Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarvai Ondre Poothumey
Paarvai Ondre Poothumey
Paarvai Ondre Poothumey
Ebook37 pages35 minutes

Paarvai Ondre Poothumey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனதில் பதிந்த இளமைக்கால தேவதையைத் தேடும் ரிஷி. மாறாக் காதலை மனதில் வைத்து மருகும் நேரம் கண்ணெதிரே அவள். ரிஷியின் காதல் கைகூடுமா... அவன் மைத்துவை அவன் அடைவானா... மெல்லிய உணர்வுகளிடையே இழைந்தோடும் காதல்.

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580148809886
Paarvai Ondre Poothumey

Read more from Usha Ramesh

Related to Paarvai Ondre Poothumey

Related ebooks

Reviews for Paarvai Ondre Poothumey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarvai Ondre Poothumey - Usha Ramesh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பார்வை ஒன்றே போதுமே

    Paarvai Ondre Poothumey

    Author:

    உஷா ரமேஷ்

    Usha Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பார்வை ஒன்றே போதுமே

    காலையில் இன்று சீக்கிரமே எழுந்துவிட்டான் ரிஷி. ட்ராக் ஸுட் ஸ்போர்ட்ஸ் ஷு சகிதம் ஜாகிங் கிளம்பினான். ரிஷி மிக அழகானவன். ஒரு சாயலில் விஜய் தேவர்கொண்டா மாதிரி இருப்பான். அதற்கு காரணம் சதா சிரிக்கும் அவன் உதடுகளா அல்லது உதடுகளை முந்திக்கொண்டு சிரிக்கும் கண்களா எனத் தெரியாது. ஆறடி தாண்டிய அந்த உருவம் பெண்களை பெருமூச்சுவிட வைக்கும். ஆண்களை பொறாமைகொள்ள வைக்கும். கருத்து, அடர்ந்த ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், இளம் தாடியும் அவன் கலரை இன்னும் தூக்கிக் காட்டும். அவன் வேலை பார்க்கும் ஐடி பார்க்கில் அநேகமாக எல்லா டிபார்ட்மெண்ட் பெண்களும் அவனிடம் ப்ரபோஸ் செய்திருக்கிறார்கள். அவன் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். ரிஷி ஹோசூரில் டெக் பார்க்கில் வேலை செய்யும் ஐடி ஆசாமி. பூர்வீகம் தஞ்சாவூர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சிதான்.

    அம்மாவுக்கு இரண்டாவது பிள்ளை. ஒரு அண்ணன். அப்பா இல்லை. அம்மா மட்டும். குடியும் குடித்தனமுமாய் இருந்த அப்பா, சீக்கிரமே எமனைத் தேடிப் போக நிர்கதியாய் பிள்ளைகளுடன் நின்றவளை ஆதரித்தது அவள் அண்ணன் ராகவன்.

    ஒரு சின்ன மனஸ்தாபம் காரணமாக ரங்கநாயகி (ரிஷியின் அம்மா) அண்ணன் கூட சண்டைபோட்டு பிரிந்த நேரம் பெரியவன் ரகு திருச்சி பி.எச். ஈ.எல்லில் வேலைக்கு சேர்ந்து விட்டான். ஆர்.ஈசியில் படித்துவிட்டு அங்கிருந்து யு.எஸ்ஸில் எம்.எஸ் முடித்த கையோடு இங்கே வேலை கிடைக்க ஹோசூரில் செட்டில் ஆனான் ரிஷி. அம்மா அவ்வப்போது

    Enjoying the preview?
    Page 1 of 1