Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Vizhiyil
Anbin Vizhiyil
Anbin Vizhiyil
Ebook216 pages3 hours

Anbin Vizhiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு இருந்தால் தவறை மன்னிக்கவும் முடியும்,தப்பை மறக்கவும் முடியும் என்பதை “அன்பின் விழியில்” என்ற இந்த கதையில் புரிந்துக் கொள்ளலாம். அன்பின் விழிக் கொண்டு பார்த்தால் எல்லாம் அழகே!

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133705476
Anbin Vizhiyil

Read more from Rajeshwari Sivakumar

Related to Anbin Vizhiyil

Related ebooks

Reviews for Anbin Vizhiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Vizhiyil - Rajeshwari Sivakumar

    http://www.pustaka.co.in

    அன்பின் விழியில்

    Anbin Vizhiyil

    Author:

    ராஜேஸ்வரி சிவகுமார்

    Rajeshwari Sivakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajeshwari-sivakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    என்ன தவம் செய்தனை யசோதா

    என்ன தவம் செய்தனை...

    எங்கும் நிறை பரபிரம்மம்!

    அம்மா என்றழைக்க,

    என்னத்தவம் செய்தனை!

    என்ற பாடல் அந்த பெரிய ஹாலின் நான்கு பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.ஒரு ஊரையே தன்னுள் அடக்கி, அதன் மூலம் அங்குள்ளோரை தன்னுலேயே ஒடுக்கி வைத்திருக்கும்.‘மேல் நடுத்தர வர்கத்தினர்’ மட்டுமே வசிக்க முடிந்த பிரம்மாண்டமான ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாம்தளத்தில் உள்ள இரண்டே வீடுகளில்,ஒரு வீட்டில் இருந்து அப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

    வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் அவ்வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றால், ஒரு திருமண மண்டபத்தை போல நீண்டிருக்கும் பெரிய ஹாலும்,அந்த ஹாலுக்கு அரணாய் நான்கு அறைகளும் இருந்தது.ஒவ்வொரு அறையும் ஒரு சிறிய வீட்டை உள்ளடக்கினாற்போல் விசாலமாக காட்சியளித்தது.

    இக்குடியிருப்பை பார்க்கும் ஒரு சாதாரண மனிதனால்,‘இதை கட்டியவர்களால், ஒரு ஊரையே ஒரு கட்டிடத்திற்குள்ளும்,நான்கு வீடுகளை ஒரு வீட்டுக்குள்ளும் அடைக்க எப்படி முடிந்தது!’ என வியக்காமலிருக்க முடியாது. பணம் இருந்தால் எல்லாம், சாத்தியம் தான் போலும்!

    அந்த வீட்டில் உள்ள ஒரு அறையிலிருந்து ஹாலுக்கு வந்துக்கொண்டிருந்த நித்யா என்கிற நித்ய லக்ஷ்மி அம்மா! கேட்கவேண்டியதை யசோதாகிட்ட தனியா கேட்கறதை விட்டுட்டு இப்படியா வீட்ல இருக்கற எல்லோருக்கும் கேக்கறதை போல பாட்டாவே படிப்பீங்க! எனக்கேட்டு காலையிலேயே தன் தாயின் பி.பியை உயர்த்தும் வேலையை தொடங்கினாள்.

    அறிவு கெட்ட கழுதை! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் சாமி பாட்டை எல்லாம் இப்படி கேலி பண்ணாதேன்னு.கிட்டவாயேன் நல்லா நாலு அடி முதுகுல போடறேன். இப்ப இருக்கிற பசங்களுக்கு அம்மாப்பாகிட்ட பயமும் இல்ல, கடவுள் கிட்ட பக்தியும் இல்ல.உங்களுக்கெல்லாம் அம்மாவ விட கொஞ்சம் உயரமா வளந்துட்டு கொஞ்சம் அதிகமா படிச்சிட்டா,பெரிய மேதாவின்னு நினைப்பு வந்துடுது.உங்க மேலையும் தப்பில்ல.எங்களுக்கு கிடைக்காததெல்லாம் உங்களுக்கு கிடைக்கனும்னு, நீங்க ஆசைப்பட்டு பாக்கறதை எல்லாம் வாங்கி கொடுக்கிறோம் இல்ல, எங்களை சொல்லனும் என அஷ்டோத்திரம் சொல்வதை போல கடகடவென்று மகளை அர்ச்சித்துக்கொண்டே சமையலை செய்துக் கொண்டிருந்தார் பரமேஸ்வரி என்கிற ஈஸ்வரி, நித்யாவின் தாய்.

    அட ராமா! ‘ஐ பாட்’ல பாட்டை கேட்கறதை விட்டுட்டு இப்படி ஏன்-மா வீடே அதிராப் போல பாட்டை போட்டீங்க?’ன்னு கேட்டதுக்கு, என்னை சாமி கூட எல்லாம் கோத்து விட்டதுமில்லாம, இந்த ஜெனெரேஷன் பசங்கள பத்தி ஒரு லெக்சர் கொடுக்கறீங்களே மிஸ்சஸ்.பரமு! உங்களை வச்சிக்கிட்டு எங்கப்பா ‘பரம சாது! மிஸ்டர்.பரமு!’ இத்தனை வருஷமா என்னப் பாடுபட்டாரோ? என தன் தந்தைக்காக இவள் பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் போதே, தன் வாக்கிங்கை முடித்து அங்கு வந்த தன் தந்தையை பார்த்து,

    மிஸ்சஸ் பரமுகிட்ட மாட்டின மிஸ்டர்.பரமு! நீங்க ரொம்ப பாவம்! என்று பரிதாபப்பட்டாள் நித்யா.

    ஏன் பாப்பா! அம்மாவ தொல்லை பண்றீங்க.அவ காலையில காலேஜூக்கு கிளம்பும் டென்ஷன்ல இருப்பான்னு உனக்கு தெரியும் தானே! அவளுக்கு உன்னால ஹெல்ப் பண்ண முடிந்தா பண்ணு. இல்லையா, சும்மா உள்ள போய் உன் வேலைய பாரு.நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன். என சொல்லிக்கொண்டே சமயலறைக்கு சென்றார் பரமேஸ்வரன். ஊருக்கு அவரும்,அவரின் மனைவியும் ஈஸ்வரன், ஈஸ்வரி என்றால் அவரின் மகளுக்கு மிஸ்டர் & மிஸ்சஸ்.பரமு.

    அதானே பார்த்தேன்! மிஸ்டர் பரமு என்னைக்கு மிஸ்சஸ்.பரமுவ அடக்கியிருக்கார்! அப்படி செய்திருந்தா தான் இவங்க எப்பவோ திருந்தியிருப்பாங்களே!என்னமோ இப்பதான் உங்க வைப் காலேஜ்க்கு படிக்க போறாப்போல ஒரே பில்டப் பண்ணிக்கறீங்க! ஹல்லோ! சார்! அவங்க, அங்க இருக்கும் பசங்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கும் வேலைய செய்ய போறாங்க.நியாபகத்துல வச்சிக்கங்க. என சொல்லிக் கொண்டே அவளும் தன் பெற்றோரிடம் சென்றாள்.

    பரமேஸ்வரன்! அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியின் மேலாளர்.ஐம்பத்தி நான்கு வயதிலும் ‘ஹான்சம் லுக்’குடன் இருப்பவர்.மனைவியை மதிக்க தெரிந்தவர்.இவரின் உலகம் இவரின் மனைவியும், மகள்களும் தான். அந்த உலகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக வேறொருவரும் சேர்ந்துள்ளார்.

    பரமேஸ்வரி! ஒரு தனியார் கல்லூரியில் கணிதப் பேராசிரியர். இவரின் இந்த வேலையை தான் இவர் மகள், அந்த அழகில் சிறிது நேரத்திற்கு முன் விமர்சித்தாள். தன் நாற்பத்தொன்பது வயதிலும் பார்பதற்கு ஹீரோவின் அம்மாவை போலல்லாமல் அக்காவை போல் இருப்பவர்.வீட்டையும், வேலையையும் சரிவிகிதத்தில் கவனிக்கும் திறமை பெற்றவர்.’பிதாகரஸின் ப்ராப்ளம்’யை சால்வ் பண்ணத் தெரிந்த இவருக்கு தன் இளைய மகளின் வாயை அடக்க தான் தெரிவில்லை.

    இந்த ஈஸ்வர தம்பதியர்களுக்கு, இரண்டு மகள்கள். அவர்களில் இளையவள் தான் நித்யலக்ஷ்மி. கல்லூரி சென்று படிக்கும் நிலையில் அவளின் குடும்ப சூழ்நிலை இல்லாததால், வீட்டிலேயே தன் முதுகலை பட்டப்படிப்போடு, சி.ஏ தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் இருபத்திரண்டு வயது இளமங்கை.இவளுக்கு அந்த கடவுள் அழகையும் அறிவையும் அதிகமாக வைத்ததோடல்லாமல் இலவச இணைப்பாய் வாயையும்,வாலையும் கொஞ்சம் அதிகமாகவே வைத்துவிட்டார்.அந்த இலவச இணைப்பால் தற்போதைக்கு அதிக சேதாரத்திற்கு ஆளாகிக்கொண்டிருப்பது ஈஸ்வரி மேடம் தான்.

    உள்ளே வந்த நித்தி, அப்பா... நீங்க போய் உக்காருங்க. நான் அம்மாக்கு ஹெல்ப் பண்றேன் எனவும், எதையோ சொல்ல ஈஸ்வரன் வாய் திறக்க,

    மிஸ்டர் பரமு! உங்க மேடமை நான் ஒன்னும் கிள்ளி,கில்லி வச்சிடமாட்டேன்.நீங்க கவலைப்படாம தாராளமா வெளிய போகலாம். தாங்கல டா சாமி! கோழிய போல அப்படி என்ன தான் இவங்கள அடகாப்பீங்களோ! போங்க சார்!போங்க! போய் உக்காருங்க! என்றாள்.

    வானரமே! எங்களை கிண்டல் பண்றதே உனக்கு வேலையா போச்சு! என்று அவளை திட்டிக்கொண்டே ஈஸ்வரி,

    இந்தாங்க காபி. இதை நிதானமா வெளிய போய் பேப்பர் படிச்சிட்டே குடிங்க. இங்க வேலையெல்லாம் முடியற ஸ்டேஜ் தான். என்ன... அப்படியே முடியலைன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல.இதோ, இந்த வாயாடி மீதி வேலைய செய்துடுவா. நாம கிளம்பினதும் வெட்டியா தானே மேடம் இருக்க போறாங்க! என்று சொல்லி நித்தியை சாமியாட ‘வெல்கம்’ செய்தார்.

    அவர் சொன்னதை கேட்ட ஈஸ்வரன் தன் மகளை பார்த்து சிரித்துக் கொண்டே காபியுடன் வெளியேற, ‘நித்ய தாண்டவம்’ ஆரம்பமானது.

    ஹலோ! மேடம்! மிஸ்சஸ்.பரமு! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். யாரைப் பார்த்து வெட்டியா இருக்கேன்னு சொன்னீங்க? நானா? இல்ல நானான்னு கேட்டேன்! காலைல கண்ண திறந்ததுல இருந்து, நைட் கண்ணை மூடற வரைக்கும் இந்த வீட்டுக்கு வேலை செய்தே ‘பாட்டிரி சார்ஜ்’ போல தேஞ்சிப்போற என்னை பார்த்து நீங்க எப்படி, அப்படி சொல்லலாம்! வாபஸ் வாங்குங்க! முதல்ல சொன்னதை வாபஸ் வாங்குங்க! இல்லன்னா மெரீனாவில் போய் போராட்டம் பண்ணுவேன்! என நித்தி தன் கொட்டை கண்களையும், கட்டைகுரலையும் காட்டி, சபதமேடுத்துக் கொண்டிருக்கும் போது,

    மம்மி...! என்ற குரல் கேட்டது.

    அவ்வளவு தான்! அப்படியே அடங்கிய நித்தி, எஸ் மை டார்லிங்! என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

    ‘இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான்!’ என்பதைப்போல ஈஸ்வரியும், ஷ்ஷப்பா! சூறாவளி, சுற்றுப்பயணத்துக்கு கிளம்பியாச்சு. இன்னும் கொஞ்ச நேரம் இந்த இடம் அமைதி பூங்காவா இருக்கும் என முணுமுணுத்துக்கொண்டே தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

    இன்னைக்கு என் டார்லிங் ஏன் சீக்கிரம் எழுந்துட்டாங்க?அம்மம்மா கத்தி உங்களை எழுப்பி விட்டுட்டாங்களா? என தன் தவறை தாயின் மேல் போட்டு, குரல் வந்த அறைக்குள் நுழைந்தாள் நித்தி. அவளை பின் தொடர்ந்து அவளின் தந்தையும் அங்கு வந்தார்.

    தூக்கம் போய்டிச்சி! என தன் மழலையில் சொன்னான் மூன்று வயதான சரண் ஸ்ரீநிவாஸ்.

    ஓஓஒ... தூக்கம் போய்டிச்சா! அப்ப வாங்க நாம ஓடிப்போய் ப்ரேஷ் பண்ணிட்டு அம்மம்மா கிட்ட பால் வாங்கி குடிக்கலாம் என்று கூறி அவனின் பொறுப்பை தந்தை எடுத்துக்கொள்ள, அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துவிட்டு, தன் தாய்க்கு உதவி செய்ய அங்கே சென்றாள் நித்யா.

    இப்படியே அவர்களின் காலைப்பொழுது வழக்கம் போல சென்றுக்கொண்டிருக்கும் போது,

    ஈஸ்வரி! நம்ம பக்கத்து பிளாட்டுக்கு யாரோ நாளைக்கு குடிவரப் போறாங்களாம். இன்னைக்கு வாக்கிங் முடிச்சிட்டு வரும் போது எதிரில் வந்த நம்ம செக்ரெட்டரி சொன்னார்.... என ஈஸ்வரன் சொல்லி முடிக்கவும், அதுவரை பணிக்கு செல்லும் அவசரத்தில் அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி ரெடி ஆகிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் கால்கள் அப்படியே நின்றது.

    யாரு வராங்களாம்? அதை அவர் சொல்லலையா! ஹவுஸ் ஓனரே வரப் போறாங்களாமா...? என்ற ஈஸ்வரியின் தயக்கக் கேள்விக்கு

    தெரியலை! என்ற சுருக்க பதிலே கிடைத்தது.

    ஏன்? இப்போ எதுக்கு இந்த விசாரணை-ம்மா? யார் அங்க வந்தாலும் நமக்கென்ன வந்தது! ப்ப்ப்ச்ச்... நீங்க வேற-பா! காலையிலேயே எதுக்கு பா இவங்ககிட்ட தேவையில்லாதை எல்லாம் சொல்றீங்க? இவங்க இன்னைக்கு முழுசும் இதையே யோசிச்சி, யோசிச்சி மண்டைக்குள்ள இருக்க அந்த ‘ஆஷ்’ கலர் வஸ்துவ ‘ஆஷ்’ஷா ஆக்காம, ஓயமாட்டாங்களே...! என சலித்து,

    மேடம்! மிசஸ் பரமு மேடம்! யார்ரர்ர்ர்ர்... வந்தாலும் நமக்கு ஒன்னும் இல்ல. ஓகே வா? அதை நல்லா உங்க மனசுல பதியவச்சிட்டு, இப்ப கிளம்புங்க, சீக்கிரம் கிளம்பற வழிய பாருங்க. நீங்க கிளம்பினதுக்கு பிறகுதான் நான் அப்பாடான்னு அப்படி உக்காரனும். ஷ்ஷப்பா... என்ன வேல? எவ்வளவு வேல! ஒரு மனுசி எத்தன வேலைகளைத் தான் செய்வா? என புலம்பியதோடல்லாமல்,

    நித்தி! நவ் யு டேக் ரெஸ்ட் பேபி! என தன்னை பார்த்து சொல்லிக்கொண்டு, அங்கே இருந்த சேரில் சட்டமாக அமர்ந்துக்கொண்டு,

    ஹலோ... மிஸ்சஸ் பரமு! ம்ம்ம்ம்.... உள்ள போய் உங்க டிபன்பாக்ஸ் எடுத்து பாக்ல வைங்க, அப்பாவோடதை எடுத்துட்டு வாங்க, நான் அவர் பாக்ல வைக்கிறேன். டார்லிங்யோட ஸ்நாக்ஸ் பாக் எங்க? என வாய் ஓயாது பேசி ஈஸ்வரியின் கவனத்தை வேலையில் திருப்பினாள் நித்யா.

    அலுவலுக்கு நேரமானததால் நித்தியின் பேச்சைக்கேட்டு ஈஸ்வரி தங்களுக்கு வேண்டியதை எடுக்க உள்ளே செல்லவும்,

    ஏன் பா காலையிலேயே இந்த பேச்சை ஆரம்பிச்சீங்க? ஈவ்னிங் வந்து பொறுமையா சொல்லியிருக்கலாம்ல! என கோபமாக தன் தந்தையை பார்த்து நித்யா கேட்டாள்.

    அவருக்கும் இந்த செய்தி அதிர்ச்சிதான்.காலையில் கிடைத்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டால்,அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தனர்!

    ’பக்கத்துவீட்டிற்கு அதன் உரிமையாளர்களே கூடிய விரைவில் வரப்போகிறார்கள்’ என்பது இவரறிந்த விஷயம் தான்.ஆனால் அது இவ்வளவு விரைவில் என்பதைதான் இவரறியவில்லை.அந்த தகவலை இவருக்கு தெரிவிக்கவேண்டியர்கள், அறிவிக்கவில்லை!

    அதனால் ‘நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்!’ என இவரின் உள்ளுணர்வு சொல்லியதால் மனைவியிடம் இன்றிலிருந்தே விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி, அவரை தயார்படுத்த எண்ணினார்.

    இல்ல மா! பக்கத்துக்கு போர்ஷனுக்கு ஹவுஸ் ஓனரே வராங்களாம், அதுவும் இந்த வாரத்திலேயே வந்துடுவாங்கபோல இருக்கு. நம்ம செக்ரெட்டரி வெளிஊருக்கு போயிட்டு நேற்றுதான் திரும்பி வந்திருக்கார்.அதனால எனக்கு இன்னைக்கு தான் இந்த விஷயம் தெரியவந்தது.அவங்க எப்ப வேணும்னாலும் இங்க வரலாம்.

    "அதான் உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1