Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaval Deivam
Kaaval Deivam
Kaaval Deivam
Ebook108 pages40 minutes

Kaaval Deivam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100605266
Kaaval Deivam

Read more from Devibala

Related to Kaaval Deivam

Related ebooks

Reviews for Kaaval Deivam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaval Deivam - Devibala

    http://www.pustaka.co.in

    காவல் தெய்வம்

    Kaaval Deivam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    காலையில் அஜிதா கண் விழித்ததும், எதிரே ரோஜாப் பூவுடன் நின்றாள் ரஞ்சிதா.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    தங்கையை அணைத்து முத்தமிட்டாள்.

    நன்றிக்கா…!

    அம்மா துளசி உள்ளே வந்தாள்.

    சீக்கிரம் பல் தேச்சு குளிச்சிட்டு வா! இன்னிக்கு உனக்கு பரீட்சை… நேரமாச்சு.

    ஏம்மா... பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டியா?

    ஸாரி அஜி... மறந்துட்டேன்!

    நல்லதுதான்... மறந்தா ஆயுள் அதிகம் - ரஞ்சிதா சொல்ல...

    அக்கா! இன்னிக்கு ‘லீவு’ போடவும் வழி இல்ல. பரீட்சை வந்து மாட்டிடுச்சு. போரடிக்குது.

    இதோ பாருடி! பெரிசா பிறந்தநாள் கொண்டாட நீ என்ன பெரிய மனுஷியா? சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பொண்ணு. நேரமாச்சு... வா.

    அம்மா, பள்ளிக்கூடத்து 'டீச்சர்'.

    கணவன் பரந்தாமன், தனியார் நிறுவனத்தில் அதிகாரி.

    மூன்று பெண்கள். மூத்தவள் ஜானு, கல்யாணமாகி பெங்களூரில் வசிக்கிறாள். அவளும், கணவனும் உத்தியோகம் பார்ப்பவர்கள். மாமியார்... கூடவே!

    அடுத்தது ரஞ்சிதா, படிப்பை முடித்து, இங்கே தனியார் வேலை. மூன்றாவது அஜிதா. கல்லூரியில் 'பி.காம்.' கடைசி வருஷம்.

    தாய் துளசி, 'பிராக்டிகலான' பெண்மணி.

    சிக்கனமான குடும்பத் தலைவி!

    குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பவர் அப்பா. கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார். 'குழந்தைகள் முகம் கோணக்கூடாது!' என நினைப்பவர்.

    அம்மா நேர் எதிர்.

    ஆண் பிள்ளை இல்ல. மூத்தவளை சேமிப்பில்... 'லோன்' போட்டு நல்லபடியாக கல்யாணம் செய்து கொடுத்தாகிவிட்டது. அவளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை.

    ஏற்கெனவே கட்டிய வீட்டுக் கடன் தொடர்கிறது.

    மூத்தவள் ஜானுவின் கல்யாண மற்றும் பிரசவச் செலவு.

    மூன்றாவது மகள் அஜிதாவின் படிப்புச் செலவு.

    இத்தனையும் துளசியின் சிக்கனமான, சாதுரியமான குடித்தனத்தால் தான் சாத்தியப்பட்டது.

    அதற்கு வீட்டில் நிறைய எதிர்ப்பு கிளம்பினாலும், துளசியின் கைதான் ஓங்கும்.

    நீங்க செல்லம் குடுத்தது போதும்! இன்னும் ரெண்டு பேரை கரை சேர்க்கணும்.

    நடக்கும் துளசி! நீயும், நானுமா சேர்ந்து... பிடித்தம் - கடன் போக வீட்டுக்கு முப்பதாயிரம் கொண்டு வர்றோம்.

    சரிங்க! மாதச் செலவு, 'டெபாசிட்', நகைச் சீட்டு, பெட்ரோல் காசு எல்லாம் வேணுமில்ல? மாசக் கடைசியில மூச்சு திணறுது.

    ரஞ்சிதா கடந்த ஒரு வருஷமா சம்பாதிக்கிறாளே?

    அது நமக்கு நிரந்தரம் இல்லைன்னு முதல் சம்பளத்துலேருந்து அதை சேமிப்பாக்கிட்டேன். இன்னும் ஒரு வருஷம் அவ சம்பாதிச்சா... கல்யாணம் பேசத் தொடங்கிடலாம். மறுபடியும் கடன் வாங்கணும். உங்களுக்கு நாலு வருட 'சர்வீஸ்'. எனக்கு ஆறு.

    சரி! 'போனஸ்', 'இன்சென்டிவ்'ன்னு முதலாளி எனக்கு நிறைய செய்யறார். அதுவே மாசம் பத்தாயிரம் வருதே?

    அது தனி 'டெபாசிட்'!

    போதும்டா சாமி! உங்கிட்ட கணக்கே பேசக்கூடாது.

    இதுதான் இவர்கள் குடும்பம்!

    அக்கா... நான் குளிச்சிட்டு வந்துட்டேன்.

    இந்தா புதுத் துணி! இதை போட்டுக்கோ... - ரஞ்சிதா தந்தாள்.

    நல்லா இருக்குக்கா...?

    அழகான 'செலக்ஷன்'!

    "இதை எப்படி வாங்கினே... என்ன விலை?

    விடும்மா!

    அம்மா அதை வாங்கிப் பார்த்தாள்.

    மூவாயிரம் ரூபா!

    இது ரொம்ப அக்கிரமம்டி! பிறந்தநாளுக்கு எதுக்கு இத்தனை விலை போட்டு வாங்கினே! ஏது பணம்?

    கார்டு' தேச்சேன்ம்மா...

    அடுத்த மாசம் இந்த மூவாயிரத்தை குறைப்பே!.

    விடும்மா! அவ இந்த வீட்டுல கடைக்குட்டி. சந்தோஷமா இருக்கட்டுமே! அஜி... இதைப் போட்டுட்டுக் கழட்டிடு.

    இல்லக்கா! 'காலேஜுக்கு போட்டுட்டுப் போறேன். எல்லாருக்கும் 'சாக்லெட்' தரணும்.

    இந்தா... வாங்கி வெச்சிருக்கேன்.

    ஒரு கிலோ 'சாக்லெட்' வெளியே வந்தது.

    சரி... சாயங்காலம் எப்ப வருவே?

    அஞ்சு மணிக்கு!

    நான் 'ஆபீஸ்' முடிஞ்சு ஆறரைக்கு வந்துடுவேன். 'கேக்' வெட்டலாம்.

    ரஞ்சி... நீ 'ஓவரா'ப் போறே!

    இல்லேம்மா!

    ………..

    அஜி... முக்கியமா பத்து பேரை கூப்பிடு. அம்மா... ஏதாவது 'ஸ்நாக்ஸ்' செஞ்சு வை. இந்த சந்தோஷங்கள், பிறந்த வீட்டுலதான் கிடைக்கும்... தடுக்காதே!

    சரிடீ! உங்க அப்பா 'டூர்’ல இருக்காரே...?

    அவர் வந்த பிறகு இவளுக்கு பிறந்தநாள் வருமா? விடும்மா! அப்பா இங்கே இல்லேன்னாலும் தப்பில்ல.

    'டிபன்' தயாராகிவிட்டது.

    உப்புமாவா... கடவுளே! பிறந்த நாள்ல எனக்கு இப்படியொரு தண்டனையா?

    ஏண்டீ? நானும் வேலைக்குப் போறவ! நீங்க ரெண்டு பேரும் துரும்பைக்கூட கிள்ளிப் போடுறதில்ல. 'கிரைண்டர்’ போட நேரமும் இல்ல. அதனால மாவு இல்ல. உப்புமா தப்பான 'டிபன்' இல்ல. ருசியா செஞ்சா நல்லாத்தான் இருக்கும்.

    ஆமா அஜி! அம்மா கைப் பக்குவம் எப்பவுமே நல்லா இருக்கும். சாப்பிடு.

    Enjoying the preview?
    Page 1 of 1