Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeevanamsam
Jeevanamsam
Jeevanamsam
Ebook101 pages44 minutes

Jeevanamsam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிலி இளம் வயது, படிப்பு நிறைந்த, அழகான, லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்.
அவள் தன் திருமண வாழ்க்கைக்காக போடும் கட்டுப்பாடுகளும் அதற்கு மாப்பிள்ளை வீட்டில் வரும் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்புகளுமே ஜீவனாம்சம் கதையாகும்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606554
Jeevanamsam

Read more from Devibala

Related to Jeevanamsam

Related ebooks

Reviews for Jeevanamsam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeevanamsam - Devibala

    https://www.pustaka.co.in

    ஜீவனாம்சம்

    Jeevanamsam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மிலிக்கு வயது இருபத்தி ஆறு! ஒரு கம்பெனியில வேலை பார்க்கும் பெண்! பிடித்தம் போக கைக்கு லட்ச ரூபாய் சம்பளம் வரும்! எம். டெக். எம்.பி.ஏ. படிப்பு! அழகான, தன்னம்பிக்கை தூக்கலான, பிடிவாதம் நிரம்பிய பெண்!

    தான் நினைத்தது நடக்க வேண்டும். யாருக்கும் சுலபத்தில் அடங்கமாட்டாள்.

    சுயநலத்தின் உச்சியில் நிற்கும் பெண்!

    மிலிக்கு ஒரு தங்கை சொப்னா! வயது இருபத்தி ரெண்டு! எம்.காம். கடைசி வருஷம் முடிக்கப் போகிறாள். நேர் எதிரான பெண்!

    அனுசரித்துப் போக வேண்டும் என அக்காவுக்கே பாடம் நடத்தி அடிக்கடி வாங்கிக்கட்டிக் கொள்பவள்!

    பொறுமை, சகிப்புத் தன்மை இரண்டும் நிறைந்தவள்!

    அப்பா ரயில்வேயில் உத்யோகம்! ரிடையர் ஆக இரண்டு வருடங்களே பாக்கி!

    அம்மா பள்ளிக்கூடத்தில் டீச்சர்!

    அப்பா, அம்மா சம்பாதித்து ஏராளமான பிரச்னைகளைக் கடந்து ஆரம்ப காலத்தில் அனகாபுத்தூரில் வாங்கிய ஒரு பழமையான வீடு!

    அம்மாவுக்கு பம்மலில் பள்ளிக்கூடம்.

    அப்பாவுக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் வேலை!

    மிலி தலையெடுத்து மூன்று வருடங்களாக சம்பாதிக்கத் தொடங்கி விட்டதால், பணத்துக்கு பிரச்னையில்லை.

    நாலு முறை கம்பெனி நிமித்தமாக வெளிநாட்டுக்குப் போய் வந்தாள்!

    மிலி சம்பாதிக்கத் தொடங்கியதும் சம்பளத்தை அப்படியே தருவாள் என பெற்றவர்கள் எதிர்பார்த்தார்கள். நடக்கவில்லை!

    உன் செலவுக்கு என மாதம் இருபதாயிரம் தர்ற. அதற்கு மேல அதிகமா என்ன செலவு வந்தாலும் தரமாட்டேங்கிற.

    எதுக்கு? அப்பா சம்பளம் பிடித்தம் போக நாப்பது. உன்னுது இருபத்தி அஞ்சு! போதாதா? இப்ப நானும் தர்றது எக்ஸ்ட்ரா தானே?

    உனக்குக் கல்யாணம் நடத்துணும்டி!

    நீ சீட்டுப் போட்டு கிட்டத்தட்ட நாப்பது சவரன் சேர்த்து வச்சிருக்கே! ஆளுக்கு இருபது போட்ரு! தவிர, டெபாஸிட் இருக்கில்லை?

    சரிடீ கல்யாணச் செலவுகள் பல லட்சங்கள் ஆகுமே!

    ஏன்?

    நல்ல பெரிய மண்டபம் பார்த்து, எல்லாருக்கும் துணிமணி எடுத்து, சாப்பாட்டுச் செலவு... எப்படி போனாலும் முப்பது லட்சமாவது ஆகும்டி!

    அவசியமே இல்லை! மண்டபமெல்லாம் வேண்டாம்! கோயில்ல வச்சு நடத்தலாம்! அவசியமானவங்க மட்டும் வந்தா போதும்! ஒரு ஓட்டல்ல வச்சு ரிசப்ஷன் குடுத்துடலாம்! பட்ஜெட்டை நான் போட்டுத் தர்றேன்!

    நிறுத்துடி! நீ என்ன சொன்னாலும், நாங்க தலையாட்டுவோம்! ஆனா பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதிக்கணுமே!

    சம்மதிக்கறவங்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன்!

    அப்பா, அம்மா ஆடிப் போனார்கள்!

    இந்த மூன்று வருடங்களில் படிப்படியாக உயர்ந்து கிட்டத்தட்ட கையில் இருபது லட்சம் வரை சேமித்து விட்டாள்!

    முதலில் வந்த இரண்டு வரன்களை ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டி விட்டாள்!

    அவளுக்கென ஒரு கார் வாங்கிக் கொண்டாள்.

    அவளே ஓட்டிக் கொண்டு போவாள்!

    தாராளமாக செலவு செய்வாள். விதம்விதமான உடைகள், நகைகள் என இளமையில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்!

    தான் - தான் சுகம்!

    குடும்பப் பற்று அறவே இல்லை!

    அம்மா விசாலம் கவலைப்படாத நாளில்லை! அப்பா கிருஷ்ணன் எதுவும் பேசமாட்டார்!

    மூத்த மகளை நிறைய எதிர்பார்த்து அதனால் ஏமாற்றம் அடைந்த காரணமாக பேச முடியவில்லை!

    சொப்னாதான் ஆறுதல்!

    மிலிக்கு வரன் பார்க்கும் பேச்சை மறுபடியும் அம்மா எடுக்க, இதப்பாரு! நீ கவலைப்படாதே! நானே தேர்ந்தெடுத்துப்பேன்! விட்ரு!

    நீ யாரையாவது விரும்பறியா?

    இதுவரைக்கும் இல்லை! நான் ஒரு பட்டியல் வச்சிருக்கேன். அதுல பத்துக்கு எட்டு டிக் ஆகணும்! அவன்தான் எனக்குப் புருஷனா வர முடியும்!

    அதென்ன பட்டியல்?

    வாழப் போறவ நான்! அதை நீங்க தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?

    ஏண்டீ? நாங்க உன்னைப் பெத்தவங்க! நீ தானா முளைச்சு வரலை! நாங்க ஆளாக்கி, உன்னைப் படிக்க வச்சு, இந்த உயரத்துல நீ நிற்கக் காரணம் நாங்கதான்!

    இதப்பாரு! நான் நல்லா படிச்சு வந்த காரணமாத்தான் இந்தப் பதவியும், பணமும். பணம் கட்டினா மட்டும் போதாது! முன்னுக்கு வர்ற உத்வேகம் எங்கிட்ட இருந்திருக்கு! ஒரு முட்டாளுக்கு நீ செலவழிச்சிருந்தா பலன் கிடைச்சிருக்குமா?

    இது ஒரு பேச்சாடீ?

    அம்மா! பெத்தவங்க பிள்ளையை ஆளாக்கறது கடமைதான்! தியாகமில்லை!

    பிள்ளைகளுக்கும் அந்தக் கடமை இருக்கே!

    நான் சம்பாதிச்சு பணம் தந்துட்டுத் தானே இருக்கேன்! இந்த மூணு வருஷத்துல நான் தந்த பணம், நீ செலவழிச்சதை விட அதிகம்!

    பணக் கணக்கு பாக்கறியா? அப்ப நீ குடிச்ச தாய்ப்பாலுக்கு என்னடீ விலை?

    இந்த உதவாத சென்டிமெண்ட்டைப் பேசி நேரத்தை வீணாக்காதே!

    "விட்ரு விசாலம்! நீ என்ன பேசினாலும் அவளுக்குனு ஒரு குணம் உண்டு! அதை நீ மாற்ற முடியாது! அவளை நம்பி நாம இல்லை! அதனால நீ

    Enjoying the preview?
    Page 1 of 1