Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyindri Naanillai
Neeyindri Naanillai
Neeyindri Naanillai
Ebook104 pages44 minutes

Neeyindri Naanillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580105705356
Neeyindri Naanillai

Read more from Vidya Subramaniam

Related to Neeyindri Naanillai

Related ebooks

Reviews for Neeyindri Naanillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyindri Naanillai - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நீயின்றி நானில்லை

    Neeyindri Naanillai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஒரு தாம்பாளம் கொண்டு வாங்கோ சூர்யமூர்த்தி கேட்க, ஒரு பெண்மணி வேகமாய் அடுக்களைக்குச் சென்று எவர்சில்வர் தாம்பாளம் ஒன்று கொண்டு வந்தாள். அவன் தன் கையிலிருந்த கட்டைப் பையிலிருந்து தான் வாங்கி வந்த சாமான்களை எடுத்து தாம்பாளத்தில் வைக்க ஆரம்பித்ததும், அந்த வீட்டுப் பெண்மணிகளின் கண்களில் ஒரு வித பளபளப்பு தெரிந்தது. அவன் என்னவெல்லாம் வாங்கி வந்திருக்கிறான் என்று ஆவலுடன் பார்த்தன.

    அரை டசன் உயர்தர ஆப்பிள்கள், ஒரு கிலோ பன்னீர் திராட்சை, ஒரு பெரிய சீப்பு ரஸ்தாளி, ஒரு செண்டு மல்லிகைப்பூ. இரண்டு பெரிய பாக்கெட் கிரீம் பிஸ்கட், கும்பகோணம் வெற்றிலை ஒரு கவுளி, வாசனைப்பாக்கு.

    கல்யாணம் பேசவருவதற்கே இத்தனை தினுசுகள் கொண்டு வந்திருக்கிறான் என்றால், கல்யாணம் நன்றாகவே செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    அவன் தங்கைக்கும் அவர்கள் வீட்டுப் பிள்ளைக்கும் ஜாதகம் கச்சிதமாய் பொருந்தியிருந்தது. போட்டோவில் பெண்ணை பையனுக்கும், பையனை பெண்ணுக்கும் பிடித்திருந்தது. சம்பிரதாயமாக பெண் பார்க்கச் செல்வதற்கு முன் லௌகீகம் பேச அவனை அழைத்திருந்தார்கள்.

    உங்களோட வேற யாரும் வரலையோ? பிள்ளையின் அம்மா கேட்டாள்.

    இல்ல. எங்கப்பா தவறிப்போய் இன்னும் ஒரு வருஷமாகல. அதனால அம்மாவால வரமுடியாது. அக்கா ஒருத்தி கல்யாணமாகி பூனாகிட்ட இருக்கா. நிச்சயதார்த்தத்துக்கு கண்டிப்பா வந்துடுவா. மாமா ரெண்டு பேர் மும்பைலயும், தஞ்சாவூர்ல ஒருத்தரும் இருக்கா. ரொம்ப நெருங்கின உறவுன்னு இப்போதைக்கு இங்க யாருமில்ல. அதான் நா மட்டும் வந்தேன். தவிர லௌகீகம் பேசறதுக்கு எத்தனை பேர்? நீங்க கேக்கப்போறேள். நா செய்யப் போறேன். இதுல மத்தவா எதுக்கு?

    அதுவும் சரி தான். அவர்களுக்கு அவன் பதில் திருப்தியாயிருந்தது.

    உங்க ஃபேமிலி பத்தி கொஞ்சம் சொல்லுங்கோ சூர்யா. அப்பா என்ன பண்ணிண்ருந்தார். நீங்க என்ன செய்யறேள். உங்க ஸ்டேட்டஸ் என்ன? எல்லாத்தையும் சொல்லுங்களேன்.

    ஷ்யூர் சார். அப்பாக்கு பிஸினஸ். டவுண்ல ஹோல் சேல் ஹார்ட்வேர்ஷாப் வெச்சிருந்தார். காயத்ரி ஜெட் மோட்டார்ஸ் கேள்விப்பட்ருக்கேளோ? அது எங்களோடதுதான். நல்ல பிஸினஸ். தி. நகர்ல இன்னி தேதிக்கு எங்க வீடு தாராளமா எழுபது எண்பது லட்சம் போகும். அக்கா கல்யாணத்தை அப்பாதான் நடத்தினார். மாப்பிள்ளை பூனால பெரிய பிஸினஸ்மேன். நூறு பவுன் நகை போட்டு, ராஜேஸ்வரில படு கிராண்டா கல்யாணம் பண்ணினார். அது அப்பொ பத்து வருஷமாறது. அடுத்த ரெண்டு வருஷத்துல அப்பாக்கு பக்கவாதம் வந்துது. நா அப்பொ செகண்ட் இயர் படிச்சுண்ருந்தேன். பதினெட்டு வயசுல திடீர்னு பிஸினஸ் பாத்துக்க வேண்டிய நிர்ப்பந்தம். எப்டியோ தடுக்கி விழுந்து எழுந்துட்டேன். எட்டு வருஷம் படுக்கைல கிடந்து இப்பத்தான் அப்பா போனார். நா பிஸினஸ் பாத்துண்டே தபால்ல டிகிரி முடிச்சு, அப்பறம் எம்.பி.ஏ.வும் முடிச்சுட்டேன். ஆண்டவன் புண்யத்துல இப்பவும் பிஸினஸ் நல்லா போயிண்ருக்கு. எனக்கு காயத்ரி ஒரே தங்கை. அவளுக்கு தான் இப்ப கல்யாணம் பேச வந்திருக்கேன். எம்.ஏ. எக்கனாமிக்ஸ் முடிச்சுட்டு வீட்ல இருக்கா. வேலைக்கு போகலாம். நாந்தான் வேண்டான்னுட்டேன். அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கா. பாட்டு நன்னா பாடுவா. வீட்டுக் காரியம் எல்லாத்துலயும் படு ஸ்மார்ட். சமைச்சா எட்டூருக்கு மணக்கும். ரொம்ப சாஃப்ட் நேச்சர்.

    அவன் நிறுத்தினான்.

    அவன் நல்ல வியாபாரி என்பது அவன் பேச்சிலேயே வெளிப்பட்டது. அவர்கள் வாய் பிளக்கவில்லை அவ்வளவு தான். பத்து வருஷத்திற்கு முன் பெரிய பெண்ணுக்கு நூறு பவுன் போட்டிருக்கிறார்கள் என்ற விஷயம் அவர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது. மிஞ்சிப் போனால் முப்பது பவுனாவது கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தார்கள் அவர்கள். நல்ல காலம் இன்னும் அது பற்றி பேசவில்லை. பெரியவளுக்கு என்னவெல்லாம் செய்தீர்களோ அதை அப்படியே செய்து விடுங்கள் என்று ஒரே வார்த்தையில் சிம்பிளாக சொல்லி விடலாம். அவர்கள் முகத்தில் ஒருவித மந்தஹாசம் படர்ந்தது. இதை விட நல்ல இடம் தங்கள் பிள்ளைக்கு கிடைத்து விடாது என்று நினைத்தார்கள்.

    சம்பந்தியம்மாள் புருஷனையும், தன் நாத்தனாரையும் பார்த்தாள். அதன் அர்த்தம் புரிந்து அவர் வாய் திறந்தார்.

    அப்பறம் என்ன மிஸ்டர் சூர்யா. உங்கப்பா உங்கக்காக்கு பண்ணினாப்பல நீங்க உங்க தங்கைக்கு பண்ணிடப் போறேள். நாங்க எப்பொ பொண் பார்க்க வரணும்னு சொல்லுங்கோ.

    ஒரு நிமிஷம் சார். நா இன்னோரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும். அக்காக்கு அப்பா கனஜோரா கல்யாணம் பண்ணினாப்பல தங்கைக்கு நானும் பண்ணனும்ங்கறது தான் என் ஆசையும் கூட.

    அப்பறம் என்ன..?

    நாம ஆசைப்பட்ட படியே எல்லாம் நடந்துடறதா என்ன?

    அவர்கள் புருவம் சுருக்கி பார்த்தார்கள்.

    "பத்து வருஷமா அப்பா படுத்த படுக்கைல இருந்திருக்கார். அவருக்காக நா செலவு பண்ணின காசுல அக்கா கல்யாணத்தை மாதிரி நாலு கல்யாணம் பண்ணலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1