Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pulan Visaranai?
Pulan Visaranai?
Pulan Visaranai?
Ebook227 pages1 hour

Pulan Visaranai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில், மிகவும் பரபரப்பாக மக்களால் பேசப்பட்ட முக்கிய வழக்குகளில் நம் தமிழகக் காவல் துறையினர் செயல்பட்ட விதம், அவர்களின் நுணுக்கமான அதிரடி நடவடிக்கைகள் ஆகியவற்றை தெளிந்த நீரோடைபோல சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர் தெக்கூர் அனிதா. வாருங்கள் நாமும் வாசித்து அறிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580168810134
Pulan Visaranai?

Related to Pulan Visaranai?

Related ebooks

Reviews for Pulan Visaranai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pulan Visaranai? - Thekkur Anitha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புலன் விசாரணை?

    (தமிழகத்தை உலுக்கிய வழக்குகள்)

    Pulan Visaranai?

    Author:

    தெக்கூர் அனிதா

    Thekkur Anitha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thekkur-anitha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உங்களோடு சில வார்த்தைகள்...

    1. ஈவ்டீசிங்: உயிரைத் தந்த சரிகாஷா

    2. விபச்சார கும்பலிடம் சிக்கிச் சீரழிந்த இளம்பெண்!

    3. எம்.எல்.ஏ. வீட்டில் ஹெல்மெட் கொள்ளைக்காரி!

    4. இரண்டே கால் கிலோ தங்கத்துக்காக துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்!

    5. கிரெடிட் கார்டு மோசடிகள் பலவிதம்!

    6. அந்நியர்களால் ஆபத்து!

    7. நடுக்காட்டில் எரிக்கப்பட்ட பெண்!

    8. சென்னையை உலுக்கிய 8 கொடூரக் கொலைகள்!

    9. தப்பான காதலின் தண்டனை!

    10. கத்தியின்றி இரத்தமின்றி கதிகலக்கும் கொள்ளையர்கள்!

    11. தமிழகத்தைக் குலுக்கிய தம்பதியர் படுகொலை!

    12. ஜிம் பெண் படுகொலை

    உங்களோடு சில வார்த்தைகள்...

    நூல்களுக்கு முன்னுரை எழுதுவது சம்பிரதாயமான ஒண்ணுதான். ஆனா, இந்த நூலுக்கு அது ரொம்பவே அவசியம். எப்படின்னு கேட்கிறீங்களா?

    சொல்றேன்.

    ராணி வார இதழ்ல இப்படி ஒரு தொடர் வேணும். இன்ஸ்பெக்டர்களைச் சந்திச்சு எழுதித் தாங்க! என்று ராணியில் கேட்டார்கள். நானும் சம்மதிச்சு அதுக்கான ஆயத்த வேலைகள்ல இறங்கினப்பதான் தெரிஞ்சது... ஆழம் தெரியாம காலை விட்டுட்டேமோன்னு! சந்தித்த இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் இன்று போய் நாளை வா என்று அவர்கள் இருந்த பிஸியில் என்னைத் துரத்தினார்கள். மறுநாளும், அதற்கடுத்த நாளும் அதே வார்த்தைதான்.

    இந்த அலைச்சல் யோசிக்க வச்சது.

    பெரும்பாலும் முக்கிய வழக்குகளை ஆலோசனை சொல்லி வழி நடத்துவது ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். அந்த வழக்குகளை அவர்கள் திறமையாக கையாண்ட விதமும், நுட்பமான முயற்சிகளும் தெரிந்தால் தொடரில் சுவாரஸ்யம் கூடுமே!

    எனவே, அவர்களையே சந்திப்பதாக முடிவெடுத்தேன்.

    ஆனால், அவசரப் பணிகள், அடுத்தடுத்து அலைபேசி அழைப்புகள் என பணியில் பிஸியாக, பரபரப்பாக எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் உயர் அதிகாரிகளைச் சந்திப்பதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அத்தனை கஷ்டப்பட்டால்கூட வாசகர்களுக்கு வித்தியாசமான வழக்குகள், சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்குமே!

    ஏகப்பட்ட அலைச்சல்கள்... எண்ணற்ற அலைபேசி அழைப்புகள்... என் தொந்தரவு தாங்காமல் ஒரு கட்டத்தில் அவர்களுக்கே இதில் பெரியளவு ஆர்வம் வந்துவிட்டது.

    தமிழகத்தை உலுக்கி எடுத்த படுகொலைகளின் புலன் விசாரணையை விவரித்தார்கள். எனக்கு நெறைய க்ரைம் நாவல்கள் எழுதின அனுபவம் இருந்ததால், அதை விறுவிறுப்பாக எனது பாணியில் விவரித்தேன்.

    வாசகர்களுக்கு கற்பனைக் கதைகளைவிட உண்மைக் கதைகள் ரொம்பவே பிடிக்கும். உண்மையில் நடந்த உருக்கமான சம்பவங்கள் மனதை கலங்கடிக்கும் என்பதாலேயே அதற்கு வரவேற்பும் அதிகம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்தத் தொடருக்கு ராணி வாசகர்கள் அமோக ஆதரவளித்தார்கள்.

    நீங்களும் படிச்சிட்டு எனக்கு மெயில் பண்ணுங்க. thekkuranitha@yahoo.com

    இந்த நூல் வாசகர்களுக்கு மட்டுமல்ல, பணியிலுள்ள காவல் துறையினருக்கும், புதிதாக வரவிருப்போருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    பணக்காரர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் மட்டும்தான் காவல்துறை ஏவல் துறையாக இருக்கிறது என்கிற எண்ணத்தை இந்நூல் மாற்றும்.

    எனது வெல்விஷர்களில் ரொம்பவும் முக்கியமானவர் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் அவர்கள். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    என்றென்றும் அன்புடன்,

    தெக்கூர் அனிதா

    டாக்டர். எம்.சி. சாரங்கன், ஐ.பி.எஸ்.

    பூர்வீகம் சென்னை. இளங்கலை பச்சையப்பன் கல்லூரியில். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., அதே பல்கலையில் 2007-ஆம் ஆண்டு பி.எச்.டி.

    இவர் காவல்துறைக்கு வந்த ஆண்டு 1991.

    உதவி கமிஷனராக சென்னை கிண்டி, கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பணியாற்றி உள்ளார்.

    கூடுதல் துணை கமிஷனராக மத்திய குற்றப் பிரிவு, துணை கமிஷனராக கிண்டி, கீழ்ப்பாக்கம், அடையாறு பகுதிகளில் பணியில் இருந்துள்ளார்.

    எஸ்.பி.யாக திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களிலும், ரயில்வேயிலும் இவரது பணி தொடர்ந்தது.

    சென்னை மத்திய மண்டல இணை கமிஷனராக உயர்ந்தார்.

    தற்போது கோவையில் தமிழக போக்குவரத்துக்கழகத்தில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, மற்றும் டி.ஐ.ஜியாக பணியாற்றி வருகிறார்.

    1. ஈவ்டீசிங்: உயிரைத் தந்த சரிகாஷா

    முதலில் அதை சாதாரண விபத்து வழக்காகத்தான் பதிவு செய்தார்கள் போக்குவரத்து போலீசார். எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் சரிகாஷா என்ற மாணவி ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்" என்பதாகத்தான் அந்த வழக்கு பதிவானது.

    சரிகாஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். பின் மண்டையில் பலமாக அடிபட்டு இருந்ததால், கோமா நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தலையிலும், மூளையிலும் இரண்டு ஆபரேஷன் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்தார்.

    அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டன.

    நடந்தது விபத்து அல்ல! ஈவ்டீசிங்.

    சரிகாஷாவை ஆட்டோ மோதவில்லை. ஆட்டோவில் வந்தவர்கள் அவரை ஈவ்டீசிங் செய்திருக்கின்றனர். அவர்மீது பாக்கெட் தண்ணீரைப் பீய்ச்சி அடித்திருக்கின்றனர். ஆட்டோவில் வந்த ஒருவன், வேண்டுமென்றே அவர் மேல் விழுந்திருக்கிறான்.

    அவர் மல்லாந்து விழ, தரையில் பின்னந்தலை பலமாக மோதி இரத்த வெள்ளத்தில் மிதந்து மயங்கி இருக்கிறார்.

    அப்போது சாலையோர கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மின் வாரிய ஊழியர் ஒருவர், அவனைச் சத்தம் போட்டிருக்கிறார். அவன் பயந்து கூவத்தில் குதித்து ஓடி இருக்கிறான். ஆட்டோவும் அங்கிருந்து தப்பித்துவிட்டது.

    இந்தச் சம்பவத்தை விபத்து என்று சித்திரிப்பது சரியல்ல... காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், என நாலா திசைகளில் இருந்தும் கண்டனக் கணைகள். மகளிர் அமைப்புகளும் அதிரடியாக போராட்டத்தில் குதித்தன.

    பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, அந்த வழக்கு சட்டம், ஒழுங்கு காவல்துறைக்கு மாற்றப்பட்டு, கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டது.

    துணை கமிஷனர் உத்தரவின் பேரில், என் தலைமையில் தலா இரண்டு இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள், ஆறு காவலர்கள் ஆகியோரைக்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. சடுதியில் விசாரணையைத் தொடங்கினோம்.

    அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி, மின்வாரிய ஊழியர்தான். ஆனால், அவரிடமும் போதுமான தகவல் இல்லை.

    ஆட்டோவில் நான்கு பேர் வந்தார்கள். தண்ணீர் பீய்ச்சி அடித்தார்கள். ஒருவன் அந்தப் பெண் மேல் விழுந்தான். நான் சத்தம் போட்டதும், கூவத்தில் குதித்து தப்பிவிட்டான். உடனே அந்த ஆட்டோவும் வேகமாகப் போய்விட்டது என்றார்.

    ஆட்டோ எந்தப் பக்கம் போச்சு? பாந்தியன் ரோட்டிலா... காலேஜ் ரோட்டிலா? என்று கேட்டால்...

    ஸாரி சார்... நான் கவனிக்கலை! என பதில்.

    கேள்விகளை மாற்றி, மாற்றி கேட்டும் கூடுதலான தகவல்களை அந்த ஊழியரிடம் இருந்து பெற முடியவில்லை.

    இந்தப் பெரிய நகரத்தில் எத்தனையோ லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில், குறிப்பிட்ட அந்த ஆட்டோவை, எந்தவித அடையாளமும் இல்லாமல் எப்படி கண்டுபிடிப்பது?

    எங்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. மயக்கம் வராத குறைதான்.

    கல்லூரிக்குப் பக்கத்தில் எத்திராஜ் சாலையில் சம்பவம் நடந்து இருக்கிறது. அப்போது மதியம் 12.45 மணி.

    அந்தப் பெண், வகுப்பு முடிந்த கையோடு தன் தோழிகளான ரோஸி, மாதவி, கவிதாவோடு கல்லூரியைவிட்டு வெளியே வந்திருக்கிறார். பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று நான்கு பேரும் ஜூஸ் குடித்துவிட்டு திரும்பும்போதுதான், அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

    அந்தப் பெண்களை விசாரிக்க முடியவில்லை. ரொம்பவும் பயந்துபோய் இருந்தார்கள். பதற்றத்தில் இருந்தார்கள். அவர்களின் பெற்றோர்களும் விசாரணைக்கு சம்மதிக்கவில்லை.

    கல்லூரியில் விசாரித்ததிலும் எங்களுக்கு எந்தக் க்ளூ வும் கிடைக்கவில்லை.

    அந்த ஆட்டோ எங்கிருந்து வந்தது? எங்கே போனது? ஆட்டோவில் வந்தவர்கள் யார்?

    அப்ப நான் உதவி கமிஷனரா இருந்தேன். அது 1998-ஆம் ஆண்டு. எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷாவோட மரணம்தான், ஈவ்டீசிங் சட்டம் கொண்டுவரக் காரணமா இருந்தது. துணை கமிஷனர் உத்தரவின் பேரில் எனது தலைமையிலான தனிப்படை போலீஸ், சரிகாஷாவோட சாவுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைதுசெய்து, அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது! என்று தொடங்கினார் சென்னை அடையாறு துணை கமிஷனர் எம்.சி. சாரங்கன் ஐ.பி.எஸ்.

    அந்த வழக்கே மர்மமாக இருந்தது. ஒரே மலைப்பாக தெரிந்தது. எந்தத் திசையில் செல்வது என்றே தெரியவில்லை.

    பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என்றால், அவர் கோமாவில் இருக்கிறார். அவரின் தோழிகள் பயந்துபோய் இருக்கிறார்கள். வாய் திறக்கவே மறுக்கிறார்கள். எங்கிருந்தும் தனிப் படையினருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

    இனி நாமேதான் ஏதாவது செய்து இதைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம்.

    சம்பவம் நடந்த இடத்துக்குப் போனோம். அருகிலுள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை, நகைக்கடை, காய்கறிக்கடை, பூங்கொத்துக் கடை என்று பற்பல கடைகள் அதில் இயங்கிக்கொண்டு இருந்தன.

    பூங்கொத்துக் கடைக்காரரிடம் பேசி, அங்கே போலீஸ் பூத் போல ஒன்றை அமைத்தோம். சம்பவம் நடந்த நேரத்தில், அந்த வழியாக தினமும் யார், யார் போகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தோம். மதிய ஷிப்ட் வேலை செல்பவர்கள். டப்பா வாலாக்கள் என்று சுமார் நானூறு பேரிடம் விசாரித்தும்... ம்ஹூம். யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

    சம்பவத்தை பார்த்திருந்த சிலர். ஆமா... ஆட்டோ வந்தது. அந்தப் பையன். பொண்ணு மேல விழுந்தான்... எழுந்து ஓடிட்டான்! என்று அதிக பிரயோஜனமில்லாத தகவல்களையே கூறினர். அவன் யார்... எந்தப் பக்கம் போனான்? என்று யாருக்குமே தெரியவில்லை.

    அப்போதுதான் ஆபத்பாந்தவனாய் வந்து சேர்ந்தார். அந்த தள்ளுவண்டி காய்கறிக்காரர்.

    ஆமா சார். அந்தச் சம்பவத்தை நானும் பார்த்தேன்! என்றார்.

    நல்லா யோசிச்சு பாருங்க. ஆட்டோவுல வந்தவங்க, அந்தப் பொண்ணுங்க மேல பாக்கெட் தண்ணியை அடிச்சாங்க. ஆட்டோ கவிழ்ந்துச்சு. அவன் அந்தப் பெண் மேல விழுந்தான். அதுக்குமேல... இது நான்.

    இ.பி. (மின் வாரிய) ஊழியர் சத்தம் போட்டார். அவன் எழுந்து ஓடிட்டான்!

    திரும்பத் திரும்ப எங்கள் கேள்விகள். மேலும் மேலும் விசாரணை.

    கடைசியாக அவர் சொன்னார். அந்த ஆட்டோல ஒரு கட்சியோட கொடியும், பேனரும் கட்டப்பட்டிருந்திச்சு!

    அவ்வளவுதான்! நாங்கள் சுறுசுறுவென விவரங்களைச் சேகரித்தோம். குறிப்பிட்ட அந்தக் கட்சியின் கூட்டம் பழைய ஆனந்த் தியேட்டர் (அப்பவும், இப்பவும் கல்யாண மண்டபம்) வளாகத்தில் நடந்திருக்கிறது. அதற்கு சென்னையின் நாலா திசைகளில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் வந்திருக்கிறார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

    அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரை விசாரித்தோம்.

    ஆமா சார். அன்னிக்கு எங்க கட்சிக் கூட்டம் நடந்தது. முன்னூறு ஆட்டோவுக்கு மேலயே வந்திருந்தது. நீங்க சொல்ற மாதிரி ஆட்டோவுல வந்தவங்க யாருன்னு எனக்குத் தெரியலை சார்! என்றார்.

    ஆனால், விசாரணைக்கு அவர் நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்தார். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று அவரால் சொல்ல இயலவில்லை.

    நான் பல கோணங்களில் யோசித்தேன்.

    கூட்டம் முடிந்து எத்திராஜ் சாலை வழியாகச் செல்பவர்கள், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது எழும்பூர், பாரிமுனை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்க முடியாது. காரணம், அவர்களுக்கு நேர் சாலைகள் இருக்கின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1