Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madhavi Pon Mayil
Madhavi Pon Mayil
Madhavi Pon Mayil
Ebook106 pages48 minutes

Madhavi Pon Mayil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703198
Madhavi Pon Mayil

Read more from Vidya Subramaniam

Related to Madhavi Pon Mayil

Related ebooks

Reviews for Madhavi Pon Mayil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madhavi Pon Mayil - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    மாதவிப் பொன் மயில்

    Madhavi Pon Mayil

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    'மாதவி வந்தாச்சா?" அபிஷேக் இன்டர் காமில் ரிஸப்ஷனிஸ்ட்டிடம் மூன்றாவது முறையாகக் கேட்டான்.

    இன்னும் இல்ல சார்.

    ஏன் இன்னும் வரலன்னு ஏதாவது தகவலாவது சொன்னாங்களா?

    இல்ல சார்.

    சரி. வந்ததும் உடனே என் கேபினுக்கு வரச் சொல்.

    எரிச்சலோடு இன்டர்காம் ரிஸீவரை வைத்தான். மிக முக்கியமான நெருக்கடியான சமயத்தில் அவனுக்கு அருகில் இருந்து செயல்படாமல் எங்கே போய் விட்டாள் இந்தப் பெண்! எரிச்சலாக வந்தது அவனுக்கு. இன்னும் சற்று நேரத்தில் ரெட்டி ஹாஸ்பிடலுக்கு கொட்டேஷன் அனுப்பா விட்டால் பல கோடி ரூபாய் ஆர்டர் கை நழுவி விடும்.

    அபிஷேக் எரிச்சலோடு நான்காவது முறை மாதவியைப் பற்றி விசாரித்தான்.

    இன்னும் இல்ல சார்.

    எரிச்சலுடன் ரிசீவரை வைத்து விட்டு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதை இயக்கினான். தானே விவரங்கள் திரட்டினான். நடுவே பல சந்தேகங்கள் ஏற்பட்டன. மாதவி இல்லாதது கையொடிந்தாற் போலிருந்தது அப்பா லண்டன் சென்றிருக்கிறார். அவரில்லாத நிலையில் அவன் இந்த ஆர்டரை வாங்கி விட்டால் அவர் முன் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

    படிப்பு முடிந்து அவன் இந்தக் கம்பெனியில் பொறுப்பேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. என்னதான் படித்திருந்தாலும் அனுபவ அறிவு என்பது வேறு. அந்த விதத்தில் அவன் இரண்டாம் வகுப்பு மாணவன் தான். நிறையத் தடுமாறினான். தவறுகள் செய்தான். அப்பா முகம் சுளித்தாலும் பொறுமையாக அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் ஊரில் இல்லாத போது அவன் கை ஒடிந்தாற் போல ஆனான். செல்போனில் அவரை அடிக்கடி சந்தேகம் கேட்டான் அப்போதுதான் அவர் மாதவியை அவனுக்கு வலது கையாக அறிமுகப்படுத்தினார்.

    மாதவி என்னோட பர்ஸனல் உதவியாளரா இருந்தவள். இந்த கம்பெனியின் எல்லா விஷயங்களும் இவளுக்கு அத்துப்படி. இன்னிலேர்ந்து இவ உனக்கு உதவியா இருப்பா. உன் சந்தேகங்களை நீ இவகிட்ட கேட்டு சரி செய்துக்கலாம். லுக் அபிஷேக். எப்பவும் உன் கூடவே என்னால் இருந்து உனக்கு ஏபிஸிடி கத்துக் கொடுத்துட்ருக்க முடியாது. அதனாலதான் மாதவியை உனக்கு பிரவாமாத்தி உனக்கொரு சான்ஸ் கொடுக்கறேன். அவ ப்ரில்லியன்ஸியை சாதாரணமா எடை போட்ராத. இந்த பேனாவை எடுக்கணும்ங்கற எண்ணம் உன் மூளைலேர்ந்து உன் கை விரல்களுக்கு உத்தரவா போய்ச் சேர்றதுக்கு முந்தி இந்த மாதவி அதைப் புரிஞ்சுக்கிட்டு பேனாவை எடுத்து மூடியைத் திறந்து உன் கைல கொடுக்கற அளவுக்குப் புத்திசாலி. இவ வேகத்துக்கு ஈடு கொடுக்கற அளவுக்கு உன் திறமை வளர்ந்தா தான் நீ இவளுக்கு மேலதிகாரியா இருக்க முடியும். இல்லன்னா நீ வேஸ்ட்!

    அப்பா அவன் தன்மானத்தை உசுப்பி விட்டுப் போய்விட்டார். ஆறு மாதமாயிற்று. மாதவிதான் அவனுக்கு வலது கை. அதென்னமோ தெரியவில்லை அப்பா சொன்னபோது பொத்துக் கொண்டு வந்த ரோஷம் அதன்பிறகு வந்த வேகத்தில் வடிந்து போயிற்று. நண்பர்களுடன் பார்ட்டி, நடனம் டேட்டிங் என்று போவதில் இருந்த ஆர்வம் பிஸினஸில் இல்லாமல் போயிற்று. மாதவி எல்லா வேலையும் செய்து முடித்தால் கையெழுத்துப் போடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான்.

    ஒரு வேளை நா இந்த கம்பெனிய விட்டுப் போய்ட்டேன்னா என்ன செய்வீங்க சார்? ஒரு நாள் அவன் கையெழுத்துப் போடும்போது விளையாட்டாகக் கேட்டாள் மாதவி. அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

    உனக்கு எல்லாம் தெரியும்ங்கற அகம்பாவமோ?

    அய்யோ! அகம்பாவமெல்லாமில்ல. நிஜமாவேதான் கேக்கறேன். பிஸினஸ்ல உங்களுக்கு ஆர்வமே இல்லையா?

    அவன் பதில் சொல்லவில்லை.

    லண்டன்ல எம்பிஏ முடிச்சிருக்கீங்க எக்கச்சக்க மூளை இருக்கு. இந்த தகுதிக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நீங்க மட்டும் உங்க முழு கவனத்தையும் இதுல செலுத்தினா. இந்தியாவின் நம்பர் ஒன் இளைஞனா ஆகலாம். ஆனா ஏன் இப்டி இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கீங்க? ஏதாவது லவ் அஃபேர் இருக்கா? அதான் கவனம் சிதறுதா?

    பார் மாதவி, நீ இங்க செய்யற வேலைக்கு உனக்கு கை நிறையச் சம்பளம் கிடைக்குதில்ல? வேணும்னா கூடக் கேளு. ஹேண்ட் பேக் நிறைய வேணுமா? வாங்கிக்க. அதுக்கு மேல் பேசவோ கமென்ட் அடிக்கவோ உனக்கு அதிகாரம் கிடையாது. ஓகே. நீ இங்கேர்ந்து போய்ட்டா என்ன செய்வீங்கன்னு எதுக்கு கேக்கற? நீ இல்லாட்டா இந்த கம்பெனி படுத்துடுமா? அப்பறம் இங்க உனக்கு குறையிருந்தாதானே நீ வேற எடத்துக்குப் போவ! ஒருவேளை பிளாக்மெயில் பண்றயா? அல்லது சம்பளம் பத்தலன்னு பூடகமா சொல்றயா. எதுவார்ந்தாலும் வெளிப்படையா கேளு. இன்னிக்கே அள்ளி வீசறேன்.

    படபடவென்று அவன் விழி சிவக்கக் கத்த, அவள் ஸ்தம்பித்து நின்றாள். மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல், அமைதியாக வெளியேறினாள். அடுத்த நாள் ஞாயிறு. இன்று திங்கட்கிழமை. இதுவரை அவள் வரவில்லை என்றால்.... ஒருவேளை அன்று அவன் கத்தியதன் எதிரொலியா? வேலையை விட்டு நின்று விட்டாளா? அல்லது உடம்பு கிடம்பு சரியில்லையா? எது எப்படியோ சரியான நேரத்தில் கழுத்தறுக்கிறாள்

    அபிஷேக் எரிச்சலுடன் இன்டர்காம் எடுத்தான்.

    மாதவி வீட்டுக்கு கனெக்ட் பண்ணுங்க.

    அடுத்த நிமிடம் லைன் கிடைத்தது.

    எதிர்முனையில் யாரோ ஹலோ சொன்ன

    Enjoying the preview?
    Page 1 of 1