Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engengu Kaaninum...
Engengu Kaaninum...
Engengu Kaaninum...
Ebook139 pages54 minutes

Engengu Kaaninum...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others.

Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)

Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.

In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.



https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103903943
Engengu Kaaninum...

Read more from Jayakanthan

Related to Engengu Kaaninum...

Related ebooks

Reviews for Engengu Kaaninum...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engengu Kaaninum... - Jayakanthan

    http://www.pustaka.co.in

    எங்கெங்கு காணினும்...

    Engengu Kaaninum…

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    'இந்தக் கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே' என்று எழுதுகிற அவசியம் இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை, இந்தக் கதை என் கற்பனையாக மட்டும் இருப்பது ஒரு வருத்தத்துக்குரிய உண்மை என்பதை நான் மறந்து விடவில்லை

    இதனைக் கற்பனைப் புரட்சியென்று - புரட்சியை விரும்பாதவர்களும், 'புரட்சிகரக் கற்பனை' என்று - புரட்சியின் ஆதரவாளர்களும் கருதுவர்.

    கற்பனை என்பது பொய்யல்ல; எல்லாக் கற்பனைகளும் பொய்யாகி விடாது. இந்தக் கதையில் நான் புனைந்துள்ள கற்பனைகள் உலகில் நடவாதவையோ, நடக்கக் கூடாதவையோ, நடக்கப் போகாதவையோ அல்ல! நிகழ்காலச் சமூகத்துக்கு எதிர்காலத்தைப் பற்றி நான் விடுக்கும் ஓர் எச்சரிக்கையே ஆகும் இது!

    சும்மாவானும் 'கிளி கீக் என்று கத்தியது; நதி சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது; காற்று மந்தகாசமாக வீசிக் கொண்டிருந்தது' என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட எங்கெங்கே இதயங்கள் எப்படியெப்படி யெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்க வேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.

    நான் அவசரகால நிலையின் போது நிலவிய சமூக சூழ்நிலைகளைக் களமாக வைத்துக் கொண்டு ஒரு - நீளமான, பல பகுதிகளுடைய கதைகளின் தொகுப்பாய் - நாவல் ஒன்றை எழுதத் திட்டமிட்டேன்; அதன் விளைவுகளே, ‘ஜய ஜய சங்கர,’ ‘மனவெளி மனிதர்கள்’ ‘எந்தையும் தாயும்’, ‘மகா யக்ஞம்,’ ‘பாவம் இவள் ஒரு பாப்பாத்தி', 'ஊருக்கு, நூறு பேர்'-இறுதியில் ‘எங்கெங்கு காணினும்...’ ஆகியவை.

    இதன் கடைசிப் பகுதியான இந்நால் 'கல்பனா' நூல் வரிசையில் முதல் நூலாக வெளிவந்தது மிகவும் பொருத்தமும் அர்த்தமும் உடையதாகும்.

    செவ்வாய்க் கிரகத்திலிருந்து ஒரு வகை ஜீவராசிகள் பூமியின் மீது படையெடுத்து வருவதாய்ச் சித்திரிக்கும் கற்பனைக் கதைகளையும், கொள்ளைக்காரர்களும், கள்ளக் கடத்தல்காரர்களும் புரிகிற நடவடிக்கைகளையெல்லாம் திகிலூட்டும் கதைகளாகவும் எழுதுவதற்கு எல்லையற்ற சுதந்திரம் உடைய எழுத்தாளர்கள் மத்தியில், ‘இந்த மக்கள் மத்தியிலிருந்தே, ஒரு புரட்சிப் படை சர்வ சக்தி படைத்ததாய்த் தோன்றும்' என்று கற்பனை செய்வதே எனக்குப் பெருமை தருகிற கற்பனையாயிருக்கிறது.

    இந்த நாவல், விமர்சனங்களை விட மேலும் ஆழமாய் விளக்கமுறுவதையும், விரிவாக்கப் படுவதையுமே எதிர் பார்த்து எழுதப்பட்டது ஆகும்.

    எனது வாசகர்கள் என்னைத் தொடர்ந்து பயின்றும், 'கண்காணித்தும்’ பாதுகாத்தும் வருகிறவர்கள் என்பதால் அதிக விளக்கங்களும் விரிவுரைகளும் அவசிய மற்றதே!

    ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இதைப் புத்தக ரூபத்தில் படிக்க நேர்ந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாயிற்று, இவ்விடைக் காலத்தில் சமூக - அரசியல் போராட்டங்களில் வன்முறையும், வன்முறையினை அடக்குவதற்காகக் காட்டுமிராண்டித்தனமும் கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவங்களைக் கண்டு திகைப்பும் வருத்தமும் அடைந்துள்ளனர் மக்கள்.

    ஓரக்கண் கொண்டும் மாறுகண் பார்வையோடும் இலக்கியம் படிக்கிறவர்கள் நேரிய நெறிகளைக் கூடக் கோணலாகவே அவ்வாறு காணவே முயல்வார்கள்.

    ‘இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ முறை சீரிய லட்சியங்களுக்காக ஆயுதமேந்திய இயக்கங்கள் எழுந்துள்ளன. ஏற்கெனவே நமது மக்களையும் அவர்களது உன்னத வேட்கைகளையும் பலாத்காரத்தின் மூலமாக மட்டுமே அடக்கி அமுக்கி வெற்றிகரமாக அவர்கள் மீது ஏறி உட்கார்ந்து அரசோச்சும் ஒரு கூட்டம் தங்களது வெகுநாளையப் பயிற்சியும் பலமும் மிகுந்த வன்முறைகளால் - ஆயுதம் தாங்கிய அவ்வியக்கங்களை அழித்தொழித்த கடந்த காலச் செய்திகளை அவர் எண்ணிப் பார்த்தார். அவர்களைப் போல் முறியடிக்கத் தகுந்தோர் அல்லர் இந்த இயக்கத்தினர். இவர்கள் நமது போலீஸாரால் அடிக்கடி திகிலுடன் உச்சரிக்கப்படுகின்ற ‘நக்ஸல்கள்’ அல்லவே அல்ல - என்பதே இதன் பொருள்...’

    என்றெல்லாம் இதில் வரும் ஆனந்தன் எண்ணி, ஆராய்ந்து துணிகிறார் என்பதை நான் வலியுறுத்தி, சற்றுக் கலைத்தன்மைக்குப் புறம்பே வந்துகூட இந்நாவலில் பேசி இருப்பது எதனால்?

    வெறும் வன்முறையாளர்களையும், மானுடப் பகைவர்களையும், மேலாதிக்க வெறியர்களையும் அடையாளம் தெரியாமல் நான் புகழ்வதாக எவரும் புத்தி பேதலித்துப் புரிந்து கொண்டு விடலாகாது என்பதற்கே!

    மேலும், சாதாரணக் கொள்ளைக்காரர்கள், வழிப் பறியாளர்கள் பற்றியும்கூட ஓர் பண்டைக்கால அரசாங்கக் காவலர், அல்லது நவீன போலீஸ்காரர் கொண்டுள்ள கருத்தையே மக்களும் கொண்டிருக்க வேண்டுமென்று எவரும் எதிர் பார்க்கலாகாது.

    கொள்ளையையும் திருட்டையும் கொலையையும் மக்கள் வெறுக்கிறார்கள். எவ்வளவு வறுமையிலும் இந்த வழிகளை மேற்கொண்டுவிட மக்கள் எப்போதும் துணிவதில்லை. எனினும் இந்தக் கொள்ளைக்காரர்களைப் பற்றிய வீரதீரக் கதைகள் பண்டைக்காலம் தொட்டே மக்களிடம் புகழ் பாடப்படுகின்றன.

    நமது திருமங்கை ஆழ்வார் முதல் ராபீன்ஹுட் வரை பட்டியல் போடலாம: புஷ்கின் வருணிக்கிற புகசேவ் என்ற கலகத் தலைவன் கற்பனைப் பாத்திரமல்ல சரித்திர நாயகனும் கூட, நமது தேசத்தில் சம்பல் பள்ளத் கொள்ளைக்காரர்களைப் பற்றி நல்லதும் கெட்டதுமான சாகஸக் கதைகளும், கொள்ளைக்காரன் மான்சிங்கைப் பற்றித் தாலாட்டுப் பாடல்களும்கூட இன்னும் வடபுலத்தில் வழங்குகின்றன. அந்த மரபில் எழுதப்பட்ட அதிதீவீர சாகசக் கதையும் அல்ல இது!

    இந்தக் கதையில் வரும் பாத்திரங்களை உள்நின்று உந்தியும், பின்னின்று காத்தும் வழிநடத்திச் செல்வது அன்பும் சத்தியமும் செறிந்தடர்ந்த ஒரு சித்தாந்தமே ஆகும்! அது துப்பாக்கியோ, அன்பற்ற ரத்த வெறியோ அல்ல.

    அது காரணம் பற்றியே இன்றளவும் இந்த 'எங்கெங்கு காணினும்...’ ஒரு கதையாகவே, கற்பனையாகவே திகழ்கிறது. மீண்டும் சொல்கிறேன் கற்பனை பொய்யுமல்ல, கதை, பொழுது போக்கும் அல்ல.

    28.10.1980

    சென்னை 78

    த. ஜெயகாந்தன்

    *****

    1

    இதை முன்னுரை என்று சொல்வதை விடவும் முன் கதை என்பதே பொருந்தும்.

    ஆனந்தன் ஓர் அனாதை இல்லத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு பாதிரியாரால் பதினெட்டு வயதுவரை, வளர்க்கப்பட்டவர்; அதனால் அவர் தம்மை ஏசுவை விசுவாசிப்பவர் என்று கூறிக் கொண்டார். எனினும் அனாதை இல்லங்களுக்கும், மடாலயங்களுக்கும் அப்பால் எல்லைப்பற்றுப் பரந்து கிடக்கும் மானுட சமுத்திரத்தில் சங்கமமாகும் வேட்கையோடு, லட்சியதாகம் கொண்ட ஓர் இளைஞரான ஆனந்தன், மதத்தோடு தமக்கிருந்த பந்தங்களை விலக்கிக் கொண்டு வெளியேறி விட்டவரும் ஆவார்.

    ஏழை மக்களின் சொந்தமும் தொழிலாளி நண்பர்களின் உறவும் அவரை ஒரு தொழிற்சங்கவாதியாய் ஆக்கின.

    இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஏற்பட்ட ஓர் விழிப்பில் ஆனந்தன் அரசியலில் ஈடுபட்டார்; புரட்சிக் காரரானார்; தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சதி வழக்குகளில் சம்பந்தப்பட்டார்.

    அரசாங்கத்தின் அடக்கு முறையினால், புரட்சி இயக்கங்கள் சிதறடிக்கப்பட்டபின், நீண்டகாலச் சிறைவாசத்தில் ஓர் எழுத்தாளனாகித் தன்னை ஒரு பத்தரிகைக்காரன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார் ஆனந்தன். ஓர் அச்சகத்திலிருந்து பழி வாங்கப்பட்ட வயது முதிர்ந்த தொழிலாளத் தோழர் கோவிந்தசாமியுடன் சேர்ந்து ஒரு சிறிய அச்சகமும் போராட்டம் என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தி வருகிறார்.

    அண்மையில், அந்தப் போராட்டம் பத்திரிகையின் மூலம், மரண தண்டனையிலிருந்து மனித குலத்தை விடுதலை செய்யும் கருத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார் ஆனந்தன்.

    அந்தக் கருத்து இயக்கத்துக்கு ஆதரவாக ‘ஊருக்கு நூறு பேர்' கையெழுத்திடும் ஆதரவு இயக்கம் என்று ஒன்றையும் தொடங்கி இருந்தார்.

    அந்தக் கருத்து இயக்கத்தின் தொடர்பாக அவரது பத்திரிகை அலுவலகத்துக்கு, ஒரு புதிய மனிதர் வந்து ஒரு கடிதத்தைத் தந்து

    Enjoying the preview?
    Page 1 of 1