Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyaanamaalai
Kalyaanamaalai
Kalyaanamaalai
Ebook101 pages31 minutes

Kalyaanamaalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Manimala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466886
Kalyaanamaalai

Read more from R.Manimala

Related to Kalyaanamaalai

Related ebooks

Related categories

Reviews for Kalyaanamaalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyaanamaalai - R.Manimala

    1

    குணா பி.ஏ., பி.எல்., என்ற எழுத்துக்கள் பித்தளை போர்டில் கதிரவனின் கதிர்பட்டு தங்கமாய் தகதகத்தது.

    காய்கறி விற்கும் பொன்னம்மா கேட்டை தள்ளி உள்ளே வந்தததில் எண்ணெய் பார்த்து நாளான கேட் கத்தி சப்தமெழுப்பியது.

    யாரது? என்று கேட்டபடி வெளியே வந்தார் அன்பழகன்.

    ஓ... நீதானா? இன்னைக்கென்ன இவ்வளவு லேட்டா வர்றே?

    என் தலைவிதிங்க... காய்கறியெல்லாம் புத்தம் புதுசா இருக்கு. சீக்கிரம் வேணுங்கறதை வாங்கிக்குங்க. தெருத் தெருவா போகணும். இப்பவே வெயில் சுரீர்னு மூஞ்சிய நெருப்பா பொசுக்குது. ஹும்... கட்டிய புருஷன் சரியார்ந்தா... எனக்கேன் இந்த நாய் பொழைப்பு?

    நீயே கஷ்டப்பட்டு சுயமா சம்பாதிக்கிறியே... அதுக்காக சந்தோஷப்பட்டுக்க பொன்னம்மா! அதுக்கும் ஒரு வில்பவர் வேணும். அது உன்கிட்டே இருக்கு.

    பொன்னம்மாள் களுக்கென சிரித்தாள்.

    நான் என்ன ஜோக்கா சொன்னேன்? ஏன் சிரிக்கிறே?

    ஒண்ணுமில்லேய்யா!

    ப்ச்... சொல்லு!

    அட விடுங்க சாமி! சும்மாதான் சிரிச்சேன்

    காரணமில்லாம சும்மா சிரிச்சா என்ன அர்த்தம் தெரியுமா?

    ம்... தெரியுமே! பைத்தியம்னு சொல்வாங்க. நான் பைத்தியக்காரியாகவே இருந்துட்டுப் போறேன். தக்காளி நல்லாயிருக்கு. அரைகிலோ போடவா? ஒரு கிலோ போடவா?

    பேச்சை மாத்தறே! வெண்டைக்காய் ஏன் முத்திப்போய் இருக்கு? சுகுணாவுக்கு பிடிக்காது வேணாம். நாளைக்கு பிஞ்சு கத்திரிக்காயா எடுத்திக்கிட்டு வா! சுகுணா கத்திரிக்காய் பொரியல் கேட்டிருந்தா... புதினா ஒரு கட்டு போதும். மொத்தம் எவ்வளவு ஆச்சு? சீக்கிரம் கணக்கு போட்டு சொல்லு!

    உங்கிட்டே எதுக்கு அண்ணாத்தே கணக்கு வழக்கெல்லாம்? நியாய்மா குடுக்கறதை எப்பவும் போல குடு!

    இப்படி பேசிப் பேசியே, எங்கிட்டேர்ந்து அதிகமா வாங்கிடறியோன்னு தோணுது!,

    போங்க அண்ணாத்தே... இந்த காலத்துல உழைச்சு சம்பாதிக்கிறதே உடம்புல ஒட்டறதில்லே... ஏமாத்தி சாப்பிடறது எப்படி ஒட்டும்?

    சரி... சரி... நீ எதுக்கு சிரிச்சே? அதைச் சொல்லு?

    அட வேணாம் அண்ணாத்தே! இந்த கூறுகெட்டவ எதையோ நினைச்சி சிரிச்சுக்கிட்டேன். விடுவியா?

    இல்லே நீ எதையோ மறைக்கிறே? என்கிட்டே சொல்றதுக்கென்ன பொன்னம்மா?

    சொல்லாம என்னை விடமாட்டே போலிருக்கே?

    ஆமாம்! அதுமட்டுமில்லே... சொல்லலேன்னா... இனி உன்கிட்டே காய்கறிகூட வாங்கப்போறதில்லே...

    அட... உன் மனசு கஷ்டப்பட வேணாம்னுப் பார்த்தா என் வயித்திலேயே அடிக்கிறியே... எனக்கென்ன வந்துச்சு? சொல்லிடறேன். அதென்னமோ ஒரு பவர் சொன்னியே... என்ன பவர் அது?

    வில்பவர்!

    ஆங்... அதேதான்!. அந்தப் பவர் ஏன் உன்கிட்டே இல்லாமப் போச்சுன்னு நினைச்சேன்... கபால்னு சிரிப்பு வந்துச்சு... அவ்ளோதான்!

    இதை நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்! முணுமுணுத்தபடி காய்கறிகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

    அண்ணாத்தே... ரொம்ப தாகமா இருக்கு. ஒரு தம்ளர் தண்ணி தர்றியா?

    ம்... ம்... என்று தலையாட்டிக்கொண்டே போனார்.

    அதேநேரம் -

    மாடிப்படிகளில் கம்பீரமாய் இறங்கி வந்துகொண்டிருந்தாள் சுகுணா!

    அம்மா...! என்றபடி உள்ளே வந்தாள் பொன்னம்மாள்.

    வா... பொன்னம்மா!

    உங்களைத்தாம்மா... ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அம்மாவைதான் பார்க்க முடியலே

    கோர்ட், கேஸ்னு அலையறவளுக்கு ஏது நேரும்? சொல்லு என்ன விஷயம்?

    ஹும்... எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்மா...!

    என்ன சொல்றே?

    உங்களை ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவிடாம உள்ளங்கையிலே வச்சு தாங்கற உங்க புருஷனை மாதிரி எல்லாருக்கும் கிடைச்சிட்டா... எல்லா பொம்னாட்டிகளும் பிரச்சினை இல்லாம சந்தோஷமா இருப்பாங்க!

    சரி... சரி... அவரை புகழ்ந்தது போதும். உன் பிரச்சனை என்ன சொல்லு?, சொன்னதும்தான் தாமதம் பொன்னம்மாள் சேலைத் தலைப்பை வாயில் பொத்தி அழ ஆரம்பித்தாள்.

    அவளை சமாதானப்படுத்தி ஒரு வழிக்குக் கொண்டுவர, ஐந்து நிமிடம் தேவைப்பட்டது சுகுணாவிற்கு...

    எனக்கு கோர்ட்டுக்குப் போக நேரமாச்சு. அழாம விஷயத்துக்கு வா!

    இங்கே பாருங்கம்மா! முழங்கையையும், முதுகையும் காண்பித்தாள். பட்டை! பட்டையாய் இரத்தம் கட்டிக் கொண்டிருந்தது.

    என்னடி இது?

    என் புருஷன் குடிச்சிட்டு வந்து அடிச்சிட்டான்ம்மா! அந்தாளோட நான் படற இம்சை கடவுளுக்கேப் பொறுக்காது. தெருத்தெருவா வெயில்லேயும், மழையிலேயும் வாடி வதங்கி. காய்கறி வித்து நாலு காசு சேர்த்தாதான் என் வீட்லே நாலுபேரு வயிறு ஈரமாகும். இந்தாளு ரிக்ஷா ஓட்டறான். ஆனா, பத்து பைசா குடுக்கறதில்லே. சம்பாதிக்கிற பணத்தை சாராய கடைக்கு கொடுத்துட்டு வந்து என்னையும், பிள்ளைகளையும் குடிபோதையில் கண்மண் தெரியாம உதைக்கிறதே வாடிக்கையாப் போச்சு

    "பிள்ளைங்க அப்பனை தெருமுனையிலே வர்றதை பார்த்ததுமே நடுங்க - ஆரம்பிச்சிடுதுங்க. சொல்லித் திருத்த. யாருமில்லே. நேத்து அந்தாளோட. அட்டகாசம் அதிகமாய் போய் தாலிய அறுத்தெறிஞ்சிட்டான். விசாரிச்சிப் பார்த்தப்பதான் தெரிந்தது... அந்தாளுக்கு வேறொரு சிறுக்கியோட தொடர்பு இருக்குன்னு. இந்தாளுக்கு நான் என்ன குறை வெச்சேன்? புடவை வேணும், நகை வேணும்னு. சண்டை போட்டேனா? இல்லையே! எனக்கு போடலேன்னாலும் பெத்த குழந்தைகளுக்காவது ஒரு கைப்பிடி சோறு போடுய்யான்னுதானே கேக்கறேன்.

    இந்தாளுக்கு ஏம்மா புத்தி இப்படி போகணும்? ரெண்டு புள்ளைங்களை பெத்த பிறகு எப்படிம்மா புதுசா இன்னொருத்தி மேல லவ்வு வரும்? அந்தாளுக்கு சுயபுத்தி கிடையாது. படிச்ச நீங்க சொல்ற விதத்தில் எடுத்து சொன்னா... திருந்துவாருங்கற நம்பிக்கை எனக்கிருக்கும்மா! நீங்கதாம்மா எனக்கு வாழ்க்கை தரணும். கை

    Enjoying the preview?
    Page 1 of 1