Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Viji - Adventure Naadgangal!
Viji - Adventure Naadgangal!
Viji - Adventure Naadgangal!
Ebook448 pages2 hours

Viji - Adventure Naadgangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126704234
Viji - Adventure Naadgangal!

Read more from Ra. Ki. Rangarajan

Related to Viji - Adventure Naadgangal!

Related ebooks

Related categories

Reviews for Viji - Adventure Naadgangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Viji - Adventure Naadgangal! - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    விஜி

    அட்வென்ச்சர் நாடகங்கள்!

    Viji

    Adventure Naadgangal!

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அட்வென்ச்சர் - 1

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி:4

    காட்சி: 5

    காட்சி: 6

    காட்சி: 7

    காட்சி: 8

    அட்வென்ச்சர் -2

    காட்சி: 1

    காட்சி:2

    காட்சி:3

    காட்சி: 4

    காட்சி: 5

    காட்சி: 6

    அட்வென்ச்சர் - 3

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி: 5

    காட்சி:6

    அட்வென்ச்சர் -4

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி:5

    காட்சி:6

    அட்வென்ச்சர் - 5

    அட்வென்ச்சர் - 6

    காட்சி: 1

    காட்சி:2

    காட்சி:3

    காட்சி:4

    காட்சி: 5

    அட்வென்ச்சர் -7

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி:3

    காட்சி: 4

    காட்சி: 5

    காட்சி: 6

    காட்சி: 7

    அட்வென்ச்சர் - 8

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி:3

    காட்சி:4

    காட்சி:5

    காட்சி: 6

    காட்சி: 7

    காட்சி: 8

    காட்சி: 9

    காட்சி: 10

    அட்வென்ச்சர் -9

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி:5

    காட்சி: 6

    காட்சி: 7

    அட்வென்ச்சர்- 10

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி:5

    காட்சி: 6

    காட்சி: 7

    அட்வென்ச்சர் - 11

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி: 4

    காட்சி 5

    காட்சி: 6

    அட்வென்ச்சர்-12

    காட்சி: 1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி- 4

    காட்சி: 5

    காட்சி:6

    அட்வென்ச்சர்- 13

    காட்சி:1

    காட்சி: 2

    காட்சி: 3

    காட்சி:4

    காட்சி:5

    காட்சி: 6

    காட்சி: 7

    அட்வென்ச்சர் – 1

    காட்சி: 1

    கோமதி, மிக்ஸியில் ஏதோ அரைத்துக் கொண்டிருக்கிறாள், விஜிக்கு அன்று காலேஜ் இல்லை. கொறிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று டப்பா டப்பாவாகத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். கூடவே விசிலு ம் அடித்துக் கொண்டிருக்கிறாள்.

    விஜி: (இரைந்து) எதுக்குமா மீன் மாதிரி வாயை வாயைத் திறந்துக் கிட்டே மிக்ஸி அரைக்கிறே?

    கோமதி: (படக்கென்று மிக்ஸியை நிறுத்தி விட்டு) உனக்கு எவ்வளவு தடவை சொல்லி இருக்கிறேன்... இப்படி ரெளடிப்பயல் மாதிரி விசில் அடிக்காதேன்னு!

    விஜி: அம்மா, உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா?

    கோமதி: சொல்லித் தொலை.

    விஜி: ரெளடி மாதிரி விசில் அடிக்கிறதா சும்மா ஒரு பேச்சுக்குத்தான் எல்லோரும் சொல்றாங்களே தவிர, உண்மையில் எந்த ரெளடியாவது விசில் அடிச்சு யாராவது பார்த்திருக்காங்களா? கிடையாது. நானும் காலேஜிலே ரெளடி மாதிரி இருக்கிற பல ஸ்டூடன்ட்களைக் கேட்டுப் பார்த்தேன், ‘கொஞ்சம் விசில் அடிச்சுக் காட்டுப்பா'ன்னு! ஒருத்தனுக்கும் தெரியலே!

    கோமதி: ஏண்டி, தெரியாமல்தான் கேட்கிறேன், நீ காலேஜுக்கு போறது இந்த மாதிரி விசில் ஆராய்ச்சி பண்ணத்தானா?"

    விஜி: விசில் ஆராய்ச்சி மட்டுமில்லேம்மா... சில சமயம் மனச ஆராய்ச்சியும் பண்ணுவதுண்டு.

    கோமதி: அதென்னடிது புது இழவு?

    விஜி: அதாவது, தேவர் மகன் மீசை - வீரபாண்டியக் கட்டபொம்மன் வழி வந்ததா அல்லது தொண்ணூறுகளின் பரிணாம வளர்ச்சியான்னு ஒரு ஆராய்ச்சி..!

    கோமதி: நீ படிச்சு உருப்பட்டாப்பலத்தான். அது போகட்டும். அரை மணியா அந்தப் பிள்ளை ஹால்லே உட்கார்ந்திருக்கான். மாடிக்குப் போய் அப்பாகிட்ட சொல்லு.

    விஜி: (ஹாலில் எட்டிப் பார்த்து அம்மாவிடம்) ஜம்முனு பிரசாந்த் மாதிரி இருக்கானே, அவனா?

    கோமதி: அது யார்டி அவன் பிரசாந்த்?

    விஜி: நீ சினிமா பார்க்கிறதை விட்டுப் பதினைஞ்சு வருஷம் ஆச்சு... சொன்னால் புரியாது.

    கோமதி: புரியாட்டி போறது. நீ போய் அப்பாவைக் கூப்பிடு.

    விஜி: பேப்பர் படிச்சிட்டிருக்கார். கொஞ்சம் முன்னாடி போனோம்மா, ‘என் கறுப்பு பிராவை எங்கியாவது பார்த்தீங்களா அப்பா'ன்னு கேட்கிறதுக்காக.

    கோமதி: அடிப்பாவி! ஒரு பொண்ணு ஒரு தகப்பனார் கிட்டே இன்னது தான் கேட்கறதுன்னு வெவஸ்தை கிடையாதா?

    விஜி: அவர்பாட்டுக்கு பேனாவுக்கு இங்க் போட்டுட்டு, என் பிராவிலே துடைச்சி ட்டுப் போயிடறார்.

    கோமதி: நீ பேசறதெல்லாம் நாராசமாய் இருக்கு. போய்த் தொலை முதலில்.

    விஜி: போறேன்… அதுக்கு முன்னே அப்பா என்ன பதில் சொன்னார்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?

    கோமதி: என்ன சொன்னார்?

    விஜி: 'பிரா போட்டுக்காமல் போ, இப்பல்லாம் அதுதான் ஃபேஷன்'னார்.

    கோமதி: அடிச்சேன்னா தெரியுமா? (கரண்டியை ஓங்குகிறாள்,) அந்தப் பிள்ளை காருன்னு ஏதோ சொன்னான். காரை விக்கணும்னு அப்பா சொல்லிட்டிருந்தாரே, அந்த விஷயமாய் வந்திருக்கிறான் போலிருக்கு!

    விஜி: அப்படின்னா இப்பவே போய்ச் சொல்றேன், நீ கீழ்ப்படியண்டை கையில் பாண்டேஜ் துணி, டிங்ச்சர், அமிர்தாஞ்சனம் இதெல்லாம் வெச்சிட்டுத் தயாரா நில்லு.

    கோமதி: எதுக்கு?

    விஜி: கார் வாங்கறதுக்கு யாரோ வந்திருக்காங்கன்னு நான் சொன்னவுடனே அப்பா விழுந்தடிச்சிட்டு ஓடி வருவார். மாடிப்படியிலே உருண்டு கைலே, கால்லே அடி பட்டுப்பார், உடனே ஃபஸ்ட் எய்ட் கொடு. (போகிறாள்).

    ###

    காட்சி: 2

    சிவராம் அவசர அவசரமாக மாடியிலிருந்து இறங்கி வருகிறார். சமையல் அறையை எட்டிப் பார்த்து, கோமு! காபி எடுத்து வா! என்று குரல் கொடுத்துவிட்டு ஹாலுக்கு வருகிறார்.

    இளைஞன்: வணக்கம் சார்!

    சிவராம்: வணக்கம்... வணக்கம். வாங்க... வாங்க. எதுக்கு எழுந்துக்கறீங்க உட்காருங்க, இப்பல்லாம் பெரியவங்களைக் கண்டால் சின்னவங்க உட்கார்ந்து பேசறதுதான் ஃபேஷன்!

    அப்பாவின் பின்னால் வந்து நிற்கிறாள் விஜி.

    இளைஞன்: சார், நான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர். என் பெயர் பிரசாத்.

    விஜி: நான் நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க!

    சிவராம்: (மகள் பக்கம் திரும்பி) நீ என்ன நினைச்சே?

    விஜி: ஒரு ந்-தன்னா' குறையுது! அவ்வளவுதான்.

    சிவராம்: (குரலில் அன்பு கனிய) தம்பி, என்ன விஷயம்? என்ன வேணும் உனக்கு?

    பிரசாத்: சார், எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு சார், வந்த காரியம் இப்பவே முடிஞ்ச மாதிரி இருக்கு சார்.

    சிவராம்: எனக்கும் இப்பவே காரியம் முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு தம்பி!

    பிரசாத்: எனக்கு என்ன சந்தோஷம்னா... ‘நீங்க கீங்க'ன்னு அநாவசிய மரியாதை போட்டுக்கிட்டிருக்காம் ‘நீ, வா, போ’ன்னு சொன்னீங்க பாருங்க உங்க மனசில் எனக்குக் குடியிருக்க இடம் கொடுத்துட்டீங்கன்னு தெரியுது.

    விஜி: வாடகை என்ன தருவீங்க?

    சிவராம்: விஜி! வர வர நீ என்ன பேசறேன்னே புரியறதில்லே!

    பிரசாத்: எனக்குப் புரியுது சார். அது ஒரு சினிமாப் பாட்டோட இரண்டாவது அடி முதல் அடி என்னன்னு கேட்டீங்களா...

    சிவராம்: நான் கேட்கலே! நீங்க வந்த விஷயம்... ஸாரி… நீ கார் விஷயமா வந்திருக்கிறே! அப்படித்தானே?

    பிரசாத்: ஆமாம் சார்.

    சிவராம்: அப்புறம் என்ன தயக்கம். சாவி தர்றேன் ஒரு வெள்ளோட்டம் ஓட்டிப் பாரு ஆர்சி, புக்கைக் காட்டறேன். எல்லாம் சரியா இருக்கான்னு பார், நைன்ட்டீன் நைன்ட்டி டூ மாடல், இப்ப இந்த மாதிரி கிடைக்கிறதே இல்லையாம். பம்பாயிலிருந்து என் மாமா பிள்ளை. வந்திருந்தான்... அவன் திருவான்மியூர் வரை வண்டியை எடுத்திட்டுப் போனான், 'இவ்வளவு சுகமா தான் டிரைவ் பண்ணி எத்தனையோ காலமாச்சு'ன்னு சந்தோஷமா சொன்னான்.

    பிரசாத்: சார், நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க, நேத்து ராத்திரி பூரா எனக்கு தூக்கம் வரலே. விடியகாலை நாலு மணிக்குத்தான் தூக்கம் வந்தது, அப்ப ஒரு சொப்பனம், அதிலே ரொம்ப அழகான…

    விஜி: (ஆவலுடன்) ரொம்ப அழகான?

    பிரசாத்: ரொம்ப அழகான ஒரு எக்ஸிபிஷன். அங்கே நுழையப் போறேன். ரொம்ப அழகான…

    விஜி: எருமை மாடு!

    பிரசாத்: ரொம்ப அழகான ஒரு பெண்… என்கிட்ட ஒரு கவரை நீட்டறா… பிரிச்சுப் பார்த்தால், ரொம்ப அழகான...

    விஜி: மிஸ்டர்! இந்த ரொம்ப அழகான என்கிற வார்த்தையை விட்டுட்டு மற்றதைச் சொன்னால் ரொம்ப அழகாக இருக்கும்.

    சிவராம்: அதில்லே... இன்னும் ரெண்டு நிமிஷத்தில் விஷயத்தைச் சொல்லிட்டு நீ இடத்தைக் காலி பண்ணினால் ரொம்ப அழகாயிருக்கும்!

    பிரசாத்: சொல்லிடறேன். அந்த கவருக்குள்ளே ஒரு காகிதத்தில், 96 என்று ரொம்ப அழகா எழுதியிருக்கிறது… ரெட் இங்க்கில், கொட்டை கொட்டையாய்!

    காபி எடுத்து வந்த கோமதி, இதையெல்லாம் நின்று கேட்டுவிட்டு சமயலறைக்குத் திரும்புகிறாள். காபியைத் தானே குடிக்கிறாள்.

    பிரசாத்: அந்த 96- ஐ பார்த்தவுடன் கண்விழிச்சுக்கிட்டேன், என்ன வேடிக்கையான சொப்பனம்னு நினைச்சபடி தூங்கினால் மறுபடியும் அதே சொப்பனம். ரொம்ப அழகான…

    சிவராம்: சொல்ல வேண்டாம்… தெரியுது.

    பிரசாத்: மூணாம் தடவை தூங்கறேன். மூணாவது தடவையும் அதே சொப்பனம்!

    விஜி: (பிரசாத்தை நெருங்கி வந்து ரகசியமாக) எங்கப்பா பார்க்கறதுக்குத்தான் சாது மாதிரி இருக்காரே தவிர, கொலையும் பண்ணுவார். இதுவரை அவர் மேலே பன்னிரண்டு கிரிமினல் வழக்கு இருக்கு. அதைப் பதிமூணா பண்ணீடாதீங்க.

    பிரசாத்: சுருக்கமாகச் சொல்லிடறேன்! ஒரே மாதிரியான சொப்பனம் திரும்பத் திரும்ப மூணு தடவை வந்ததாலே, அந்தத் தொண்ணுாத்தாறு என்கிற எண்ணுக்கும் எனக்கும் ஏதோ தெய்வீகமான சம்பந்தம் இருக்கும்னு தோணிப்போச்சு, இன்னிக்கு தொண்ணூத்தாறை வெச்சு நாம் ஏதோ சாதிக்கப்போறோம்னு நினைச்சபடி வந்திட்டிருந்தேன். உங்க காரைப் பார்த்ததும் ஷாக்காகி நின்னுட்டேன். ஏன்னா, உங்க காரோட நம்பர் 8296 அதாவது தொண்ணுத்தாறிலே முடியுது.

    சிவராம்: அப்பாடா! இப்பவாவது விஷயத்துக்கு வந்தியே! இ ப் ப ந ர ன் ப ண் ணு சொல்லட்டுமா?

    பிரசாத்: தாராளமா, சார்!

    சிவராம்: இன்னிக்கு விடியகாலையிலே எனக்கு ஒரு சொப்பனாம்!

    பிரசாத்: அட உங்களுக்குமா சார்?

    சிவராம்: ஆமாம். உன்னைப் போல ஒரு யங்மேன் என் வீட்டுக்கு வரான், என் காரைப் பார்க்கிறான், என்ன விலைன்னு கேட்கிறான்... சொல்றேன். பணத்தைக் கொடுத்திட்டுக் காரை ஓட்டிட்டுப் போறான்.

    பிரசாத்: உங்க சொப்பனப்படியே நடக்கப் போறது சார்! ஆனால், ஒரு சின்ன மாறுதல்.

    சிவராம்: என்ன?

    பிரசாத்: நான் உங்க காரை வாங்சாரத்துக்காக வரலே சார். சும்மா கொஞ்ச நேரம், கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்க்கலாம்னுதான் வந்தேன்.

    சிவராம்: வாங்கப் போறதில்லையா? அப்புறம் எதுக்கு ஓட்டிப் பார்க்கறது?"

    பிரசாத்: கொஞ்ச தூரம் உங்க காரிலே போனா ஏதோ, அதிர்ஷ்டம் கிடைக்கும்னு...

    சிவராம்: (கோபமாய்) இடத்தை விட்டு முதல்லே எழுந்திரு. காலங்கார்த்தாலே வந்துட்டான். என்னவோ கிராக்கிம்பாங்களே, அதுமாதிரி!

    விஜி: (தணிவான குரலில்) நான் அப்பவே சொன்னேனில்லே அப்பாவைப் பத்தி.

    பிரசாத் சோகமாக எழுந்து, சோகமாக திரும்பித் திரும்பி பார்த்தபடி செல்கிறான்.

    விஜி: பாவம்ப்பா.

    சிவராம்: கொன்னுடுவேன்! கம்முனு இரு!

    ###

    காட்சி: 3

    அன்று சாயந்திரம்... ஒரு பாங்க், மாலை ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம், பாங்க் மூடும் நேரம், பணம் வாங்குவதற்காக உள்ளே போகிறாள் விஜி. பெஞ்ச்சில் பல பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். கையில் டோக்கனுடன், திரும்பிப் போய் விடலாமா என்று அவள் யோசிக்கையில், கொஞ்சம் தள்ளி பிரசாத் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள். கேஷியரின் தலைக்கு மேலே 96 என்ற எண் சிவப்பு விளக்கில் பிரகாசிக்கிறது.

    பிரசாத்: (குபீரென்று எழுந்து) ஆ! தொண்ணூத்தாறு!

    பிரசாத் எழுந்து கேஷியரை நோக்கி ஓடுகையில், கையில் பணத்துடன் வரும் ஒருவர் மீது மோதுகிறான். அவர் கையிலிருந்த நோட்டுகள் சிதறிப் படிக்க, ஆளுக்கு ஆள் பொறுக்க, அல்லோலகல்லோலம்.

    பணத்துடன் வந்தவர்: திருடன்! திருடன்! பிடியுங்க!

    இரண்டு மூன்று பேர் பிரசாத்தை மடக்க, சிலர் மொத்து மொத்தென்று மொத்துகிறார்கள். பிரசாத் சட்டை கிழிந்து, தலை அலங்கோலம்.

    விஜி: (குறுக்கே புகுந்து) விடுங்க... விடுங்க! நகருங்க! அவர் திருடனில்லே. என் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறார். விடுங்கய்யா! மனுஷனா நீங்கள்லாம்?

    ஒருவர்: ( வேணும்னே மோதி யிருக்கான்! திருட்டு ராஸ்கல்!

    விஜி: நிறுத்துங்க சார்! தொண் ணாத் தாறு டோக்கன்னதும் அவர் பணம் வாங்கப் போயிருக்கிறார். தற்செயலா மோதிட்டார்!

    கூட்டத்தில் ஒருவர்: இந்தாம்மா, தொண்ணூத்தாறு என் டோக்கன்! (காட்டுகிறார்,)

    விஜி : பிரசாத் உங்க டோக்கன் என்ன?

    பிரசாத் திருதிருவென்று விழித்தபடி உள்ளங்கையைப் பிரித்துக் காட்டுகிறான். 104 என்று நம்பர் இருக்கிறது.

    பிரசாத்: இல்லே விஜி, தொண்ணூத்தாறுங்கிற நம்பரைப் பார்த்ததும் எனக்குள்ளே என்னவோ ஒரு இது ஏற்பட்டுப்போச்சு!

    ஒருவர்: பார்த்தீங்களா மேடம்? பெரிசா சிபாரிசுக்கு வந்தீங்களே! என்னவோ ஏற்பட்டுதாம்! என்னய்யா ஏற்பட்டுது?

    விஜி: சரி, சரி அவரும் பணம் வாங்க வந்தவர்தான்! திருடன் இல்லே!

    பொறுக்கி ன பணத்தை அனைவரும் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

    விஜி: கீழே விழுந்து உங்க பணத்தை அவங்கவங்க திருப்பிக் கொடுத்திட்டாங்க இல்லே? சரியா இருக்கா பாருங்க!

    பணம்வாங்கியவர்: (எண்ணிப் பார்த்து) அஞ்சு ரூபாய் குறையுது.

    விஜி: அவ்வளவுதானே! நான் தர்றேன். ஆளை விடுங்க!

    ஹேண்ட்பாக்கிலிருந்து விஜி எடுத்துக் கொடுக்கிறாள். கூட்டம் கலைகிறது. பிரசாத்தை மெள்ள வெளியே அழைத்துச் செல்கிறாள்.

    ###

    காட்சி:4

    எழும்பூர் ஸ்டேசனை நோக்கிச் செல்லும் தெரு... விஜியும் பிரசாத்தும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    விஜி: (பரிதாபத்துடன்) இனிமேலாவது இந்தத் தொண்ணூத்தாறு பைத்தியத்தை விட்டுருங்க.

    பிரசாத்: நான் அதை விட்டாலும் அது என்னை விடாது போலிருக்கே! தொண்ணூத்தாறு கண் முன்னாலேயே நிக்குது.

    விஜி: அப்ப கண்ணை மூடிட்டு நடங்க.

    பிரசாத்: தயார்.ஆனா, உன் கையைப்பிடிச்சுக்கிட்டுத்தான் நடக்கணும்.

    விஜி: தொண்ணூத்தாறு அடி கிடைக்கும். இந்த ஹேண்ட்பாக்கைப் பிடியுங்க (தன் கைப்பையைத் தருகிறாள்.

    பிரசாத்: லேடீஸ் ஹேண்ட்பாக்கை வெச்சுக்கிட்டா எல்லோரும் சிரிப்பாங்க.

    விஜி : இப்பவும் எல்லோரும் உங்களைப் பார்த்துச் சிரிச்சுகிட்டுத்தான் போறாங்க. ஷர்ட் இங்கே கிழிஞ்சிருக்கு! மார்புக்கருகே கிழிந்திருப்பதைக் காட்டி ஹேண்ட்பாக்கை மார்போடு அணைச்சுக்கிற மாதிரி வச்சுக் கிட்டு நடங்க.

    பிரசாத்: ஹா! ஒரே பரவசமா இருக்கு. (ஹேண்ட்பாக்கை முத்தமிடுகிறமாதிரி முகத்தருகே உயர்த்துகிறார்.

    விஜி: அப்படியெல்லாம் செய்யாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு.

    பிரசாத்: பிரமாதமான வாசனை வருது. அது தான் மோந்து பார்த்தேன்.

    விஜி: (ஏமாற்றத்துடன்) நீங்க எங்கே போகணும்?

    பிரசாத்: ஸபர்பன் ட்ரெயரின்லே பல்லாவரத்தில் இறங்கி, ஒரு மைல் நடந்தால் மன்னார்சாமிபுரம் வரும்...

    விஜி: அங்கேயா உங்க வீடு? என் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற மாதிரி அப்பாகிட்டே சொன்னீங்களே?

    பிரசாத்: வீடு அங்கேதான். வீட்டுச் சொந்தக்காரர் வெற்றிவேல் மன்னார்சாமிபுரத்திலே இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வாடகையை கொண்டு போய்க் கொடுத்திடணும்.

    ஸ்டேஷனுக்குள் நுழைகிறார்கள்.

    விஜி: (யோசனையுடன்) மன்னார்சாமிபுரம்… வெற்றிவேல்... என் அப்பாவுக்குத் தெரிஞ்ச கார் புரோக்கர் வெற்றிவேல்னு ஒருத்தர் இருக்கார். மன்னார்சாமிபுரம்னுதான் அவரும் சொல்வார்...

    பிரசாத்: அவரேதான் இவர், இவரேதான் அவர். வெற்றிவேல் ஒரிஜினலா கார் புரோக்கர்தான். அதிலே சம்பாதிச்சு சம்பாதிச்சே மெட்ராஸ்ல ஏழு வீ டு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்.

    ஸ்டேஷனில் நடக்கிறார்கள். முன்னே போகும் ஓர் ஆள் எதையோ கீழே போட்டுவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்.

    பிரசாத்: சார்! சார்! இதைப் போட்டு விட்டுப் போறிங்களே!

    பிரசாத் குனிந்து எடுக்கிறான். அது ஒரு காகிதம்... அந்தக் காகிதத்தைப் பார்த்து பிரசாத் திடுக்கிடுகிறான்.

    விஜி: ஐயய்ய! என்னது, கீழகடக்கிற பேப்பரையெல்லாம் பொறுக்கறீங்க?

    பிரசாத்: பேப்பர் பொறுக்கறதிலே தப்பு ஒண்ணும் இல்லே. கீழே கிடக்கிற ஆணியை எடுத்தால்தான் தப்பு. பைத்தியம் பிடிக்கும்னு என் பாட்டி சொல்லி இருக்கா!

    விஜி: இப்ப மட்டும் பிடிக்கலியா என்ன? (நிமிர்ந்து பார்த்து) அடடா! எங்கே அந்த ஆள்? கூட்டத்தோடு கூட்டமாக மறைஞ்சிட்டாரே!

    பிரசாத்: (அந்தக் காகிதத்தை விஜியிடம் காட்டியபடி) நான் விட்டாலும் அது விடாதுன்னு சொன்னேனே! பார்... தொண்ணூத்தாறு... தொண்ணாத்தாறு!

    விஜி: (கோபமாக) என்ன உளர்றீங்க? இது க்ளோக் ரூம் ரசீது. அந்த ஆள் தன் லக்கேஜ் எதையோ வெச்சிட்டு, அதுக்கான ரசீதை வாங்கி, தவறுதலாக கீழே போட்டுட்டுப் போறார்!

    பிரசாத்: அப்ப க்ளோக் ரூமிலே

    Enjoying the preview?
    Page 1 of 1