Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ussh Sollathey
Ussh Sollathey
Ussh Sollathey
Ebook135 pages53 minutes

Ussh Sollathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'உஷ்... சொல்லாதே...' நாவலில் வரும் சித்தரும் பெண் தெய்வமும் உங்களுக்கு மெய்சிலிர்ப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்துவார்கள் என்பது திண்ணம்! அந்தப் பெண் தெய்வம் யாரென்று ஊகிக்க முடிகிறதா?
சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தின் காவிய நாயகி கண்ணகிதான் அவள்! பாண்டிய மன்னன் நீதி தவறியதற்காக மதுரையை எரித்துச் சாம்பலாக்கிய உத்தமி அவள்!
'மங்கல தேவி' எனும் இடத்தில் சேர மன்னன் அவளுக்கு கோவிலைக் கட்டினான். கேரள எல்லையில் வனாந்திரத்தில் அமைந்திருக்கும் அந்தக் கோவில் அருகே... அக்கிரமம் நடந்தால்...?
கற்புக்கரசி கண்ணகி சும்மா விடுவாளா? நடந்தது என்ன? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- லட்சுமி பிரபா
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856329
Ussh Sollathey

Read more from Lakshmi Praba

Related to Ussh Sollathey

Related ebooks

Related categories

Reviews for Ussh Sollathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ussh Sollathey - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    உஷ்…. சொல்லதே!

    Ussh…. Sollathey!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    தோட்டத்துப் பறவைகளின் கலகலத்வனி அதிகரித்ததால்... அதிகாலையின் இருட்டு மெல்ல உடைந்து கொண்டிருந்தது.

    சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்த அபிதா... கலைந்த கூந்தலைக் கோதி கொண்டையிட்டுக் கொண்டாள்.

    வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கு கண் விழிப்பவள் விழிப்பு தட்டியதும் முதல் வேலையாக இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து. உள்ளங்கையில் முகம் பார்த்துக் கொள்பவள் தான். தன்னிச்சையாய் அவளது இதழ்கள் மெல்ல இதை முணுமுணுக்கும்.

    கராக்ரே வஸ்தே லட்சுமி கரமத்ய சரஸ்வதி கரமூலேது கவுரி.

    'நமது உள்ளங்கையில் மூன்று அம்பிகைகளும் உறைஞ் இருக்காங்க... அதனால கார்த்தால் இந்த ஸ்லோகத்தை தவற சொல்லிக்கிட்டே நம்ம உள்ளங்கையில் கண் விழிச்சா. ரொம் நல்லதுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா...'

    அம்மா ருக்மணி கூறியதை... அவள் என்றுமே மறந்ததில்லைதான். ஆனால் இன்றோ அவள் உள்ளங்கையில் முகம் பார்க்கே இல்லை.

    அவள் தான் இரவெல்லாம் உறங்கவே இல்லையே? 

    நீள நீள சட்டங்கள் பொருத்தப்பட்ட மோட்டு வளையை வெறித்துப் பார்த்தபடி கொட்டக் கொட்ட கண் விழித்திருந்தான்  அபிதா

    தற்செயலாய் நள்ளிரவில் புரண்டு படுத்த அம்மா ருக்மணி... விடி விளக்கின் வெளிச்சத்தில் அவள் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு கேட்டாள். 

    "என்ன அபி? தூங்கலையா? சதா சிந்திச்சுண்டே இருக்காதே! கண்டதையும் போட்டு மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தா... அப்புறம் நீ இந்தாத்துல இருக்கிற சாம்பு மாமா மாதிரியே ஆயிடுவே. ஜாக்கிரதை பேசாம படுத்துத் தூங்கு அபி மெல்லிய குரலில் எச்சரித்தாள். 

    அப்பாவோட நண்பர் ராமமூர்த்தியோட பொண்ணுக்குக் கல்யாணம். கும்பகோணத்துக்கு நாம்ப குடும்பத்தோட போயாகணும். ஆபீசுக்கு நீ லீவு போடுன்னு சொன்னே... மறு பேச்சு பேசாம லிவு போட்டுட்டு. உங்ககூட வந்திருக்கேன். புது இடம் தூக்கமே வரலை... 

    அதானே பார்த்தேன். ஒரே பொண்ணுங்கிறதால கராத்தே, சிலம்பம், பாட்டு, டான்ஸ், யோகான்னு சகலத்தையும் கத்துக்க வச்சு. உன்னை சகல கலா வல்லியா வளர்த்துட்டோம். நீயும் நல்லா படிச்சு மெரீட்டிலே தேறினே... உன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடக் கூடாதுன்னு. ஒதுங்கி இருந்தோம். உன் விருப்பப்படியே தினச்சுடர் பத்திரிகையில ரிப்போர்ட்டரா வேலைக்கு சேர்ந்தே... எங்க பொண்ணு திறமைசாலி. பெரிய பத்திரிகைக்காரி ஆயிட்டாள்னு நாங்க பெருமையா எல்லார்கிட்டேயும் சொல்லிண்டிருக்கோம். உங்கப்பாவுக்கு உன்னை நெனச்சாலே... நூறு சதவீதம் அவருக்கு பெருமிதம் தான்... ஆனா நான்... உள்ளுர திகில்லே செத்துண் டிருக்கேன். மத்தவா கிட்டே அதை வெளிக்காட்டிக்கிடறது இல்லைன்னாலும் பெத்தவ இல்லையா? பரிதவிச்சுண்டிருக்கேன் அபி.

    என்மா? எதுக்கு பரிதவிக்கணும்? தழைந்த குரலில் கேட்டாள்.

    "அறிவுக்களஞ்சியம் நீ... அம்மா என்னத்துக்கு கலங்கித் தவிக்கிறேன்னு உனக்குப் புரியலையாக்கும்?' சலித்துக் கொண்டாள் ருக்மணி.

    தினச்சுடர் எவ்வளவு பிரபலமான பத்திரிகை? அதுலே வேலை கிடைச்சது பெரிய விஷயமாச்சே? தினச்சுடர்லே நடந்தது என்ன?னு ஒரு பகுதி வருதே. அதுக்கு ஜனங்க மத்தியில நல்ல வரவேற்பு இருக்குன்னு உனக்கே தெரியுமே? பரபரப்பான திகில் சம்பவங்கள் அமானுஷ்யமான விஷயங்களை நேர்லே போய் ஆராய்ஞ்சுரிப்போர்ட் தரணும். அதை வாசிச்சுட்டு எத்தனை பேரு போன் மூலமாவும் லெட்டர் மூலமாவும் பாராட்டறாங்க...? இந்தளவுக்கு பேரும் புகழும் செல்வாக்கும். வேற எந்த வேலையிலாவது எனக்குக் கிடைக்குமா? மத்தவங்க பாராட்டும்போது உனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு? சந்தோஷத்துல சொல்லிச் சொல்லி புளகாங்கிதம் அடையறே இல்ல? அப்புறம் எதுக்கு கலங்கித் தவிக்கனும் சொல்லும்மா? 

    என்ன இப்படிக் கேட்டுட்டே அபி? பரபரப்பான திகில் சம்பவங்கள் அமானுஷ்யமான விஷயங்களை நேர்லே போய் ஆராய்ஞ்சுட்டு வரணும்னு. நீ அடிக்கடி கிளம்பிப் போயிடறே. திரும்பி வர்ற வரைக்கும் நான் உசுரைக் கையில பிடிச்சுண்டிருக்கேன் தெரியுமா? பெத்த மனசு படற பாடு உனக்கு எங்கே புரியுது?

    "காலையில ஆபீசுக்குப் போயி... ஏ.ஸி. அறையில கணினி முன்னாடி மணிக்கணக்கா உட்கார்ந்துட்டு ரொட்டீனா வேலை பார்த்து மாசம் பொறந்ததும் சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சேர்றதிலே... என்ன த்ரில் இருக்கு சொல்லு? வாழ்க்கையில பல சவால்களை சந்திக்கணும். போராட்டங்களையும், கஷ்ட்ங்களையும் சமாளிச்சு மீண்டு வரணும். அதுலே தானேம்மா சுவாரஸியமும் திருப்தியும் எதையோ சாதிச்ச பெருமிதமும் நமக்குக் கிடைக்கும்? உயிரைப் பணயம் வச்சு மூச்சடக்கி ஆழ்கடலுக்குள்ளே மூழ்கித் தேடறவனுக்குத் தான்... விலை உயர்ந்த முத்து பரிசா கிடைக்குது.

    நான் என்ன தனியாவா ஆராயப் போறேன்? டிபார்ட்மெண்ட்டுலே இருந்து துணைக்கு வர்றாங்க இல்லையா? அப்புறம் என்னவாம்?"

    "உம்…. எதையாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுடு அபி! உங்கப்பா எப்பவும் உனக்கு தானே பரிஞ்சு பேசறாரு? என்னோட தவிப்பு என்னன்னு. இப்போ உனக்கு புரியாதும்மா. நீயும் ஒரு பொண்ணைப் பெத்து. அது வளர்ந்து வயசுப் பொண்ணாகும் பேர்து தான். வயித்துல நெருப்பு கட்டிண்டாப் பல ஒரு கலக்கமும் .  தவிப்புமா... நீ அவஸ்தைப் படுவே பாரு... அப்போ தான் என்னோட உணர்வுகளை நீ புரிஞ்சுக்குவே...' புலம்பித் தள்ளிவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ருக்மணி.

    அபிதாவுக்கு தூக்கமே வரவில்லை.

    " அது புது இடம் என்பதால் மட்டுமல்ல. அவளுக்கு தூக்கம் பிடிக்காததற்கு வேறொரு முக்கியமான காரணம் இருந்தது நிஜம்!

    நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது. அவளுக்கு அம்மாவிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வந்தது.

    அபி! இன்னிக்கு சாயந்தரம் சீக்கிரமா வந்துடு. நாம எல்லோரும் கும்பகோணத்துக்குப் புறப்படனும். மூணு நாள் லீவு போட்டுடு சரியா? 

    என்னம்மா இது? நான் அவசியம் வரணுமா? அப்பாவும் நீயும் போயிட்டு வந்து டுங்களேன். எனக்கு மூணு நாளைக்கு லீவு போடறதுக்கு எப்படியோ இருக்கே?

    ராமமூர்த்தி மாமா ரொம்ப கோவிச்சுக்கப் போறாரு உங்கப்பாவும் அவரும் பால்ய காலத்து சிநேகிதர்களாச்சே? உன்னை அவசியம் அழைச்சுண்டு வரணும்னு சொல்லியிருக்காரே? மூணு நாள் லீவு போட்டா ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது. எடிட்டர் கிட்டே அனுமதி கேட்டுட்டு வந்துடு. சரியா?

    திட்டவட்டமாகக் கூறிவிட்டு போனை வைத்து விட்டாள் அம்மா ருக்மணி.

    ஆசிரியரிடம் விவரத்தைச் சொல்லி. விடுமுறை கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு தனது கேபினுக்கு திரும்பினாள்.

    டேபிளின் மீது அவளது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கடிதங்களின் மீது பார்வையை ஒட்டினாள். 

    ‘தினச்சுடரில்’ வரும் ‘நடந்தது என்ன’? என்ற பகுதியைப் பாராட்டி வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்திருந்தன.

    ஒவ்வொரு கடிதத்தையும் சிரத்தையுடன் வாசித்துத் கொண் டிருந்தபோது. அவளது செல்போன் செல்லமாய் சிணுங்கியது.

    திரையில் மின்னி மின்னி சிரித்த பெயரைப் பார்த்தாள்.

    கிரீசன். உதவி ஆசிரியர்! துடிப்பான இளைஞன். நல்ல பெயர் டுப்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவன். ஆசிரியர் துணசேகரனின் மனதில் இடம் பிடித்தவன்.

    அபிதா திறமையான ரிப்போர்ட்டர் என்பதால்... அவளை கிரீச வக்கு நிரம்பவே பிடிக்கும்.   

    சுவாரசியமான விஷயங்களை அவ்வப்போது இருவரும் அலசிக் காள்வது வழக்கம். 

    ஹலோ வணக்கம் சார்! 

    வணக்கம் அபி! எங்கே இருக்கீங்க?

    "ஆபீஸ்லே தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1