Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookalin Mozhi Puriyalaye?
Pookalin Mozhi Puriyalaye?
Pookalin Mozhi Puriyalaye?
Ebook134 pages50 minutes

Pookalin Mozhi Puriyalaye?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொதுவாகவே, ஒரு புத்தகம் தனது முதல் வெற்றியைப் பெறுவது அதன் தலைப்பில்தான். சில புத்தகங்கள் தன் அருமையான தலைப்பிற்காக, வாங்கப்பட்டு... வாசிக்கப்படுகின்றன. அந்த வகையில் கவித்துவமான ஒரு தலைப்பினை இச்சிறுகதைத் தொகுப்பிற்கு வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில வைக்கப்பட்ட தலைப்புத்தான் “பூக்களின் மொழி புரியலையே!”.

குடும்பக் கதைகளும், சமூகக் கதைகளும் அதிகம் இடப் பெற்றிருக்கும் இத்தொகுப்பில் காதல் கதைகளும் உண்டு. ஆனாலும், இந்தக் காதல் கதைகளின் பின்புலத்தில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் பொதிந்திருப்பதை ஆழ்ந்து படித்தால் மட்டுமே உணர முடியும்.

தத்துவக் கருத்துக்களையும், உளவியல் உண்மைகளையும் சிறுகதைகளின் மூலமாகவும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியும், என்பதற்கு எடுத்துக்காட்டு இத்தொகுப்பு.

இதிலுள்ள கதைகள் யாருக்கும் எந்த விதத்திலும் மன நெருடலைத் தராது என் உறுதியளிக்கும் விதத்திலானவை.

- முகில் தினகரன்

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130005602
Pookalin Mozhi Puriyalaye?

Read more from Mukil Dinakaran

Related to Pookalin Mozhi Puriyalaye?

Related ebooks

Reviews for Pookalin Mozhi Puriyalaye?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookalin Mozhi Puriyalaye? - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பூக்களின் மொழி புரியலையே?

    சிறுகதைகள்

    Pookalin Mozhi Puriyalaye?

    Short Stories

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட் ஃபாதர்

    ஞானோதயம்

    என்ன விலை அழகே?

    அவள் தந்த விலை

    அறை எண் 56-ல் அமுதா.

    நூத்தம்பது ரூபா...

    விதிக்குள் விதி

    தங்கம்மா

    கனவுச் சாமியார்

    பழனியம்மாள்.

    இருள் மனங்கள்.

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

    சிந்திக்க வைத்த சந்ததிகள்

    உறைந்த புன்னகை.

    வாய்ச்சொல் வீராங்கனைகள்

    காஸ்ட்லி கிஃப்ட்

    விலை கொடுத்து விபரீதம்.

    வீட்டு மாப்பிள்ளை

    என்னைச் சொல்லிக் குற்றமில்லை

    பூக்களின் மொழி புரியலையே

    என்னுரை

    பொதுவாகவே, ஒரு புத்தகம் தனது முதல் வெற்றியைப் பெறுவது அதன் தலைப்பில்தான். சில புத்தகங்கள் தன் அருமையான தலைப்பிற்காக, வாங்கப்பட்டு... வாசிக்கப்படுகின்றன. அந்த வகையில் கவித்துவமான ஒரு தலைப்பினை இச்சிறுகதைத் தொகுப்பிற்கு வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில வைக்கப்பட்ட தலைப்புத்தான் பூக்களின் மொழி புரியலையே!.

    குடும்பக் கதைகளும், சமூகக் கதைகளும் அதிகம் இடப் பெற்றிருக்கும் இத்தொகுப்பில் காதல் கதைகளும் உண்டு. ஆனாலும், இந்தக் காதல் கதைகளின் பின்புலத்தில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் பொதிந்திருப்பதை ஆழ்ந்து படித்தால் மட்டுமே உணர முடியும்.

    இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சிறுகதை தினமலர் சிறுகதைப் போட்டியில் வென்ற கதை.

    தத்துவக் கருத்துக்களையும், உளவியல் உண்மைகளையும் சிறுகதைகளின் மூலமாகவும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியும், என்பதற்கு எடுத்துக்காட்டு இத்தொகுப்பு.

    இதிலுள்ள கதைகள் யாருக்கும் எந்த விதத்திலும் மன நெருடலைத் தராது என் உறுதியளிக்கும் விதத்திலானவை.

    நன்றி

    இவண்,

    முகில் தினகரன்

    95977 08460

    *****

    காட் ஃபாதர்

    பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

    தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

    வாட் எ கிரேட் மேன்? அவரும்... அவரோட அந்த அறிவுரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்... அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி... இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்.....

    யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

    இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்... ஒரு மழை இரவில்... மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்... என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பாகளின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன்.

    காரணம்? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி... அறிவு ஜீவி... இளம் ஜீனியஸ்... கார் ஃபாதர்.

    நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா... உடனே உன் காதலைத் தூக்கிப் போடு... கேவலம் அற்ப காதலுக்காக... அற்புத வாழ்க்கையை இழந்திடாதே...! உன் கிட்ட படிப்பிருக்கு... திறமை இருக்கு... எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு... அதை உழைப்புல காட்டு... என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு... நான் போன்ல சொல்லிடறேன்... உடனே கிளம்பு... உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு... உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு... இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே... நாக்பூருக்குப் போ... விடியல் ரெடியா இருக்கு என்று நம்பிக்கையூட்டும் வித்த்தில் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

    கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்... ப்ச்... தப்புப் பண்ணிட்டேன்...உயரணும்... உயரணும்...ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு... ஆனா... ஊர்... உலகம்... உறவு... நட்பு... எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே...? என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது.

    ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்...சார்... ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்...? பெத்தவங்களை... நண்பர்களை... உங்களை... உங்க மனைவியை... பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு... சார்... எப்பவோ யாருக்கோ பயந்து இங்க வந்தேன்...! அதுக்காக இங்கேயே கடைசி வரை இருந்து சாகணுமா சார்?

    கண்டிப்பான ஒரே பதில்தான் வரும்வேண்டாம் தியாகு... அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை... அவன் அப்ப இருந்ததை விட இப்ப நிறைய ஆள்பலம்... பண பலத்தோட இருக்கான்...! இன்னும் பழசை மறக்காமல்... எப்ப நீ வருவேன்?னு காத்திட்டிருக்கான்... நீ வந்தே...? அவ்வளவுதான்... இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்...! எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே... அதுவும் நல்லா இருக்கறே... அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே

    அந்த பதில் என் ஆசைக்கு எதிர்மறை பதிலாய் இருந்தாலும், அதனுள் பொதிந்திருக்கும் என் மீதான அக்கறை, அன்பு, பாசம் எல்லாம் சேர்ந்து அதை ஒரு நேர் மறை பதிலாக்கி எனக்குக் காட்டி விடும்.

    அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

    தீர்மானித்து விட்டேன். அவரது சாவுக்குச் செல்வதென்று.

    விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

    விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன்.எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும் அதுவே என் பிரதான குறிக்கோளாயிருந்தது.

    நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது.கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு. ஓடினேன்.

    முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன்.எப்பேர்ப்பட்ட மனிதர்...? எப்படி முடிந்தது இவரால் மட்டும்... எப்போதும்... எல்லோருக்கும்... நல்லது மட்டுமே நினைக்க...? நல்லது மட்டுமே செய்ய...?

    அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை.இதில் பேராசிரியரின் மனைவி யார்...? துக்கம் விசாரிக்க வேண்டுமே... எப்படிக் கண்டுபிடிப்பது?

    பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

    மிஸஸ் சிவஞானம் தானே...? அதோ அந்த... கறுப்பு ஸாரி...

    அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

    இது... இது... நான் காதலித்த... மந்திரி சண்முகநாதனின்... மகள்... அல்லவா?

    இவளா... பேராசிரியரின் மனைவி?

    எனக்கு எதுவுமே புரியவுமில்லை... தோணவுமில்லை. எப்படி?

    என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

    "சார்... உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்...?

    Enjoying the preview?
    Page 1 of 1