Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalai Mayakkam
Maalai Mayakkam
Maalai Mayakkam
Ebook172 pages1 hour

Maalai Mayakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முற்போக்கு இலக்கியம் என்பது பற்றி விரிவாக எழுத ஒரு புத்தகத்தின் முன்னுரையில் இடமில்லை; என்றாலும் பொதுவாக அது என்ன என்றாவது விளக்க எனது கதைத் தொகுதிக்கு அதிகாரமுண்டு.

உலகம், மனித வாழ்க்கை - பொதுவாக - முன்னேறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் நமக்குள் அபிப்பிராய பேதம் உண்டா? அநேகமாக இல்லை. சில ‘ஸினிக்'குகள். தனி வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் மனம் முறிந்து உலகை - இரண்டு விரல்களுக்கிடையே தாங்களே அமைத்துக் கொண்ட சாளரத்தின் வழியாக ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறித்து நோக்கிக் கற்பனைத் துயருக்கு ஆளாகும் சில நிரந்தர நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். உலகம் முன்னேறி வருகிறது; மனிதன் வளர்கிறான் என்பதை...

இங்கே மனிதன் என்று கூறும்போது நாம் குறிப்பிடுவது, வளர்கின்ற உலகப் பொது மனிதனைத் தான்.

இதை ஏற்றுக் கொள்பவர்கள், வளர்ச்சியை விரும்புபவர்கள், இந்த வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள மறுப்போரை எதிர்ப்பவர்கள், இந்த வளர்ச்சிக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளுபவர்கள்; தன்னினம் - தன் சமூகம், தனது சமுதாயம் - இந்த வளர்ச்சிக்குத் தகுந்த நிலை பெறவில்லையே என்று புழுங்குபவர்கள், இந்த வளர்ச்சிக்குகந்தவர்களாக அவர்கள் மாறாதிருக்கும் சூழ்நிலையை ஆராய்பவர்கள், அந்தத் தடைகளை அறிந்து மற்றவர்களுக்கு அறிவிப்பவர்கள், உலகவளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஒரு சமூகத்திலேயே வளர்ச்சிக்குரிய அந்த அம்சம் சிறுபொறியாக இயற்கையிலேயே கனன்று கொண்டிருப்பதைக் காண மறுக்காதவர்களும், காண்பவர்களும் முற்போக்காளர் ஆவர்.

மனிதனுக்கு மனிதன் இருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் மனிதனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொரு துயரப்படும் ஜீவன் செய்யும் தியாகம் - இன்னபிற அடிப்படை மனித உணர்வுகள் பொதுவான வளர்ச்சிக்கான ஆதார உண்மைகள். இவை எல்லாம் சேர்ந்தே - உலக வளர்ச்சிகேற்ப உளவளர்ச்சியும், அறிவுத் தெளிவும் பெறும் முற்போக்குச் சிந்தனையால் - ஒரு முற்போக்காளர் உருவாக வழி சமைக்கிறது.

அந்த முற்போக்காளன் ஆஸ்திகனாகவோ நாஸ்திகனாகவோ, ஒரு அரசியல் கட்சியில் நேரிடைப் பங்கு பெறுபவனாகவோ இல்லாதவனாகவோ இருக்கலாம். ஆனால், நிகழ்காலம் பார்த்துப் பரிகசிக்கத் தக்க, பழைய செத்தொழிந்த தத்துவங்களின் பாதுகாவலனாக இருக்க முடியாது.

உதாரணத்துக்கு, பாரதி என்கிற ஆஸ்திகனைச் சொல்லலாம். அவன், காலத்தின் வளர்ச்சியை மனிதனின் மேம்பாட்டை என்றும் மறுத்ததில்லை. அவன் ஆஸ்திகன். ஒரு சோஷலிச சகாப்தத்தை அவன் கிருதயுகம் என்றே குறிப்பிடுவான். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் விளைவிக்கும் ஒரு சகாப்தத்தை, 'பொய்க்கும் கலி'யென்றே சொல்வான். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வார்த்தைகளில் பேதப் படுவார்கள்; அர்த்தத்தில் அல்ல, இருவரும் முற்போக்காளராயிருந்தால்.

என் சிந்தனைகள் முற்போக்கானவை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்கு முற்போக்கு என்று தோன்றுவதால் மட்டும் நான் அந்த முடிவுக்கு வரவில்லை. உலகம் எதை முற்போக்கு என்று நிர்ணயிக்கப் போகிறதோ, நிர்ணயிக்கிறதோ அதை வைத்தே சொல்கிறேன் வாழ்க்கையை. இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களைப் பற்றி மிகவும் பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்க வேண்டியது இந்த நூற்றாண்டு - மனிதனுக்கு இன்றியமையாதது ஆகின்றது. இதற்கு அடிப்படையான ஒரு தத்துவம் தேவை. அதைப் பயின்று - வாழ்க்கையிலிருந்தும் அறிந்து, அதன் மூலம் சிந்தனை செய்து - செயல்படுவது ஒரு முற்போக்குவாதியின் கடமையாகிறது.

மனித குணங்களை ஆராய்பவனே, மனித உணர்வுகளை மதிப்பவனே, மனித சாதனைகளை நம்புகிறவனாகிறான். மனிதனின் குறைபாடுகளையுங் கூட அவனே அறிகிறான். வாழ்க்கையை உருவாக்குகிறதும், நிறைவைத் தருகிறதும் எது என்கிற விஷயம் சூழ்நிலைக்கும், வாழ்கின்ற சமூகத்துக்கும் ஏற்ப மாறும். அந்த மாற்றத்தால் விளையும் ஒரு குறிப்பிட்ட மனிதனின் ஒரு குறிப்பிட்ட செயல், நான் கடைப் பிடிக்கும் கொள்கைக்குப் புறம்பு என்பதை உத்தேசித்து அதை நான் மறுக்காமல், அந்த மனிதனின் அந்தச் செயலில் பொதிந்துள்ள மனித தர்மத்தைக் காண்பதையே கடமையாகக் கொள்கிறேன்.

அப்பொழுது சில முற்போக்காளர்கள் நான் வழி தவறிச் செல்வதாக விமர்சிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒன்று கூறுவேன்! இது கலை விவகாரம்! சட்டங்களும் அறநூல்களுந்தான் ஒருவேளை உணர்ச்சியை மீறியதாக இருக்கலாம். கலை என்பது என்றுமே உணர்ச்சிக்கு உட்பட்டது. அந்த அளவில், எனது பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு எனது கொள்கைகளைத் தளர்த்தி (அவை கலை விஷயத்தில் தளர்ந்து கொடுக்கும், தன்மையுடையன.) நான் அவற்றிலே, வளர்ச்சிக்கும், அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் உரிய ஓர் உன்னத மனித சொரூபத்தையே தரிசிக்கிறேன்.

- த. ஜெயகாந்தன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103904046
Maalai Mayakkam

Read more from Jayakanthan

Related to Maalai Mayakkam

Related ebooks

Reviews for Maalai Mayakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalai Mayakkam - Jayakanthan

    http://www.pustaka.co.in

    மாலை மயக்கம்

    Maalai Mayakkam

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மாலை மயக்கம்

    சீட்டாட்டம்

    இது என்ன பெரிய விஷயம்?

    நீ இன்னா ஸார் சொல்றே?

    உறங்குவது போலும்...

    வாய்ச் சொற்கள்

    உண்ணாவிரதம்

    சுயரூபம்

    ஆலமரம்

    இதோ, ஒரு காதல் கதை!

    முன்னுரை

    முற்போக்கு இலக்கியம் என்பது பற்றி விரிவாக எழுத ஒரு புத்தகத்தின் முன்னுரையில் இடமில்லை; என்றாலும் பொதுவாக அது என்ன என்றாவது விளக்க எனது கதைத் தொகுதிக்கு அதிகாரமுண்டு.

    உலகம், மனித வாழ்க்கை - பொதுவாக - முன்னேறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் நமக்குள் அபிப்பிராய பேதம் உண்டா?

    அநேகமாக இல்லை. சில ‘ஸினிக்'குகள். தனி வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் மனம் முறிந்து உலகை - இரண்டு விரல்களுக்கிடையே தாங்களே அமைத்துக் கொண்ட சாளரத்தின் வழியாக ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறித்து நோக்கிக் கற்பனைத் துயருக்கு ஆளாகும் சில நிரந்தர நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். உலகம் முன்னேறி வருகிறது; மனிதன் வளர்கிறான் என்பதை...

    இங்கே மனிதன் என்று கூறும்போது நாம் குறிப்பிடுவது, வளர்கின்ற உலகப் பொது மனிதனைத் தான்.

    இதை ஏற்றுக் கொள்பவர்கள், வளர்ச்சியை விரும்புபவர்கள், இந்த வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள மறுப்போரை எதிர்ப்பவர்கள், இந்த வளர்ச்சிக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளுபவர்கள்; தன்னினம் - தன் சமூகம், தனது சமுதாயம் - இந்த வளர்ச்சிக்குத் தகுந்த நிலை பெறவில்லையே என்று புழுங்குபவர்கள், இந்த வளர்ச்சிக்குகந்தவர்களாக அவர்கள் மாறாதிருக்கும் சூழ்நிலையை ஆராய்பவர்கள், அந்தத் தடைகளை அறிந்து மற்றவர்களுக்கு அறிவிப்பவர்கள், உலகவளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஒரு சமூகத்திலேயே வளர்ச்சிக்குரிய அந்த அம்சம் சிறுபொறியாக இயற்கையிலேயே கனன்று கொண்டிருப்பதைக் காண மறுக்காதவர்களும், காண்பவர்களும் முற்போக்காளர் ஆவர்.

    இந்த நிர்ணயமே பரந்த அளவில், அதிகக் கட்டுகளில்லாத ஒரு முற்போக்கு அணியை உருவாக்குகிறது.

    மனிதனுக்கு மனிதன் இருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் மனிதனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொரு துயரப்படும் ஜீவன் செய்யும் தியாகம் - இன்னபிற அடிப்படை மனித உணர்வுகள் பொதுவான வளர்ச்சிக்கான ஆதார உண்மைகள். இவை எல்லாம் சேர்ந்தே - உலக வளர்ச்சிகேற்ப உளவளர்ச்சியும், அறிவுத் தெளிவும் பெறும் முற்போக்குச் சிந்தனையால் - ஒரு முற்போக்காளர் உருவாக வழி சமைக்கிறது.

    அந்த முற்போக்காளன் ஆஸ்திகனாகவோ நாஸ்திகனாகவோ, ஒரு அரசியல் கட்சியில் நேரிடைப் பங்கு பெறுபவனாகவோ இல்லாதவனாகவோ இருக்கலாம். ஆனால், நிகழ்காலம் பார்த்துப் பரிகசிக்கத் தக்க, பழைய செத்தொழிந்த தத்துவங்களின் பாதுகாவலனாக இருக்க முடியாது.

    உதாரணத்துக்கு, பாரதி என்கிற ஆஸ்திகனைச் சொல்லலாம். அவன், காலத்தின் வளர்ச்சியை மனிதனின் மேம்பாட்டை என்றும் மறுத்ததில்லை. அவன் ஆஸ்திகன். ஒரு சோஷலிச சகாப்தத்தை அவன் கிருதயுகம் என்றே குறிப்பிடுவான். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் விளைவிக்கும் ஒரு சகாப்தத்தை, 'பொய்க்கும் கலி'யென்றே சொல்வான். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வார்த்தைகளில் பேதப் படுவார்கள்; அர்த்தத்தில் அல்ல, இருவரும் முற்போக்காளராயிருந்தால்.

    பியட் காரில் சவாரி செய்து கொண்டு, நவீன, இயந்திர வளர்ச்சியின் ஒரு கூறான சினிமாத் தொழிலில் பணம் சம்பாதித்துக் கொண்டு, எலெக்டிரிக் லைட், 'பேன்’ ஏர் கண்டிஷண்ட் ரூம் போன்ற வசதியை, சாதாரண மக்களை விட அதிகம் அனுபவித்துக் கொண்டு - மச்சானும் குட்டியும் பாடுவதாகப் பாட்டெழுதி, 'மானத்தை வளைச்சிப் புடிச்சிட்டான், மனசை அடக்கக் கத்துக்கலே' என்று பம்மாத்துப் பண்ணுவது பிற்போக்குத்தனம் அல்லவா?

    இவர்கள் இன்று உலகில் நடக்கும் விஞ்ஞான, சாதனைகளை அரக்கத்தனம் என்றும் 'இந்திரஜித் மாயை’ என்றும் வர்ணிக்கிறார்கள். அரக்கர்களுக்கெதிராக அமரர்கள் உண்டு என்பதை இவர்களின் ஆஸ்தீக ஞானம் ஏனோ ஏற்க மறுக்கிறது.

    யார் மனிதகுலத்தை வாழவைக்கப் போகிறார்கள்? என்ற விஷயம் வேறு. இரு சாராரும் போட்டியிட்டுக் கொண்டு உலகத்தை அழிக்கப் போகிறார்கள் என்பதும் விஞ்ஞானம் வேண்டாத பயங்கரம் என்பதும் சரியான ஆஸ்திகனுக்குக்கூட ஒத்து வராது. இப்படிக் கூறுபவர்கள் யாராயிருந்தாலும் பிற்போக்காளர்கள்தான்.

    இந்தப் போக்கு, உலகமே வியந்து வாழ்த்தும் ஒரு விஞ்ஞானச் சாதனையை - அண்டவெளிக்கு மனிதனை அனுப்பிய முயற்சியை - குறித்துப் பாடுகையில், 'நாக்குட்டியைப்போல் அசுரன் ஒருத்தன் பறக்கிறான். அவன் நடுவானத்தில் நின்னுகிட்டு குலைக்கிறான்' - என்று பிதற்ற வைக்கும் போக்கு, பிற்போக்கு அல்லாமல் வேறென்ன?

    என் சிந்தனைகள் முற்போக்கானவை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்கு முற்போக்கு என்று தோன்றுவதால் மட்டும் நான் அந்த முடிவுக்கு வரவில்லை. உலகம் எதை முற்போக்கு என்று நிர்ணயிக்கப் போகிறதோ, நிர்ணயிக்கிறதோ அதை வைத்தே சொல்கிறேன் வாழ்க்கையை. இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களைப் பற்றி மிகவும் பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்க வேண்டியது இந்த நூற்றாண்டு - மனிதனுக்கு இன்றியமையாதது ஆகின்றது.

    இதற்கு அடிப்படையான ஒரு தத்துவம் தேவை. அதைப் பயின்று - வாழ்க்கையிலிருந்தும் அறிந்து, அதன் மூலம் சிந்தனை செய்து - செயல்படுவது ஒரு முற்போக்குவாதியின் கடமையாகிறது.

    முற்போக்குக் கலை, இலக்கியம், என்று வரும் போது, மேலே குறிப்பிட்ட சிந்தனாவாதிகளின் செயல்கள் வறட்டுத்தனமான மேடைப் பேச்சாக இல்லாமல், பிரச்சாரத் தன்மை அதிகம் இல்லாமல்; கலா ரூபமாய் எவ்வளவு தூரம் சித்திரிக்கப்பட்டு நிறைவேறி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் மற்றவர்களுக்கு இதை, முற்போக்காளர்கள் புரிய வைக்க முடியும்.

    இந்த ஜாக்கிரதை உணர்வோடு, கலைப்பிரக்ஞையோடு எழுதப்பட்ட கதைகள் இவை. இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கை விளக்கத்தையும்விட மனித உணர்வுகளே வலியுறுத்தப்பட்டன.

    மனித குணங்களை ஆராய்பவனே, மனித உணர்வுகளை மதிப்பவனே, மனித சாதனைகளை நம்புகிறவனாகிறான். மனிதனின் குறைபாடுகளையுங் கூட அவனே அறிகிறான். வாழ்க்கையை உருவாக்குகிறதும், நிறைவைத் தருகிறதும் எது என்கிற விஷயம் சூழ்நிலைக்கும், வாழ்கின்ற சமூகத்துக்கும் ஏற்ப மாறும். அந்த மாற்றத்தால் விளையும் ஒரு குறிப்பிட்ட மனிதனின் ஒரு குறிப்பிட்ட செயல், நான் கடைப் பிடிக்கும் கொள்கைக்குப் புறம்பு என்பதை உத்தேசித்து அதை நான் மறுக்காமல், அந்த மனிதனின் அந்தச் செயலில் பொதிந்துள்ள மனித தர்மத்தைக் காண்பதையே கடமையாகக் கொள்கிறேன்.

    அப்பொழுது சில முற்போக்காளர்கள் நான் வழி தவறிச் செல்வதாக விமர்சிக்கிறார்கள்.

    அவர்களுக்கு ஒன்று கூறுவேன்! இது கலை விவகாரம்! சட்டங்களும் அறநூல்களுந்தான் ஒருவேளை உணர்ச்சியை மீறியதாக இருக்கலாம். கலை என்பது என்றுமே உணர்ச்சிக்கு உட்பட்டது. அந்த அளவில், எனது பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு எனது கொள்கைகளைத் தளர்த்தி (அவை கலை விஷயத்தில் தளர்ந்து கொடுக்கும், தன்மையுடையன.) நான் அவற்றிலே, வளர்ச்சிக்கும், அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் உரிய ஓர் உன்னத மனித சொரூபத்தையே தரிசிக்கிறேன்.

    அப்படிப்பட்ட தரிசனத்தால் விளைந்த முற்போக்குக் கதைகள் இவை என்ற எனது நம்பிக்கை தவறாகாது. ஏனெனில், எனது நோக்கம் நிறைவானது. அந்த எனது நோக்கத்தைக் குறை கூறுதலை நான் சம்மதியேன். எனது செயலில் குறைகள் ஏற்பட்டிருந்தால் - நீங்கள் அவ்விதங் கருதினால்... அதனைக் கூறி, தவிர்ப்பது, எனக்கும் விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும் கடமையாகிறது.

    ***

    இந்தத் தொகுதியில் உள்ள பத்து கதைகளும் ஆனந்த விகடனில் ஆறும், கல்கியில் இரண்டும், சரஸ்வதியில் ஒன்றும், ஹனுமானில் ஒன்றுமாக இதற்குமுன் பிரசுரிக்கப்பட்டவை.

    சென்னை - 8.

    21.12.1961

    - த. ஜெயகாந்தன்

    *****

    மாலை மயக்கம்

    நாலுவீட்டில் 'முறை வாசல்' செய்து இரண்டு வீட்டில் பாத்திரம் தேய்த்துத் தன் ஒரு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் பிழைப்புத்தான் பொன்னம்மாளுக்கு.

    முப்பது வருஷங்களுக்கு முன் நேர்ந்த புருஷனின் மறைவுக்குப்பின், அன்றிருந்த அடிமை பாரதத்தில் எழுத்து வாசனையில்லாத ஓர் அனாதைப் பெண், அதுவும் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்த ஒரு ராஜத் துவேஷியின் விதவை, வேறு என்னமாய் வாழ்ந்திருக்க முடியும்? எந்த அரசாங்கத்தை அவள் புருஷன் எதிர்த்து, விதேசிப் பொருள் பகிஷ்கரிப்பு இயக்கத்தில் பங்கு பெற்றுத் தடியடிபட்டு மாண்டு போனானோ, அதே அரசாங்கத்தின் விசுவாச மிக்க ஊழியர்களின் இல்லத்தில் அவள் பணிப் பெண்ணானாள். அந்தச் சொற்ப வருமானத்தில் அந்தத் தியாகி விட்டுச் சென்ற இரண்டு ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் போஷித்து, கொஞ்ச காலத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் ஒன்றன் பின் ஒன்றாகக் 'கருமம்' செய்ததும், எஞ்சி நின்ற பெண் குழந்தையை மட்டும் உயிரினும் மேலாகக் காப்பாற்றி வளர்த்துப் பத்து வருஷங்களுக்கு முன் பட்டணத்தில் ஏதோ ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியில் அட்டெண்டராயிருக்கும் ரங்கசாமிக்குக் கல்யாணம் செய்து அனுப்பிவிட்டு நிம்மதியாக வாழ்வதும் அந்தத் தியாகியின் லட்சியக் கனவுகளுக்கு விடப்பட்ட சவாலா...? தியாகத்தின் பரிசா...?

    போகட்டும்! தியாகம் என்பது பரிசுக்குரிய போட்டிப் பந்தயமோ, நற்சாட்சிப் பத்திரத்திற்குரிய பரீட்சைத் தேர்வோ அல்ல.

    ஊரில், ஆறு மாதங்கள் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த பெருமையைக் கொண்டாடியே கௌன்ஸிலராகி, பிறகு சட்டசபை அங்கத்தினராகவும், வரப்போகும் தேர்தலில் பார்லிமெண்ட் உறுப்பினராகவும் ஆக இருக்கும் இன்னொரு பெரிய மனிதர் - அகில இந்தியப் புகழ் வாய்ந்தவர்; அவர் பேரில் ஓர் ஆஸ்பத்திரி, நூல் நிலையம், பொதுப்பூங்கா போன்ற 'விருது’கள் தியாகத்தைப் பறை அடித்து நிற்கின்றன. அவரைக் குறை சொல்லலாமா? அவரைப்போல் ஆயிரம் பேர் ஊர்கள் தோறும் உருவான பிறகு அவர் மட்டும் வாளாவிருந்தால் அது ஏமாளித்தனமல்லவா?

    ஆனால் ஊரும் தேசமும் சின்னசாமியை, பொன்னம்மாளின் புருஷனை, அந்த எளிய மனிதனை, ஆனால் பெரிய தியாகியை மறந்துவிட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திர சர்க்காரின் முன்னிருக்கும் எத்தனையோ

    Enjoying the preview?
    Page 1 of 1