Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karpaa? Maanamaa?
Karpaa? Maanamaa?
Karpaa? Maanamaa?
Ebook357 pages2 hours

Karpaa? Maanamaa?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு என்ற பெயரில் ஆண்கள் சிலரால் ஏமாற்றப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு பெண் மரணவாயிலில் நின்று யோசிக்கிறாள்.. நான் ஏன் சாகவேண்டும்..அதே போலியான அன்பை ஆயுதமாய்க் கையில் எடுத்து தன் கண்ணில் விழும் ஆண்களை குறிப்பாக பெண்ணைப் போதைப்பொருளாக நினைக்கும் ஆண்களை அவர்களோடே இருந்து உடல் கலந்தே அவர்களைப் பழி வாங்கும் முடிவோடு வீடு திரும்புகிறாள்..தன் கணவனுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்க்கை.. இந்த ஆண்களை அழிப்பதற்கான ஒரு வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்கிறாள்.. சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி இவள் நடத்தும் நாடகம் எவ்வாறு முடிவுக்கு வரும்..

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580148407501
Karpaa? Maanamaa?

Read more from Yamuna

Related to Karpaa? Maanamaa?

Related ebooks

Reviews for Karpaa? Maanamaa?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karpaa? Maanamaa? - Yamuna

    https://www.pustaka.co.in

    கற்பா? மானமா?

    Karpaa? Maanamaa?

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    கதைக்கரு...

    அன்பு என்ற பெயரில் ஆண்கள் சிலரால் ஏமாற்றப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு பெண் மரணவாயிலில் நின்று யோசிக்கிறாள்.. நான் ஏன் சாகவேண்டும்..அதே போலியான அன்பை ஆயுதமாய்க் கையில் எடுத்து தன் கண்ணில் விழும் ஆண்களை குறிப்பாக பெண்ணைப் போதைப்பொருளாக நினைக்கும் ஆண்களை அவர்களோடே இருந்து உடல் கலந்தே அவர்களைப் பழி வாங்கும் முடிவோடு வீடு திரும்புகிறாள்..தன் கணவனுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்க்கை.. இந்த ஆண்களை அழிப்பதற்கான ஒரு வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்கிறாள்.. சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி இவள் நடத்தும் நாடகம் எவ்வாறு முடிவுக்கு வரும்..

    தங்கள் அனைவரின் நல்லாசியுடன் இக்கதையை தொடங்கி எழுதவிருக்கின்றேன்..உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்..

    யமுனா ...

    1

    ஆர்டர்... ஆர்டர்.. ஆர்டர்..மிஸ்டர் ப்ராசிக்கியூட்டர்..நீங்க உங்க வாதத்தைத் தொடரலாம்..

    த்தேங்க் யூ யூர் ஹானர். நீ செய்த குற்றத்தை ஒத்துக்கிறியா?

    அமைதியா இருக்றது கோர்ட்டை அவமதிக்கிறது. செய்த தவறை ஒத்துக்கிறியா சொல்லு..

    நான் தூங்கணும்..

    இத்தனை ஆண்களை காதலை யூஸ்பண்ணி கற்பழிச்சி உயிரை எடுத்து புதைச்சிட்டு என்ட்ல நிக்கிறச்ச தூங்கணும் சொல்ற

    நான் தூங்கணும்..

    செய்யிறத தெனாவெட்டா தைரியமா செய்துட்டு தில்லா திரும்பத் திரும்ப அதே பதில சொல்றா பாருங்க யூர் ஹானர்.. ஏன்டி அருந்ததி உன் பேருக்கான அர்த்தம் தெரியுமா உனக்கு.

    நான் தூங்கணும்..

    அடிங்க.. பொறுக்கி மவளே.. நானும் பாத்துட்டே இருக்றேன்.. எங்கிட்டியேவா...

    ஏஏஏஏய்.. கன்னம் பழுத்துடும்.. மரியாதையா பேசு.. நீ வக்கீல்னா எப்டி வேணா பேச நான் உன் பொண்டாட்டியா..

    ஆர்டர்... ஆர்டர்... மிஸ்டர் அட்வகேட் குற்றவாளியை மரியாதையா நடத்த கத்துக்க நீங்க படிச்ச சட்டப் புத்தகத்துல இருந்த பக்கம் கிழிஞ்சி போச்சா.. இல்ல புக்கே காணாமப் போச்சா.. மனிதாபிமானம் ஒழுக்கம் இல்லாத கல்வி உருப்படியான கல்வி இல்ல. மைன்ட் யூர் வேட்ஸ்..

    சாரி யூர் ஹானர்...

    ஏம்மா அருந்ததி.. நீ பதில் சொன்னாத்தான் இந்த வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியும்.. குற்றத்தை ஒத்துக்கிறியா இல்லியா..

    குற்றவாளிக் கூண்டின்.. முன் மூலைக் குமிழிகளில் கைகளை ஊன்றி தலைகுனிந்து நின்ற அவள் தோள்மீது கிடந்த சேலையின் மார்பு முந்தானை அவள் மூச்சுக் காற்றுப்பட்டதில் வெப்பம் தெறித்து மேலும் கீழும் தூளியாடியது மார்போடு இழுத்துக்கொண்டு...

    முன் நெற்றியில் பட்டுத் தொங்கிக் கிடந்த முடிநுனிவழியே வடிந்த வியர்வைச் சொட்டுகள் அவள் உதடுவழியே வாய்க்குள் ஊடுருவி நுழைந்து கொஞ்சமாய் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தது..

    அவள் உந்தி உதைத்ததில் காலுக்கடியின் மரத்தட்டிக்கு உயிர்வந்து குலுங்கி அழுதது..

    தலை நிமிர்த்தாமலே கண்களை மேலெழுப்பி அந்த வக்கீலை தீ வைத்தாள்..

    ஏம்மா. லேடி கான்ஸ்டபிள்.. இந்தப் பொண்ணை நல்லா குளிக்க வெச்சி தனி ரூம் அலாட் பண்ணி தூங்க வைங்க.. நாளை மறுபடி கோர்ட்க்குக் கூட்டி வர்றது வரை தூங்கட்டும். யாரும் டிஸ்ட்ரப் பண்ணக்கூடாது...

    இந்த கோர்ட் நாளை வரை ஒத்திவைக்கப்படுகிறது.. த கோர்ட் இஸ் அ ஜென்ட்..

    சேரிலிருந்து எழுந்து நின்ற ஜட்ஜ் மேகலா கூட்டம் கலைந்து செல்லும் வரை அங்கேயே நின்று அருந்ததியை கவனித்தார்.

    எல்லோரும் வெளியேறி கோர்ட் வெறுமனே கிடந்தது.. அருந்ததி கூண்டிலிருந்து இறங்காமல் குமிழை இறுக்கமாகப்பிடித்துக்கொண்டு தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள்..

    தன் இடத்திலிருந்து இறங்கி வந்த ஜட்ஜ் மேகலா தன் துணைக்கு நின்ற டபாலியையும் அருந்ததியைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்த பெண் கான்ஸ்டபிளையும் வெளியே செல்லும்படி கண்களால் ஆணையிட்டவர்...

    தன் மேல் கோட்டைக் கழட்டி அங்கிருந்த டைப்பிஸ்ட்டிடம் தந்து விட்டு..தன் ஒரு காலை சற்றே மடக்கி தன் தலையை அவள் முகத்துக்கு நேராகக் குனித்து தன் சுட்டு விரலால் அருந்ததியின் நாடிநுனியைப் பிடித்து ஏந்தி நிமிர்த்தினார்..

    கண்களில் கடல் நிறைந்து கரைதாண்டாமல் நின்றுகொண்டிருந்தது அருந்ததிக்கு.. அவள் முகத்தைக் கருணையோடு பார்த்தவர் ஒரு மெல்லியப் புன்னகையை இதழில் பரப்பியபடி போய்த் தூங்குமா...என்றார்..

    தீர்க்கமான அந்தக் குரலைக் கேட்டதும் கடல் கரைதாண்டி கன்னம் வழிந்தோடி ஜட்ஜ் மேகலாவின் கைகளைச் சரணடைந்தது..

    மெல்லமாய் அடியெடுத்து கீழிறங்கி கோர்ட் வாசலைத் தாண்டி வராண்டாவில் நடந்தாள் அருந்ததி...

    அருந்ததி வருவாள்...

    2

    வாளெடுப்பவன் வாளாலே மடிவான்

    இந்த இமேஜைப் பாருங்க சார்.. இவன் பேரு வாசு. வயசு இருபத்து ஒன்பது. ஊர் தேனியில பரமக்குடிங்கற ஒரு கிராமம்.. அந்தப் பொண்ணு இவனோட விதைகளை ட்டொய்ன் நூலால இறுக்கி சேர்த்துக் கட்டிட்டு ஆணுறுப்ப பல்லாலக் கடிச்சி துண்டாக்கிருக்றா சார்.. அதோட விடாம அவன் ரெண்டுத் தொடையையும் விரிச்சிக் கிழிச்சி எலும்ப உடைச்சிப்போட்ருக்றா..

    இந்த அளவு பலம் ஒரு பொண்ணுக்கு எங்கிருந்து வந்தது..ஒரே டவுட்டா இருக்கு சார்.. அதுவுமில்லாம அவனைக் கொல்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அவனோட உறவு வெச்சிருந்ததுக்கான அடையாளங்கள் வாசு உடம்புலத் தெளிவாப் பதிஞ்சிருக்கு சார்..

    இவ்வளவுக் கொடூரமா ஒருத்தன அந்தப் பொண்ணு கொலைப் பண்ண ரீசன் என்ன..

    ஒருத்தன் இல்ல சார்.. மொத்தம் ஏழு பேர்..

    ஏழுபேரையும் இதே மாதிரியா கொன்னுருக்றா..

    இல்ல சார்.. இன்ட்ரஸ்டிங்கா வேற வேற ஸ்டைல்ல கொன்னுருக்றா சார்..

    ஹோ. அவங்க ஃபோட்டோஸ் அன்ட் கேஸ் டீட்டேய்ல்ஸ் ஃபுல்லா காப்பி பண்ணி என் சிஸ்டத்துக்கு அனுப்பிடு..

    ஓகே சார்.. அனுப்பினதும் நானே கொல்லப்பட்டவங்க பத்தின டீடேய்ல்ஸ் ஒன் பை ஒன்னா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்..

    ம்ம்.. நீ அனுப்பிட்டு இங்கியே வெயிட் பண்ணு.. நான் ஒரு தடவை அந்தப் பொண்ணப் போய் அவளுக்குத் தெரியாம பாத்துட்டு வந்துட்றேன்..

    ஏன் சார்... தெரியாம...

    விசயம் இருக்கு.. அப்புறம் சொல்றேன்.. நீ உன் வேலையப் பாரு ராஜா..

    ஓகே சார்..

    சி பி ஐ ஆஃபீசர் குணசுந்தர் இந்த கேஸை ஒரு நாளுக்கு முன்புதான் வாலன்டியராக வாங்கி இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பித்திருந்தார்..

    அவரின் உதவியாளர் ராஜாவிடம் வேலையை சொல்லிவிட்டு அருந்ததியைப் பார்க்க ஜெயிலுக்குக் கிளம்பினார்..

    பாறைக்குள்ளக் கூட கொஞ்சமாச்சும் ஈரமிருக்கும். உம் மனசென்ன இரும்பாடி. இப்டி ஏழு பசங்களக் கொன்னு பொதச்சிருக்ற.. எவ்ளோ இறுக்கமா நடக்றா பாரு திமிர் பிடிச்ச அரக்கி.. உம் மூஞ்சியிலியே அகோரீன்ணு எழுதி ஒட்டி வெச்சிருக்கே.. எப்பவுமே முகத்த கொடூரமா வெச்சிருக்ற காட்டேறி மாதிரி.. பாக்கவே பயமா இருக்கு... அப்பப்பா.. மூஞ்சா இது..

    மேம்.. அவ எப்டியோ இருந்துட்டுப் போறா.. உங்களுக்கென்ன.. ஒரு பொண்ணு கொலகாரியா மாறணும்னு நினைச்சிப் பொறந்ததுமில்ல வளர்றதுமில்ல.. இந்த சமுதாயம் அதிலும் ஆண்வர்க்கமும் அவங்க பொண்ணுங்களுக்குப் பண்ற கொடுமையும் அந்த நிலைமைக்குத் தள்ளுது..

    நீங்களும் நானும் பொண்ணுங்கதான். நமக்கு இவளோட நிலை வந்தா நாம என்ன செய்திருப்போம் உறுதியா நம்மால சொல்ல முடியுமா.. பட் இவ எந்த அளவு கொடுமை அனுபவிச்சாளோ இவளுக்கு மட்டுமே வெளிச்சம். சோ கொலை செய்ற அளவுத் துணிஞ்சிட்டா..

    நடந்த உண்மை எதுவும் இதுவரை இவளைத்தவிர வேற யார்க்கும் தெரியாது.. இவளா வாய் திறந்து பேசறது வரை இந்த கேஸ்ல ஒரு மறைக்கப்பட்ட மர்மம் இருந்துட்டேதான் இருக்கும்.. சோ.. வார்த்தைகளாலக் குத்திக் கிழிக்காதீங்க மேம்..

    ஏற்கனவே அந்த இன்ஸ் இவள அடியிலத் தொவச்சி பிஞ்சப் பேப்பராத்தான் பொட்றுந்தாரு..நாமளும் எதுக்குப் போயி. ஹாங்.. அவள அமைதியா இருக்க விடுங்க...

    மா.. அருந்ததி இந்தா சோப்பு டவல் மாத்துத் துணி.. போய் குளிச்சிட்டு சாப்ட்டு வா.. உனக்குத் தனி ரூம் அலாட் ஆயிருக்கு. எதப்பத்தியும் யோசிக்காம போய் நிம்மதியாத் தூங்குன்ணு நா சொல்லமாட்டேன்... ஏன்ணா நிம்மதி உன் வாழ்க்கையில இப்போதைக்கு இல்ல... சோ நல்லாத் தூங்கி எழும்புமா..

    இவங்க மாதிரி ஏதோ ஒன்றிரண்டு இரக்க மனங்கள் இருப்பதால்தான் அரக்கமனங்களும் கரைந்து போகின்றன.

    அந்த லேடி கான்ஸ்டபிள் கொடுத்த டவலையும் மாற்று சேலையையும் வாங்கிக்கொண்டு குளிக்கும் அறை எங்கே என்று தெரியாமல் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள் அருந்ததி.. இதைப் புரிந்துகொண்ட கான்ஸ்டபிள்..

    வாம்மா.. நா கூட்டிப்போறேன்.. என்று அவள் கையைப் பிடிக்கவும்.. தன் உள்ளங்கையில் பிசுபிசுப்பாய் ஏதோ ஒட்டிக்கொண்டு நமநமத்ததை உணர்ந்தவர் கண்களை கீழ் நோக்கித் திருப்பவும்...உறைந்துவிட்டார்..

    என்ன இது.. எங்கிருந்து பாயிது இந்த ரெத்தம்..எங்க காட்டு.. அருந்ததியின் கைகளைத் திருப்பி முந்தானைச் சேலையை தோள்பட்டை வரைத் தூக்கியபோது..ஆஆஆஆ அதிர்ந்துவிட்டாள்..

    சேலை மறைவில் அவள் இடது மார்புக்கும் கழுத்துக்கும் இடைப்பட்டச் சதைப்பகுதி யாராலேயோ எப்போதோ கடித்துக் குதறப்பட்டுப் பள்ளமாய்க் கிடந்த பகுதி இன்று இன்ஸ்பெக்டரிடம் வாங்கிய லத்திக் குத்துகளில் ஒரு குத்து ஓட்டைக்குள் பாய்ந்து புதிய சிகப்பு நாளத்தைத் திறந்து விட்டிருந்தது..

    கருமையும் செம்மையுமான ரெத்தம் அவள் மார்போடும் கையோடும் வழிந்துகொண்டிருந்தது..

    ச்சே.. என்ன ஜென்மங்களோ இவனுங்கள்லாம்.. இரக்கம் கெட்ட எமனுங்க..சில தப்பு செய்யாத அப்பாவிகள லாக்கப்க்குள்ள வெச்சி அடிச்சே கொன்னுருக்றானுங்க.. செய்யாதத் தப்ப செஞ்சதா சொல்லி ஒத்துக்கச் சொல்லி இந்த ஆளு அடிச்ச அடி எசகு பெசகா பட்டு செத்துருக்றாங்க தெரியுமா..

    அந்த பாடிய ரகசியமா டிஸ்போஸ் பண்ணிட்டு அக்யூஸ்ட் அப்ஸ்கான்டட்ன்ணு பச்சையா சாட்சி ரெடி பண்ணி.. கோர்ட்டே கேஸை க்ளோஸ் பண்ண வெச்சிடுவாங்க.. அதிகாரத்துல இருக்றதால இவனுங்க ஆஃபீசர்ஸ்.. அடிமட்டத்துல இருக்றதால அப்பாவிகளுக்கு கொலைகாரப் பட்டம்..

    சரி விடு.. இங்க பாரு அருந்ததி.. என்ன உங்கூடப்பிறந்த அக்காவா நினைச்சிக்கோ.. எங்கிட்ட தைரியமாப் பேசு.. மனசுல இருக்ற பாரத்த இறக்கி வைக்கிற ஒரு சுமைதாங்கியா என்ன நினைச்சிக்கோ..எப்போ நீ பேச நினைச்சாலும் என்ன கூப்டு.. இப்ப என்னோட வா அருந்ததி...

    அவர் குளியலறைக்குள் அளைத்துச் சென்று கதவைத் தாளிட்டார்..

    இப்போ நானே உன்ன குளிக்க வெக்கிறேன்.. வேற எங்கெல்லாம் காயம் இருக்கு காட்டுமா...இங்க இந்தத் திண்டுல உக்காரு... ம்ம் மெதுவா கையத்தூக்கு கழட்டி விட்றேன்...மெதுவா மெதுவா...

    அவர் அருந்ததியின் அனுமதியோடு அவள் உடுத்தியிருந்தத் துணிகளைக் களைந்துவிட.. அவள் உடம்பில் ஒரு இடம் கூட மிச்சமில்லாமல் கொடூரம் நடத்தப்பட்டிருந்ததைக் கண்டவர்...

    அம்மாஆஆடீஈஈஈஈ... என்று தன் வாயைப் பொத்தியபடி விழி பிதுங்கி நின்றார்...

    அருந்ததி வருவாள்...

    3

    டாக்டர் சார்...இந்த காயத்தால அந்த பொண்ணு உயிருக்கு பாதிப்பிருக்கா..

    உயிருக்கு எந்த பாதிப்பும் இல்ல மேடம்.. பட் அந்த பொண்ணு மென்டலி ரொம்ப டேஞ்ஜரஸ் கன்டிஷன்ல இருக்றா..உடல் காயத்தை மருந்தால ஆத்திடலாம்.. இந்த பொண்ணுக்கு மனக்காயம் ஆறாத ரணமா இருக்கும் நினைக்கிறேன்.. கவுன்சிலிங் ஒன்ணுதான் அதுக்கு ஒரே சொலியூஷன்.. நீங்க மேலிடத்துல சொல்லி ஒரு சைக்காட்ரிஸ்ட் அரேன்ஜ் பண்ணி கவுன்சிலிங் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க...

    ஸ்லீப்பிங் இன்ஜக்ஷன் இன்ஜக்ட் பண்ணிருக்றேன்.. இனி எப்டியும் நாளைக்குதான் கண்விழிப்பா...பட் எழும்பினதும் இவ சொல்ற அந்த அவனத்தேடிப் போக வாய்ப்பிருக்கு.. கொஞ்சம் கவனமா கண்காணிச்சிட்டே இருங்க..இங்க பக்கத்துல ஆம்பளைங்க யாரோட நடமாட்டமாவது இருக்குதான்ணும் செக் பண்ணிட்டே இருங்க...

    நாங்க ரெண்டு கான்ஸ்டபிள் அவளுக்கு காப்பா இருக்றோம் டாக்டர்...இன்னிக்கும் பாருங்க அவளக் குளிக்க வெச்சி தலை துவட்டி புடவ மாத்தி பாத்ரூம்ல இருந்து வெளிய அழைச்சி வந்ததும்தான் தாமதம்..யாரைப் பார்த்தான்ணு தெரியல.. என் கையத் தட்டி விட்டு ஒரே ஓட்டமா ஓடி காம்பவுன்ட் பக்கத்துல வரை போயி நின்னுட்டு யாரையோ வெறித்தனமா தேடினா...

    நானும் அவ பின்னாடியே ஓடினேன்...பட் எனக்கும் ஒரு சந்தேகம் இருந்துச்சி.. இவ ஓடும்போது அந்த காம்பவுன்ட் சுவத்துல ஒருத்தன் சாஞ்சி நின்ணுட்டிருந்ததை நானும் பார்த்தேன்.. இவளை துரத்துற அவசரத்துல அவன் யாருன்ணு கவனிக்காம விட்டேன்..

    பக்கத்துல வந்து பாக்குறப்போ அங்க அவனக் காணோம்... இவ வெறிபுடிச்சி கத்தினா...அப்பக் கூட வாய்திறந்து ஒரு வார்த்தை பேசல..கத்தி கூச்சல் மட்டும் தான் போட்டா... ஒருவேளை பைத்தியம் பிடிச்சிருக்குமோ டாக்டர்..

    இல்ல மேடம்.. இந்த பொண்ணு நார்மல்தான்.. ஆனா ஏதோ மிகப்பெரிய அழுத்தம் இவளுக்குள்ள இருக்கு.. யாரையோ பழிவாங்கணும்கிற வெறிதான் இவளை இந்தமாதிரி பண்ண வெச்சிருக்கு...

    இந்த பொண்ணு இங்க வந்து எத்தனை நாளாச்சி...

    இது மூணாவது நாள் சார்...கேஸ் கோர்ட்ல இருக்கு.. பதினஞ்சி நாள் ரிமான்ட்.. இவ கோர்ட்ல வாய் திறந்து எதுவும் பேசவும் மாட்டேங்றா.. இவளுக்குன்ணு எந்த வக்கீலும் வெச்சி வாதாட யாரும் இதுவரை வரல.. பப்ளிக் பிராசிக்யூட்டர்தான் கேஸ் நடத்துறாரு..இவ வாய் தெறந்தாத்தான் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும் டாக்டர்..

    அதுக்குத்தான் சொல்றேன்.. ஒரு சைக்காட்ரிஸ்ட் இவள கவுன்சில் பண்ணணும்னு...அதுக்கு சீக்கிறம் ரெடி பண்ணுங்க..ஏதும் சாப்ட்டாளா...

    குளிக்க வெச்சி சாப்பாடு குடுக்கலாம் நினைச்சிருந்தேன் சார்... அதுக்குள்ள.... இப்டி...எக்குத்தப்பா நடந்திடுச்சி...

    இட்ஸ் ஓகே.. தூங்கட்டும் டிஸ்ட்ரப் பண்ணவேணாம்.. அவ எப்ப கண்விழிக்கிறான்ணு கவனமா பாத்து எழும்பினதும் ஏதும் லிக்விட் ஃபுட் குடுங்க.. அஸ் ஸ்பெஷலி உடம்புல காயங்கள் ரொம்ப ஆழமா இருக்கு.. இவ மறுபடியும் அதை தனக்குத்தானே புண்ணாக்கிக்க விட்டுடாதீங்க...

    ஓகே டாக்டர்.. நாங்க கவனிச்சிக்றோம்..

    ம்ம்.. பி கேர்ஃபுல் நான் வர்றேன்...

    சார் நீங்க...

    மேம் ஐம் குணா ஃப்ரம் சிபிசிஐடி... இது என்னோட ஐடி...

    ம்.. சொல்லுங்க சார்...என்ன விஷயமா வந்தீங்க..

    நா அருந்ததியப் பாக்கணுமே...அந்த பொண்ணோட கேஸ் இன்வெஸ்டிகேஷனுக்காக...பட் நா கவனிக்கிறது அவளுக்குத் தெரியக்கூடாது..அருந்ததி எங்க இருக்றா கொஞ்சம் காட்ட முடியுமா மேம்..

    எஸ் சார்.. இப்ப நீங்க அருந்ததி நேர்ல நின்ணு அவள பாத்தாக்கூட அவளுக்குத் தெரியாது..ஏன்ணா அவளுக்கு தூக்க மருந்து போட்டு தூங்க வச்சிருக்றாரு டாக்டர்..

    ஏன் என்னாச்சி...

    அத சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. ஆனா நீங்க அவ கேஸை கையில எடுத்திருக்றதால சொல்லித்தான் ஆகணும்.. சொல்றேன் சார்...

    அந்த கான்ஸ்டபிள்.. கோர்ட்டில் நடந்ததிலிருந்து தற்போது நடந்தது வரை குணாவிடம் சொன்னார்...

    ஹோ.. டேஞ்ஜரஸ் கேர்ள்.. எங்க தூங்குறா பாக்கலாமா...

    வாங்க சார் காட்றேன்...

    அவள் தூங்கிக் கொண்டிருந்த அறையின் கம்பிகளின் இடை வழியே அருந்ததியைப் பார்த்துக்கொண்டிருந்த குணா.. ஏதோ பொறி தட்டியவராய் சட்டெனத் திரும்பி அந்த நிழல் தெரிந்த திசையில் ஓடினார்..

    அருந்ததி வருவாள்..

    4

    சாது மிரளக் காடே எரியும். சரித்திரம் ஒன்று அங்கே எழுதப்படும்..

    இந்தப் பக்கம் ஒருத்தன் ஓடினான் பாத்தீங்களா..

    இல்ல சார். நான் கொஞ்ச நேரமா இங்கதான் நின்னுட்டிருக்றேன். யாரும் வந்தமாதிரி இல்ல சார்..

    ஹோ.. நீங்க இங்க எதுக்காக நிக்கிறீங்க தெரிஞ்சிக்கலாமா..

    நான்... நான்.. சும்மா தம் அடிக்கலாம்னு வந்தேன் சார்..

    உங்க டியூட்டி ஆஃபீஸ்லதானே..அங்கேருந்து இவ்ளோ டிஸ்டன்ஸ் வந்து தம் அடிக்கணும்னு என்ன அவசியம்..

    அதில்ல சார். அங்க பக்கத்துல எல்லாம் லேடீஸா இருந்தாங்க.. சோ இங்க.. இது ஒதுக்குப்புறமா இருக்குமேன்ணுதான்..

    அப்போ நீங்கதான் இங்க பல பொண்ணுங்களுக்கு இதை சப்ளை பண்ற வேலை பாக்றீங்களா...

    ஐயோ சார்.. என் பெண்டாட்டி புள்ளைங்க அடுத்த வேளை சாப்டணும்.. எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. என் அடிமடியிலக் கைவெச்சிடாதீங்க சார்.. நான் இனி இந்தப் பக்கமே வரல...

    சரி சரி... நீங்க போற வழியில எவனாச்சும் சும்மா நின்ணாலும் உடனே...

    உடனே பிடிச்சி பிசிறக் கழட்டிட்றேன் சார்..

    ஆமாமா.. இதனாலத்தான் மக்களுக்கு டிப்பார்ட்மென்ட் மேல கழனித் தண்ணிய ஊத்துற அளவு கோபம் வருது.. யோவ் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... அவனுக்குத் தெரியாம ஒரு க்ளிக் மட்டும் எடுத்து வைங்க போதும்..

    ஹிஹிஹி.. ஓகே சார்..

    ஏம்மா.. உனக்கு இங்க என்ன வேலை..ஏதாச்சும் சொல்லணுமா எங்கிட்ட..

    ஆமா சார்.. நீங்க ஓடியாந்ததைப் பாத்தேன்சார் நானு. நா அந்தப்பக்கமா நின்ணு செடி புடிங்கிட்டு நிக்கிறச்ச ஒருத்தன் இந்த காம்பவுன்ட் செவுத்துல சாஞ்சி நின்னுட்டு யாரையோ கையாட்டிக் கூப்ட்டிருந்தான் சார்.. அவன் கையாட்டுன திசையில நா திரும்பிப் பாக்றச்ச அங்கேருந்து நீங்க ஓடியாந்தீங்க..

    அவன் உங்களுக்குத் தெரிஞ்ச பயலாத்தானிருக்கணும்னு நானும் என் வேலையப் பாக்க குனிஞ்ச நேரந்தான் அவன் இங்கேருந்து தலைதெறிக்க ஓடினான் சார்.. அப்புறம்தான் சந்தேகம் வந்து உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்..

    எஸ்.. கரெக்ட்.. அப்போ நா நினைச்சது சரிதான்.. கண்டிப்பா அவன் டிப்பார்ட்மென்ட் சப்போட்டோடத்தான் இங்க அலையிறான்.

    சார் என்னாச்சி சார்.. அவனப் பாத்தீங்களா...ஓடிட்டானா.. லேடி கான்ஸ்டபிள் மூச்சிரைக்க ஓடிவந்தார்..

    இல்ல மேம்.. நான் பக்கத்துல பாக்க முடியல. பட் இந்தம்மா பாத்திருக்றாங்க.. சோ இதிலேருந்து என்ன தெரியிதுன்ணா.. லேடீஸ் மட்டுமே இருக்ற இந்த ஜெயிலுக்குள்ள டிப்பார்ட்மென்ட் ஆளைத் தவிர வேற வெளியாள் ஒருத்தன் நிசாரமா நுழைஞ்சி வந்துட்டு போயிட்டு இருக்றான்ணா அவனுக்கு காக்கி சப்போர்ட் இல்லாம இருக்காது.. இங்க உள்ள யாரோடவோ லிங்க் இருக்கு...

    ஏம்மா அந்தாள இதுக்கு முன்னாடி எப்பவாச்சும் இங்க பாத்திருக்றீங்களா..

    இல்ல சார்.. இப்பத்தான் முதல்ல பாக்றேன்..

    எவ்ளோ தூரத்திலேருந்து பாத்தீங்க..

    ம்ம்ம்.. நீங்க நிக்கிறதுக்கும் தோ அந்த கல்லு கிடக்குல்ல அந்த அளவுக்கும் உள்ள தூரம்

    Enjoying the preview?
    Page 1 of 1