Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello Mister Kaadhala!
Hello Mister Kaadhala!
Hello Mister Kaadhala!
Ebook86 pages30 minutes

Hello Mister Kaadhala!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருண் ப்ரீதிகாவைக் காதலித்து மணந்து கொண்டவன்.
திடீரென்று நடந்துவிட்ட இவன் திருமணத்திற்கு பிரிதொரு நாளில் அலுவலக நண்பர்களுக்கு விருந்து தர... லிஸ்டில் விடுபட்ட இவன் அலுவலக நண்பர் ஒரு நல்ல நாளில் கிப்ட் பார்சலுடன் வருகிறார்.
வந்த நண்பர் மூலம் ப்ரீத்திகா அருணுக்கு ஏற்கனவே திருமணமான உண்மையையும் ,ஒரு மகன் இருக்கும் விபரத்தையும் அறிந்து கோபமடைந்த ப்ரீதிகா டைவர்ஸ் வரை போகிறாள்.
அருணின் முதல் மனைவி மீனாட்சி தன் மகன் கரணுடன் தனித்து வாழ தன் மகனை அவன் கண்களிலேயே காட்டாமல் இருக்கிற கோபம் தம்பதிகள் மட்டுமே அறிந்த உண்மை.
இந்த மும்முனைப் போராட்டத்தில் ஆளுக்காரு பக்கமாகச் சிதறியடிக்கப்படுகின்றனர்.
ஒரு விபத்து இவர்களை இணைக்க அதற்கு தந்தி ஒரு காரணமாக வினோத் என்கிற வில்லனும் இடை நுழைய.... முடிவு என்னவாகிறது?
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.
கரண் தன் தந்தையைப் பார்க்கிறானா?
ப்ரீதிகாவின் டைவர்ஸ் கேஸ் என்னவானது?
மீனாட்சி தன் கணவனை மன்னித்தாளா?
இடையில் புகுந்த வினோதுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
நாவலில் பல சுவாரசியத் திருப்பங்கள்.....படித்தால் ரசிப்பீர்கள்...
படியுங்கள்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100805131
Hello Mister Kaadhala!

Read more from Vimala Ramani

Related to Hello Mister Kaadhala!

Related ebooks

Related categories

Reviews for Hello Mister Kaadhala!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello Mister Kaadhala! - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    ஹலோ மிஸ்டர் காதலா!

    Hello Mister Kaadhala!

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    அருண் கேட்டான்.

    ப்ரீதி ஓகே! அதென்ன ப்ரீதிகான்னு ஒரு பேரு?

    ப்ரீதிகா சிரித்தாள்.

    நீங்க சந்தோஷமா இருக்கும் போது ப்ரீதின்னே கூப்பிடுங்க. என்னோட 'காய்' விட்டா, ஐ மீன் டூ விட்டா ப்ரீதிகான்னு கூப்பிடுங்க. நான் புரிஞ்சிப்பேன்!

    அருண் சிரித்தான்.

    சமத்து! நான் எங்கே காய் விடறது? எப்பவும் பழம் தான்.

    ஞானப்பழமா?

    நோ... மோகப்பழம். காதல் தாகப் பழம்…

    போதும்... போதும்... பஞ்சாமிர்தம் சாப்பிட்ட மாதிரி இருக்கு. இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?

    பெட் ரூம்லேயா?

    அதைவிட்டா வேற ஞாபகம் வராதே உங்களுக்கு!

    எப்படிம்மா வரும்? ரோஜா இதழ், நக்மா உடம்பு... மந்த்ரா...

    ப்ரீதிகா காதைப் பொத்திக் கொண்டாள்.

    சிலுக்கு இடை... குலுக்கு நடை...

    இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லையா? நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை நாளாச்சு? மதுரை மீனாட்சியம்மன் கோவில்லே மாலை மாத்தி தாலி கட்டிக்கிட்டோம். என் தரப்பிலேயும் யாரும் வரல்லை... என் காதல்லே என் அம்மாவுக்குக் கோபம். உங்க தரப்பிலே ஒத்தரும் இல்லேனுட்டீங்க. அட்லீஸ்ட் உங்க ஆபீஸ் கலீக்ஸுக்காவது ஒரு நாள் பார்ட்டி தர வேண்டாமா? பேங்கிலே ஆபீஸரா இருக்கீங்க... ஒத்தருக்குமே கல்யாண இன்விடேஷன் தரலியா? யாருமே நம்ம கல்யாணத்துக்கு வரலியே? ப்ரீதிகா கேட்டாள்.

    அன்னிக்கு பேங்க் ஆடிட்டிங். ரிஸர்வ் பேங்கிலே இருந்து ஆடிட்டிங்குக்கு வந்திருந்தாங்க... எனக்கே லீவு கிடைக்குமான்னு சந்தேகம். பேசாம ஆபீஸிலேயே கேஷ் கேபினுக்குள்ளே தாலி கட்டிடலாமான்னு நினைச்சேன். நல்ல வேளை மேனேஜர் நல்லவர்... அரை நாள் லீவு கொடுத்தார். தினம் தினம் பேங்கிலே கேட்டுட்டே தான் இருக்காங்க. எப்ப ட்ரீட்... எப்ப ட்ரீட்டுன்னு... ஒரு டேட் சொல்லு... எல்லாரையும் கூப்பிடலாம்... இந்த வீடு போதுமா? கிட்டத்தட்ட இருபத்தி அஞ்சு பேர் வருவாங்க...

    அதைப்பத்தி கவலைப்படாதீங்க... பக்கத்துப் போர்ஷன்லே ஒரு ரூம் கேட்டுக்கலாம். நல்லவங்க. தருவாங்க. நாம அங்கே என்ன குடியா இருக்கப் போறோம்? சும்மா நாலு பேர் உட்காரத்தானே? அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...

    என்னவோ நீ... அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்னு தான் நான் தைரியமா இந்தக் காரியத்துலே இறங்கறேன்...

    டோண்ட் ஒர்ரி...

    சின்னவளே அடி சின்னவளே...

    என்ன அது பாட்டு தப்பா வருது? அப்ப பெரியவ யாரு?

    அருண் தோப்புக்கரணம் போட்டான்.

    தப்புடா சாமி... சின்னவளா அழகா இருக்கியேன்னு பாடினா அதுலேயும் ஒரு குதர்க்கமா? அம்பேல்...

    அவர்கள் சிரித்தார்கள்.

    அடுத்தவாரம் ஒரு ஞாயிறு லஞ்சுக்கு ஆபீஸ் நண்பர்களை அழைப்பதென்று முடிவெடுத்தார்கள்.

    2

    ப்ரீதிகா மெனு தயாரித்துக் கொண்டிருந்தாள்.

    அவளையே பார்த்தபடி அவள் எதிரில் அமர்ந்திருந்தான் அருண்.

    இவளை எப்படி எங்கே காதலித்தேன்? இவனை டெபுடேஷனில் கோவையிலிருந்து மதுரை அனுப்பி இருந்தார்கள். மதுரையில் இவன் தங்கி இருந்தபோது ஞாயிறுதோறும் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    அழகான ஊர் மதுரை. முன்பு கூட தமிழ்நாட்டின் தலைநகராக இதை ஆக்க முயற்சிகள் செய்தார்கள். நடுவில் கோவில், சுற்றிவர வீதிகள், மாசிவீதி, ஆடிவீதி, ஆவணி மூலவீதி... - என்று அழகழகான வீதிகள்... இப்போது கோவிலைச் சுற்றி நெரிசல் அதிகமாகி விட்டது. மாலை வேளைகளில் சந்நிதி வீதியில்

    Enjoying the preview?
    Page 1 of 1