Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Thaney En Pon Vasantham
Nee Thaney En Pon Vasantham
Nee Thaney En Pon Vasantham
Ebook388 pages4 hours

Nee Thaney En Pon Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிஸ்னஸ் கிங் மாதவனின் மகன் ஆகாஷ். ஆகாஷ் தன் உண்மையில்லாத காதலிக்காக தன் மனைவியை இழக்க தயாராகிறான். ஆகாஷ் எதற்காக பிருந்தாவிடம் அக்ரீமெண்ட் விடுக்கிறான். பிருந்தா ஆகாஷின் அக்ரீமெண்ட்டை ஏற்றுக்கொள்வாளா? திடீரென்று ஆகாஷ், ஷைலுவின் காதலை வெறுக்கக் காரணம் என்ன? ஷைலு எதற்காக ஆகாஷை ஏமாற்றுகிறாள்? பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அன்பு, பாசம், பணிவு நிறைந்த பிருந்தாவிடம் இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? இறுதியில் பிருந்தாவின் நிலை என்ன? ஆகாஷின் வாழ்வில் பொன் வசந்தம் ஏற்படக் காரணம் என்ன? நாமும் இவர்களின் அன்பில் வசந்தமாய்...

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580147807467
Nee Thaney En Pon Vasantham

Read more from A. Rajeshwari

Related to Nee Thaney En Pon Vasantham

Related ebooks

Reviews for Nee Thaney En Pon Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Thaney En Pon Vasantham - A. Rajeshwari

    https://www.pustaka.co.in

    நீதானே என் பொன் வசந்தம்

    Nee Thaney En Pon Vasantham

    Author:

    அ. ராஜேஸ்வரி

    A. Rajeshwari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-rajeshwari

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    சுந்தரி சீக்கிரமா டிபனைக் குடும்மா. ஃபிளைட்டுக்கு நேரமாச்சு. ஈவினிங் நாலு மணிக்கு கான்ஃபரன்ஸ். அதர் கன்ட்ரீஸ்ல இருந்துகூட இந்த பிஸ்னஸ் கான்ஃபரன்ஸ்ல கலந்துக்குறாங்க, என்றார் மாதவன்.

    நான் இதோ இருக்குற சென்னைல இருந்து லேட்டாப் போனா நல்லார்க்காதும்மா, என்றார்.

    ஆகாஷ். வாப்பா வாடா கண்ணா. அப்பாகூட வந்து சேர்ந்து உக்கார். டிபன் சாப்டு, என்றாள் அம்மா.

    வரேம்மா... வரேம்மா ஆகாஷ் குரல் கொடுத்தான். சி.டி.யில் இங்லீஷ் படத்தை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தான். குரல் கிரவுண்ட் ஃபுளோர் வரைக்கும் அலறியது.

    ஏ சுந்தரி! சொல்ல மதிச்சு வரானா பார், என்றார் அப்பா.

    சரி அவன் வரும்போது வரட்டும். எனக்கு டைம்மாகுது. கணேஷ்.

    என்னங்கைய்யா?

    ஷெட்ல இருந்து காரை எடுத்து வெளில ரெடியா வை.

    ஆகட்டுங்கைய்யா.

    டிபன் சாப்பிட வா.

    அப்பவே நான் சாப்டாச்சுங்கைய்யா.

    ஆமாங்க, கணேசுக்கு முதல்லேயே குடுத்துட்டேன். அப்போதானே அவன் காரை ரெடிபண்ண முடியும், என்றாள் சுந்தரி.

    காரைக் க்ளீன் பண்ணிட்டு பெட்ரோல்லாம் ஃபில் பண்ணிட்டு வந்துட்டாங்க என்றான்.

    "இந்த வீட்ல யார் கரெக்டா இருக்காங்களோ இல்லையோ, கணேஷ்... ரொம்பவே சின்சியரா இருக்கான்.

    எவ்ளோ சின்னப்பையன். அப்பா போனதுக்கப்புறம் உழைச்சு சம்பாதிச்சு அம்மா, அக்கா, தங்கச்சியைக் கரைசேர்த்து இருக்கான். அம்மாவைக் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்குறான்.

    அதோட, கரஸ்ல வேற படிச்சிருக்கிறான்.

    மொத்தத்துல சகலகலா வல்லவன்னா கணேஷ்தான்.

    வயசுப்பிள்ளை... ஒரு கெட்டபழக்கம் கிடையாது. என்னையே ஐயா பாத்து வாங்கய்யான்னு கெய்ட் பண்றான்னா பாத்துக்கோயேன், என்றார்.

    ஆகாஷ்... ரெண்டு மூணுன்னு படிகளைத்தாண்டி இளமையின் வேகத்தைக் காட்டிக்கொண்டு ஓடிவந்து இறங்கி டேபிளில் அமர்ந்தான்.

    அம்மா சீக்கிரம்மா... டயம் ஆகுதும்மா.

    அப்பா வலதுகைப் பக்கமாக உட்கார்ந்திருந்த ஆகாஷை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

    ஏன்டா ஆகாஷ். எப்படா பொறுப்பா நடந்துக்கப்போறே?

    ஏம்ப்பா... இப்போ என்ன வெறுப்பாவா நடந்துக்குறேன்?

    பாத்தியா உன் பிள்ளை பேச்சை.

    சுந்தரி கண்களால் கெஞ்சினாள் கணவனிடம்.

    சாப்பிடும்போது ஒண்ணும் சொல்லக்கூடாது. இது தன் கணவனிடம் அவள் வாங்கிக்கொண்ட சத்தியப் பிரமாணம்.

    மனைவியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மகனைப் பார்க்க வெறுப்பாக இருந்தது.

    பயல் எடக்குமடக்குப் பிடிச்ச பயல். பேச்சப்பாரு பேச்ச தன்னுள் கோபமும் வருத்தமும் கலந்து சொல்லிக்கொண்டார் மௌனமாக.

    ஆகாஷ்...!

    என்னப்பா?

    டெல்லிலே கான்ஃபரன்ஸ் அதர் கன்ட்ரீஸ்கள்ல இருந்தெல்லாம்கூடப் பெரிய பெரிய பிஸ்னஸ் மேக்னட்ஸ்கள்ளாம் வராங்க நல்ல கெய்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

    எங்கேயும் போயிடாதப்பா...?

    மன்த் ஃபர்ஸ்ட் வீக்... பேமெண்ட் கரெக்ட்டா டெலிவரியாகணும்.

    அக்கவுண்ட்ஸ்... டிபார்ட்மென்ட்ல ஒருத்தர் சரியில்ல. சோ கேர்ஃபுல்லா பக்கத்துல இருந்து பண்ணு. எல்லாமே உன் பார்வைல இருக்கணும்.

    "நீ ஒண்ணும் சீட்ல உக்காந்து மாங்குமாங்குன்னு வேலை பார்க்க வேண்டாம்.

    பிஸ்னஸ் எப்பவும் நம்மளோட பார்வையில இருக்கணும். அதான் சொல்றேன். கவனிச்சுக்கோ புரியுதா?" என்றார்.

    நாளைக்கு வருவேன்... இல்ல... நாளான்னைக்கு கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் கிளம்பி மிட் நைட் வந்துடுவேன், என்றார் அப்பா.

    கொஞ்சம் ஏமாந்தால்கூடப் போச்சு. நிறைய உழைச்சிருக்கேன் ஆகாஷ்... சோ ரொம்பவே சொல்றேன்.

    கரணம் தப்பினால் மரணம்தான். அப்புறம் எழுந்திருக்கவே முடியாதாக்கும் என்று மறுபடியும் மகனிடம் சொன்னார்.

    சோ... நான் வர்றவரைக்கும் கேர்ஃபுல்லா பாத்துக்கோ.

    பிரண்ட்ஸ் வந்தான் போனேன். வந்தேன்னு வச்சுக்காத ஆகாஷ்.

    எல்லாத்தையும் ரெண்டு நாளைக்கு கேர்ஃபுல்லா பாத்துக்கோ.

    இம்போர்ட் ஐட்டம் எல்லாம் இன்னைக்கு நைட் வந்து எறங்கிடும்.

    எக்ஸ்போர்ட் ஆல் ஆர் பேக்கிங்ல ரெடியா இருக்கு...

    மறக்காம... கதிரேசனை புஷ்பண்ணி ஃபிளைட்ல அனுப்பச் சொல்லு... சரியா?

    எல்லா டீடெய்ல்சும் என் ரூம் கபோடுல இருக்கு. அம்மாட்ட கீ இருக்கு. வாங்கிக்கோ.

    இம்போர்ட் ஐட்டம்ஸ் வந்து எறங்கும்போதும் நீ நிக்கணும். எக்ஸ்போர்ட் ஐட்டம் அனுப்பும்போதும் நீ கிட்டவே நிக்கணும்.

    என்னதான் அந்தந்த செக்ஷன்ல ஆள் இருந்தாலும் நம்மளோட பார்வையில நடக்கணும். பல கோடிகள்... ஞாபகம் வச்சுக்கோ."

    மற்றது எது வேணும்னாலும் அம்மாட்டக் கேட்டுக்கோ.

    கான்ஃபரன்ஸ் பிரேக்குல முடிஞ்சா நானே உனக்கு போன்பண்ணிக் காண்டாக்ட் பண்றேன், என்றார் அப்பா மாதவன்.

    சுந்தரி கோட்டை எடு.

    கோட்டையையும் டையையும் எடுத்துக்கொடுத்து வாசல்வரை வந்து வழியனுப்பினாள் சுந்தரி.

    கணேஷ்...!

    என்னங்கைய்யா?

    என்னோட லக்கேஜை எல்லாம் கரெக்ட்டா எடுத்து வச்சிட்டையாப்பா.

    ம்ம், எல்லாமே வச்சாச்சுங்கைய்யா... ஆனா...

    என்னப்பா?

    இன்னும் உங்க மெடிக்கல் கிட்ஸ்தான் வரலைங்கய்யா.

    ஸ்ஸ் சாரி சாரி சுந்தரி இளங்குமரியாக ஓடினாள்.

    எடுத்துக்கொண்டு வந்து கணேஷிடம் கொடுத்தாள்.

    பாத்தியா சுந்தரி... கணேஷ் எவ்ளோ கரெக்டா ஞாபகமா சொல்றான்? என்று பெருமையாகச் சிரித்தார்.

    தாங்க்ஸ்டா கணேஷ்.

    ஐயா... என்னங்கைய்யா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் என்று நெளிந்தான் கணேஷ்.

    சரி சுந்தரி பாத்துக்கோ நெட்ல காண்டாக்ட் வச்சுக்கோ.

    உனக்கும் கஷ்டம்தான் சுந்தரி. பைம்மா... டேக் கேர். பீ கேர்ஃபுல் என்றார்.

    சுந்தரிக்கு ஒரு பெரிய ராமாயணம் கேட்டு முடிந்ததுபோல இருந்தது.

    ராமன்கூட பதினாலு வருஷம் காட்டுக்குப் போகும்போது தசரத மகராஜாட்டையும் மத்த அம்மாக்கள் தம்பிகள்ட்டயும் இவ்ளோ பேசிருப்பானோ என்னமோ...

    இத்தனைக்கும் பெரிய நாடாளுற மகாராஜா மாதிரி இந்த கம்பெனி ஆளுற மகாராஜா இதோ இருக்குற டெல்லி கான்ஃபரன்ஸுக்குப் போயிட்டு ரெண்டு மூணு நாளைக்குள்ள வரதுக்கு இவ்ளோ ராமாயணம் பாடிட்டுப்போறார். சற்று மனசுக்கு அலுப்பாவே இருந்தது.

    அவர் சொல்லுறதும் தப்பில்லையே. என்று நினைத்துக்கொண்டாள்.

    பிள்ளை கவனமா எல்லாத்தையும் மேனேஜ் பண்ணான்னா எதுக்கு இவ்ளோ டென்ஷன் அவருக்கு?

    என்னைக்குத்தான் மனுஷனாவானோ என்று மனதுக்குள் வேதனைப்பட்டாள் சுந்தரி.

    கணேஷ்...

    என்னங்கைய்யா?

    நான் வர்ற வரைக்கும் எல்லா பிராஞ்ச்சுலயும் கேமரா ரன்னிங்குல இருக்கான்னு நீதான் நோட் பண்ணனும்.

    ஒண்ணு ரெண்டு தடவை நானே கண்டுபிடிச்சிட்டேன்.

    அதுக்கெல்லாம் ஆள் இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்ல கணேஷ் தெரியுதாப்பா?

    ஆபீசை கவனிச்சுக்கோ.

    சரிங்கைய்யா...! கவலைப்படாம போயிட்டு வாங்கய்யா.

    கணேஷ்... ஒரு செட் கீ... உன் கஸ்டடில வச்சுக்கோ. ஏதாவது எமர்ஜன்சின்னா யூஸ் பண்ணிக்கோ, உடனே எஸ்.எம்.எஸ். அனுப்பிடு என்றார்.

    ஐயா... நான் பாத்துக்குறேன். ஐயா... ஆகட்டுங்கைய்யா... டென்ஷனாகாம போயிட்டு வாங்கய்யா என்றான்.

    ***

    சுந்தரி குரல் கொடுத்தாள்.

    கணேஷ் வண்டிய வெளிலயே நிறுத்துப்பா. நான் வெளிய போகணும் என்றாள்.

    உங்க வண்டிய எடுத்துக்கறேம்மா. இது ஐய்யா வண்டி... ஷெட்ல பார்க் பண்ணிடுறேன் என்றான்.

    சிரித்துக்கொண்டே அப்போ உன் ஐய்யா வண்டிய எனக்குத் தரமாட்டே அப்படித்தானே கணேஷ்?

    ஐய்யோ சாரிம்மா... ஐயாவோட வண்டி எப்பவும் க்ளீன் அண்ட் பர்பஃக்ட்டா இருக்கணும்.

    திடீர்ன்னு தேவைப்பட்டா பெட்ரோல் பிராப்ளமெல்லாம் இருக்கேம்மா.

    திடீர் திடீர்ன்னு பந்த் போடுறாங்கம்மா. அப்போ ஐயா வேலை கெட்டுப்போயிடுமேம்மா. அதான்ம்மா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்கம்மா, என்றான்.

    ஓகே... ஓகே... கணேஷ். என் வண்டியவே எடுத்து ரெடியா வை. ஆஃபன் ஹவர்ல கிளம்பி வரேம்ப்பா என்றாள்.

    ஆகட்டும்மா... ரெடியா நிக்குறேம்மா, என்றான்.

    என்னப்பா ஆகாஷ். அப்பா ஊருக்குப் போகும்போது சொல்லிட்டுப் போனதெல்லாம் நினைவு இருக்குல்ல?

    ம்ம்... இருக்கும்மா. அதுக்காக ஆபீஸ்லயே அடைஞ்சுபோய்க் கிடக்கமுடியுமா? போயிட்டு வந்துருவேம்மா, என்று கிளம்பினான் ஆகாஷ்.

    டேய் ஆகாஷ் வாண்டாம். அப்பா இல்லாத இந்த நேரத்துல ஆபீஸ்ல இரு. சொல்லிட்டேன், என்றாள்.

    காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

    என்னடா ஆகாஷ். ஆபீசுக்குத்தான நேராப்போறே?

    அவசரமா ஒரு பிரெண்டைப் பாக்கணும்மா. பாத்துட்டு ஆபீசுக்கு வருவேன்.

    சீக்கிரமா வந்துடுப்பா ஆகாஷ். வந்ததும் எனக்குப் போன் பண்ணிடு, என்றாள் அம்மா.

    ம்ம் ஓகேம்மா.

    அண்ணி... அண்ணா இருக்கானா?

    இல்லையே சரண்யா? என்றாள்.

    உங்கண்ணா டெல்லி கான்ஃபரன்ஸுக்குப் போயிருக்கார்ம்மா.

    என்ன விஷயம்மா சரண்யா? அண்ணாட்டதான் சொல்லணுமா? எங்கிட்ட சொல்லமாட்டியா?

    அப்படில்லாம் இல்ல அண்ணி.

    அண்ணா ஆபீசுக்குக் கிளம்பிடுவாரே. அதான் போன்ல அவர்ட்ட சொல்லிட்டு வீட்டுக்கு நேரேவந்து உங்கட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன், என்றாள் நாத்தி... சரண்யா.

    சொல்லும்மா சரண்யா.

    அண்ணி, திவ்ய தேசங்கள் டூர் போறேன். நூத்தி எட்டு பாக்கப்போறேன்.

    ம்ம்... எப்போ? எப்போ?என்று அவசரமாகக் கேட்டாள்.

    கௌஷிக்தான் என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தி அனுப்புறான். வேண்டான்னாக் கேக்கமாட்டேங்குறான்.

    போம்மா... போயிட்டு வாம்மா... வீட்டுக்குள்றவே இருந்தா சிக்காயிடுவம்மா. உனக்கும் ஒரு சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ் வேணும்மா...ன்னு ஃபோர்ஸ்பண்ணி அனுப்புறான். பெருமாள் கோவில்ல இருந்து ஒரு பெரிய குரூப் போவுது. அவுங்க கூடதான் போறேண்ணி, என்றாள்.

    சரண்யா...!

    என்னண்ணி?

    கௌஷிக்க... எங்கிட்ட அனுப்பிடும்மா. தனியா இருக்கவேண்டாம் இங்கேருந்து காலேஜுக்குப் போவட்டும் என்றாள்.

    சொன்னேன் அண்ணி. அவன் சிரிக்கிறான் அண்ணி. அடப் போம்மா நான் டீன் ஏஜ் பாய். பழகிக்கவேண்டாமா? அப்படீங்குறான் என்று சிரித்தாள் சரண்யா.

    ஓ... அவ்ளோ பெரிய ஆளாயிட்டானா?

    ஆமாம்... நான்தான் இன்னும் எங்கையப் பிடிச்சுட்டு வர்ற கௌஷிக்காவே நினைச்சுட்டு இருக்கேன்.

    காலம் எப்படி வேகமா ஓடுது பாத்தியா சரண்யா.

    ஆமாம் அண்ணி ரொம்பவே ஓடுது... அதோட சேர்ந்து ஓட முடியல மூச்சுவாங்குது அண்ணி, என்று சிரித்தாள்.

    ஃபிரியா இருக்கப்ப வருவாண்ணி கௌஷிக் பாத்துக்கோங்கண்ணி... என்றாள்.

    பிரியா காலேஜ் டூர் போயிருந்தாளே வந்துட்டாளா அண்ணி?

    இல்லம்மா... சரண்யா... இன்னும் நாள் இருக்கேம்மா, என்றாள்.

    டூர் போயிட்டு வந்தப்புறம் வரேண்ணி. பிரசாதம் கொண்டுட்டு வரேண்ணி, என்று கூறினாள் சரண்யா.

    சரிம்மா சரண்யா பத்திரமாவே போயிட்டு வா, என்று வழி அனுப்பினாள் அண்ணி சுந்தரி.

    ஆகாஷ் வந்துட்டானா? பிஏக்கு போன் பண்ணினாள் அம்மா.

    இல்லை மேடம். காலைல இருந்து வரவே இல்லையே. நிறைய சைன் வாங்கணும் மேடம், என்றார் பிஏ

    மேடம் இம்போர்டட் ஐட்டம்ஸ் எல்லாம் வந்தாச்சு, என்றார்.

    எக்ஸ்போர்ட் என்னாச்சும்மா சௌமியா? என்று கேட்டதற்கு, இன்னும் அனுப்பலே மேடம். இனிமேதான் மேடம் அனுப்பணும் என்றாள் கிளார்க் சௌமியா.

    ஒரே டென்ஷனாகிவிட்டது.

    போச்சு... அவர் வந்தால் போச்சு... வீடே நரகமாயிடும், என்று டென்ஷனானாள்.

    ஒரு மனுஷன் எத்தனைதரம் கரடியாய்க் கத்திட்டு திரும்பத் திரும்பச் சொல்லிட்டுப்போனார்.

    இவன் ஏன் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்குறான் என்று தனக்குள் புலம்பினாள் சுந்தரி.

    கணேஷ்...

    என்னங்கம்மா?

    எங்கே இருக்க கணேஷ்?

    ஆபீஸ்ல இருக்கேம்மா.

    அங்கே ஏன் போனே. உனக்கு அங்கே என்ன வேலை? வீட்லதானே வேலை. ஐய்யாகூட இல்லையே, என்றாள்.

    இல்லம்மா ஐய்யா எங்கிட்ட சில வேலைகளை ஒப்படைச்சுட்டுப் போனார்ம்மா, என்றான்.

    புரிந்துகொண்டாள். தன் மகன் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை கணேஷ் மீது எப்பவும் உண்டு என்று மனதுக்குள் மணியடித்தது.

    சரி கணேஷ் ஒண்ணும் பிராப்ளம் இல்லியே?

    ஆனால் நிறைய ஃபைல்கள் சைன் பண்ணனும். இன்னும் ஆகாஷ் அண்ணன் வரலம்மா, என்றான்.

    சோ... நான் வந்து உங்களைக் கூட்டிட்டு வரேன் என்றான்.

    வேண்டாம் கணேஷ் நானே ட்ரைவ் பண்ணிக்கிறேன். சாப்பாடு உனக்கு அனுப்பி வைக்கிறன். வெளிலபோய் சாப்பிடாத கணேஷ், என்றாள் சுந்தரி.

    சரிங்கம்மா, என்றான் கணேஷ்.

    சங்கரி சமையலை ரெடி பண்ணினாள். கேரியரில் ஃபில் பண்ணினாள். காரில் எல்லாவற்றையும் எடுத்துவைத்தான் ஆறுமுகம்.

    கணேஷின் துணையுடன் இம்போர்ட் சரக்குகள் எல்லாம் கொடேனில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

    எக்ஸ்போர்ட் இன்சார்ஜ் தாமோதரன் அரை நாள் விடுப்பிலிருந்துவிட்டு மெல்ல ஈவினிங் ஃபோர் ஓ கிளாக்குக்கு வந்தார்.

    சுந்தரியைப் பார்த்து திடுக்கிட்டுப்போனார். அவர் எதிர்பார்க்கவில்லை சுந்தரியை.

    எம்.டி. டெல்லி போயாச்சு. ரெண்டு நாளைக்கு ஃப்ரீதான் என்ற மனக்கோட்டை இடிந்துபோனது.

    பயங்கரக் கோபத்தில் இருந்தாள் சுந்தரி. பர்சனல் கிளார்க், அக்கவுண்ட் செக்ஷனில் ரெண்டுபேர் லீவு. ஆபீசில் முக்கியமானவர்கள் லீவில் இருந்ததால் ஆபீசும். ஒரு மாதிரியாக பொழுதுபோக்கும் படலமாகவே நடந்துகொண்டிருந்தது.

    கணேஷ்... பியூன் சந்தானத்துக்கு ஒரு கால் குடு, என்றாள்.

    சந்தானம் லீவும்மா. அப்பவே குடுத்துட்டேன், என்றான்.

    சரி கணேஷ் ஃபைல்ஸ் எல்லாம் என் ரூமுக்கு அனுப்பச் சொல்லு.

    ஃபைல்களில் சைன் பண்ணினாள்.

    கணேஷ் நெட்ல ஷேர்ஸ் பாருப்பா.

    சரிங்கம்மா... என்று பரபரத்தான்.

    கணேஷ் ஷேர் மார்க்கெட் பிஸினசை தன் வீட்டிலிருந்தபடியே நெட்டில் ஃப்ரீ டைம்மில் அற்புதமாகச் செய்துகொண்டிருந்தான்.

    அம்மா... நம்மளோட ஷேர்ஸ் கொஞ்சம் டவுன் தாம்மா, என்றான்.

    வாங்கின ஷேர்ஸ் அப்படியே தாம்மா இருக்கு.

    மாலை மணி ஐந்தாகிப்போனது. காபி ஸ்னாக்ஸ் வந்தது. கணேஷ்... சாப்பிடு கணேஷ்."

    இல்லைங்கம்மா நான் வெளில சாப்ட்டுக்குறேன்.

    இல்ல கணேஷ்... இன்னும் நிறைய வேலை இருக்குப்பா. கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் கணேஷ், என்றாள்.

    நான் இருக்கேம்மா.. சொல்லுங்கம்மா, என்றான் கணேஷ்.

    இன்டர்காமில் கிளார்க், ரங்கனாதை அழைத்தாள்.

    சீட்ல இல்லை மேடம்... வெளில போயிருக்கார் மேடம், கணேஷ் புள்ளிவிவரமாக இன்ஃபார்ம் பண்ணினான். அசந்துபோனாள் சுந்தரி.

    நெட்டில் பேமெண்ட் கிரடிட் ஆயிடுச்சான்னு செக் பண்ணு கணேஷ், என்றாள்.

    இன்னும் ரெண்டு பிராஞ்சுக்கு கிரடிட் ஆகலம்மா... என்றான் கணேஷ்.

    இரவு மணி ஒன்பதரை என்பதை சுவர்க்கடிகாரம் தன் ஓசையினால் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தது.

    கார்டனில் இரவில் மலரும் பூக்கள் மலர்ந்து அழகான இனிமையான மணம் பரப்பி இரவின் அழகைக்கூட மேலும் அழகாக்கிக் காட்டியது.

    சமையல்காரி சங்கரி... மருள மருள குறுக்கும் மறுக்குமாக நடந்தாள். சங்கரி ஹாட் பேக்குல பேக்பண்ணி டேபிள்ல வச்சுட்டு நீ தூங்கப் போகலாம், என்றாள் சுந்தரி.

    சங்கரி விட்டால்போதும் என்பதுபோல ஹாட் பேக்கில் பேக்பண்ணி நைட் டின்னரை டேபிளில் வைத்துவிட்டு தன் ரூமுக்குப் போய்விட்டாள்.

    ஆறுமுகம்... எல்லா கேட்களையும் லாக் பண்ணிவிட்டு தேவையற்ற விளக்குகளை அணைத்துவிட்டு நைட் வாட்ச்மேன் டூட்டிக்குத் தயாராக கேட்டுக்கு அருகில் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சிறிய அறைக்குள் வந்துவிட்டார்.

    ஹலோ... சுந்தரி தூங்கலையாம்மா?

    இல்லங்க, உங்க போனுக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், என்றாள் கணவனிடம்.

    சாரிம்மா. கான்ஃபரன்ஸ் முடியறதுக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

    ஆகாஷ் என்ன பண்றான்? ஆபீசிலிருந்து வந்துட்டானா? என்றார்.

    இல்லே ஆபீசுலேதான் இன்னும் இருக்கான், என்றாள்.

    குட்... வெரிகுட். பையனுக்கு எவ்ளோ பொறுப்பு பாத்தியா? பொறுப்பெல்லாம் இருக்கு... ஆனால் நான் இருக்கேனே... அதனால கொஞ்சம் பாஸ்க்கு மதப்பு" என்று சந்தோஷச் சிரிப்புச் சிரித்தார் மாதவன்.

    வேற ஒண்ணுமில்ல.

    இந்த பிராஞ்ச்சை ஆகாஷ் கன்ட்ரோல்ல விட்டுடலாம்னு நினைக்கிறேன் சுந்தரி, என்றார்.

    ஐயோ இப்ப வேண்டாங்க... அவன் இன்னும் கொஞ்சம் ஆபீஸ் ஒர்க்ல எக்ஸ்பீரியன்ஸ்டா வந்தப்புறமாத்தான் யோசிக்கணும். சடன்னா முடிவெடுக்காதீங்க, என்றாள்.

    2

    இரவு மணி பதினொண்ணு ஆகாஷ் வரவில்லை. அவள் நினைவுகள் தடுமாற ஆரம்பித்துவிட்டது.

    டெல்லியிலிருந்து போன்.

    ம்ம் சொல்லுங்க. இப்பத்தானே போன் பண்ணுனீங்க என்ன விஷயம் அதுக்குள்ள இன்னொரு கால்.

    ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் சுந்தரி. சோ இன்னொருதரம் உன்னோடு பேசணும்போல இருந்தது தப்பா?

    "தப்பல்லாம் இல்லை. விஷயத்தைச் சொல்லுங்க. நம்ம ஆகாஷைப் பத்திதான். நெனைச்சு இத்தனை நாள் அவன் கவலையிலேயே கரைஞ்சுட்டேன்.

    சடன்னா எவ்ளோ சேஞ்ச் இல்லையா.

    நான் வரும்போதுகூட அவன்மேல கோவமாத்தான் வந்தேன். ஆனால் ஆகாஷ் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கான்னு நீ சொன்னதும் அப்படியே பூரிச்சுப்போயிட்டேன்.

    "கிட்ட மட்டும் இருந்திருந்தா அப்படியே அள்ளிக் கொஞ்சி இருப்பேன் சுந்தரி.

    "நான் முடிவு எடுத்துட்டேன் சுந்தரி. இந்த பிராஞ்ச்சை ஆகாஷிடம்தான் கொடுக்கப்போறேன்.

    இனி அவன் மேல எனக்கு ரொம்பவே கான்பிடென்ட் வந்தாச்சு.

    ஐம் சோ ஹேப்பி.

    நான் இன்னும் ஆகாஷ்ட்ட பேசலை சுந்தரி... அவன் தூங்காம இருந்தால் பேசுறேன். ஆபீசில் டிஸ்ட்ரப் பண்ணவேண்டாம், என்றார்.

    அன்பு மழையும் பாச மழையும் சேர்ந்து பெய்யுது.

    சுந்தரிக்கு மகனைப் புகழ்ந்தது ஒருபக்கம் எரிச்சலாக இருந்தது. மற்றொரு பக்கம் இப்படியெல்லாம் பெருமைப்படும் அளவுக்கு அவன் நடந்துகொண்டால் வீடு எப்படி சந்தோஷக் களையா இருக்கும். ஏன்தான் இப்படி சொன்னபடி கேக்காம வணங்கா முடியா இருக்கானோ. தெய்வமே சாமுண்டீஸ்வரி. இவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டி திருந்தவைக்கணும்.

    வேண்டிக்கொண்டாள் சுந்தரி.

    அம்மா... ஆகாஷ் அண்ணன் வந்தாச்சுங்களா?

    இல்லையேப்பா கணேஷ்... இன்னும் வரலைப்பா.

    அவனுக்காகத்தான்டா காத்துட்டு இருக்கேன். எனக்குப் பயமார்க்குப்பா கணேஷ்.

    நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா. நான் வண்டிய எடுத்துட்டுப்போய்க் கூட்டிட்டு வந்துர்றேன்."

    அவன் எங்கயிருக்கான்னு உனக்கு எப்படித் தெரியும் கணேஷ்.

    "நான்தான் நிறைய தடவை கூட்டிட்டு வந்திருக்கேம்மா...

    கொஞ்சம் ஓவரானா, அண்ணனால நடக்கக்கூட முடியலையே.

    கண்களை இறுக்க மூடி இரு கைகளாலும் காதுகளை மூடிக்கொண்டாள். சிவ... சிவா என்று.

    முடிஞ்சா கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் கணேஷ்.

    கவலைப்படாதீங்கம்மா அரை மணி நேரத்துல உங்க பக்கத்துல ஆகாஷ் அண்ணன் இருப்பார்ம்மா. டென்ஷனாகாம இருங்கம்மா.

    கணேஷ்...

    என்னங்கம்மா?

    ஐயா உனக்கு போன் பண்ணாரா கணேஷ்?

    ம்ம்... அடிக்கடி பேசுவார்ம்மா.

    கணேஷ்...

    என்னங்கம்மா?

    ஆகாஷ் பத்தி.

    இல்லம்மா... ஐயா காதுவரைக்கும் போகவேண்டாம் அப்படின்னு நினைக்கிறேன்.

    ஆனா உங்க விருப்பத்துல நான் குறுக்கிடவும் மாட்டேன்.

    என் வரைக்கும் ஐயா வரை எட்டாம பாத்துக்குவேன்.

    ஆனால் சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும். ஆகாஷ் அண்ணனோட லைஃப் ஸ்பாயிலாயிடக் கூடாதும்மா. என்னடா ட்ரைவர்ன்னா அவன் வேலையோட நிறுத்திக்கணும் தான். ஆனா மனசு கேக்கலம்மா, என்றான்.

    கணேஷ்...!

    ம்ம் சொல்லுங்கம்மா?

    ரொம்பவும் டீப்பா போயிட்டானா கணேஷ்?

    அப்படீன்னும் சொல்ல முடியாதும்மா.

    அப்போ ராங் ரூட்லயே விழுந்துட்டானா கணேஷ்?

    அதுக்குள்ள நாம முந்திக்கணும்ங்குறதுதான் என் விருப்பம்.

    உனக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லையேப்பா?

    இந்தக் கஷ்டத்திலும் நஷ்டங்கள்ளயும்... எனக்கும் பங்கு வருமேம்மா.

    என்னப்பா சொல்ற?

    ஒரு விதத்துல செஞ்சோற்றுக் கடன்ம்மா.

    "அடேய் கணேஷ்... ரொம்ப ரொம்பப் பெரியவனாயிட்டடா.

    நான் இன்னும் உன்னைய சின்னப் பிள்ளை கணேசாவே பாத்துட்டு இருக்கேன்டா.

    உங்களுக்கு எப்பவுமே நான் சின்னப் பையன் கணேஷ்தாம்மா.

    கணேஷ் அவன் கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துக்குவான்.. பீ கேர்ஃபுல்.

    எனக்குப் பழக்கமாயிடுச்சும்மா, சோ நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன், என்றான்.

    ***

    "டேய் கணேஷ்! மரியாதையாய்ப் போயிடு. நீ ஆஃப்ட்ரால் வேலைக்காரன்.

    உன் லிமிட்டைத் தாண்டாதே. அப்புறம் வேலைக்காரன்னுகூடப் பாக்கமாட்டேன். கொல வெறிதான்.

    இப்போ நான் ரொம்பவும் ஹேப்பியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்.

    அம்மா உங்களுக்காகக் காத்திருக்காங்கண்ணா.

    என்னடா நொண்ணா... மரியாதையா எஜமான்னு கூப்புடு... என்னவோ கூடப் பொறந்தவனாட்டம்ல கூப்புட்ற... போ... கணேஷ் காதை மூடிக்கொண்டான்.

    கணேஷுக்கு கோபம் மறைந்து சிரித்துவிடலாமான்னு தோணுச்சு.

    எப்படி இவ்ளோ நிலையிலும் தள்ளாடிட்டு அழகா ரெஸ்பான்ஸ் பண்ணி பதில் மட்டும் சொல்லத் தெரியுது? இதக் கண்டுபிடிச்சே ஆகணும் என்று முடிவு பண்ணினான்.

    ஆகாஷுடன்

    Enjoying the preview?
    Page 1 of 1