Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gurupeedam
Gurupeedam
Gurupeedam
Ebook232 pages5 hours

Gurupeedam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவாஇல்லையா என்பது வேறு விஷயம். அவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம் இல்லை. என் கதைகளை அவர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள். அவர்கள் பிரசுரிப்பதால் நான் அவர்களுக்குக்கதைதருகிறேன். நான் அவர்களின் வாழியனோ பங்குதாரனோ அல்ல. இதைப்பற்றி எனக்கொரு கருத்து, விமர்சனம், கண்டனம்கூட உண்டு. அதாவது அவர்களுக்கு நான் எழுதுகிறவன் என்ற முறையில் அல்ல, ஒரு சாதாரண சமூகப் பிரஜை என்கிற முறையில் உண்டு. இதெல்லாம் தெரிந்தேதான் அவர்களுக்கு எழுதுகிறேன். என்னைப்பற்றியும் எனது கருத்துக்கள் பற்றியும் தெரிந்தே அவர்கள் என் கதைகளை வாங்கி வெளியிடுகிறார்கள். எனக்குச் சன்மானமும் மரியாதையும் தருகிறார்கள். எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிற நான் அவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதற்கில்லை.

எனது கதைகளை அவர்கள் திருப்பித் தருவது உண்டு. எனக்கு அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்கள் அதனைப் பிரசுரிப்பதுதான் எனக்கு ஆச்சரியம். என் கதைகளில் ஆட்சேபகரமான பகுதி என்று அவர்கள் கருதுகிறவற்றைப் பிடிவாதமாக அவர்கள் தலையில் நான் கட்ட முயலுவதே இல்லை. வாசகர்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது உண்டு. எனக்கு அதில் வருத்தமில்லை. அவர்கள் நிலையை நான் புரிந்து கொள்ளுகிறேன்.

என் கதைகளைக் குறைத்தோ சிதைத்தோ வெளியிட அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை நானறிவேன். ஆனால் அந்த உரிமையை அவர்கள் பயன்படுத்தாத அளவுக்கு அப்படி ஓர் அவசியம் நேர்ந்தால் நானே கண்ணை மூடிக்கொண்டு வெட்டிக் குறைத்துக் கொடுப்பேன். அப்போது அவர்களே பதறுவார்கள் : “சார் சார்—அந்தப் பகுதியை எடுக்காதீர்கள்” என்பார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சி

நான் என் கதைகளுக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று எவரிடத்தும் கேட்டதில்லை. ஏனெனில் பேரம்பேச அவர்கள் தருவது கதைக்கு விலை அல்ல; கேட்டுப்பெற அது கூலியும் அல்ல; அவர்களிடம் உரிமைப்போர் நடத்த நான் அவர்களிடம் வேலை செய்யும் கூலிக்காரனும் அல்ல; அவர்கள் எனக்கு எஜமானர்களும் அல்ல. புகாருக்கோ, முறையிடலுக்கோ ஆள் சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வ தற்கோ நான் வெட்கப்படுகிறேன். எனது உரிமைகளுக்காக நான் போராட வேண்டிய அவசியம் எனக்கோ பிறருக்கோ இல்லை. எனது உரிமைகளை எவரும் பறிக்க இயலாது ; பறிக்கவும் விடமாட்டேன், என்னைப் பொறுத்தவரை எவரிடத்தும் போரிட எனக்கு நியாயம் இல்லை. அதெல்லாம் எனது நாகரிகத்துக்குப் பொருந்தாது; அதன் விளைவுகள் இவை.

இது compromise அல்ல; அது அடிபணிவு அல்ல ; இதுதான் என் சுயமரியாதை.

நான் வாழ்க்கை வசதியோடு இருந்திருந்தால்— சர்க்கார் இலாகாவில் உத்தியோகத்தில் இருந்தால்—அப்போதும் எழுதுவேன்—இந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு போதும் நான் எழுதமாட்டேன். புனை பெயரிலும், பெண்டாட்டியின் பெயரில் ஒளிந்து கொண்டும், மேலதிகாரிகள் உத்தரவு பெற்ற தயவிலும் இந்தப் பத்திரிகைகளுக்கு எழுதுவது ஓர் இலக்கியப் பணி என்று கருத மாட்டேன். எழுதுவதற்குப் பணம் வாங்குவது அப்போது அதர்மமாகக்கூட எனக்குப்படும். ஏனெனில் எவர் கட்டளைக்கும் உட்பட்டு யாருடைய தேவைக்காகவும் என்னால் எழுத முடியாது. என் சொந்த தர்மத்துக்காகவே நான் எழுதுகிறேன். எனது எழுத்தைப் பிரசுரித்து எனக்கு மரியாதை செய்பவர்களிடம் நான் சச்சர விடுவது அநாகரிகம்.

எனது கதைகளை வெளியிடும் பத்திரிகைக் காரர்களின் கொள்கைகள், காரியங்கள் ஆகியவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ; பொறுப்புமில்லை. நான் எழுதுகிற எழுத்துக்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு. அதில் அவர்கள் திருத்தங்கள் செய்கிற பட்சத்தில், குறைத்துச் சிதைக்கிற பட்சத்தில், நான் அதிகபட்சம் செய்யக்கூடியது ஒரு good bye சொல்வதுதான்.

சம்பந்தமே இல்லாத இடத்தில் சண்டை என்ன வேண்டிக் கிடக்கிறது!

எனக்கும் நான் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும் உறவு நீடிப்பதன் ரகசியமே இது தான். இது ஒரு பற்றற்ற உறவு; பந்தமற்ற நட்பு.

என் எழுத்தை வாசகர்களுக்குக் கொண்டு தருகிறவர்கள் அவர்கள். அதிலே அவர்கள் பெருமையும் அடைகிறார்கள். ஏதோ நான் “பெரிய எழுத்தாள”னாக மாறிய பிறகு இந்த நிலை என்று நினைக்க வேண்டாம். நான் எப் போதுமே பெரிய எழுத்தாளன் தான். ஆரம்பத்திலே இருந்தே இப்படித்தான் நான் இருந்திருக்கிறேன். முதிர்ச்சியற்ற வயதாலும் முரட்டுத்தனமான குணத்தாலும் நான் பத்திரிகைக்காரர்களிடம் முஷ்டி மடக்கி நேரடியாகச் சண்டை போட்டதும்கூட உண்டு. ஆனாலும் அது இலக்கிய விவகாரம் என்று நான் துணியமாட்டேன்.

- த. ஜெயகாந்தன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103904045
Gurupeedam

Read more from Jayakanthan

Related to Gurupeedam

Related ebooks

Reviews for Gurupeedam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gurupeedam - Jayakanthan

    >1\book_preview_excerpt.html]nIr~!=30l`~JqWbsHjȢHnهj$]_DFVS4ڇ>~`W^m?ƓNp񣇛kͣ{Ý=xtWWwûwv7sWOn>Zݳ&]jn{/w[/pZ]qW|7?ۻ|5zzW_o׭׫etN@YQXOfY4jܹ V,⚨-Ȏ^1?k{?;h7lcc\6Ⱥ墻tzݠ+tM3-:R J WȲ^u¨I#vPDGUj'1ُ6@MzTDbG4(_ &[*!ͼm“rU9w7߄1v.'kϜTE}[vaN<2329qA~A*RʳI:M+ qe]_=MRÙ5*5݁q"na4[#"Hi2xjY'VD'ݺynYY:UY1q-5-d)Z=|? [[-v*bDkĔOd l338pz?$n !rcֈ:)Eڟ$kMȔ~P0@jfg*'Q̢CtA_)ˁ+ƅ&aY5XW)wIJMƵ(=0F~44ae ^ 5?R_teIV3Pg ; G Gci"[zj""IP('7*w"VQdy\gOކE7.0[;ccλuish-jQMr2gjhDkm1|2yٶ&7TdbwRT$ߙv zMq&˻!"Rr:!hn114$Ta~ &EL84Q` {F}|UqeG' M'|q"l"صP1.!^ jF,,~޷ət3!m|A;/q,x.S~83Țtݢ^(bCE0GN\-_G`)k-DJ؏i@T8HPH3 C0iIXU*=91KcoPMҦnJ+{3~Nxۢ3*MMl!?@- N|NK7u5!; AR*UC4kb>'0OJij<xAB- QN8J &8'{/HĨiKrCe>g_62ȨxN7ScygDdKOW0= qU$F0Ja3pq3j߻;em/hJd4KǡGt@8I:(L:[RPSZ^`d!A?[l:-OF1MP璄5*{DC UXǚU d{5Qx89 /X%"wRKll-2"\ÚPo2@"lM58[/ʰׄ>,GVc1۬?M2Z28Ǡ4C:!2`aӹwec fǨC8Y;陮 +҅:"]\SSTBALLkTi{+rB(ZJ8$F⎬8;ps>$Q^2KO`I2N҂,Zml$YwSniBL.hʭR˶ܳU|bP]cE S:KugěG3:1Ua1#[@}h$Nԩc\C4zA<5!fo.iNkh_"9L͓zg-DE꯿0 E6/iwU"=FZ˱ǞGxe )NcLj 4}Wq,N 8w_N҇p%&ȱ+w1֜ ɹF=Fz,UJ5a 3pޡCl=k~R÷ ?y{72!|-亄 &1XyTm$.%1q̢͈.Eg%K5wFڰ}V$:rnHKp)mM nn&XvlG?$ag]( r gQ{%O!6M-93f(z; kikg-2ظzl$= fBC|Bv!9Yqܭ횆(d6ANt^^QvA+[PtCٶ6UNBa^YU4pYt){ϺyEo0p[?וh'NЂ`'E|*Dg"ţ!~մБ `^]UJ~n!q>SBnMƑ!TܑS?y-bbd!ڠslN8YD^:x֤SbG\:ܔFFzOD*nF1Ȃ0"Ќv}mp8=E*MBM!(ʠz&JH5cY0N0,N)Wq'>^٩vտL-̪6.ph y8H/c<kFKM*0q8+pt:ByBK& uU<%}Rj{}aC@艹œŹ,ލ1}+۬BSڮa}65Y2/+[6(,f^b:b*7enu{@Њ >/ՂkRd#~yB;(G#ϱp-0#HVJETG\ fda߁ȅN"`&RɄFO5M^O^ sO븳Ղ 2rP]W 3S;t Wd&Fg?3*#B?2o;rXt" "&Uja|_a+T []VU1?H3˸x5r- t\LBne^vu#>l3(%O@(=`Rf(\Cgs; mWq^E\`I "5ޟ虗$43fT 1$RɅAxVG|OzJK`,cڴSA{]L1( O'LW-| 7Y\רN0hiitDB79ޫuS)LDn %:#kեG PxI3Ys{&&;ٓ0[Ίz0DxXLv+7 65E+Wj{6wZ[s@Ne7 ^x_q;Pˋg$gJUU?jJJ'/9.7*W{|Vnh^3-ť# 1R,oz=o.RG5ρcw~k&nu1:CDIDLk S16:R/5aW1%c DY Gd1""LAdd?i}t٪y"9e O:cMMMyN|<6֢ M*>L|h9X|{ML@I]Fk9α=2*i(̰xRAHN6彁L׶uf=k>.a41'0-RZ ĉM ۉ]cS2 Zj{a/519v,*mvbiXۑY6M =M0"[|J&.%_isHڈV&.i ~"{EѭR2MqoMQLC ܋DS};N?n>OiiQ0Iv"j^9d 6Tr,9K!c#3bgr#yJW17KGx l( w|^7˻}REwZV-IY!bL5Sw6lS"~
    Enjoying the preview?
    Page 1 of 1