Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!
Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!
Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!
Ebook98 pages36 minutes

Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“சிவகிரி” அழகான, அமைதியான கிராமம். வெள்ளந்தி மக்கள் மட்டுமே வாழும் புண்ணிய பூமி. ஊருக்கு வெளியே மலைக் கோயில். அதன் உச்சியில் பச்சை நாயகியம்மன் சன்னதி.

எங்கிருந்தோ வந்த பைத்தியக்காரன் ஒருவன் மலைக்கோயில் உச்சியில் அமர்ந்து கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்களையெல்லாம் தடியால் அடித்து விரட்டுகிறான். ஆரம்பத்தில் அதை மனநிலை சரியில்லாதவனின் செயல் என்று நினைத்த ஊர் மக்கள் அவன் அம்மனுக்கு பூஜை செய்யும் பூசாரியையும் அடித்து விரட்டி விட, ஊர்த்தலைவர் வீட்டில் கூட்டம் நடக்கின்றது.

வரவிருக்கும் பௌர்ணமிப் பொங்கல் விழாவிற்குள் அவனைத் துரத்தியடிக்க யோசனை கேட்கப்படுகின்றது. இளைஞர் கூட்டம் முன் வந்து, மறுநாளே மலை ஏறுகின்றது. ஆனால், போன வேகத்தில் அடி வாங்கித் திரும்புகின்றது.

செல்லக்கிளி என்னும் பெண் தனியாளாய்ச் சென்று அவனை விரட்டத் துணிய, தாறுமாறாய் அடிபட்டு மனநிலை பிசகித் திரும்புகிறாள்.

காவல் துறை வரவழைக்கப்படுகிறது. காவலர்களும் தாக்கப்பட, துப்பாக்கிச் சூடு நடைபெறுகின்றது. எந்த துப்பாக்கி குண்டும் அவனைத் துளைக்கவில்லை.

காவல் அதிகாரிகளும், ஊர் மக்களும் திகைத்துப் போய் நிற்கின்றனர். பேய் மழை அடிக்கத் துவங்குகின்றது. வானம் இடிகளையும், மின்னல்களையும் அனுப்புகின்றது.

அவன்… அக்கோயிலை விட்டு விலகினானா?

அவன் யார்?.... எதற்கு அங்கு வந்தான்?

உங்கள் கேள்விகளுக்கு நாவலுக்குள் விடையுண்டு. வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580130010500
Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!

Read more from Mukil Dinakaran

Related to Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!

Related ebooks

Reviews for Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaiyum Avaney!... Mazhaiyum Avaney! - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலையும் அவனே!... மழையும் அவனே!

    Malaiyum Avaney!... Mazhaiyum Avaney!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 1

    நடப்புச் சமூகத்தில், நாட்டின் எல்லாப் பகுதிகளையும் நிரந்தரமாய் அக்கிரமித்துக் கொண்டு, அவ்வப்போது வெட்டுக் குத்து, வெடிகுண்டு வீச்சு, கொலை, தீ வைப்பு போன்ற சம்பவங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சாதி, மத பேதம் என்னும் அரக்கன் இன்னும் காலடி எடுத்து வைக்காத கிராமம் சிவகிரி. இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளையோ?... என்று சந்தேகிக்கும் விதமாய் அவ்வூரில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடந்தன.

    யார் கண் பட்டதோ தெரியவில்லை, அந்தப் புண்ணியபூமியான சிவகிரி கிராமம் கடந்த இரண்டு நாட்களாகவே பெரும் பரபரப்பில் சிக்கியிருந்தது. தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய் நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர் அவ்வூர் மக்கள். கிணற்றடி, சந்தைக் கடை, சலூன் கடை, பேருந்து நிறுத்தம் என எல்லா இடங்களிலும் ஜனங்கள் வாயில் அதே பேச்சுத்தான். சமையலறை தொட்டு... சயனஅறை வரை கணவன் மனைவிக்குள் நிகழும் சம்பாஷனைகள் எல்லாமே அந்தப் பிரச்சினை குறித்துத்தான்.

    கலிகாலத்துல மனுஷன் நிம்மதியாய்க் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடக் கூட முடியாது போலிருக்கே? ஆறுமுகம் புலம்பினார். தினசரி கோயிலுக்குச் சென்று தன் குலதெய்வமான பச்சை நாயகி அம்மனை வழிபடும் வாடிக்கையாளர் அவர்.

    காலங் காலமா கட்டுப்பாட்டோட இருந்து வரும் இந்த ஊருக்கா இந்த மாதிரிப் புதுசு புதுசா பிரச்சினைகள் வரணும்? வெற்றிலைக்கார ரங்கசாமி தலையிலடித்துக் கொண்டு சொன்னார்.

    அய்யா... நீங்க மலைக் கோயிலுக்குப் போய் அவனைப் பார்த்திட்டு வந்தீங்களா? பண்ணையாரின் தெற்குத் தெரு தோட்டத்தில் உழவு வேலைகள் மொத்தத்தையும் தனி ஆளாய் நின்று கவனித்துக் கொண்டிருக்கும் கண்ணுச்சாமி ஆறுமுகத்தைப் பார்த்துக் கேட்டான். கண்ணுச்சாமிக்கு கர்லாக்கட்டை உடம்பு. சாட்டையாய் கைகால்கள்.

    பின்னே?... போகாம இருப்பேனாப்பா?... மலை மேலே இருக்கறது... எங்களோட குலதெய்வமான பச்சைநாயகி அம்மனாச்சே... போகாம இருப்பேனா? கடுப்போடு பதில் சொன்னார் ஆறுமுகம்.

    ஓ... அப்ப அவனைப் பார்த்திட்டீங்க?... எப்படியிருந்தான் ஆளு? ஆர்வத்தோடு கேட்டான் கண்ணுசாமி.

    ஆறரை... ஏழடிக்குக் குறையாத உயரம்...கரு...கருன்னு கட்டுமஸ்தான உடம்பு... தோள் பட்டை ரெண்டும் அகலமா... கை காலெல்லாம் சும்மாக் கரணை கரணையா சதைக் கட்டுகளோட... கண்கள் ரெண்டும் நெருப்புக் கங்காட்டம்... பெரியவங்க பார்த்தா திக்குன்னு அதிர்ந்து போவாங்க... குழந்தைகள் பார்த்தா பார்த்த உடனே ஒண்ணுக்குப் போயிடும்க சொல்லும் போதே ஆறுமுகத்தின் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

    அட... பார்த்திட்டுப் பேசாமலா வந்தீர்?... போய்க் கேட்க வேண்டியதுதானே, யாருடா நீ?...எதுக்குடா இங்க வந்து எங்க குலசாமியோட சன்னதில உட்கார்ந்திட்டிருக்கே?ன்னு கேட்டிருக்கலாமே?" கண்ணுசாமி சொல்ல,

    வாஸ்தவம்தான்... மலையேறும் போது அப்படித்தான் நெனச்சுக்கிட்டு ஏறினேன்... போய் அவனை நாலு அதட்டு அதட்டி...இது எங்க குலசாமியோட கோயிலு... இங்கெல்லாம் எங்க சாதி சனத்தைத் தவிர வேற ஆளுக யாரும் வந்து உட்காரக் கூடாது...! ராத்திரி நேரங்கள்ல தங்கக் கூடாது!ன்னு சொல்லி அவனை விரட்டி விட்டுட்டுத்தான் மலையை விட்டுக் கீழே இறங்கறதுன்னு ஒரு தீர்மானத்தோடதான் மலை ஏறினேன்..."

    சரி... அப்புறம்? கண்ணுசாமி விடாது கேட்டான்.

    போயி அவனை நேர்ல பார்த்ததும்... யப்பா... ஆடிப் போயிட்டேன்...! சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு... எதையுமே கேட்க வாய் வரலை...! ஊருக்கு வெளிய கம்பீரமா உட்கார்ந்திட்டிருக்கற அய்யனார் சாமி மாதிரி... நம்ம குலசாமி கோயிலுக்குக் காவல்காரனாட்டம் உட்கார்ந்திட்டிருக்கான் சொல்லி விட்டுத் தலையை வேகமாக இட, வலமாய் ஆட்டினார் ஆறுமுகம். அவரையேயறிமால் அவர் தொண்டை எச்சில் விழுங்கியது.

    அதைக் கேட்டு, ஹா... ஹா... ஹாவென்று வாய் விட்டுச் சிரித்த கண்ணுசாமி அப்ப... அவனைப் பார்த்துப் பயந்திட்டீங்க...ன்னு சொல்லுங்க" பேச்சில் நக்கல் தொணித்தது.

    கண்ணுசாமியின் அந்த வார்த்தைகள் ஆறுமுகத்தின் தன்மானத்தைச் சீண்டி விட, யோவ்... நான் மட்டுமாய்யா பயந்துக்கறேன்?... இன்னிக்குத் தேதில இந்த ஊர்ல இருக்கற எல்லாப் பயலுகளுமேதானே அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்துப் பயந்து நடுங்கிட்டிருக்காங்க?... நானாவது மலை மேலேயே போய்ப் பார்த்திட்டு வந்தேன்... பல பேரு... மலைக்குக் கீழேயே நின்னு அண்ணாந்து மலையைப் பார்த்திட்டிருக்கானுக...! தன்னுடைய பராக்கிரமத்தைப் பறை சாற்றிக் கொண்டார் ஆறுமுகம்.

    சரி... சரி... கோவிச்சுக்காதீங்க... என்ற கண்ணுசாமி, சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வாழைக்காய் மண்டி வடிவேலுவிடம், அப்பா... வடிவேலோய்... இதுக்கெல்லாம் என்னதான் முடிவு? இங்கிருந்தே கேட்டான்.

    உதட்டைப் பிதுக்கினான் வடிவேலு.

    என்ன சாமிகளா ஆளாளுக்கு இப்படி வாயிலேயே அசை போட்டுக்கிட்டிருந்தா எப்படி?... இன்னியோட மூணு நாளாச்சு நம்ம சாதி சனத்துக்காரங்க மலை மேலே போயி... கோயில்ல தீபமேத்தி... பூஜை பண்ணி... கண்ணுசாமி உண்மையிலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1