Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakkaram Nirpathillai
Sakkaram Nirpathillai
Sakkaram Nirpathillai
Ebook175 pages1 hour

Sakkaram Nirpathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெறும் தனிமனிதர்கள் பற்றிய குறை நிறைகளாக எழுதப்பட்டுவிடுவது எனக்கு உகந்ததில்லை. ஆயினும் அவை தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட சான்றுகளாகவும் எனது இலக்கிய வாழ்க்கையில் நான் சந்தித்த, சமர்புரிந்த சமூக சக்திகளாகவும் அடையாளம் காட்டவல்ல, காட்டவேண்டிய நாள் வரும். அது குறித்துப் பின்னர் விரிவாக எழுதுவது அனைவர்க்கும் ஒரு வெளிச்சத்தைத் தரும். இப்போது நமது சக்கரம் நிற்காமல் சுழல்கிறது என்பதற்கு ஒரு சாட்சியாய் இந்தத் தொகுதி

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580103906923
Sakkaram Nirpathillai

Read more from Jayakanthan

Related to Sakkaram Nirpathillai

Related ebooks

Reviews for Sakkaram Nirpathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakkaram Nirpathillai - Jayakanthan

    https://www.pustaka.co.in

    சக்கரம் நிற்பதில்லை

    Sakkaram Nirpathillai

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    ‘சக்கரம் நிற்பதில்லை’ எனும் இந்தத் தலைப்புக் கதை தவிர மற்றவை அனைத்தும் ஆனந்தவிகடன் வார இதழ்களிலும், தீபாவளி மலரிலும் வெளிவந்தவை.

    ‘சக்கரம் நிற்பதில்லை’ தினமணி கதிரில் வெளியாயிற்று. இந்தப் பத்திரிகைகளுக்கெல்லாம் நன்றி கூறுகிற நான், என்னைப் பற்றியும் இக்கதைகளைப் பற்றியும் இந்தப் பத்திரிகைகள் என்ன கூறுகின்றன என்றும் அறிவேன்.

    ஆனந்தவிகடன் பத்திரிகை ஒரு மாரீசப் பெயரில் என்னைக் குறித்துத் தனது பத்திரிகையில் ஒரு கருத்தை வெளியிட்டது. அதாவது நான் கதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேனாம். இனி இருக்கும் எனது எஞ்சிய காலத்தை இந்த ‘மாரீச மாமா’க்கள் எழுதும் மைதுனக் கதைகளை விமரிசனம் செய்து ‘இலக்கியப் பணி’ புரியலாமே என்று எனக்கு யோசனை தெரிவித்தது அந்தப் பத்திரிகை!

    அந்த யோசனைக்குப் பிறகு, அதே பத்திரிகையில் நான் எழுதிய கதைகள் ‘குருக்கள் ஆத்துப் பையன்’, ‘இந்த இடத்திலிருந்து...’ ஆகிய இரண்டும்.

    ‘சக்கரம் நிற்பதில்லை’ ஆ.வி.யில் பிரசுரமாகும் என்ற எண்ணத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். நானோ எனது வாசகர்களோ சற்றும் எதிர்பாராத விதமாக அது தினமணி கதிரில் வெளியாயிற்று.

    இந்தச் செய்திகளுக்குப் பின்னால் நிறைய ‘சமாசாரங்கள்’ உண்டு. அவை வெறும் தனிமனிதர்கள் பற்றிய குறை நிறைகளாக எழுதப்பட்டு விடுவது எனக்கு உகந்ததில்லை. ஆயினும் அவை தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட சான்றுகளாகவும் எனது இலக்கிய வாழ்க்கையில் நான் சந்தித்த, சமர்புரிந்த சமூக சக்திகளாகவும் அடையாளம் காட்டவல்ல, காட்டவேண்டிய நாள் வரும். அது குறித்துப் பின்னர் விரிவாக எழுதுவது அனைவர்க்கும் ஒரு வெளிச்சத்தைத் தரும். இப்போது நமது சக்கரம் நிற்காமல் சுழல்கிறது என்பதற்கு ஒரு சாட்சியாய் இந்தத் தொகுதி வந்து நிற்கிறது என்பதை ஒரு குறிப்பாகச் சொல்லி வைப்பது போதும் என்று நினைக்கிறேன்.

    நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எந்தப் பத்திரிகைக்கும் நானா எழுதப் போனதில்லை என்ற செய்தியைப் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறன். பத்திரிகைகளுக்கு, இலக்கியத்திலும் எழுத்தாளனிடமும் இருந்த ஈடுபாட்டுக்கு ஓர் உதாரணமாகவே அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள் என்பதை விளக்கியிருக்கிறேன்.

    ஆனால் இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு நானேபோய் ஒரு பத்திரிகையின் கதவைத் தட்டினேன்:

    ஹலோ...

    சாவி இருக்காரா?

    சாவிதான் பேசறேன்...

    நான் ஜெயகாந்தன் பேசறேன்...

    யார்? ஜெய... ஜெயகாந்தன் ரைட்டர் - நம்ப முடியலியே ஸார்...

    என்னை நம்புங்கள்.

    சொல்லுங்கள் ஸார்... சௌக்கியமா இருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு... ஸார்... சொன்னா நம்புவேளா? இப்ப உங்களை நெனைச்சேன்... How can we forget?

    Now I am knocking at your door.

    It is always open for you

    Thank you! விஷயத்துக்கு வருவோம். உங்களுக்கு நான் ஒரு கதை தர்ரதாக உத்தேசம்...

    இரண்டு கையாலும் வாங்கிக்கறேன்...

    அதுக்கு முன்னே சில விஷயங்கள் சொல்லணும்...

    சொல்லுங்கோ என்ன சொல்லப் போறீங்க!... ‘கதையிலே ஒண்ணும் மாத்தப்படாது – குறைக்கப்படாது’ன்னு இவ்வளவு தானே...

    அதெல்லாம் நாம புதிசா சொல்லிக்கணுமா? விஷயம் அதில்லே. இந்தக் கதை இன்னொரு பிரபல வாரப் பத்திரிகைக்காக எழுதப்பட்டது. ஏதோ காரணத்தாலே இந்தச் சக்கரம் நிற்கும் போல... அதனாலேதான் உங்க நினைவு வந்தது...

    பத்திரிகைதானே? அந்தப் பிரபலம்...

    எதுவோ ஒண்ணு... that is not important. பின்னாலே அந்த விஷயம் உங்களுக்குத் தெரிய வந்து ஒரு கதவு எனக்கு அடைக்கப்பட்டு, அதனால் நான் உங்களிடம் approach பண்ணினதா நீங்க நெனைச்சுக்கப்படாது...

    அதெப்பத்தியெல்லாம் என்ன ஸார்... ஜெயகாந்தன் எழுதணும்... நானே வந்து கதையை வாங்கிக்கட்டுமா?...

    இல்லை, நானே வந்து உங்க ஆபீசிலே தரணும்...

    இப்படியாக இது தினமணி கதிரில் பிரசுரமாயிற்று. நானும், சாவியும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொள்வதைவிடவும் காலம் இதன் பொருட்டு எங்களை வாழ்த்த வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    எனது கதைகள் இந்தப் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என்று என்னைச் சூழ்ந்துள்ள சகல சக்திகளும், நல்நோக்கத்துடன் நிர்ப்பந்திக்கிறபோது நான் எவ்விதம், எதன் பொருட்டு இவற்றை விடுவேன்!

    இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை என்றே இப்பொழுதும் நான் நம்புகிறேன். எழுத்தையும், இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயரவேண்டும் என்றே விரும்புகிறேன். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும், தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ்ப் பத்திரிகைகளில், இலக்கியம் தேடுவதை இன்னும் விட்டபாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதல் பெறட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின் மீது ஆரோகணித்திருக்கிறேன்.

    ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டும் அல்ல. அது விசுவரூபம்...

    சென்னை - 75

    18.02.1975

    த. ஜெயகாந்தன்

    உள்ளே

    1. சீசர் (1972)

    2. அரைகுறைகள் (1972)

    3. குருக்கள் ஆத்துப் பையன் (1973)

    4. இந்த இடத்தில் இருந்து (1993)

    5. சக்கரம் நிற்பதில்லை (1974)

    சீசர்

    நிலைமை ரொம்பவும் ரசாபாசமாகிவிட்டது. கீழேயிருந்து கிளம்பிய திடீர்ச் சந்தடியில், அப்பாவின் உரத்த குரலைக் கேட்டு, மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்து, எழுந்திருக்கப் பயந்துகொண்டு, இந்தச் சமயத்தில் அப்பாவின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று, எழுந்து பார்க்காமலே எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, கீழே கும்பல் கூடி நிற்கிற அவர்கள் முகத்தில் விழிக்க விரும்பாத தர்மசங்கடத்தில் கால்மணி நேரமாய் நான் படுத்துக் கொண்டேயிருக்கிறேன். இதோ, என் தலைமாட்டிலிருக்கிற ஜன்னல் வழியாகப் பார்த்தால் எல்லாமே தெரியும்.

    அபவாதத்துக்கு ஆளாகி நிற்கிற மங்களம் - சீதா ராமய்யரின் மனைவி - பரிதாபகரமான அழுகைக் குரலில் தெய்வத்திடம் முறையிடுகிற மாதிரி எல்லோரையும் சபித்து அலறுகிற குரல் கேட்கிறது:

    நீங்களெல்லாம் நன்னா இருப்பேளா?... இப்படி அபாண்டமா சொல்றேளே... அவர் வரட்டும்... கைநெறய நெருப்பை அள்ளிண்டு நான் சத்தியம் பண்றேன்...

    அவள் அலறியபோது வார்த்தைகள் தெளிவாகக் கேட்காமல் ஆங்காரமும், கோபமும் கிறீச்சிட்டு அழுகையில் குழம்புகிறது.

    ஏதோ கைகலப்பு மாதிரி, யாரையோ யாரோ பிடித்து இழுக்கிற மாதிரி, கொண்டுபோய்ச் சுவரோரமாகத் தள்ளுகிற மாதிரியெல்லாம் சத்தங்கள் கேட்கின்றன.

    ராஸ்கல்! எங்கேடா ஓடப் பாக்கறே? சீதாராமய்யர் வரட்டும். அவர் கையிலே செருப்பைக் குடுத்து உன்னை அடிக்கச் சொல்லலேன்னா என் பேரை மாத்தி வச்சுக்கோ. அவர் வீட்டிலே தண்டச்சோறு திங்கறதுமில்லாமல்... துரோகிப் பயலே! நானானா வெட்டிப் போட்டுடுவேன் உன்னை, இப்போவே - அப்பா, சாமி வந்த மாதிரி குதிக்கிறார்.

    அப்பாவுக்குத்தான் சாமி வருமே அடிக்கடி. காலையிலிருந்து இது மூணாவது தடவை. இப்போ அம்மாவும் கூடச் சேர்ந்துகொண்டாள்.

    ஐயோ! உங்களுக்கு ஏன்னா தலையெழுத்து? அந்தப் பிராமணர் மொகத்தைப் பார்த்து நாம்ப இடம் கொடுத்தோம். கண்ட செனிகளையும் இழுத்துண்டு வந்து ஆத்திலே விட்டுட்டு, அவரானா கார்த்தாலே போய்ட்டு ராத்திரி வரார். இங்கே நடக்கற கண்றாவியெல்லாம் நாம்பன்னா பார்க்க வேண்டி இருக்கு... அவர்கிட்டே சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோன்னு சொன்னா... உங்களை யார் இப்படி வந்து நிக்கச் சொன்னா? கர்மம்! வாங்கோ உள்ளே.

    நீ போடி உள்ளே - இந்த உறுமல் போறும். அம்மா இத்தனை நேரம் உள்ளே போயிருப்பாள்.

    ஸார், நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கோ; சீதாராமய்யர் வரட்டும். அவா எப்படிப் போனா நமக்கென்ன?... எதிர்ப் போர்ஷன் நாராயணன் அப்பாவைச் சமாதானம் பண்றார்போல இருக்கு.

    நமக்கென்னவா? நாலு சம்சாரிகள் குடி இருக்கிற இடத்தில் இந்த அக்கிரமம் அடுக்குமாங்காணும்? பசு மாதிரி அந்த மனுஷனுக்கு இவா பண்ற துரோகத்துக்கு நாமும் துணை போற மாதிரின்னா ஆயிடும்? வீடே இடிந்து போகிற மாதிரி அப்பா கத்துகிறார். வீட்டுக்காரர் இல்லையா! எல்லாக் குடித்தனக்காரர்களும் வாசலில் கும்பல் கூடி நிற்கிறார்கள் போல் இருக்கிறது. நல்லவேளை! சின்னப் பசங்கள் யாரும் இல்லை. எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கும். இந்த அப்பாவுக்குக் கொஞ்சம் கூடப் புத்தி கிடையாது. சீ! மனுஷன் சுத்த அல்பம். காலையிலேயே எனக்குத் தெரியும், இப்படி என்னமோ நடக்கப் போறதுன்னு.

    கொஞ்ச நாளாகவே பொம்மனாட்டிகள் எல்லாம் ஒத்துமையாக் கூடிண்டு, இதிலே மங்களத்தை மட்டும் சேர்த்துக்காமல், ரகசியம் பேசினா. அப்புறம் காலையிலே அம்மா போயிப் போயி அப்பாவோட ரகசியம் பேசினா. அப்பா மூக்கை வெடச்சிண்டு, செருமிச் செருமி உறுமிண்டு, முற்றத்தில் போய் நின்னுண்டு சீதாராமய்யர் வீட்டை மொறைச்சுப் பார்த்தார். அப்பவே எனக்குத் தெரியும், என்னமோ ரகளை நடக்கப் போறதுன்னு. நான் ஒரு மடையன். பத்து மணிக்கிச் சாப்பாடானதும் வழக்கம் போல எங்கேயாவது வெளியில் போய்த் தொலைந்திருந்தால் இந்தக் கர்மத்தையெல்லாம் காது கொடுத்துக் கேட்க நேர்ந்திருக்காது. பேப்பரிலே பார்த்துண்டே தூங்கித் தொலைந்தேன். காலையிலே நான் சாப்பிடும்போதே தட்டிலே சாதத்தைப் போட்டுட்டு அம்மா அப்பாகிட்டே ஒரு தடவை ஓடி என்னவோ கையையும் காலையும் ஆட்டிண்டு ரகசியக் குரலிலே பேசிண்டிருந்தாள். அப்போவே, அவா ரகசியம் அசிங்கமா இருந்தது; அல்பமா இருந்தது.

    நான் சாதத்தைத் தட்டில் பிசைந்து கொண்டே மோருக்காகக் காத்திருந்தேன், யார் எப்படிப் போனால் இவாளுக்கென்னவாம்?

    எதுக்காக யாரைப் பத்தியாவது அபாண்டமா ஏதாவது சொல்லணும்? இதிலே இவாளுக்கு ஒரு சந்தோஷம் இருக்குன்னு தெரிஞ்சப்போ இவாளுக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததுக்காகச் சுவத்திலே முட்டிக்கலாம் போலிருந்தது.

    அம்மா...ன்னு பல்லைக் கடிச்சிண்டு கத்தினேன். எனக்கு மோரை ஊத்தித் தொலைச்சுட்டு அப்பறமாப் போயி ஊர்வம்பு அளக்கலாம்.

    அவ்வளவுதான்; அப்பாவுக்கு சாமி வந்துடுத்து; துரைக்கு ஆபீசுக்கு நேரமாயிடுத்தோ?ன்னு ஆரம்பிச்சவர் நான் சாப்பிட்டு எழுந்திருக்கிறத்துக்குள்ளே நூறு ‘தண்டச்சோறு’ போட்டுட்டார். நான் தலையைக் குனிஞ்சிண்டு, இன்னும் நன்னா தட்டிலே கவிழ்ந்துண்டு, கண்ணிலேருந்து தண்ணி முட்டிண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1