஷமா வச்சிட்டு அல்லாடறனே, உனக்குத் தெரியாதா? ஏதோ பெரியவ இப்ப சம்பாதிக்கிறா நல்லபடியா. அவதான் இந்த வீட்டுக்கே ஆம்பிளைத் துணையாட்டம்.

    என்ன தான் நாங்கள்ளாம் உனக்கு வேண்டாதவங்களாப் போயிட்டாலும், உன் பெரிய பெண் கல்யாணத்துக்குக் கூட என்னைக் கூப்பிடாமப் போயிட்டியே! நியாயமா?

    அடிபட்டாற் போல் தோழியை ஏறிட்டுப் பார்த்தாள் தெய்வநாயகி. என் பெண்ணுக்குக் கல்யாணமாச்சுன்னு யார் சொன்னது உனக்கு? நடுங்கும் குரலில் கேட்டாள்.

    அதே சமயம் வெளியில் விளையாடச் சென்ற சஞ்சய், பாட்டி... என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்து தெய்வநாயகியின் காலைக் கட்டிக் கொண்டான்.

    அவனை வாரி அணைத்துக் கொண்டே பாட்டி முகத்தைத் துடைத்துவிட்டு, கஸ்தூரி, அங்கே மேடையிலே பருப்பு சாதம் குழைச்சு வச்சிருக்கேன். குழந்தைக்குக் கொஞ்சம் ஊட்டிவிடும்மா, என்றதும், கஸ்தூரி வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு சமையல் உள்ளுக்குச் சென்றாள்.

    என்ன தெய்வம், குழந்தை உன்னை பாட்டிங்குது. நீ உன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகலைங்கறே? பார்வதி துருவினாள்.

    ரெண்டுமே நிஜம் தான். தெய்வநாயகி கண்ணீரை மறைத்துக் கொண்டு, பார்வதி, எழுந்து வா. முதல்ல சாப்பிடலாம். எல்லாம் அப்புறமா சாவகாசமாச் சொல்றேன், என்று அவள் கையைப் பிடித்து வாஷ்பேஸின் பக்கம் அழைத்துச் சென்றாள்.

    2

    அருணா வீட்டிலிருந்து நடை தூரத்தில்தான் இருந்தது கிரேசி கான்வென்ட். என்ன, ஒரு கிலோ மீட்டருக்குக் கொஞ்சம் அதிகம். தினமும் சஞ்சய்யைக் கொண்டு போய்ப் பள்ளியில் விட்டு விட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1