Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivar, Avaralla!
Ivar, Avaralla!
Ivar, Avaralla!
Ebook182 pages1 hour

Ivar, Avaralla!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியத் தலைநகரில் தீவிரவாதிகளின் அட்டூழியம் தலைவிரித்தாடிய ஓர் உச்சக்கட்டத்தில் ஜனாதிபதி மாளிகையில் அவர்களது மறைமுக முற்றுகை பற்றி வந்த செய்திதான் இந்த நாவலுக்குத் தூண்டுதல்.ஜனாதிபதியின் உயிரை எடுக்க வரும் நபர் எவர்? இவர் அவரல்ல என்பதன் விடை என்ன?... புதிரான களத்தில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்...
Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580152008269
Ivar, Avaralla!

Read more from Punithan

Related authors

Related to Ivar, Avaralla!

Related ebooks

Reviews for Ivar, Avaralla!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivar, Avaralla! - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இவர், அவரல்ல!

    Ivar, Avaralla!

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    என்னுரை

    இந்தியத் தலைநகரில் தீவிரவாதிகளின் அட்டூழியம் தலைவிரித்தாடிய ஓர் உச்சக்கட்டத்தில் ஜனாதிபதி மாளிகையில் அவர்களது மறைமுக முற்றுகை பற்றி வந்த செய்திதான் இந்த நாவலுக்குத் தூண்டுதல்.

    அந்தச் செய்தி குறித்து ஆசிரியருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, ‘இஷ்டத்துக்கு அயல்நாட்டுத் தூதர்களைச் சந்திப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இதெல்லாம் இந்த நேரத்துக்குப் பிரசிடெண்ட்டுக்கு ரிஸ்க்தான். ஸப்போஸ்...’ என்று ஆரம்பித்து எங்கள் எடிட்டர் விசிறிவிட்ட கற்பனை நிகழ்ச்சிகளை மூளைக்குள் பதிவு பண்ணி வைத்துக்கொண்டேன். அவற்றைக் கொஞ்சம் முன்னே பின்னே அமைத்து, என் புத்திக்கெட்டியவாறு இணைப்புக் கொடுத்து முழுசாக ஒரு கதைச் சுருக்கத்தைத் தயாரித்து ஆசிரியரிடம் சமர்ப்பிக்க, அவர் படித்துக்கொண்டிருந்தார்.

    அவர் படித்து முடித்த நேரத்தில், உதவி ஆசிரியர் ஒருவர் வந்து, ‘சார், மாலைமதி தொடர் முடிந்துவிட்டது. புதிது ஒன்று ஆரம்பிக்க வேண்டுமே?’ என்று கேட்டார்.

    ‘இதோ இருக்கிறதே!’ என்று என் கதைச் சுருக்கத்தை என்னிடம் தந்து, ‘என்ன சார் தலைப்பு?’ என்று கேட்க, நானும் நாலைந்து தலைப்புக்கள் எழுதிக் காட்டினேன்.

    அப்போது உள்ளே நுழைந்த பிரசுரகர்த்தரிடம் ஆசிரியர் அதை நீட்டி ஒரு தலைப்புத் தேர்ந்து எடுக்கச் சொல்ல, அவர் ‘டிக்’ செய்ததுதான் ‘இவர் அவரல்ல.’

    எல்லாம் நேரம்தான்!

    நாவல் களம் புது டில்லி, இந்த நாவல் நிகழ்ச்சிகள் அனைத்தும் அங்குதான் இடம் பெற்றாக வேண்டும். வேறு வழி இல்லை.

    நானோ இதுவரை இந்தியத் தலைநகரை எட்டிப் பார்த்ததில்லை. இதைச் சொன்னபோது, தன் ஊரில் உள்ள தனது பண்ணையைவிட்டு வெளியே எங்கும் செல்லாமல், உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றியதுபோல் நாவல் எழுதி நோபல் பரிசு பெற்ற ஓர் எழுத்தாளரைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டார்.

    ‘டில்லியைப் பற்றிச் சொல்ல ஆள் இல்லையா? நூல் இல்லையா? அவற்றை வைத்து ஜமாயுங்கள்,’ என்று தட்டிக் கொடுத்தார்.

    ஜமாய்த்திருக்கிறேனா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    அன்பு,

    புனிதன்

    சென்னை -10

    1

    அபர்ணா ஒரு குறுகுறுப்போடு லைப்ரரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    இந்தக் குறுகுறுப்பு அவளைக் கொஞ்ச நாளாய்த்தான் தொற்றிக்கொண்டிருக்கிறது. என்னத்துக்கு இப்படி மனசுக்குள் ஒரு தவிப்பு என்று அவளுக்குச் சில சமயம் தோன்றும். இருந்தாலும் அதை அடக்க முடியவில்லை.

    அவன் பெயர் ஸ்ரீராம் என்று என்றோ ஒரு நாள் லைப்ரரி பதிவுப் புத்தகம் பார்த்துத் தெரிந்துகொண்டாள். அது தவிர... சும்மா ஒரு தாங்க்ஸ், எக்ஸ்க்யூஸ் மி கூடச் சொன்னதில்லை.

    திடுதிப்பென்று இன்றைக்கு ஓர் அறிமுகம், அறிமுகத்தைத் தொடர்ந்து ஓர் அன்னியோன்னியம், அன்னியோன்யத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்துச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம், அதிலே இந்தப் புது டில்லியையே ஒரு குலுக்குக் குலுக்கிப் போடுகிற பிரச்சினை உருவாகக்கூடும் என்று அவள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

    புது டில்லியில் கொஞ்சம் காற்றோட்டமான லோதி காலனியில் அவள் குடியிருந்தாள். ஸாரி, தங்கியிருந்தாள்

    அவள் அக்கா ராஜி, கல்யாணமான கையோடு ஒரு கண்டிஷன் போட்டாள். கொஞ்ச நாளாவது எனக்குத் துணையா அபர்ணா டில்லிக்கு வந்தா நான் அங்கபோறேன். இல்லாட்டி உங்க மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்கறப்ப அவரு இங்கவந்து பார்த்துக்கட்டும். வீடு மீனம்பாக்கத்திலேயே, பிளேனை விட்டு நேரா வீட்லயே குதிச்சிடலாம் என்றாள். முதலிரவிலேயே கார்த்திக்கை முந்தானையில் முடிச்சுப் போட்டுக்கொண்ட தெம்பு, தன்னம்பிக்கை, தைரியம்.

    பலித்தது. அவன்தான் அபர்ணாவின் காலில் விழாத குறையாய்க் கெஞ்சிக் கூத்தாடி அவளைத் துணை போக்கியவன். லுக் அபர்ணா, நீயும் பி.ஜி. பண்ணியாச்சு. உன் அக்கா சொன்னாள். உனக்கு ஐ.ஏ.எஸ்.ல இன்ட்ரஸ்ட்னு. நீ டில்லி வந்தேன்னு வச்சுக்கோ. எக்ஸலண்ட் லைப்ரரி இருக்கு. பக்கத்திலேயே கோச்சிங் தர்றா. ஐ.ஏ.எஸ்.க்கு. நான் ஏற்பாடு பண்றேன்.

    ஐ.ஏ.எஸ். கனவுகளைச் சுமந்துகொண்டு அவள் டெல்லியில் அடியெடுத்து வைத்தபோது இப்படியெல்லாம் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

    இன்னும் கொஞ்சம் உறைக்காதா என்று ஏங்கவைக்கும் வெய்யில், டில்லிக் குளிருக்கு என்ன இதம்!

    பீக் அவர் அவசரங்கள் ஆரம்பித்துவிட்டன. பள்ளிநேரம், ஆபீஸ்நேரம் செல்லும் யந்திரவேகம், பட் பட்... தடதடப்பு. நடுவிலே பேப்பர்வாலா இந்திக் கூவல்.

    லைப்ரரி பட்டாங்கமாய்த் திறந்திருந்தது.

    வடகிழக்கு மூலையில்தான் அந்த ஆள் உட்கார்ந்திருப்பான் ஸ்ரீராம்! பெயர் நன்றாய்த்தான் இருக்கிறது. அசப்பில் கோவிந்தா மாதிரித் தோற்றம். வடக்கத்திய பகட்டு எல்லாம் இல்லை. சாதா ஜீன்ஸ், டீ ஷர்ட்தான்.

    அதோ அவன்தான் ஸ்ரீராம். நிச்சயம் இந்த ஆள் தெற்கத்தி ஆசாமிதான். மதுரையோ, ராமநாதபுரமோ இருக்கலாம். பொது நிறம்தான். சிவப்பென்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கறுப்பென்றால் சண்டைக்கு வருவார்கள்.

    அவளுக்கு அவனிடம் ஒரு இது ஏற்பட நியாயமான காரணம் உண்டு.

    அது பொது நூல்நிலையம்தான். எல்லோருக்கும் எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் படிக்க உரிமை உண்டுதான். அதற்காக அவள் மெனக்கெட்டுத் தேடி எடுத்துப் படிக்கிற புத்தகங்களையே அவன் வேவு பார்ப்பானேன்? மறுநாள் அதே புத்தகத்தை அவன் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பானேன்? இன்றைக்கு இரண்டிலொன்று தெளிவுபடுத்திக் கொண்டுவிட வேண்டும்.

    சிடுமூஞ்சி லைப்ரேரியன் என்னமோ தன் சொத்துக்களை இங்கே வந்திருப்பவர்கள் பறித்துக்கொண்டு விட்ட மாதிரி ஒரு பார்வை வீசிவிட்டு நகர்ந்தார்.

    இன்றைக்கு ஏனோ லைப்ரரியில் அதிகக் கூட்டம் இல்லை.

    அவன் எடுத்து வைத்திருந்த புத்தகத்தை ஜாடையாகக் கவனித்தாள்.

    ரோமன் ஹிஸ்டரி! நேற்று அவள் படித்த அதே புத்தகம்.

    ‘ஐ.ஏ.எஸ்.ல ரோமன் ஹிஸ்டரி ரொம்ப முக்கியம். சுலபம் கூட. நிறைய மார்க் அள்ளலாம். நிச்சயம் ரெண்டு எலாபரேட்டா கேட்பான்.’ அவளுக்குக் கோச்சிங் தரும் மூத்த நரைஞர் சொன்னதற்காக இவள் மக்கப் பண்ண வந்தால், இவனுக்கு என்ன தலையெழுத்து அதை எடுத்துப் படிக்க? கிண்டலா?

    அபர்ணா இன்றைக்குத் துணிந்துவிட்டாள். அவள் ஒருத்தரிடம் பழகமாட்டாள். பழக ஆரம்பித்துவிட்டால், தயவு தாட்சண்யம் பார்க்கிற பழக்கம் கிடையாது. மனசில் பட்டதைப் பட்பட்டென்று கேட்டுவிடுவாள். ஆரம்ப ‘லிங்க்’ மட்டும்தான் தேவை.

    சுற்றும் முற்றும் பார்த்தாள். கூட்டம் குறைச்சலாகத்தான் இருந்தது. இதுவே அவள் மனசுக்குள் ஒரு துணிச்சலை ஊன்றியது.

    ஒரு போலி உக்கிரத்தை வரவழைத்துக் கொண்டாள். அவனை நெருங்கியதில் ஒரு சூடு. அவன் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்ட மாதிரி பாவ்லா பண்ணுவது தெரிந்தது. செல்லச் செருமல் எழுப்பினாள்.

    அவன் நிமிர்ந்து பார்த்தான். ரசிக்கிறானா? தன் உடை பார்த்துக்கொண்டாள்.

    புறப்படும்போது அக்கா வைத்த ஐஸ் நினைவில் புரண்டது. ‘அதென்னடி அபர்ணா, உனக்கு மட்டும் சல்வார் கமிஸ்லேர்ந்து சாதா காட்டன் புடவை வரை எதை உடுத்துக்கோ, என்னமோ அது உனக்குன்னே தயார் பண்ணின மாதிரி அத்தனை கச்சிதமாப் பொருந்திப்போவுது!’

    மனசுக்குள் ஒரு கர்வம். அவனிடம் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள். மிஸ்டர், நானும் ரொம்பநாளாவே கவனிச்சிட்டு வரேன். லைப்ரரிலே நீங்க படிக்கறதுக்கு வேற புக்ஸே கிடைக்கறதில்லையா? அதென்ன, நான் படிச்சிட்டு வைக்கிற புக்ஸ் மேலயே உங்களுக்கு ஒரு டேஸ்ட்? உம்?

    அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தின் முதுகுப் புறத்தைப் பார்த்தபடி எழுந்தான். பொன் எழுத்தில் மின்னும் ரோமன் ஹிஸ்டரி!

    ‘பூ! இவ்வளவுதானா?’ என்கிற அவன் பார்வையில் அவள் வடிந்து போனாள்.

    மிஸ் அபர்ணா மேடம்! நானே உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்னு... என்னவோ இதுவரைக்கும் தைரியம் கிடைக்காம இருந்தது. வந்து... நான் டெல்லி காஸ்மாபாலிடன் க்ரூப்பைச் சேர்ந்தவன் இல்லை. ஸவுத் இண்டியன்.

    என்னைப்பத்தி அதிகமாவே தெரிஞ்சு வச்சிருப்பீங்க போலிருக்கு? பேரெல்லாம் சொல்றீங்க? வேண்டுமென்றே குரலில் ஒரு கிண்டலைத் தடவிக் கேட்டதும் அவன் சிரித்தான்.

    சிரிப்பு அத்தனை கவர்ச்சியாய் இருக்கக் கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    பக்கத்தில்தான் லோதி கார்டன், வெதர் நல்லாயிருக்கில்லே? அங்கே போய்க் கொஞ்சம் பேசலாமா? என்று அவன் அந்தப் புத்தகத்துடன் கௌண்ட்டருக்குப் போனான்.

    அபர்ணா ஏதோ அவன் கயிறு கட்டி இழுத்துப் போவதுபோல் அவன் பின்னாலேயே போனாள்.

    லோதி கார்டனின் நடுட்பகுதிக்கு வந்து வண்ணக் கலவையான ரோஜாக்களின் வனப்புக்களை அவனுடன் உறிஞ்சினாள். பரந்த புல்வெளியில் மிதந்து செல்வதைப்போல் அவனுடன் நடந்தாள். பிரதான சாலையை ஒட்டினாற்போல், உட்புறம்தான் நட்டிருக்கும் வாகான சிமெண்ட்பெஞ்சில் அவனுடன் அமர்ந்தாள்.

    யெஸ் மேடம்... என்று அவன் ஆரம்பித்ததும் அவன் உதட்டில் வைத்துத் தடுக்காத குறையாய் அவள் மறித்தாள்.

    ப்ளீஸ்... மேடம் போடாதீங்க. எனக்கு ரொம்ப வயசாயிட்டம மாதிரி ஃபீலிங் வருது. சும்மா மிஸ் போதும். நோ, அதுகூட வாணாம். அதான் பேர் தெரியுதில்லே? அதுபோதும். லுக் இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலை நான் படிக்கிற புக்ஸையே...

    நானும் படிக்க வேண்டியிருக்கே? இந்த டில்லியிலே நீங்க ஒருத்தர்தான் ஐ.ஏ.எஸ். படிக்கணுமா என்ன?

    அவளுக்கு மண்டையில் அடித்தாற் போலிருந்தது. ஸாரி... நீங்க... கூசிக் குறுகிப் போனாள்.

    அப்புறம் அவர்களுக்குள் ஏற்பட்ட பரஸ்பர அறிமுகம் விஸ்தாரம். மானாவாரியாய்ப் பேசினார்கள்.

    டெல்லிச் சாலையின் வேப்பர் விளக்குகள் பொருத்தப்போகும் நேரம்வரை பேசினார்கள்.

    அபர்ணாவைப் பற்றி ஏற்கெனவே சொல்லியாயிற்று.

    ஸ்ரீராம் பற்றிச் சுருக்கமாக:

    இவனுக்குப் பூர்வீகம் மதுரைப் பக்கத்துக் கிராமம். மதுரையில் கார் மெக்கானிக் ஒர்க்ஷாப் வைத்திருக்கும் தாய்மாமன் தயவில்

    Enjoying the preview?
    Page 1 of 1