Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varamai Vantha Sorgam
Varamai Vantha Sorgam
Varamai Vantha Sorgam
Ebook182 pages2 hours

Varamai Vantha Sorgam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் வாழ்வு முழுமையடைவது தாய்மையென்னும் பேறு அவளுக்குக் கிடைப்பதால் தான் என்பது உண்மை. அந்த வரம் கிடைப்பதற்காக ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் துயரங்கள் என்னென்ன என்பதை சொல்லும் கதை.

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580148207507
Varamai Vantha Sorgam

Read more from Latha Subramanian

Related to Varamai Vantha Sorgam

Related ebooks

Reviews for Varamai Vantha Sorgam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varamai Vantha Sorgam - Latha Subramanian

    http://www.pustaka.co.in

    வரமாய் வந்த சொர்க்கம்

    Varamai Vantha Sorgam

    Author:

    லதா சுப்ரமணியன்

    Latha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    ராஜி… ராஜி…

    வாசலிலே நின்றபடி குரல் கொடுத்தாள் வைதேகி.

    உள்ளே வாயேன் வைதேகி. அடுக்களையில் வேலையாய் இருக்காள் ராஜி!

    வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி காற்று வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த மகாதேவன் குரல் கொடுத்தார்.

    என்ன வாசலோடு போகலாம்னு பார்த்தியா… உள்ளே வாம்மா.

    வந்துண்டே இருக்கேன் பெரியப்பா சிரித்தபடியே உள்ளே வந்தாள் வைதேகி.

    எங்கே கிளம்பிட்டேள் ரெண்டு பேரும்?

    நாங்க ரெண்டு பேரும் எங்கே போவோம் பெரியப்பா?

    வழக்கம் போல ஈஸ்வரன் கோயிலுக்கு தான்.

    சரி சரி நீ உள்ளே போய்ட்டு வரும் போது நேக்குக் கொஞ்சம் ஜலம் கொண்டு வந்து தந்துட்டு போ.

    சரி பெரியப்பா… தோ இப்போவே கொண்டு வரேன்.

    வைதேகி நேரே சமையல் உள்ளுக்குப் போனாள்.

    என்னடி ராஜி இன்னுமா நீ கெளம்பாம இருக்கே?

    பதிலுக்காக காத்திருக்காமல் சொம்பிலே தண்ணீர் மொண்டு எடுத்தபடி மீண்டும் வாசலுக்கு வந்தாள்.

    இந்தாங்கோ பெரியப்பா… தண்ணீர் சொம்பை நீட்டினாள்.

    என்னடி வைதேகி… உன் மாமியார் என்ன பண்ணிண்டு இருக்கா?

    போச்சு… இவாளை பாக்காம போய்டலாம்ன்னு நெனச்சேன்… இன்னிக்கி நேரத்துக்கு கோயிலுக்கு கிளம்பி போனாப்பல தான் மனதுக்குள் சலித்துக் கொண்டாள் வைதேகி.

    முகத்திலே காட்ட முடியுமா என்ன?

    என்ன இருந்தாலும் பெரிய மாமியார் ஆச்சே?

    ராத்திரி டிபனுக்கு தயார் பண்ணிண்டு இருக்கா பெரியம்மா.

    சப்பாத்தி போடலாம்ன்னு மாவு பிசையறா.

    நான் கோயிலுக்குப் போயிட்டு வந்து இட்டுத் தரேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் பெரியம்மா.

    நம்பாத்திலே இட்லி வாக்கப் போறா ராஜி.

    உன் மாமனாருக்கு வயறு சரிஇல்லேன்னு அம்புஜம் சொல்லிண்டு இருந்தா… நீ என்ன பண்ற. ஆத்துக்கு திரும்ப போறச்சே ஒரு ஈடு எடுத்துண்டு போ… சரியா?

    சரி பெரியம்மா… வைதேகி முணுமுணுக்க, எப்போதான் பளிச்சுன்னு வாயத் தொறந்து பேசப் போறியோ தெரியல போ?

    நீயும் இந்தாத்துக்கு கல்யாணம் கட்டிண்டு வந்து வருஷம் பத்துக்கு மேல ஆயாச்சு… நொடித்துக் கொண்டாள் விசாலம்.

    போலாமா வைதேகி என்றபடி வந்தாள் ராஜி.

    அம்மா நாங்க ஈஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டு வறோம். ராஜி சன்னமாக குரல் கொடுத்தாள்.

    மசமசன்னு நின்னுண்டு இருக்காம போனோமா வந்தோமான்னு சட்டுபுட்டுன்னு வர்ற வழிய பாருங்கோ…

    ரெண்டு பேரும் ஒண்ணா போனாக்க லோகமே அழிஞ்சாலும் உங்களுக்கு கண்ணு தெரியாது.

    ஆத்திலே ஏகப்பட்ட வேல கெடக்கு சுருக்க வாங்கோ விசாலம் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

    வாடி ராஜி நாழியாச்சு வைதேகி அவளை இழுத்துக் கொண்டு நகர,

    கெளம்பறோம் அப்பா என்று மகாதேவனிடம் சொல்லி கொண்டுக் கிளம்பினர்.

    இன்னிக்கிப் பிரதோஷம் ராஜி… கூட்டம் அள்ளும் கோவிலிலே!

    தெரியுமே என்னடி பண்றது? நேக்கு கோயிலுக்கு வரணும்னா கூட ஆத்திலே வேலைய முடிச்சிட்டு வர வேண்டி இருக்கு. நான் என்ன பண்றது?

    அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயசானவா… கொஞ்சம் வேலைய முடிச்சிட்டு வந்தா முன்னெபின்னே ஆனாலும்கூட சமாளிக்கலாம்.

    இல்லயானா அம்மா பேசிக் தள்ளுவா. விறுவிறுன்னு வா பேசறதுக்கு இப்போப் போது இல்ல. இருவரும் நடையை எட்டிப் போட்டனர்.

    2

    காவிரி ஆறு திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செய்வதால் திருவையாறு என்று பெயர் பெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.

    ராஜி, வைதேகி இருவருமே திருவையாற்றில் பிறந்து வளர்ந்தவர்கள்.

    அக்கம்பக்கம் இருக்கும் வீட்டில் சிறுவயது முதல் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.

    ராஜியின் தந்தை விஸ்வநாதன், தாயார் கமலம். பூர்வீகமான வீடு. வைதீகம் தான் குலத்தொழில்.

    விஸ்வநாதன் அந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார்.

    அந்த ஊரில் கணபதி ஹோமம், ஆயுஷ்ஹோமம், என்று வைதீகக் காரியங்களை செய்வதும், கல்யாணம், மற்ற நல்ல காரியங்களுக்கு நாள் குறித்து தரும் ஜோதிட வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

    ஒரு மகன் சங்கரன். அவன் வேதபாடசாலையில் படிக்கிறான். படிப்போடு தந்தைக்கு கூடமாட வைதீகக் காரியங்களில் உதவியாய் இருக்கிறான்.

    மகள் ராஜி உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறாள்.

    அம்மா கமலம் கட்டும் செட்டுமாய் குடித்தனம் செய்யும் அன்பான இல்லத்தரசி. சிரித்த முகம். தயவுதாட்சண்யம் பார்க்காமல் அனைவருக்கும் உதவும் குணம்.

    மூதாதையர் வாழ்ந்த வீடு. விஸ்தீரணமான நாலுக்கட்டு வீடு. கமலத்தின் பராமரிப்பில் கோட்டை மாதிரியான அமைப்பில் நன்றாகவே இருந்தது.

    வாசலில் இருபுறமும் அகண்ட திண்ணை. உள்ளே நடை. முற்றத்தைச்சுற்றி நாலுப்புறமும் தாழ்வாரம் பக்கத்திற்கு இரண்டு அறைகள்.

    ஒருபுறம் மச்சு. மரப்படி வைத்து மேலே ஏறலாம். வேண்டாத சாமான்களைப் போட்டு வைத்திருக்கிறாள் கமலம்.

    வேண்டிய காற்றும், வெளிச்சமும் வரும்படியாக அமைந்து இருந்தது வீடு. பின்பக்கம் உக்கிரான அறை. சமையல் அறை மற்றும் பூஜைஅறை, புழக்கடைக் கதவைத் திறந்தால் கொல்லைப்புறம். பெரிய கிணறு, துணி துவைக்க

    ஒரு கல்.

    மூலையில் ஒரு குளியலறை.

    கிணற்றுக்கு ராட்டினமும், சேந்திக்கொள்ள தேங்காய்நார் கயிறும், தார் கொண்டு பொத்தல் ஒட்டிய ஒரு பித்தளை வாளியும் தான்.

    கொல்லைபுறம் கத்தரி, வெண்டை, கீரை, தக்காளி என்று செடி வகைகள், அவரை, பாகல், புடலை என்று கொடி வகைகள், பயிரிட்டு இல்லத்தின் காய்கறித் தேவைகளை பூர்த்தி செய்து, செலவைக் குறைத்துக் கொள்ளும் வித்தை தெரிந்தவள் கமலம்.

    ஒரு மூலையில் வாழை வகைகள், வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள். காவிரி பாயும் ஊர். அதனால் நீருக்குப் பஞ்சமில்லை. தேனாக இனிக்கும் கிணற்று நீர்.

    கைவேலையாக அப்பளம், வடகம், ஊறுகாய் இட்டு கணவனுக்கு சிரமம் வைக்காமல் இல்லத்தை நடத்திச் செல்லும் குடும்பத்தலைவி. சலித்துக் கொள்ளாத குணம்.

    அருமையான இரண்டு குழந்தைகள். இருப்பதைக் கொண்டு நிம்மதியுடன் நிறைவான வாழ்க்கை.

    வைதேகியின் தந்தை சதாசிவம், தாயார் அன்னபூரணி. ஒரு அக்கா உமா. அருகில் நன்னிலத்தில் வாக்கப்பட்டுப் போய் இருக்கிறாள். தாய்மாமன் மகனைத் திருமணம் செய்திருக்கிறாள்.

    சதாசிவம் அந்த ஊர் மிராசுதாரரிடம் கணக்குப்பிள்ளையாக இருக்கிறார். போதாததற்கு மாலையில் லாரி புக்கிங் ஆபீசில் கணக்கு எழுதுகிறார். நிலையான நல்ல வருமானம்.

    மனைவி வகையில் அவருக்கு உபகாரம் உண்டு. வருஷம் முழுமைக்கும் வயலில் விளைந்த நெல், பருப்பு வகைகள் தேங்காய் என்று பொருட்கள் வீடு தேடி வந்து விடும். கஷ்டமில்லா ஜீவனம்.

    பிறந்ததிலிருந்து ஒன்றாகவே வசித்து வந்ததால் நல்லதொரு நட்புடன் இருவரும் அக்காள் தங்கை போல் பழகி வந்தனர்.

    இதில் ராஜி மிகவும் அமரிக்கையான பெண். இருக்கும் இடம் தெரியாது. வைதேகி கொஞ்சம் சுட்டித்தனம் நிறைந்தவள். வாய்த்துடுக்கு நிறைந்தவள்.

    ஒன்றாகப் பள்ளிக்குப் போவது, பாட்டு க்ளாஸ் போவது, கோயிலுக்குப் போவது என்று நாளின் பெரும் பொழுதை ஒன்றாகவே கழிப்பார்கள். அதைப் பெற்றவர்களும் ஆமோதித்தனர். தொடரும்.

    3

    சங்கரா நீ சாயரட்சை கோயிலுக்குப் போறச்சே இந்த அப்பளம், வடகத்தை கணபதி ஐயர் ஆத்திலே கொடுத்துட்டு, அப்படியே சுமங்கலி பிரார்த்தனைக்கு அப்பா நாள் குறிச்சி வெச்சியிருக்கேன்னார். அதையும் அவாத்திலே கொடுத்துட்டுப் போ.

    சரிம்மா நான் கொடுத்துட்டு போறேன்.

    சாப்பிட்டு சித்த நாழி நான் கட்டையை சாய்க்கிறேன். நேக்கு கிறுகிறுன்னு வர்றது. என்னை எழுப்பாத நீ கிளம்பி போ.

    "இன்னுமா நீ சாப்பிடாம இருக்க? என்னம்மா நீ காலாகாலத்திலே சாப்பிட மாட்டியா?

    வேளைக்கு சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே சொல்லிட்டேன். எங்களை மட்டும் நேரத்துக்கு சாப்பிடச் சொல்றே…"

    நீங்கள்லாம் வளர்ற பசங்கடா அம்பி. வேளைக்குச் சாப்பிட்டு தெம்பா இருந்தாத் தானே நல்லது.

    எதையாவது பேசிண்டே இருக்காதே அம்மா… காலாகாலத்திலே சாப்பிடு. நீயும் தான் எங்களுக்கு ஆரோக்கியமாய் இருக்கணும்.

    இதோ போயிண்டே இருக்கேன்டா. இப்போத் தான் வேலை ஒழிஞ்சிது நேக்கு.

    கமலம் சாப்பிட சமையல் உள்ளுக்குப் போனாள்.

    கொல்லையில் விளைந்த மணத்தக்காளிக் கீரை மசியலும், மிளகு ரசமும், கத்தரிக்காய் பொறியலும் தான்

    சமையல்.

    அதை முடித்து விட்டு நேற்று இட்ட அப்பளத்தை நிழலில் திருப்பி உலர்த்தி விட்டு ஊறுகாய்க்கு தயார் செய்து வைத்து விட்டு மேல் வேலைகளை முடித்து விட்டு வரவே இத்தனை நாழியாச்சு.

    ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1