Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesam Marakkumo Nenjam
Nesam Marakkumo Nenjam
Nesam Marakkumo Nenjam
Ebook155 pages1 hour

Nesam Marakkumo Nenjam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Nesam Marakkumo Nenjam

Read more from Geetharani

Related to Nesam Marakkumo Nenjam

Related ebooks

Related categories

Reviews for Nesam Marakkumo Nenjam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesam Marakkumo Nenjam - Geetharani

    17

    1

    அனல் தகிக்கும் சித்திரை மாதத்து பகற்பொழுதுக்கு காலம் தந்த வரப்பிரசாதமாய் தர்ப்பூசணிப் பழக்கடைக்காரனின் தள்ளு வண்டி ஓசை. பருந்துகளும், பட்டங்களும் நிறைந்த வானில் சூடேறிக் கொண்டிருந்தது காற்று. தனக்கு முன்னே வளைந்து நெளிந்து நீளும் ஒற்றையடிப்பாதை முற்றுப்பெற்று விட்டதாக பழக்கத்தின் பாற்பட்ட பாதம் சட்டென்று பயணத்தை நிறுத்தி படியேறிற்று. எப்போதும் போலவே பாதி இருளில் உள்ளடங்கி கிடக்கும் வீடு. ம்... ஹ்... யுகங்கள் மூன்று தாண்டியாகிவிட்டது. நதிக்கரையில் தோன்றிய நாகரிகம் ஆற்றுப்படுகையில் வெடிக்க, ஆயிரம் விவாதங்களில் மூழ்கி ஆதி அந்தம் அறிந்திராத அனாதியாகிப் போனாற் போன்று அந்தத் தெருவிலிருந்து தனித்து நிற்கும் அந்த வீட்டின் சாவியை ஓட்டுப்பிறை முகட்டின் விளிம்பில் கை விட்டு சரியாய்த் தேடிப்பிடித்து கதவு திறந்த போது மணி சரியாய் ஐயப்பாடின்றி பன்னிரண்டரை என்று சுவர்க்கடிகாரம் ஒலித்து ஓய்ந்தது.

    துர்கா... செருப்பை வழக்கமாக விடும் இடத்தில் விட்டு விட்டு உள்ளே பிரவேசித்தாள்.

    அம்மா எங்கே சென்றிருப்பாள்...?

    வெளியில் செல்வதாக எதுவும் சொல்லவில்லையே... ம்... வரட்டும் பார்ப்போம் என்று நினைத்தவளாய் வேறு உடைக்கு மாறி அணிந்திருந்தவற்றை கொடிக்கம்பியில் போட்டுவிட்டு பின்கட்டை நோக்கி நடந்தாள். தொட்டித் தண்ணீர் சுட்டது லேசாக. அனல் காற்று காந்திற்று வெட்ட வெளியில். வியர்வை போக நீரை முகத்தில் வாரி இறைத்துக் கொண்டு கை, கால்களைக் கழுவி சற்று நேரம் நிமிர்ந்து நின்றாள்.

    முருங்கை மரத்தின் இலைகளில் கூட துளி அசைவைக் காணோம். மரம் அசையா மடந்தையாய் ‘ஆ’ வென்று கிளை பரப்பி நின்றிருந்தது. என்னவோ நினைவு வந்தவளாய் உள்ளே வந்தாள்.

    அம்மா இன்னும் வரக்காணோம். ஓட்டுச் செரிவின் கண்ணாடி பதிப்பில் சூரியக்கற்றையின் ஜொலி ஜொலிப்பு... கண்ணை லேசாகக் கூசச் செய்தது. ஒளிவீச்சுக்கு தப்புகிறாற் போன்று இமை மூடிக் கொண்டாள்.

    பஸ்ஸில் பிரயாணித்து வந்தது களைப்பாய் இருந்தது. அதை விட ஆயாசம் தருவதாய் அவன் முகம் கூடவே அவளின் முகம்...! நினைவில் அமிலம் சுரந்தது கப கப வென்று நெஞ்சு எரிந்தது.

    அவன் பார்த்ததை இவளும் பார்த்து விட்டாள். இவள் பார்த்ததை அவனும் பார்த்துவிட்டான். இரு ஜோடி விழிகளும் மோதிக் கொள்வதை அவனுக்கு இடப்புறமிருந்த அவளும் பார்த்த விட்டிருந்தாள்.

    மூன்று நெஞ்சங்களில் துடி துடிப்பு ஒரு சேர விதம் விதமான எண்ணக் குமைச்சலுடன்.

    துர்கா சட்டென்று திரும்பிக் கொண்டாள். அடுத்த நிறுத்தத்தில் காலியான இருக்கையில் அவசரமாய்ச் சென்று அமர்ந்து கொண்டாள். அவர்களிருவரும் ஏதோ பேசினபடி இறங்கிப் போனது ஜன்னல் வழியே தெரிந்தது. இவளிருக்கிறாள் என்பதினால் இறங்கி விட்டார்களா அல்லது அவர்கள் இறங்கும் இடம் வந்துவிட்டதினால் இறங்கி விட்டார்களா என்பதனை விளங்கிக் கொள்ள இயலவில்லை.

    துர்காவால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

    ரமணன்... ரமணன் இங்கு எங்கு வந்தான்...?

    எவன் எங்கு வந்தாலென்ன... போனாலென்ன... உன் வழிப் பாதையில் இனி அவன் குறுக்கிடும் சந்தர்ப்பம் நிகழப்போவதில்லை. காஞ்சனா... ஒரு காலத்திய அவளின் உயிர் சிநேகிதி. அவள் நேசித்த ரமணனிற்கு மனைவியாய் பார்த்தும், பாரா முகமாய் அவனோடு இறங்கி சென்று விட்டாள். பேசினால்... எங்கே புருஷனில் பங்கு கேட்க வந்து விடுவாளோ என்ற உள்ளூர பயமா...? இல்லை... உனக்கு கிடைக்காத ஒன்றினை நான் ஆயுள்பந்தமாய் கையகப்படுத்திக் கொண்டு விட்டேன் என்ற மதிப்பா...?

    ம்... எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களைப் பற்றி நமக்கேன் சிந்தனை...?

    ஓடிய எண்ணப்பறவையின் கழுத்தைப் பற்றி அமுக்கி விட்டு நிமிர்ந்தாள். வாயிலில் அம்மாவின் நிழலுருவம் தெரிந்தது.

    என்ன... துர்கா வந்துட்டே...? இங்கே தான் சுப்பிரமணி மாமா வீடு வரைக்கும் போயிருந்தேன். நீ வருவேன்னு நினைக்கலை. ஏன் துர்கா... உடம்புக்கு முடியலையா...? பேசின வாறே அம்மா எதிரே வந்து நின்றாள்.

    இல்லைம்மா... தாலுகாபீஸ் வரை வந்தேன் ஆபீஸ் வேலையா. அப்படியே வீட்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன். மூணு மணி போல மறுபடியும் கிளம்பி போனா போதும்...!

    நல்ல வெயில் நேரம்டி துர்கா. ஜீஸ் போட்டு கொண்டு வரவா...?

    வேண்டாம்மா... சாப்பிடற நேரம் தானே... சாப்பிட்டுக்கலாம். சுப்பிரமணி மாமா வீட்டுக்குப் போப்போறதா காலையில என்கிட்டே சொல்லவேயில்லையே...!

    திடீர்ன்னு முருகேசு வந்தான். மாமா கையோட அழைச்சுட்டு வரச்சென்னார்ன்னு தகவல் சொன்னான். காரணமில்லாமல் வரச்சொல்ல மாட்டார்ன்னு வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போனேன். எல்லாம் நல்ல காரியமாத்தான் துர்கா. மேட்டூர்ல இருந்து வரன். மாப்பிள்ளை போட்டோ கையோட வாங்கிட்டு வந்திருக்கேன். சுப்பிரமணி மாமா உன்னைப் பற்றி எல்லா விவரத்தையும் மாப்பிள்ளை வீட்ல பேசிட்டாராம். பொண்ணு போட்டோ பார்த்ததே போதும்ன்னு சொல்லிட்டாங்களாம். உன் சம்மதம் கேட்டு தகவல் சொல்லிட்டா முறைப்படி நிச்சயம் பண்ணிடலாம்ன்னார்...!

    ஜாதகக்கட்டை தூக்கிட்டு படியிறங்க வேணாம்ன்னு படிச்சுப் படிச்சு சொல்றேன்... ஏன்ம்மா கேட்கமாட்டேன்றே...?

    உனக்கு வயசு இருபத்தியெட்டு...

    எனக்கும் நல்லா தெரியும். எனக்குப் பிடிக்கலை... கல்யாணமே வேணாம். ஒரு தரம் சிங்காரிச்சு நின்று மூக்குடைபட்டது போதும்மா...!

    துர்கா... எல்லாத்தையும் ஒரே மாதிரி எடை போட்டுடக் கூடாது...!

    ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்...!

    எல்லா சம்பவத்துக்கும் பொருத்தமானதில்லைம்மா... நீ சொல்றது...!

    வேண்டாம்ன்னா விடேன்ம்மா. வந்து நிக்கறவங்கள்ட்டெ எல்லாம் என்னைப் பற்றின விவரத்தை ஒண்ணு விடாம ஒப்புச்சி காறித்துப்பிட்டு போறதை சகிச்சுக்கணும்ன்னு எனக்கு தேவையில்லை. அப்படியொரு கல்யாணம் அவசியமானதா தோணலை எனக்கு... ஏன்ம்மா... இதுவரை கல்யாணமானவங்க எல்லாம் பெரிசா என்னத்தை வாரிக்கட்டிக்கிட்டாங்க...?

    உனக்கும் சின்னவங்க ரெண்டு பெண்கள் இருக்காங்க. அவங்க காலம் உன்னால அலங்கோலமா நின்னுடக்கூடாது...!

    நான் வேணா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வேறே ஊருக்கு போயிடறேன். தங்கைகளோட கல்யாணத்தை தகப்பன் ஸ்தானத்துல நின்னு நடத்தறத்துக்கு நான் பொறுப்பாச்சு...!

    ஏன்... துர்கா... விட்டேத்தியா பேசறே. ஒண்ணு ஒஹோன்னு ஒசக்க போவே. இல்லை கிடு கிடுன்னு பள்ளத்தில் ஒளிஞ்சுக்குவே. நடுநிலையில் சிந்திக்க மாட்டியா...? நாளை பின்னே... உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா...?

    யாரும் யாருக்கும் துணையில்லைம்மா. சும்மா வெட்டிப் பேச்சு இதெல்லாம். அப்பா போய் சேர்ந்ததுமே கூடவே விழுந்து துணைப் பொணமா போய் சேர்ந்துட்டியா நீ...?

    நீ பேசறது நல்லாயிருக்காடி... நண்டும், சிண்டுமா மூணு பொண்களுக்காகன்னு உயிரைக் கையிலேப் புடிச்சு உருவாக்க நான் பட்ட வேதனை சொல்லிட முடியாது...

    ம்... அப்பா இல்லாது போனா அம்மா தாங்கணும். அதுவும் இல்லாது போனா மரம் வைச்சவன் தண்ணியூத்துவான்றாப்ல வளர்ந்து இருப்போம்...!

    காடு மேடுல எல்லாம் கூட தான் தண்ணியூத்த ஆளில்லைன்னாலும் மரமே செழிச்சு கனி கொழிச்சு சீந்துவாரத்து அத்துவானக்கைலாயமா கிடக்கு. ஆனா... இன்ன மரம் இன்ன கனியைக் கொடுக்கும்ன்றாப்ல செழிப்பமா ஒசந்திருக்க முடியாது. பேசிட்டே போனா தீர்வே கிடையாது. வாழ்க்கையை வாழறதுக்காக எடுத்துக்கணுமே தவிர, விவாத மேடையா எடுத்துக்கக் கூடாது. சில புண்ணை மருந்து போட்டுத்தான் ரணமாற்றணும். இன்னும் சில புண்ணை கீறித்தான் ஆற்றணும். வலி தாங்கிக்கிற வலிமை வரணும். ஒதுக்கிட்டு தள்ளி நின்னா கோழைன்னு அர்த்தம். வாழ்க்கை ஓடற ஓட்டத்துக்குப் போட்டி போடற துணிவில்லைன்னு அர்த்தம். சமுதாயத்துல நாலு பேர் மாதிரி வாழ்ந்தாதான் மதிப்பு, மரியாதை, கௌரவம் எல்லாம் கிடைக்கும். எதுவுமே வேணாம்ன்னா வாழறதுல அர்த்தமே இல்லை. பிறந்தோம், சாகத்தான் போறோம் என்னைக்கோ ஒரு நாள். இடைப்பட்ட காலத்துல நாமளும் சந்தோசமா இருந்து, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சந்தோசத்தை தர்றதுதான் பிறந்ததுக்குப் புண்ணியம்...!

    காவேரி பேசிக்கொண்டே போனாள்.

    ம்... நான் மாப்ளை முன்னாடி நிக்கணும்... செய்யறேன் போதுமாம்மா...! மேற்கொண்டு கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நீதான் பதில் சொல்லணும்...

    நீ... பொண்ணா லட்சணமா வந்து நின்னா போதும். மற்றது எல்லாம் மாமா பார்த்துக்குவார்...!

    .....

    அப்புறம் தாயே... எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை நான் சத்திய சந்தன் பெத்த பொண்ணாக்கும்ன்னு போன தரம் மாதிரி மாப்ளையைக் கூப்பிட்டு பேசி, குட்டிங்க கூட்டம் போட்டு குழைச்சு நாய் தலையிலெ அள்ளி வெச்ச மாதிரி ஆக்கிடப்போறே. அடக்கி வாசி... சொன்னது நினைப்புல இருக்கட்டும்...!

    என்னால முடியாது இதுக்கு...?

    அப்போ... நீ முன்னே மாதிரி பேசத்தான் போறேன்றே... செய்தாயே செய். கட்டையிலெ என் நெஞ்சு அவியும் முன்னே அணு அணுவா உயிரோட அவிக்கணும்ன்னு ஆசைப்பட்டா தாராளமா செய். நான் வேண்டாங்கலை. தலையெழுத்தை அழுது கரைச்சு காணடிச்சுடலாம்ன்றாப்ல இருந்திருந்தா என்னைக்கோ அதை செய்து முடிச்சிருப்பேன்டி... காவேரி அதற்கு மேல் பேச தோன்றாதவளாய் உள்ளே சென்று விட்டாள்.

    துர்காவிற்கு மனது முழுக்க கனம் அப்பிக் கொண்டது. நெஞ்சக் குமிழியின் தக்கைக்குள் தீக்கங்கு அடைத்து திணித்தாற் போன்றொரு எரிச்சல். ம்... ஹ்.... தன்னைப் பற்றின விபரம் தெரிந்ததுமே நீதான் எனக்கு எதிர்காலமே என மந்திர உச்சாடனம் போன்று ஜெபித்து

    Enjoying the preview?
    Page 1 of 1