Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivathin Theerpu
Deivathin Theerpu
Deivathin Theerpu
Ebook72 pages28 minutes

Deivathin Theerpu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செல்வச் செழிப்புடன், செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் துர்கா. திருமணமாகி இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் கணவன் வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விடுகிறாள். அவளது கணவன் பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பர்சனல் மேனஜராக பணிபுரிகிறான். இவர்களது சண்டை விவாகரத்து வரை செல்கிறது. இருவரும் பிரிந்தார்களா? இவர்களது வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் என்ன? தெய்வத்தின் தீர்ப்பு தான் என்ன என்பதை இக்கதையில் காண்போம்.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580100606637
Deivathin Theerpu

Read more from Devibala

Related to Deivathin Theerpu

Related ebooks

Reviews for Deivathin Theerpu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivathin Theerpu - Devibala

    https://www.pustaka.co.in

    தெய்வத்தின் தீர்ப்பு

    Deivathin Theerpu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    என்னால அந்த ஆள்கூட வாழ முடியாது. எனக்குப் பிடிக்கலை! துர்கா வந்து சொன்னபோது அப்பா, அம்மாவுக்கு பகீரென்றது.

    நீ என்னடி சொல்ற?

    நான் படிச்சவள். கை நிறைய சம்பாதிக்கறேன். இத்தனைநாள் பொறந்த வீட்ல சுதந்திரமா இருந்தேன். இப்ப அந்த ஆளுக்கும், அவங்க குடும்பத்துக்கும் நான் கொத்தடிமையா இருக்கத் தயாரா இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை!

    அந்த ஆள்... இந்த ஆள்னெல்லாம் கட்டின புருஷனைப் பேசக்கூடாது துர்கா. அது தப்பு!

    என்னை மதிச்சாத்தான் புருஷன். இல்லைனா யாரோதான்!

    அம்மா கலக்கத்துடன் அப்பாவைப் பார்த்தாள்.

    அவர்களது ஒரே மகள் துர்கா. வயது இருபத்தி ஒன்று! செல்லமாக, ரொம்ப ரொம்பச் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்!

    அப்பா வசதியான வாழ்க்கையை அவள் கண்களில் காட்டிவிட்டார். ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி. அதனால் எடுத்த எடுப்பில் பிறந்தபோதே விமானத்தில் பறந்தாள் துர்கா. சொந்த வீடு... கார் என ஒரு வசதிகூட பாக்கியில்லை!

    நகரத்தில் உயர்தரமான ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்கள் துர்காவை. பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்க முடிந்த பள்ளிக்கூடம் அது!

    எல்லாவிதத்திலும் சலுகை!

    அதனால் வளரும்போது அழகும், புத்திசாலித்தனமும், திமிரும் கூடவே வளர்ந்தது. யாரிடமும் ஒட்ட மாட்டாள். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்ததும் அயல்நாட்டு வங்கி ஒன்றில் ஐந்து இலக்கச் சம்பளத்தில் வேலையும் கிடைத்துவிட்டது. பிறகு சொல்லவா வேண்டும்!

    கல்யாணத்துக்கு பார்த்தார்கள்.

    துர்கா மறுக்கவில்லை!

    காதல் விவகாரம் எதிலும் அவள் விழவில்லை!

    அப்பா நல்ல இடமாகத்தான் பார்த்தார்.

    தனியார் நிறுவனமொன்றில் பர்சனல் மானேஜராக இருந்தான். இவர்கள் அளவுக்கு அந்தப் பையனின் குடும்பத்தில் வசதி இல்லை. அவனுக்கு சகோதரிகள் மூன்று பேர். எல்லாருக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது. சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. பையனின் படிப்பு, உத்யோகத் தகுதிகளைப் பார்த்துதான் அப்பா தேர்ந்தெடுத்தார்.

    வசீகரமாக, அழகாக இருந்தான்.

    என்னங்க! குடும்ப அந்தஸ்த்து இன்னும் வேணுமோ? அம்மா கேட்டாள்.

    தேவையில்லைமா! நமக்கு பையன்தான் பிரதானம்! இவளும் சம்பாதிக்கறா! ஒரு பிரச்னையும் வராம வாழலாம்.

    துர்காவை பார்க்க அவர்கள் வந்தார்கள்.

    பரஸ்பரம் பிடித்துவிட்டது.

    மற்ற வேலைகளை மளமளவென முடிய, பிரம்மாண்டமாக கல்யாணத்தை நடத்திக் காட்டிவிட்டார் அப்பா! இப்படி ஒரு கல்யாணமா என ஊரே மூக்கில் விரல் வைத்துவிட்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1