Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasthaiyo Avasthai
Avasthaiyo Avasthai
Avasthaiyo Avasthai
Ebook125 pages44 minutes

Avasthaiyo Avasthai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

”வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்” இது ரொம்பப் பழைய மொழி... “இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்” இது தான் புது மொழி... வீட்டுல சமையலறைய ரெனவேஷன் பண்றதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே... எப்படி அல்லோலப் பட்டேன்னு தெரிஞ்சுக்கணுமா? இந்தக் கதையை... உகும் என் அனுபவத்தைப் படிங்க... சிரிச்சுக்கிட்டே புரிஞ்சுப்பீங்க...

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580142309958
Avasthaiyo Avasthai

Read more from Sl Naanu

Related to Avasthaiyo Avasthai

Related ebooks

Related categories

Reviews for Avasthaiyo Avasthai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasthaiyo Avasthai - SL Naanu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அவஸ்தையோ அவஸ்தை

    (ஸ்ரீ கணபதே நம: ஓம் முருகன் துணை)

    Avasthaiyo Avasthai

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்...

    இது ரொம்பப் பழைய மொழி...

    இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்.

    இதுதான் புது மொழி...

    கிட்சன் வசதியாவே இல்லை... சமையல் மேடை கிழக்கப் பார்த்து இல்லை... தெற்கப் பார்த்து இருக்கு... தெற்கப் பார்த்து சமைக்கறதுனாலதான் நம்ம உடம்பை அடிக்கடி படுத்தறது (அப்பப்ப வர ஜலதோஷம், தலைவலி தான்... வேற ஒண்ணும் பெரிசா இல்லை), சிங்க் மூலைல இருக்கு... எம்பி எம்பி குழாயைப் பிடிக்க வேண்டியிருக்கு... முதுகு வலி பிராணன் போறது... எக்ஸாஸ்ட் இருந்தும் பிரயோஜனம் இல்லை... புகை சுத்தி சுத்தி வந்து இருமல்தான் மிஞ்சறது.

    விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ற மாதிரி என் சகதர்மணி மூணு நாலு வருஷமா தினம் இதை பாராயணம் பண்ணிண்டிருந்தா...

    நானும் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிச்சிண்டிருந்தேன்... அதுக்குக் காரணம் இருந்தது... அவளோட பாராயணத்தைக் கொஞ்சம் டீப்பா அனலைஸ் பண்ணிப் பார்த்ததுல குறைஞ்சது மூணுலேர்ந்து அஞ்சு லட்சம் ரூபாய் வரை எடுத்து வெக்கணும்னு என் மனசு சிவப்பு விளக்குக் காட்டி எச்சரிக்கை பண்ணினது தான்...

    ஒரு கட்டத்துக்கு மேல என் தட்டிக் கழிப்பு தந்திரம் எதுவும் வேலைக்காகலை...

    கிட்சனை ரெனவேட் பண்ணலைன்னா இனிமே நான் சமைக்க மாட்டேன்.

    உப்பு சத்தியாகிரகம் மாதிரி இது சுப்பு சத்தியாகிரகம்... (ஹி... ஹி... என் சகதர்மணி பேரு சுப்புலெஷ்மி... சுப்பு).

    வேற வழியில்லாம சுப்புவோட தம்பி காசி மூலமாவே ஒரு காண்ட்ராக்டரைப் பிடிச்சேன் (நாளைக்கே ஏதாவது பிரச்சனைன்னா... எல்லாம் உன் தம்பி கூட்டிண்டு வந்த ஆள்தானேன்னு நாம தப்பிச்சுக்கலாங்கற நப்பாசை).

    காண்ட்ராக்டர் வேலாயுதம் எங்க வீட்டு சமையலறையை ஏதோ புதைப்பொருள் ஆராய்ச்சி பண்ணற மாதிரி கூர்மையான கம்பியால நோண்டி நோண்டிப் பார்த்தார்... மர கபோர்டையெல்லாம் தட்டிக் கொட்டிப் பார்த்தார் கடைசில பெருமாள் கோவில் யானை மாதிரி தலை ஆட்டிண்டே...

    உகும்... எதுவும் சரியில்லை... இதை இப்படியே விட்டா இன்னும் கொஞ்ச நாளுல எல்லாம் இடிஞ்சு விழுந்துரும்... எல்லாத்தையும் இடிச்சிட்டு... உடைச்சிட்டு... புதுசாத்தான் பண்ணணும்...

    இதைக் கேட்ட உடனே எனக்கு ஊருல இருக்கற எல்லா எலிகளும் என் வயத்துக்குள்ள ரௌண்டடிச்ச மாதிரி இருந்தது...

    வந்து... மொத்தம் எவ்வளவு செலவாகும்னு ஒரு கொட்டேஷன்?

    ம்... அதுக்கென்ன... தரேன்.

    தயாரா வெச்சிருந்த பேப்பர் பேனாவோட நாற்காலிய இழுத்துப்போட்டு உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சார் வேலாயுதம்...

    அவர் யோசிச்சு யோசிச்சு எழுதறதைப் பார்க்கும்போது அவர் கொட்டேஷன் எழுதறாரா, இல்லை கதை எழுதறாரான்னு எனக்கு சந்தேகம் வந்தது...

    மர்ம நாவல்கள்ல வர திடுக் திடுக் தருணங்கள் மாதிரி எவ்வளவு வேட்டு வெக்கப் போறாரோங்கற பதபதைப்புல நான் ஒரு விதமான தவிப்போட நின்னுண்டிருந்தேன்...

    பத்து நிமிஷம்... எழுதினதை அடிச்சும் திருத்தியும்... மறுபடியும் என்னெல்லாமோ எழுதியும்...

    கடைசில என்னைப் பார்த்துச் சிரிச்சார்...

    என்ன பண்றதுன்னு தெரியாம நானும் பதிலுக்கு அசட்டுத்தனமா சிரிச்சேன்...

    நீங்க ரொம்ப வேண்டப்பட்டவராப் போயிட்டீங்க.

    நான் வேண்டப்பட்டவரா? இன்னிக்குத்தானே உங்களை முதல் தடவையாப் பார்க்கறேன்... அப்புறம் எப்படி? நல்லவேளை என் மைண்ட் வாய்ஸ் அவர் காதுல விழலை...

    நீங்க ரொம்ப வேண்டப்பட்டவராப் போயிட்டீங்க... அதனால நான் அதிகமா ரேட் போடலை.

    ரொம்ப சந்தோஷம்.

    என் லாபத்தைக்கூட பாதிக்குப் பாதியாக் குறைச்சிட்டேன்.

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    இதைவிடக் குறைச்சலா யாரும் இந்த வேலையை ஒப்புக்க மாட்டாங்க.

    அப்படியா?

    நான் கொடுத்திருக்கிற ரேட்டைப் பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

    வந்து...

    வேலை முடிஞ்ச அப்புறம் இது நம்ம வீட்டு சமையலறைதானான்னு உங்களுக்கே சந்தேகம் வந்துரும்... இப்பப் பாருங்க... அழுது வடியுது... அப்புறம் பளிச்சுன்னு ஆயிரும்... சினிமாவுலலாம் காட்டுவாங்களே... அது மாதிரி.

    ஓ...

    உங்களுக்கு நடிகர் வாயுஷைத் தெரியுமோ...? நான் ஒரு மடையன்... வாயுஷைத் தெரியாதவங்க தமிழ்நாட்டுல... ஏன் இந்தியாவுலயே இருக்க முடியுமா? அவங்க வீட்டு சமையலறையை நான்தான் செட் பண்ணிக் கொடுத்தேன்... அவங்க சம்சாரத்துக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் பேசின தொகைக்கு மேல அம்பதாயிரம் ரூபா கொடுத்தாங்க.

    வந்து... என்னால அவ்வளவுலாம்...

    ஐயோ... நான் உங்ககிட்ட அவ்வளவு கேட்பேனா? நீங்கதான் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவராப் போயிட்டீங்களே...

    சரி... மொத்தம் எவ்வளவு?

    இருக்கிற மேடை... அட்டம்... ஷெல்ப்... எல்லாத்தையும் இடிச்சுரணும்... எல்லாம் புதுசாத்தான் போடணும்... பெஸ்ட் குவாலிட்டி சாமான்கள்தான் உபயோகப்படுத்துவேன்... ஏன்னா... நீங்க ஒரு தடவை செலவு பண்ணினா குறைஞ்சது பதினஞ்சு, இருபது வருஷம் தாங்கணும்.

    சரிங்க... எவ்வளவு...?

    இந்தாங்க... நீங்களே பார்த்துக்குங்க.

    அவர் நீட்டின சீட்டைப் பார்த்தவுடனே எனக்குள்ள நூறு ஆட்டம்பாம்ப் வெடிச்ச மாதிரி இருந்தது...

    என்னையுமறியாம... ஐயையோன்னு கத்திட்டேன்...

    உடனே வேலாயுதம் புன்சிரிப்போட சொன்னார்...

    பார்த்தீங்களா... நான் சொன்ன மாதிரி என் ரேட்டைப் பார்த்து நீங்க ஆச்சர்யப்பட்டுப் போயிட்டீங்க.

    ஆச்சர்யப்படலை... ஆடிப் போயிருக்கேன்...

    இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான்... அவருக்குக் கேட்கலை...

    2

    வாழ்க்கைல சபலப்பட்டு சில விஷயங்களுக்கு ஆசைப்பட்டுடறோம்... ஆனா அதை நடத்தி முடிக்கறதுக்குள்ள ஏன்டா அதுக்கு ஆசைப்பட்டோம்னு நொந்து நூடுல்ஸ் ஆயிடறோம்... இருக்கற வீட்டை ரெனவேஷன் பண்றதும் அப்படி ஒரு ஒரு சோகக் கதைதான்... புது வீடு கட்டறதுல பிரச்சனையே

    Enjoying the preview?
    Page 1 of 1