Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Leela Tharangini
Krishna Leela Tharangini
Krishna Leela Tharangini
Ebook129 pages41 minutes

Krishna Leela Tharangini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலுக்காக எதையும் இழக்கலாம். ஆனால் காதலுக்காக காதலையே இழப்பது எப்படி...நாயகியை நினைவில் சுமக்கும் நாயகன். நாயகனை உயிராய் சுமக்கும் நாயகி. காதலின் உணர்ச்சிப் போராட்டம். உயிரை உருக வைக்கும் காதல்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148807534
Krishna Leela Tharangini

Read more from Usha Ramesh

Related authors

Related to Krishna Leela Tharangini

Related ebooks

Reviews for Krishna Leela Tharangini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Leela Tharangini - Usha Ramesh

    https://www.pustaka.co.in

    கிருஷ்ண லீலா தரங்கிணி

    Krishna Leela Tharangini

    Author:

    உஷா ரமேஷ்

    Usha Ramesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-ramesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    பரபரப்பாய் கிளம்பி கொண்டு இருந்தான் கிருஷ்ணா. இன்று இந்தி பிரச்சார சபாவில் முக்கியமானமீட்டிங் இருக்கிறது. அம்மாவின் உப்புமாவை அள்ளி விழுங்கும் கிருஷ்ணாவை கொஞ்சம்கவனிப்போம்.

    கிரேசிமோகன்பாஷையில்சாக்லெட் கிருஷ்ணா. ஆம். உண்மையாகவே அவன் ஒரு சாக்லேட்பாய். அழகான சிவந்தநிறம். பெண்களுக்கு பிடித்த கருத்த சுருண்டகிராப். அவனைப் போலவே படிய மறுத்து அடம்பிடித்து பம் என்றுநிற்கும். வரிசையாக மின்னும்பல் வரிசை.(அட..என்னங்க.....எப்போ பாத்தாலும் கதாநாயகியே வர்ணிச்சா எப்படி...ஒரு மாறுதல்தான்) ஆறடிக்கு சற்றே குறைந்த உயரம். அதற்கேற்ற பர்சனாலிட்டி. வாரா வாரம் கராத்தே க்ளாஸ் போய் ஏகப்பட்டபெல்ட் வாங்கி விட்டான். போதாக் குறைக்கு மெரினாநீச்சல்குளத்தில் தினமும் ஒண்ணரைமணி நேரம் நீந்துவான் மீன் குஞ்சு மாதிரி. ஹிந்திவிளையாட்டாக கற்றுகொண்டுஇப்போது பிரசார சபாவில் பகுதி நேர ஆசிரியர். பொழுதுபோகாமல்ஆர்ட் ஸ்கூலில் சேர்ந்து அதிலும்மாஸ்டர்டிகிரி வாங்கியாயிற்று. பிறகுஎன்னதான் அவனுக்கு பிரச்சினை? இன்னும் சரியானவேலை கிடைக்கவில்லை. கம்ப்யூட்டர் மாஸ்டர்டிகிரி. ப்ரோக்ராம்அருமையாக எழுதுவான். அவனுக்கான கதவு எப்போதுதிறக்குமோ தெரியவில்லை. இருங்கள்.அவன் நண்பர்கள் பட்டாளம் வந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டேன். கிருஷ்ணா நண்பர்கள்அனைவரும் சேர்ந்து ஓர்இசைக்குழு நடத்துகிறார்கள். ஆத்ம திருப்திக்கும் ஒரு சிறியவருமானத்திற்கும் . நம்கதாநாயகன்தான் பிரதம பாடகன். இந்தகாரணங்களால் அவனைச் சுற்றி ஈ மொய்ப்பது போல் பெண்கள் சுற்றிகொண்டு இருப்பதுவழக்கம். ஆனால் அவன்பார்வைஅரை செகண்ட்க்குமேல் யார்மீதும் நிலைத்ததில்லை. ஏனெனில்அவனுக்கு நிறைய க்ரஷ் இருந்துஎதுவும்ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால்தற்போதுஅவற்றைஒத்தி வைத்து இருக்கிறான்.

    என்னடா கிருஷ்ணா...சாயங்காலம்ரிகர்சல்இருக்கு. கரெக்டா வந்துடுவ இல்லே..சொதப்பிடாதே.." பாச்சு என்ற பார்த்தசாரதி.

    டேய், நீ வரல்லேனா லேடிவாய்ஸ் பாடற நிம்மி வர மாட்டா இது அடுத்ததெருவில் லாண்டரி வைத்திருக்கும் கணேஷ். கிருஷ்ணாவுக்கு பல தரப்பில் நண்பர்கள்உண்டு. அவனும் வித்தியாசமில்லாமல் சகஜமாகபழகுவான். வீட்டில்அம்மா , பாட்டியிடம் சரியானதிட்டு கிடைக்கும்

    ஏண்டா கண்ட இடத்துக்கு போய்ட்டு வந்து அப்டியே ஆத்துக்குவரே. பின் பக்கம் போய் குளிச்சிட்டு உள்ளவா. பாட்டி பாத்தா திட்டுவா. இது அம்மா.

    நான் என்ன எழவு வீட்டுக்கா போயிட்டுவரேன்..கேட்கதுடிக்கும் நாவை அடக்கிகொள்வான். இது சமயம்அல்ல. முதலில்என்னை நிலை நிறுத்திகொள்ளவேண்டும். அப்புறம் பார்ப்போம். அப்பா சம்பளத்தில் சாப்பிட்டுகொண்டு எதிர்த்துபேச கூடாது.

    ஆனால்அப்பா அப்படி இல்லை. கிருஷ்ணாவுக்கு பாட்டு வருகிறதுஎன்றால் அப்பாவால் தான். ரொம்பநன்றாகபாடுவார். ஜாலியாக அரட்டை அடிப்பார். இந்த அம்மாவோடு இவருக்கு எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிறது என்று பல நேரம் வியந்து போவான். மொத்தத்தில் ஆசாரமான அம்மா. அருமையான அப்பா. இவர்கள் தவப்புல்வன் தான் கிருஷ்ணா. ஒரு சுட்டி தங்கை. வனஜா. செல்லமாய் வனி. கிருஷ்ணாவின் காதல் தூதுவி.(தூதுவனுக்கு பெண்பால் வேற எப்படி சொல்றதாம்)

    கிருஷ்ணா இந்தி பிரச்சார சபா வுக்குவந்துசேரும்போது கொஞ்சம்லேட் . அவசரமாக பாடத்தை ஆரம்பித்து நடத்திக்கொண்டுஇருக்கையில் கிங்கிணியாய் ஒலித்தது அந்தக் குரல்.

    மே ஐ கமின்..

    "எஸ்....',என்று நிமிர்ந்தவன் இமைக்க மறந்தான். மெழுகுச் சிலை ஒன்று வகுப்பு வாசலில்நின்று குயிலாய் கூவியது.

    ப்ளீஸ் கம். நியூ ஸ்டூடண்டா தட்டிதடுமாறிஎப்படியோகேட்டுவிட்டான். குயில் புன்முறுவல்செய்து மறுபடியும் கூவியது.ச்சே....பேசியது.

    ,எஸ். ஜீ. ப்ரவீண் நியூ அட்மிஷன்.கையில்இருந்தகார்டைக் காட்டினாள்.

    கம் ஆன். சிட் டவுன் இருக்கையில் அமர்ந்தது குயில்.

    கிருஷ்ணா வின் மனசில் இளையராஜா பீஜிஎம் அதிர வெள்ளை உடை தேவதைகள் பாரதிராஜாபர்மிஷனுடன் இந்தி க்ளாஸில் சுற்றிசுற்றி கும்மியடிக்க கைகால்எல்லாம்வேர்த்து வழிந்தது கிருஷ்ணாவுக்கு.

    ஐந்தே முக்கால்அடி உயரத்தில் சிற்பம் போன்ற உடல் வாகில் செந்தாழம்பூ நிறத்தில் வகுப்புக்கே நூறு டியூப்லைட் போட்டமாதிரி வெளிச்சம்போட்டு அமர்ந்து இருந்தாள். தேனில்ஊறிய இரண்டுதிராட்சைபழங்களை கண்களாய் வைத்திருந்தாள். விரல்கள் நீண்டு வளர்ந்து நான் ரொம்ப அழகியாக்கும் என்றது. கூந்தல் அடர்த்தியாய் முதுகு பூரா புரண்டது. அதை ஒரு க்ளிப் கட்டுப்படுத்த அது அடங்காமல் முரண்டு பிடித்தது.

    கிருஷ்ணாவின் தடுமாற்றம் அவனுக்கே சங்கடமாக இருக்க சமாளித்து கொண்டு அவள் முகத்தை பார்க்க திரும்பியபோது மணி அடித்தது. ஏமாற்றம் கவ்வ எஸ்க்யூஸ்மி.....மிஸ்......யுவர் குட்நேம் ப்ளீஸ்...அப்பாடா. பேரைக் கேட்டாச்சு.

    அவள் நின்றுதிரும்பி அழகாக கழுத்தைச் சரித்து சிரித்தவாறே சொன்னாள்.

    2

    இந்த காதல்தான் மனிதனை என்னபாடு படுத்துகிறது.

    "நிமிஷங்கள்என்றும் வருஷங்கள் ஆகும்

    நீ என்னை நீங்கிச் சென்றாலே

    வருஷங்கள்என்றும் நிமிஷங்கள்ஆகும்

    நீயெந்தன் பக்கம் வந்தாலே

    நான்என்றுசொன்னாலே நான்அல்லநீதான்

    நீ என்று சொன்னாலே

    நீர்கூட தீதான்.

    ன் சுவாசக் காற்றில்

    வாழ்வேன்நான்...."

    இன்னும் தரங்கிணிவரவில்லை. அவள் கம்ப்யூட்டர்க்ளாஸில் காத்துக் கொண்டுஇருந்தான் கிருஷ்ணா.

    காத்திருப்பதுஇனிக்கும்என்றால்அது காதலிக்காக மட்டுமே.

    "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

    ஒரு உருண்டையும் உருளுதடி.

    இது சொர்க்கமா நரகமா

    சொல்லடி உள்ளபடி

    நான்வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன்

    வார்த்தையில் உள்ளதடி"

    தூரத்தில் தரங்கிணிவருவது தெரிந்தது.

    "பூக்களே..சற்றே ஓய்வெடுங்கள்_அவள்

    வந்துவிட்டாள்.....

    மனம் துள்ளியது.உடல்எடை குறைந்தமாதிரிஇருந்தது. ஜிவ் வென்று வயிற்றில் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. காது மடலில்சூடானது.

    சென்டர் வாசலை அவள் சமீபிக்க வண்டியைஸ்டார்ட் பண்ணினான் கிருஷ்ணா. ஏறி அமர்ந்ததே தெரியாது பஞ்சுபொதி வண்டியைஆக்ரமித்தது. காதல் வாகனம் பறந்தது .

    முதல் சந்திப்பிலேயே கண்ணும் கண்ணும் கவ்வியிழுக்க ரசாயனம்தன் வேலையை நன்றாகவே செய்தது. பிறகு தினம் நயனோத்சவம் ஜிகு ஜிகு வென்றுநடக்க ஹிந்திக்ளாஸில்தொடங்கிகம்ப்யூட்டர்க்ளாஸில் வந்துநிற்கிறது. பாதிநாள் கட் அடிக்கிறாள் க்ளாசை. இருவரும்இணைந்துபார்க் சினிமா என்றுகாதலுக்குமரியாதைசெலுத்தினர். அவள் சினிமாவில் ஆழ்ந்திருக்க அவன் அவளில் ஆழ்ந்துஇருப்பான்.

    தியேட்டர் வெளிச்சம்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1