Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ayudha Poojai!
Ayudha Poojai!
Ayudha Poojai!
Ebook92 pages4 hours

Ayudha Poojai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்தச் சமூகச் சூழ்நிலையிலும், பிரஜைகள் ஒவ்வொரு வரும் சமூகத்தின் பாதுகாவலர் தாமே என்று உணர்கிற வரை போலீஸ் என்ற அமைப்பு இருந்தே தீரும்.

ஒரு காலத்தில் எனது உறவினர்களில் சிலர் போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் பிரிட்டிஷ்காரரின் அடிமைப் போலீஸ் அதிகாரிகளாகத்தான் செயல்பட்டனர். இருப்பினும் அவர்களின் தரமும் ஒழுக்கமும் மனிதாபிமானமும் இக்காலத்தினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிக உன்னதமாகவே இருந்ததாய்த் தோன்றுகிறது. அத்தகைய உயர் பண்பினை சுதந்திரமடைந்த ஒரு தேசத்தின் போலீஸ் துறை இழந்து நிற்கிறதே எனும் ஆதங்கம் எனக்கு உண்டு.

போலீஸ்காரர்கள் மக்களின் நண்பனாக இருப்பதை விடவும் அரசாங்க ஆணைக்கு உட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதை நானறிவேன். எனினும் ஒரு சுதந்திர நாட்டில், ஜனநாயக சமூகத்தில் அவர்கள் மக்களை மிரட்டுகிறவர்களாக ஆகிவிடலாகாது. அவர்கள் சவால் அறிக்கை விடுகிற அரசியல்வாதிகளாகி விடக் கூடாது. சமூக அறிவாளிகளோடு மோதுகிறவர்களாகி விடக்கூடாது என்ற கருத்துக்களை ஒரு போதும் போலீஸார் தவறாகவே புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

'ஆயுதமும் அதிகாரமும் சட்டத்தின் துணையும், அரசாங்கத்தின் பலமும் கொண்ட போலீஸ் எவ்வளவு இன்முகத்துடன் நன் மொழிகளுடன் மக்களை அணுக வேண்டும்!' என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நிகழ்ந்தன. அவை தேச-சர்வதேச கவனத்தை ஈர்ந்தன.

தற்காலச் சமூக நிகழ்வுகளின் போக்கை மையக் கருவாய்க் கொண்டு சமூகத்துக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை போலவும், வேண்டுகோள் போலவும், பிரார்த்தனை போலவும், சாபம் போலவும் சில கதைகளை நான் அண்மைக் காலமாய் எழுதி வருகிறேன். அவற்றுக்கு நற்பலன்கள் ஏற்பட்டும் வருகின்றன. எனக்கு வன்முறை ஆயுதங்களின் மீது நம்பிக்கையும் இல்லை; மரியாதையும் இல்லை. அவை சிறிய ஆயுதங்களாயினும் சரி, உலகையே தகர்க்கும் நவீன அணு ஆயுதங்களாயினும் சரி, அவற்றால் மனிதனைத் திருத்தவோ வெல்லவோ முடியாது. அந்த யுகம் மறைந்து போயிற்று.

அரிவாளும் சுத்தியலும் எந்த நவீன தொழில் நுட்ப காலத்திலும் மனிதனின் பணிகளுக்குப் பயன்படும். துப்பாக்கிகளும், அணு நீயூட்ரான் ஆயுதங்களும் எதிர் காலத்தில் பூசைக்குரிய துர்த்தேவைகளின் சின்னங்களாகத்தான் கருதப்படும் என்பதே இக்கதையின் விரிந்து பரந்த நோக்கம்.

அரசாங்கத்தைக் கூட நான் எதிரியாகக் கருத வேண்டிய நேரங்கள் நேர்ந்துள்ளன. போலீஸை நான் எனது எதிரியாக எண்ணியதே இல்லை. மாறாக மறக்க முடியாத பல நண்பர்கள் போலீஸைச் சேர்ந்தவர்களாய் இருந்துள்ளனர். அவர்கள் பணிக்கும் எனது நட்புக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளாத கடமையுணர்ச்சியில் சிறந்த ஊழியர்கள் அவர்கள்.

அத்தகு கடமை தவறாத பெருமைக்குரிய போலீஸ் ஊழியர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்வது எனக்கு அவர்கள்பால் உள்ள அன்பின் அடையாளம். இரக்கமற்ற போலீஸால் உயிரிழந்த இளைஞர்களுக்கு அர்ப்பணிக்க ஒரு கதை போதாதே! இது வெறும் கதையும் அல்ல.

அன்பு, த. ஜெயகாந்தன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103904047
Ayudha Poojai!

Read more from Jayakanthan

Related to Ayudha Poojai!

Related ebooks

Reviews for Ayudha Poojai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ayudha Poojai! - Jayakanthan

    http://www.pustaka.co.in

    ஆயுத பூஜை!

    Ayudha Poojai!

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    முன்னுரை

    கல்பனா மாத இதழில் கடைசியாக வந்த கதை ஆயுத பூசை!

    எந்தச் சமூகச் சூழ்நிலையிலும், பிரஜைகள் ஒவ்வொரு வரும் சமூகத்தின் பாதுகாவலர் தாமே என்று உணர்கிற வரை போலீஸ் என்ற அமைப்பு இருந்தே தீரும்.

    ஒரு காலத்தில் எனது உறவினர்களில் சிலர் போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் பிரிட்டிஷ்காரரின் அடிமைப் போலீஸ் அதிகாரிகளாகத்தான் செயல்பட்டனர். இருப்பினும் அவர்களின் தரமும் ஒழுக்கமும் மனிதாபிமானமும் இக்காலத்தினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிக உன்னதமாகவே இருந்ததாய்த் தோன்றுகிறது. அத்தகைய உயர் பண்பினை சுதந்திரமடைந்த ஒரு தேசத்தின் போலீஸ் துறை இழந்து நிற்கிறதே எனும் ஆதங்கம் எனக்கு உண்டு.

    போலீஸ்காரர்கள் மக்களின் நண்பனாக இருப்பதை விடவும் அரசாங்க ஆணைக்கு உட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதை நானறிவேன். எனினும் ஒரு சுதந்திர நாட்டில், ஜனநாயக சமூகத்தில் அவர்கள் மக்களை மிரட்டுகிறவர்களாக ஆகிவிடலாகாது. அவர்கள் சவால் அறிக்கை விடுகிற அரசியல்வாதிகளாகி விடக் கூடாது. சமூக அறிவாளிகளோடு மோதுகிறவர்களாகி விடக்கூடாது என்ற கருத்துக்களை ஒரு போதும் போலீஸார் தவறாகவே புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    'ஆயுதமும் அதிகாரமும் சட்டத்தின் துணையும், அரசாங்கத்தின் பலமும் கொண்ட போலீஸ் எவ்வளவு இன்முகத்துடன் நன் மொழிகளுடன் மக்களை அணுக வேண்டும்!' என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நிகழ்ந்தன. அவை தேச-சர்வதேச கவனத்தை ஈர்ந்தன.

    தற்காலச் சமூக நிகழ்வுகளின் போக்கை மையக் கருவாய்க் கொண்டு சமூகத்துக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை போலவும், வேண்டுகோள் போலவும், பிரார்த்தனை போலவும், சாபம் போலவும் சில கதைகளை நான் அண்மைக் காலமாய் எழுதி வருகிறேன். அவற்றுக்கு நற்பலன்கள் ஏற்பட்டும் வருகின்றன.

    எனக்கு வன்முறை ஆயுதங்களின் மீது நம்பிக்கையும் இல்லை; மரியாதையும் இல்லை. அவை சிறிய ஆயுதங்களாயினும் சரி, உலகையே தகர்க்கும் நவீன அணு ஆயுதங்களாயினும் சரி, அவற்றால் மனிதனைத் திருத்தவோ வெல்லவோ முடியாது. அந்த யுகம் மறைந்து போயிற்று.

    அரிவாளும் சுத்தியலும் எந்த நவீன தொழில் நுட்ப காலத்திலும் மனிதனின் பணிகளுக்குப் பயன்படும். துப்பாக்கிகளும், அணு நீயூட்ரான் ஆயுதங்களும் எதிர் காலத்தில் பூசைக்குரிய துர்த்தேவைகளின் சின்னங்களாகத்தான் கருதப்படும் என்பதே இக்கதையின் விரிந்து பரந்த நோக்கம்.

    அரசாங்கத்தைக் கூட நான் எதிரியாகக் கருத வேண்டிய நேரங்கள் நேர்ந்துள்ளன. போலீஸை நான் எனது எதிரியாக எண்ணியதே இல்லை. மாறாக மறக்க முடியாத பல நண்பர்கள் போலீஸைச் சேர்ந்தவர்களாய் இருந்துள்ளனர். அவர்கள் பணிக்கும் எனது நட்புக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளாத கடமையுணர்ச்சியில் சிறந்த ஊழியர்கள் அவர்கள்.

    அத்தகு கடமை தவறாத பெருமைக்குரிய போலீஸ் ஊழியர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்வது எனக்கு அவர்கள்பால் உள்ள அன்பின் அடையாளம். இரக்கமற்ற போலீஸால் உயிரிழந்த இளைஞர்களுக்கு அர்ப்பணிக்க ஒரு கதை போதாதே! இது வெறும் கதையும் அல்ல.

    சென்னை - 78

    26.2.92

    அன்பு

    த. ஜெயகாந்தன்

    *****

    1

    நான் யாரென்று சொல்லிக் கொள்ளுவது அவ்வளவு முக்கியமல்ல. இதற்குப் பொருள் நான் முக்கியத்துவம் அற்றவன் என்பதுமல்ல. சரி, சரி. எனது முக்கியத்துவம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் யாருடைய மகன் என்று சொல்லி விடுகிறேன். என் அப்பா ஒரு போலீஸ்காரர். எனக்கும் கூடச் சின்ன வயசில் போலீஸ் உத்தியோகத்துக்குப் போக வேண்டும் என்றுதான் ஆசை, கனவு, அசட்டுத் தனம்... அசட்டுத்தனம் என்றா சொன்னேன்? மன்னிக்க வேண்டும்; வாழ்க்கையின் நிர்ப்பந்தம். வயிறு கழுவ, மானத்தோடு, மரியாதையோடு வாழ அந்தப் போலீஸ் உடுப்பு காலத்தால் செய்த மாபெரும் உதவியை உயிருள்ளவரை நான் மறக்க மாட்டேன்... மறக்கவும் கூடாது...

    நினைவு தெரிந்த நாள் முதல் விடியற்காலை இருளில் காலில் பட்டி சுற்றிக் கொண்டு யூனிபாரத்தின் பொத்தான்களுக்கும், தொப்பியில் பதித்த வெண்கல இலக்கங்களுக்கும் 'பிராஸோ' இட்டுப் பளபளக்கத் தேய்த்துப் பொருத்திய காலர் இல்லாத காக்கிச் சட்டைக்கு மேலே, படுத்தவாக்கில் உள்ள S என்ற ஆங்கில எழுத்துப் போன்ற பக்கிள்ஸ் உள்ள பெல்ட்டணிந்து, அந்தக் காலச் சிவப்புக் குல்லாய் அணிந்த போலீஸ்கார அப்பா என்னைக் கொஞ்சி விடை பெற்றுப் போவதையும், போலீஸ் லைனுக்குப் பின்னால் உள்ள மைதானத்தில் அவர் கவாத்துப் பழகியதையும், 'லெஃப்ட் ரைட்' போட்டுச் சாரி சாரியாக நடந்த அந்தச் செந்தலைப் பட்டாளத்தின் நடுவே அப்பாவை ஒரு லட்சியம் போல் கண்டதும் அந்த ஆசை எனக்கு ஏற்படக் காரணமாயின போலும்.

    என் வயதொத்த குழந்தைகளை அணி திரட்டிக் கொண்டு லெப்ட் ரைட்

    Enjoying the preview?
    Page 1 of 1