Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siragai Viri!!... Sigaram Thodu!!
Siragai Viri!!... Sigaram Thodu!!
Siragai Viri!!... Sigaram Thodu!!
Ebook136 pages51 minutes

Siragai Viri!!... Sigaram Thodu!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சைக்கிள் கடை வைத்து, பிழைப்பு நடத்தும் முருகன். தன் குல தெய்வ கோவிலின் கட்டிட நிதிக்காக உண்டியலில் பணம் சேர்க்கிறான். பணத் தட்டுப்பாட்டில் சிரமப்படும் போதெல்லாம், அதிலிருந்து எடுத்து செலவு செய்யலாம், என்கிறாள் அவன் மனைவி. ஆனால், எக்காரணத்தைக் கொண்டு சாமி காசை எடுக்கக் கூடாது, என்று பிடிவாதமாயிருக்கிறான் முருகன். குழந்தையின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப் பட்ட போதும், தன் உறுதியில் கான்கிரீட்டாய் நிற்கிறான்.
ஒரு நாள், அவன் வீட்டு முன்னால் யாரோவொரு கிழவி, பசியால் மயங்கி விழ, அவளுக்கு உணவளிக்க நினைக்கிறான். ஏற்கனவே வறுமை வாட்டிக் கொண்டிருந்ததால் அவன் வீட்டில் எதுவும் இல்லாது போகிறது. மற்ற வீடுகளில் முயற்சித்தும் கிடைக்காது போக, அந்த சாமி உண்டியலை உடைக்கிறான். அந்தக் கிழவிக்கு உணவளிக்கிறான். அவள் தன் பிள்ளையால் ஒதுக்கப்பட்ட கதையைச் சொல்ல, அவளைத் தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறான்.
சில மாதங்களுக்குப் பிறகு, கிழவியின் மகன் வந்து அவளைத் தன்னுடன் அனுப்பி விடுமாறு கேட்கிறான். கிழவி போக மாட்டாள், என்கிற நம்பிக்கையில், “அம்மா வந்தால் கூட்டிட்டுப் போ”என்கிறான் முருகன். ஆனால், அவன் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு, கிழவி மகனுடன் புறப்பட்டுச் செல்கிறாள்.
ஆடிப் போகின்றனர் முருகன் குடும்பத்தார். தொடர்ந்து வ்ரும் நிகழ்வுகளைப் படிக்கும் எல்லா வாசக்ர்களும் நிச்சயம் மெய் சிலிர்த்துப் போவர். நீங்களும் வாசியுங்கள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130004993
Siragai Viri!!... Sigaram Thodu!!

Read more from Mukil Dinakaran

Related to Siragai Viri!!... Sigaram Thodu!!

Related ebooks

Reviews for Siragai Viri!!... Sigaram Thodu!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siragai Viri!!... Sigaram Thodu!! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    சிறகை விரி!!... சிகரம் தொடு!!

    Siragai Viri!!... Sigaram Thodu!!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    மாலை ஏழு மணி. வேகமாய் வீசும் காற்றில் ஜில்லிப்பு கூடியிருந்தது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழை மேகங்கள் பொழியத் தயாராகின.

    கண்ணாத்தா மிதிவண்டி நிலையம் என்ற துருப்பிடித்த போர்டுக்குக் கீழே இருந்த அந்தச் சிறிய சைக்கிள் கடையின் முதலாளி முருகன், கடைக்கு வெளியே வந்து நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

    விண்மீன்கள் மொத்தமாய்த் தொலைந்து போயிருக்க, இன்னிக்கு சரியான மழை உண்டு என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, கடையைச் சாத்தும் முஸ்தீபுகளில் ஈடுபட்டான். வெளியே நின்று கொண்டிருந்த சைக்கிள்களை ஒவ்வொன்றாய் எடுத்து உள்ளே கொண்டு போனான். மனம் அன்றைய வருமானத்தை எண்ணிப் பார்த்து கவலையுற்றது.

    என்ன முருகு... ஏழு மணிதான் ஆச்சு அதுக்குள்ளார கடையைச் சாத்தறே போலிருக்கு?... வெளி ஜோலியா எங்காச்சும் போகணுமா? தெருவில் சென்று கொண்டிருந்த பால்கார நாகராஜ் நின்று கேட்டார். அந்த சைக்கிள் கடையைக் கடந்து போகும் போதெல்லாம் நின்று பேசி விட்டுச் செல்வது அவரது தவறாத கடமை.

    இல்லைப்பா... இன்னிக்கு வேலை ரொம்ப கம்மி!... கல்லாவும் காலி!... வானம் வேற மப்பும் மந்தாரமுமா இருக்கு... இதுக்கு மேலே உட்கார்ந்தாலும் எதுவும் வரப் போறதில்லை... அதான் கிளம்பிட்டேன் சற்று வருத்தத்தோடு சொன்னான் முருகன். போறாத சம்பாத்தியத்தில் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கும் சாதாரணன்.

    அவன் முகத்தில் தெரிந்த சோகத்தைப் படித்து விட்ட நாகராஜ், கடைக்குள் வந்தான். முருகு... ரொம்ப நாளா உன் கிட்டே ஒண்ணு சொல்லணும்!னு நெனைக்கறேன்... ஏனோ நேரம் அமையலை!... இன்னிக்கு சொல்லியே ஆகணும்!னு முடிவு பண்ணிட்டேன்

    என்ன பால்காரரே... பீடிகை பலமாயிருக்கு?... என்ன சாமாச்சாரம்? முருகன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

    நான் சொல்றதைக் கேட்டு கோவிச்சுக்காதே!... இந்தக் காலத்திலெல்லாம் சைக்கிள் கடை வெச்சா ஓடுமா?... யோசிச்சுப் பாரு... ஊருக்குள்ளார சைக்கிள் வெச்சிருந்தவனெல்லாம் இப்ப மொபட்டு... பைக்கு... ஸ்கூட்டரு... ன்னு போயிட்டானுக!... அங்கங்கே... ஒருத்தன் ரெண்டு பேருதான் இன்னும் சைக்கிளை வெச்சு உருட்டிக்கிட்டு இருக்கானுக... அவனுகளை நம்பி நீ கடை வெச்சிருக்கே... எப்படிப்பா கல்லா கட்டும்?... எங்க பார்த்தாலும்... வாகனக்கடன்... வட்டியில்லாக் கடன்! னு போட்டு பேங்க்காரனுக... முன் பணமே இல்லாம கடன் குடுக்கறானுக!... அதனால... இன்னிக்கு குப்பன் சுப்பனெல்லாம்... மோட்டார் பைக்கு வாங்கிட்டு சுத்தறானுக... அப்புறமெப்படிப்பா சைக்கிள் கடை ஓடும்? யதார்த்த உண்மையை எடுத்துச் சொன்னான் பால்கார நாகராஜ்.

    அப்படிச் சொல்லாத நாகு!... இந்த ஊருக்குள்ளார இருக்கற ஒரே சைக்கிள் கடை என்னோடதுதான்!... நீ சொன்ன அந்த ஒருத்தன் ரெண்டு பேர்... அவங்க சைக்கிள் பஞ்சரோ... ரிப்பேரோ ஆனா எங்கே போவானுக?... அந்த பெட்ரோல் வண்டிகளை ரிப்பேர் பண்ற மெக்கானிக்குக கிட்டேயா போவானுக?... போனாலும் அவனுக சைக்கிளுக்கு ரிப்பேர் பார்ப்பானுகளா?... அதனால... அந்த சைக்கிளோட்டிகளுக்கு நான்தான் கதி!... எனக்கும் அவங்கதான் கதி! என்றான் முருகன்.

    அது செரிப்பா... இதுல வர்ற வருமானம் குடும்பம் நடத்தப் போதாதே?... வீம்புக்கு மீன் பிடிக்கப் போயி... வலையை அத்துக்கிட்டு வர்றதுல என்னப்பா பிரயோஜனம்? நாகராஜ் கேட்டான்.

    அப்படி ஒரேயடியா வர்ற வருமானாம் போறாது!ன்னு சொல்லிட முடியாது... ஒரு சமயத்துல நிறைய வேலை வரும்... காசும் வரும்!... ஒரு சமயத்துல வேலை வராம காத்து வாங்க!... காசும் கண்ணுல படாது!... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்ப்பா... இஸ்கூலு பசங்க காத்தடிக்க... பஞ்சர் போட... ன்னு தெனமும் நாலஞ்சு பேராவது வந்திடுவானுக!... அதனால சுத்தமான வறட்சி வர்றதில்லை என்றான் முருகன். அவன் கை அனிச்சையாய் பாக்கெட்டிற்குள் சென்று பீடிக்கட்டை எடுத்தது.

    அது வாஸ்தவம்தான்... ஆனா எத்தனை நாளைக்கு இப்படியே ஓட்டிக்கிட்டிருக்க முடியும்!... கொஞ்சம் வேற முயற்சிகளையும் பண்ணலாமே?... சைடு பிசினஸ் ஏதாச்சும் பண்ணு... இல்லையா?... நீயும் மோட்டார் பைக் மெக்கானிசம் கத்துக்கிட்டு அந்தக் கடையை போடு! ஊக்க டானிக்கை ஊட்டினான் பால்கார நாகராஜ்.

    ம்ம்ம்... அதையும் யோசிச்சிட்டுத்தான் இருக்கேன்!... வேற தொழிலுக்குப் போற மாதிரி எண்ணமும் உண்டு... ஆனா... இப்ப இல்லை... இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு.. என்றான் முருகன் வறட்... வறட் டென்று தாடியைச் சொறிந்தபடி. பீடிப்புகை அந்த இடத்தை நிரப்பியது.

    அது ஏன் கொஞ்ச நாள் கழிச்சு?... இப்பவே செய்ய வேண்டியதுதானே?... நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு எந்த அதிசயமும் தேவையில்லை முருகா... நாம எடுக்கற முடிவுகள் மட்டும் சரியாய் இருந்தால் போதும் சொல்லியவாறே நாகராஜ் கையை நீட்டி ஒரு பீடி கேட்க, கட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தான் முருகன்.

    இல்லப்பா... அதுக்கும் ஒரு காரணமிருக்கு!.... என்று சொல்லி விட்டு சில விநாடிகள் யோசித்த முருகன், என்னோட குல தெய்வம் கோயிலுக்கு நான் போயி கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாச்சு!... சொல்லும் போதே முருகனின் குரல் தழுதழுத்தது.

    உன் குலதெய்வம் எது? நாகராஜ் பீடிப்புகையை வெளியிட்டவாறே கேட்டான்.

    புதுப் பாளையம்... அங்காளம்மன்!

    ஓ... என்ற நாகராஜ், ஆமாம் பத்து வருஷமா குலதெய்வம் கோயிலுக்குப் போகலை!ன்னு சொல்றியே?... ஏன்?... எதனால? என்று கேட்க,

    அது ஒரு பெரிய கதை கண்களை மூடி, பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்ச்சியைக் கண் முன்னால் கொண்டு வந்து, அதை வார்த்தைகளால் விவரிக்க ஆரம்பித்தான் முருகன்.

    ***

    வீட்டின் பின் புறம், பாத்ரூம் அருகிலிருந்த கண்ணாடியில் முகம் பார்த்து ஷேவிங் செய்து கொண்டிருந்தான் முருகன். மீசையில் லேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை நைஸாக வெட்டியெறிந்தான்.

    வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்க, அங்கிருந்தே சொன்னான். ஏய்... தெய்வானை கதவு தட்டற சத்தம் கேட்குது... போய் யாரு?ன்னு பாருடி

    தரையில் அமர்ந்து வயர் கூடை பின்னிக் கொண்டிருந்த தெய்வானை தன் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, நிதானமாய் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள்.

    வெள்ளை வேஷ்டி... வெள்ளை சட்டையுடன் கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேல் நின்று கொண்டிருந்தனர். எல்லோருமே அறுபத்தைந்து... எழுபது வயதைத் தாண்டியவர்களாகவே இருக்க, புருவங்களை நெரித்துக் கொண்டு பார்த்தாள் அவள்.

    முருகன் வீடுதானே அம்மா? தலை முழுவதும் சோப்பு நுரை போல் நரை முடி அடர்த்தியாயிருந்த ஒரு பெரியவர் கேட்க,

    ஆமாம்... உள்ளார வாங்க! என்றபடியே வீட்டிற்குள் திரும்பிய தெய்வானை, என்னங்க... உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க என்றாள் வீட்டின்

    Enjoying the preview?
    Page 1 of 1