Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilave Thaalaattu
Nilave Thaalaattu
Nilave Thaalaattu
Ebook108 pages42 minutes

Nilave Thaalaattu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
Nilave Thaalaattu

Read more from Geetharani

Related to Nilave Thaalaattu

Related ebooks

Reviews for Nilave Thaalaattu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilave Thaalaattu - Geetharani

    10

    1

    கீழ்வானத்தில் அடிக்கிற ஆரஞ்சு வர்ணத்தில் செந்நிறச் சுடர் வீசி, சற்றே பார்க்கக் கூசச் செய்யும் கதிர் ஒளிப்பரப்பி மேற்கில் சூரியக் குழந்தை அஸ்தமனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது சற்றே மந்தகாசத்துடன்.

    வானம் சூரியக் குழந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு பவுர்ணமி நிலாப் பெண்ணை வாரி முத்தமிடத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தது.

    ‘சர்... சர்’ரென்று சாலைகளில் வாகனங்கள் டயர்தேய போட்டி போட்டுக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. சாலையோரம் பேருந்தின் வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பிரஜைகளுக்கு பரிசாய் டீசல் காற்றையும், புகை வளையத்தையும் விட்டுப் போய்க் கொண்டு இருந்தன.

    செம்மண்ணில் லேசாய் மழைத்துளிகள் புள்ளிக் கோலங்கள் இட, மனிதத் தலைகள் ஆங்காங்கே அவசரப்பதுங்கல் தேடி ‘உர்சு’ கொட்டி ஒதுங்கி முகம் சுளித்து பலத்த மழை வருமோ என சற்றே அச்சத்துடன் அண்ணாந்து வான் நோக்கி கிழக்கு சனி மூலையின் கருத்த மேகத்திரள் கண்டு ‘ம்... மழை பலமாய்த்தான் வரும் போலிருக்கிறது’ என்ற முணு முணுப்புடன் வந்த பஸ்ஸில் ஒரு சிலர் தொற்றிக் கொள்ள, சவுந்தர்யா குடை, விரிந்து காரைக்குடி டவுன் பஸ்ஸிற்காக வெறுப்புடன் வாட்ச்சையும், சாலையையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தவள் மழை வலுக்கலாம் போல் தோன்ற. எதிர்பட்ட வெற்று ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஏறிக் கொண்டாள்.

    அவள் ஆட்டோவில் ஏறினது தான் தாமதம் ‘தட் தட்’ என்று மழைக் கம்பிகள் சீற்றத்துடன் தரைத்தொட ஆட்டோவிற்குள்ளும் சாரல் அடித்தது.

    திலகர் நகர் செகண்ட் அவென்யூ... சொன்னவள் உள்ளே தள்ளினாற் போன்று அமர்ந்து கொண்டு சாலையை வெறிக்கப் பார்த்தாள்.

    வீடு வந்ததும் காசை சரிபார்த்து கொடுத்துவிட்டு, குடை விரித்து கம்பிகேட்டை தள்ளித் திறந்து கொண்டு போர்டிகோ செல்வதற்குள் புடவை முழந்தாள், முதுகு என்று ஈரம் படிந்துவிட்டது.

    ‘ச்சே...’ என்ற சலிப்புடன் வாராந்தாவில் குடையை விரித்த வாயிலேயே வைத்துவிட்டு. நடையில் செருப்பை உதறின கால்களுடன் உள்ளே சென்றாள் வேகமாய்.

    ரஞ்சனி... என்ன பண்ணிட்டிர்க்கே... உள்ளுக்குள் நோக்கி குரல் கொடுத்தாள்.

    ரஞ்சனி மாடியறையில துணிகளை எல்லாம் எடுத்து வெச்சிட்டு இருக்காம்மா... சொன்னவாறே சாவித்திரியம்மாள். சமையற் கட்டிலிருந்து வெளிவந்தாள்.

    ம்... எல்லாம் பேக் பண்ணீட்டீங்களா சாவித்திரிம்மா...

    மதியமே எல்லாம் தயாரா எடுத்து வெச்சிட்டேன்மா...

    சரி... நான் போய் செட்டியார் ஐயாவை பார்த்து விவரம் சொல்லிட்டு வந்துடறேன்... இன்னும் வேற எதையாவது தயார் பண்ணனும்னா இப்பவே சரியா பார்த்துக்கோங்க... அப்புறம் இது விட்டுப் போயிட்டது. அது விட்டுப் போயிட்டதுன்னு சொல்லக்கூடாது...

    ம்... சரி... சவுந்தர்யா... ஆங்... மேல் மாடியில இருக்கிற டியூப் லைட் நாம வந்ததுக்கப்புறம் வாங்கிப் போட்டது. அதைக் கழட்டணுமே...!

    கிடக்கட்டும் விடுங்க... - வர்றவங்களுக்கு உபயோகமா இருக்கட்டும், எத்தனையோ போச்சி... ஏ...ய்... ரஞ்சனி... பாபு வந்துட்டானா... மாடி நோக்கி குரல் கொடுத்தவள் சவுந்தர்யா.

    வந்துட்டு வெளியிலே எங்கேயோ போயிருக்கான்க்கா...

    சரியான தடிமாடு... நேரங்காலந் தெரியாமல் கழுத்தறுத்துட்டு... நீ சீக்கிரம் இறங்கி வாடி... சொன்னவள் பதிலுக்கு காத்திராமல் விடு விடு என்று வெளியேறி தன் வீட்டை ஒட்டினாற் போன்றிருந்த இடது புற வளைவில் இருக்கும் வீட்டின் காலிங்பெல் அழுத்தி வரவிற்காக காத்திருந்தாள்.

    யா...ரு... சவுந்தர்யாவா... வா... வா... பலத்த வரவேற்புடன் கம்பிக் கதவின் வழியாக அவள் உருவம் பார்த்து ஆச்சி குரல் கொடுத்தவளாய் கனத்த சரீரம் அசைய நடுக்கூடத்திலிருந்து வெளி வாசல் கதவு திறக்க ஓரிரு நிமிடங்களாயிற்று.

    வாம்மா...

    ஐயா இல்லைங்களா...

    ஐயா... மேல ரூம்ல தான் இருக்கார். உட்காரும்மா... சோலை ஏ... சோலை. நம்ம சவுந்தர்யா பொண்ணு வந்திருக்கா... காபி, பலகாரம் கொண்டு வா...

    வேலைக்காரப் பெண்ணை நோக்கி கட்டைக் குரலில் அவள் கூறியது அந்த வேலைப்பாடுகள் மிகுந்த பர்மா தேக்குத்தூண் இழைத்த அந்தக் கால சிற்ப ஜொலிப்புடன் பளிங்குத் தரையில் உருவம் நிழல் பதிய தெரிந்த வீட்டின் சுவற்றில் சிலையோடிற்று.

    அருணாசலம் செட்டியார் மேல் துண்டை இழுத்துப் போர்த்தினவராய்

    அப்பனே... ஈஸ்வரா... கொப்புடையாளே...

    என்றவாறே படிகளில் இறங்கி வந்தார்.

    ஐயா... நமஸ்காரம்... என்று கைகூப்பினாள் சவுந்தர்யா அவரைப் பார்த்ததும்.

    ம். நமஸ்காரம். என்னம்மா... கிளம்பிட்டியா... சொன்னவாகுல சர்தான். ஈசன் துணை நிப்பான்! பார்த்து பத்திரமா பதனமா நடந்துக்கணும் போற ஊர்ல... என்ன புரியுதா? மறந்துடாம கடுதாசி அனுப்பு. அட்வான்ஸ் பாக்கி எல்லாம் கரெக்ட்டா பைசல் பண்ணி கணக்குப் பிள்ளையை டி.டி. எடுத்து உடனே அனுப்பச் சொல்றேன் தாயி... வாயார பேசினார்.

    சரிங்கய்யா... சாவியை நான் கணக்குப் பிள்ளைகிட்டேயே குடுத்துடறேன். வரட்டுங்களா...

    ம்... இரு சவுந்தர்யா வந்துட்டேன்... என்று உள்ளே சென்ற ஆச்சி ஒரு தட்டில் சேலை, ரவிக்கை, வெற்றிலைப் பாக்கில் மஞ்சள் கிழங்கு அதில் ஒரு கிள்ளு முல்லைப்பூ சகிதமாய் எடுத்து வந்து வாழ்த்தி நெற்றியில் குங்குமம் இட்டு, சீக்கிரம் கல்யாணப் பத்திரிகை அனுப்பணும் என்ன தெரிஞ்சதா... என்ற சிரிப்புடன் வழியனுப்பி வைத்தாள்.

    பாபு... வந்து தொலைஞ்சியாடா... எரிச்சல் மேலிட தம்பியை கத்தினாள்.

    ஏன்க்கா டென்ஷனாகறே. ட்ரெயின் நைன் தர்ட்டிக்குத்தான். பொறுமையாவே போகலாம்...

    ஆமாம்... எனக்குத் தெரியாது பாரு... பெரிசா சொல்ல வந்துட்டான். சீக்கிரமா பக்கத்து வீட்டு குமாரோட சைக்கிளை எடுத்துட்டுப் போயி நமக்கு எல்லாத்துக்கும் நைட் டிஃபன் எதாவது வாங்கிட்டு வந்து சேர், ஃப்ரெண்டை பார்த்தேன்... அவனைப் பார்த்தேன்னு நிக்காதே பர்ஸிலிருந்து நூறு ரூபாய் தாளொன்றை எடுத்து நீட்ட அவன் வெறுப்புடன் படியிறங்கிப் போனான்.

    ரஞ்சனி... சிம்ப்ளா சுடிதார் எதாவது போட்டுக்கோ... குளிர் நாள்... ஸ்வெட்டர்ஸ் எல்லாம் பேக்ல மேலயே இருக்கட்டும். ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் எனக்கு ஒரு வேலை இருக்கு... வந்துடறேன... பீ... குயிக். சாவித்திரிம்மா... உங்களையும் தான் பூஜை ரூம் சாமி படங்கள் எல்லாம் பெட்சீட்ல சுத்தி வையுங்க. டெம்போ வந்ததும் பேக்கேஜ் ஏத்தணும். நடுவுல உடைஞ்சிடப் போறது...

    சரிம்மா...

    ச்சே... சரியான தொண தொணப்புக்கா நீ. எரிச்சலுடன் சலிப்பு மேலிட உச்சுக்கொட்டினவளாய் ஸ்வெட்டர்களை தேடி எடுத்து வைப்பதில் ஆழ்ந்தாள் ரஞ்சனி.

    சவுந்தர்யா தன் அறைக்குள் சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1