Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Ammavukku...
Anbulla Ammavukku...
Anbulla Ammavukku...
Ebook142 pages54 minutes

Anbulla Ammavukku...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம் அன்பர்களே...

விளையாட்டுப் போல் இது என் மூன்றாவது கதைத் தொகுப்பு. சந்தோஷமாக இருக்கிறது. இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னார்... “உன் எழுத்தையெல்லாம் நான் கணக்குலயே எடுத்துக்க மாட்டேன்... அது இலக்கியத் தரம் வாய்ந்ததில்லை”

ஐயா எனக்கேத் தெரியும்... நான் இலக்கியம் படைக்கவில்லை என்று... நான் சந்தோஷத்துக்காக எழுதுகிறேன்... என் பாணியில் எழுதுகிறேன்... அதை ரசிப்பதற்கு சில ஆன்மாக்கள் இருக்கிறார்கள்... என்னுடைய நேரிடையான ஆடம்பரமில்லாத எழுத்து அவர்களுக்குப் பிடித்திருக்கிறது... அது போதும் எனக்கு...

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகளெல்லாம் கல்கி மின்னிதழிலும், லேடீஸ் ஸ்பெஷன் தீபாவளி மலரிலும், குங்குமம் வார இதழிலும், குவிகம் மின்னிதழிலும், பூபாளம் சிற்றிதழிலும் பிரசுரமானவை.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580142309480
Anbulla Ammavukku...

Read more from Sl Naanu

Related to Anbulla Ammavukku...

Related ebooks

Reviews for Anbulla Ammavukku...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Ammavukku... - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்புள்ள அம்மாவுக்கு…

    Anbulla Ammavukku...

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அன்புள்ள அம்மாவுக்கு…

    தோழி

    செல்வம் சார்

    மதிற்சுவர்

    உதவி

    அறை

    பல்லை எடுக்க வாரீயளா?

    பைரவ சாமியார்

    அவன்…

    குரல்

    சாரதி

    வாக்குறுதி

    பிராயசித்தம்

    கோணங்கி மனசு

    தலைகீழ் உளவியல்

    சமர்ப்பணம்

    என் அம்மா சிவகாமிக்கு

    என்னுரை

    வணக்கம் அன்பர்களே...

    விளையாட்டுப் போல் இது என் மூன்றாவது கதைத் தொகுப்பு. சந்தோஷமாக இருக்கிறது.

    இலக்கிய நண்பர் ஒருவர் சொன்னார்... உன் எழுத்தையெல்லாம் நான் கணக்குலயே எடுத்துக்க மாட்டேன்... அது இலக்கியத் தரம் வாய்ந்ததில்லை

    ஐயா எனக்கேத் தெரியும்... நான் இலக்கியம் படைக்கவில்லை என்று... நான் சந்தோஷத்துக்காக எழுதுகிறேன்... என் பாணியில் எழுதுகிறேன்... அதை ரசிப்பதற்கு சில ஆன்மாக்கள் இருக்கிறார்கள்... என்னுடைய நேரிடையான ஆடம்பரமில்லாத எழுத்து அவர்களுக்குப் பிடித்திருக்கிறது... அது போதும் எனக்கு...

    எண்பதுகளில் என் எழுத்து அங்கீகரிக்கப் படாதா என்று ஏங்கிய காலம் ஒன்று உண்டு... அப்போது தொடர்ந்து என் கதைகளை பிரசுரித்து என்னை ஊக்கப் படுத்தியவர் பத்திரிகை உலக ஜாம்பவான் ஆசிரியர் சாவி அவர்கள். அதிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முறையும் என் எழுத்து பிரசுரமாகும் போதும் நான் அவரை நினைக்கத் தவறுவதில்லை.

    அதிலிருந்து வெகு தூரம் கடந்து வந்திருக்கிறேன்... எழுத்துலகில் உச்சத்தைத் தொட வேண்டும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை... அதை இலக்கியவாதிகளுக்கு விட்டு விட்டேன்... ஆனால் நிச்சயமாக சில மைல்கற்கள் தாண்டியிருக்கிறேன் என்பது நிஜம். நான் எழுதிய இருபத்தியேழு மேடை நாடகங்கள் என் மற்ற எழுத்துக்களுக்கு அஸ்திவாரமாக இருந்திருக்கிறது. அந்த அஸ்திவாரத்தில் தான் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு குறு நாவல்கள், இரண்டு நாவல்கள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தருணத்தில் என்னுடைய குருநாதர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது. நான் இன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர் காட்டிய வழி தான்...

    இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகளெல்லாம் கல்கி மின்னிதழிலும், லேடீஸ் ஸ்பெஷன் தீபாவளி மலரிலும், குங்குமம் வார இதழிலும், குவிகம் மின்னிதழிலும், பூபாளம் சிற்றிதழிலும் பிரசுரமானவை. தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் இந்த பத்திரிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ஒவ்வொரு முறையும் சொல்வது தான்... குவிகம் பதிப்பகம் என் குடும்பம்... என் குடும்பத்துக்கு நான் நன்றி கூறவும் வேண்டுமா? என் குடும்பத்தின் ஆதரவுடன் நான் வெளியிடும் பத்தாவது புத்தகமிது.

    வழக்கம்போல் முகப்பு அட்டை வடிவமைத்துக் கொடுத்த எனது மகள் திருமதி சிவகாமி லெஷ்மிநாராயணனுக்கு நன்றி.

    தொடர்ந்து என்னை ஆதரித்துவரும் வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி...

    எஸ்.எல். நாணு

    1-E Sunflower,

    Ceebros Gardens,

    38 Arcot Road,

    Virugambakkam,

    Chennai 600092.

    Mob: 9444005848

    அன்புள்ள அம்மாவுக்கு…

    (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2022)

    அன்புள்ள அம்மாவுக்கு…

    நலமா…

    விசாரித்து வெகு காலமாகி விட்டதோ?

    உன் விருப்பம் கடிதம் தான்... தெரியும்... அதனால் தான்...

    தூரத்து சியாட்டிலில் செழிப்பாய் இருந்தாலும் அனு தினமும்... ஒவ்வொரு கணமும் உன் நினைப்பு தான்...

    காலையில் எழும்போதே உன் வாசனைக் காப்பி இன்னமும் என் நாசியைத் தாக்குகிறது...

    பள்ளிப் பருவத்தில் தினமும் என்னை துயிலெழுப்ப நீ செய்த பிரம்மப் பிரயத்தனங்களையும் நான் செய்த பாசாங்குகளையும் இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது...

    பள்ளியில் மதிப்பெண்கள் குறையும் போதெல்லாம் என்னை நீ வசை பாடாமல் அன்பாக அரவணைத்து ஆறுதல் கூறி என் தன்னம்பிக்கையை தூக்கி நிறுத்தியது நினைவுக்கு வருகிறது... அந்த அரவணைப்பு கொடுத்த ஆதரவில் தானே நான் பத்தாவதில் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தேன்... பிளஸ்-டூ வில் முதல் இடத்தைப் பிடித்தேன்...

    அந்த சமயத்தில் தானே நமக்குப் பேரிடி... அப்பா நம்மை விட்டு திடீரென்று பிரிந்தார்...

    கவலைப் படாதேம்மா... நான் இருக்கேன்... கடைசி வரை நான் உன்னைப் பார்த்துக்கறேன்

    தோளில் சாய்ந்து உன் கண்ணீரைத் துடைத்தேன்... அந்த ஈரம் இன்னும் என் கையில் இருக்கிறது...

    பொறியியல் பட்டம் பெற்ற பிறகு வேலைக்குச் செல்கிறேன் என்றேன்... ஆனால் மேலே படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து என்னை வெளி நாட்டில் படிக்க அனுப்பினாய்... அப்பா உனக்காக வாங்கியிருந்த ஏராளமான நகைகளை விற்றாய்... நம் வீட்டின் அடமானத்தில் வங்கியில் கடன் வாங்கினாய்...

    நான் படித்து முடித்து அங்கேயே ஒரு நல்ல வேலையிலும் அமர்ந்தேன்... உடனே எனக்குப் பெண் தேட ஆரம்பித்து விட்டாய்...

    எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...

    திடீரென்று ஒரு நாள் காலையில் கதவைத் தட்டினேன்...

    திறந்த உன் கண்களில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்...

    என்னைக் கட்டிக் கொண்டாய்... உயரம் போதாமல் முகத்தை இழுத்து உச்சி முகர்ந்தாய்...

    உடனே எனக்குப் பிடித்த சேப்பங்கிழங்கு ரோஸ்டும், வெங்காய சாம்பாரும், தக்காளி ரசமும், பப்படமும் (எனக்குத் தான் அப்பளம் பிடிக்காதே) தயார் செய்து சிறு வயது போல் உன் கையாலேயே எனக்கு ஊட்டி விட்டாய்... அந்தப் பருக்கை இன்னும் என் உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கிறது...

    சாப்பிட்டு உன் மடியில் படுத்துக் கொண்டே ஷாலினியைப் பற்றிச் சொன்னேன்...

    உன்னிடம் அதிர்ச்சியைத் தான் எதிர்பார்த்தேன்...... ஆனால் என் மகனுக்கும் காதலிக்கத் தெரியுமா என்ற ஆச்சர்யம்... அவன் சின்னக் குழந்தை இல்லை... வளர்ந்து விட்டான் என்ற பெருமிதம் தான் உன் முகத்தில் தெரிந்தது...

    ஷாலினியின் குடும்பத்தைப் பற்றி விவரம் கேட்டாய்... சொன்னேன்... பணக்காரக் குடும்பம்... கிரானைட் பிஸ்னஸ்... நுங்கம்பாக்கத்தில் காதர் நவாஸ் கான் ரோடில் பெரிய பங்களா...

    அப்பா... அம்மா... அப்பாவின் அப்பா... இரண்டு மகன்கள்... ஷாலினி ஒரே மகள்... இது தான் அவர்கள் குடும்பம்...

    இதைக் கேட்டு உன் மன ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை... உன் முகத்தில் எந்த சலனமும் தெரியவில்லை... திரும்பத் திரும்பக் கேட்டேன்...

    உனக்குப் பிடித்திருக்கிறது என்றால் எனக்கும் பிடிக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டாய்...

    ஷாலினியும் சென்னை வந்திருந்தாள்... அவர்கள் வீட்டில் எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை...

    லீலா பேலஸில் திருமணமும் நடந்து முடிந்தது... திருமண கோலாக திருவிழாவில் நீ ஒதுங்கியே நின்றாய்... நான் எவ்வளவோ அழைத்தும் நீ மேடைக்கு வர வில்லை...

    தாலி கட்டிய பிறகு உன் அருகில் வந்தேன்... உன் கண்களில் நீர்... அது ஆனந்தக் கண்ணீர் என்று தான் நினைத்தேன்...

    ஆனால் அது இயலாமைக் கண்ணீர் என்று அப்போது எனக்குப் புரியவில்லை... அந்தக் கண்ணீருக்குப் பின்னால் ஷாலினியின் அப்பா உனக்குப் போட்டிருந்த தடை உத்தரவுகள் நின்றன என்று எனக்கு விளங்கவில்லை... அதை நீ வழக்கம் போல் வெளிக் காட்டிக் கொள்ளவுமில்லை...

    சத்திரத்திலிருந்து கிளம்பினால் போதும் என்பது போல் நீ மாயமாக மறைந்து விட்டாய்...

    திருமணம் முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு முறை தான் ஷாலினி நம் வீட்டுக்கு வந்தாள்... அதுவும் பத்து நிமிடம் கூட இருக்கவில்லை... உடனே என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்... நீ ஆசையாகக் கொடுத்த சேலையைக் கூட பார்வையிலேயே அலட்சியம் காட்டி வாங்கிக் கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை தான்... அதுவும் வெளியே வந்து அந்தப் புடவையை டிரைவரிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1