Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanasa
Maanasa
Maanasa
Ebook211 pages1 hour

Maanasa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803330
Maanasa

Read more from Maharishi

Related to Maanasa

Related ebooks

Reviews for Maanasa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanasa - Maharishi

    http://www.pustaka.co.in

    மானசா

    Maanasa

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    அவனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட அந்த முதல் சந்திப்புகூட ரொம்பவும் தற்செயலாக ஏற்பட்டதுதான்.

    நான்கைந்து மாதங்களாகவே அவர்கள் இருவரும் அந்த ஆஸ்ரமத்தில் மாலை நேரங்களில் நடைபெறும் பஜனை நிகழ்ச்சிக்கு வந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

    அவர்களுக்காகவே முன்பதிவு செய்யப்பட்ட இடம் போல நுழைவாயில் பகுதியிலுள்ள ஜன்னல் அருகில் எதிரெதிரே அவள் பெண்கள் பகுதியிலும் அவன் ஆண்கள் பகுதியிலும் உட்கார்ந்து நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள், மாதிரியேதான் இருந்தார்கள்.

    ஒருநாள் திடீரென்று முன்வரிசைக்கு வந்து அவன் பாட ஆரம்பித்தபோது அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவளும் எழுந்து போய் முன்வரிசையில் உட்கார்ந்து அவனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டாள். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அவன் பஜனைப் பாடல்களைப் பாடுவதற்கென ஆர்மோனியம் வாசிப்பவருக்கு எதிரே வந்து அமர்ந்த போது அவளும் அவனருகில் சற்றே இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.

    அவன் பாடப் போகிறான் என்று அவளுக்கோ அவளும் பாடத்தான் அமர்ந்திருக்கிறாள் என்பது ' அவனுக்கோ, அவர்கள் பாட ஆரம்பிக்கும் வரை ஒருவருக்கொருவர் தெரியாமலிருந்தார்கள். அவன் குரு ஸ்துதியாகச் சங்கர குருவே, சங்கர குருவே ஷண்மத ஸ்தாபக சங்கர குருவே என்று ஆரம்பித்த போது, அதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த வரிகளான ஜெய ஜெய சங்கர, ஜெய சத்குரு என்று அவள் பாடியபோது தான் அவளை நன்றாகப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

    அவள் நன்றாகவே இருந்தாள். முதல் பார்வையில் ஒல்லியாகத் தோன்றினாலும் அது ஒல்லியான உடம்புடன் சேர்த்தியில்லை. 'பளிச்செனச் சிகப்பு என்பார்களே அதுமாதிரியான நிறம்.

    பார்வையொன்றை ஓடவிட்டு மீண்டும் பாடலுக்குத் தாவினான். திருஞான சம்பந்தரின் மந்திரமாவது நீறு

    வானவர் மேலது நீறு... என்று அவன் பாடியபோது

    சுந்தரமாவது நீறு

    துதிக்கப்படுவது நீறு என்று அவள் தொடர்ந்த போது அவனுக்கு உற்சாகம் பிறந்தது.

    அவனுக்கு இயல்பிலேயே நல்ல சாரீரம். அவளுக்கும் அப்படியே. அன்றைய திவ்ய நாம பஜனை மிகப் பிரமாதமாகவே அமைந்துவிட்டது. அவன் எங்கே பஜனையில் பாட கலந்து கொண்டாலும் சதாசிவ பிரும்மேந்திரரின் சில பாடல்களைப் பாடாமல் இருக்கமாட்டான். இன்றும் பிரம்மேந்திரரின் பிபரே ராம ரஸம் ரஸனே பிபரே ராம ரஸம்

    என்ற பாடலைப் பாடி முடித்த போது அவள் பிரும்மேந்திரரின், காயதி வனமாலி மதுரம் காயதி வனமாலி, என்ற பாடலைப் பாடி முடித்தாள்.

    இதுதான் அவர்கள் பரஸ்பர அறிமுகத்திற்கு அஸ்திவாரமாகக்கூடப் பிற்பட்டு உதவியது..

    வெளியே பெருந்தூறல் விழுந்து கொண்டிருந்தது. பலர் மழை வரப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு போய்விட்டனர். சிலர் ஆஸ்ரம வராந்தாவிலும் தியான மண்டபத்திலுமாக நின்று கொண்டிருந்தனர்.

    இவ்வளவு நன்றாகப் பாடுகிறீர்களே, சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

    அவள்தான் முதலில் அவனிடம் பேசினாள்.

    இல்லை. எனக்கு முறைப்படியான சங்கீதப் பயிற்சி ஏதும் கிடையாது. பக்திப் பாடல்கள் அதிலும் பஜனைப் பாடல்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். எனது நண்பன் ஒருவனால் எனக்கு ஏற்பட்ட பழக்கம் இது. கோயில், ஐயப்ப பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பஜனை ஆகியவற்றில் கூடப் பாடிப்பாடி பழக்கமாகிவிட்டது. பராசீன சம்பிரதாய முறை என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அதுதான் என்னோட வழிகாட்டி. பழம்பெரும் எழுத்தாளர் ஏ. கே. கோபாலன் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு அவராலேயே பிரசுரம் செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது என்றான்.

    "எனக்கும் அதே புத்தகம்தான் வழிகாட்டி. நானும் முழுமையாகச் சங்கீதம் கற்கவில்லை. ஆனால் குடும்பத்தில் எல்லோருக்கும் நன்றாகப் பாடவரும். எல்லாம் கேள்வி ஞானம்தான். எங்கே திவ்ய நாம பஜனை நிகழ்ச்சி இருந்தாலும் கூப்பிட்டு அனுப்பிவிடுவார்கள். போய்ப் பாடுவேன்.

    மழை நின்றுவிட்டது. மண்டபத்தை விட்டுப் பேசியபடியே இருவரும் வெளியே வந்தனர். திடீரென்று மின்விளக்குகள் அணைந்து எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

    ரொம்ப இருட்டாக இருக்கிறதே, தனியே போய்விடுவீர்களா?

    அவன் அவளிடம் ஒரு அக்கறையுடன் கேட்டான்.

    வீடு பக்கமாகத்தான் இருக்கு. மழையும் நின்றுவிட்டது. அம்மா தங்கைகள் எல்லாம் என்னை அழைத்துக்கொண்டு போக... அவள் முடிக்கவில்லை. பாவாடை தாவணி அணிந்த இரண்டு பெண்களுடன் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஆஸ்ரம் கேட்டில் நுழைவதை அவள் பார்த்துவிட்டு அதோ அவங்கல்லாம் வந்துட்டாங்க... போய் வருகிறேன் என்றுகூடச் சொல்ல மறந்தவளாக நிதானமாகப் படியிறங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

    தன் வீட்டாருக்கு அறிமுகப்படுத்தி வைக்கக்கூடிய அளவு அப்படியொன்றும் நெருக்கமான அறிமுகம் இல்லையென்று கூட அவள் நினைத்திருக்கலாம்.

    2

    ஒருவரையொருவர் பார்க்காமல் தெரிந்து கொள்ளாமல் போய்க் கொண்டிருந்த நிலை மாறி இப்பொழுது அறிமுகமானவர்கள் என்கிற முறையில் தினம் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

    அதற்குப் பின் இடைவெளி குறைந்து சகஜமாகவும் பேச ஆரம்பித்தார்கள். சில நாள் அவர்கள் பேசிக்கொண்டே ராமகிருஷ்ணா சாலையில் நடந்தார்கள். அவளுடைய வீடு உள்ள மார்க்கபந்து தெரு வரை அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு அப்படியே தனது வீடு இருக்கும் சென்னை கிருஷ்ணபுரம் திரும்புவான்.

    அன்று அலுவலகத்திலிருந்து திரும்பிவந்து முகம் கழுவிக் கொண்டிருக்கும் போதே, சென்ன கிருஷ்ணபுரம் வரசித்தி வினாயகர் கோயிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி உற்சவமாம். பஜனைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காளாம். நீ வந்தவுடன். பஜனை ஆரம்பிக்கறமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்காளாம். டிபன் சாப்பிட்டுவிட்டுப் புறப்படு... என்று கூறிக்கொண்டே அவன் முன் டவலை நீட்டினாள் தாயார் ராஜேஸ்வரி.

    "அவளுக்குத் தெரியுமோ, தெரியாதோ தெரிந்தால் வருவாளே எப்படித் தகவல் கொடுப்பது, அவன் மனம் அவளும் வந்தால் பரவாயில்லையே என்று நினைத்தது..

    வேஷ்டி சட்டை அணிந்து மேலே ஆட்டையாம் பட்டி ஈரிழை வெளிர் நீல துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தபோது - அவன் வருகைக்காகவே மத்திய மண்டபத்தில் காத்திருப்பவர்களுடன் அவளும் புன்னகையுடன் நின்றதைப் பார்த்தபோது அவனுக்குள் சந்தோஷம் ஏற்பட்டது. தபேலா மற்றும் மிருதங்கம் கஞ்சிரா இதற்கெல்லாம் வாத்தியக்காரர்கள் ஏற்கனவே வந்து அமர்ந்து - சுருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    கணேச தியானத்துடன் அவன் கையிலுள்ள வெங்கல ஜால்ராவைப் போட்டுக் கொண்டு பாட ஆரம்பித்த போது அவளும் கூடவே பாட ஆரம்பித்து விட்டாள்.

    பாஹி பாஹி கஜானனா

    பார்வதி நந்தன கஜானனா மூஷிக வாகன கஜானனா.

    மோதக ஹஸ்தா கஜானனா

    புன்னகவராளி ராகத்தில் ஆரம்பித்தவன், நாட்டையில் ஒரு பாட்டு. உடனே

    திருவும் கல்வியும் சிறப்புமுன்

    திருவடி புகழ்பாடும் திறமும்

    என்ற விருத்தம். அடுத்தபடியாக

    வாணி அருள்புரிவாய்

    அணிகுல வேணி... என்று தொடங்கும் தன்யாசி ராகத்தில் சரஸ்வதி தியானம் என்று ஒரு முறையோடு பஜனையை ஆரம்பித்தான். எல்லாப் பாடலின்போதும் அவளும் அவனுடன் சேர்ந்து பாடினாள். பிறகு தொடர்ந்து கிருஷ்ணனைப் பற்றி நிறையப் பாடல்களைப் பாடினான்.

    முகாரியில் - கோவர்த்தனகிரிதர கோவிந்தா

    குறிஞ்சியில் - ஜய ஜய கோகுலபாலா

    நீலாம்பரியில் - மாதவ மாமவ தேவ யாதவா - கிருஷ்ணா..

    கிருஷ்ணலீலா தரங்கிணி பஜனைப் பாடல்களிலிருந்து மிக அற்புதமான பாடல்களாகப் பொறுக்கி எடுத்துச் சுமார் மூன்று மணி நேரம் இருவருமாகச் சேர்ந்து கூட்டத்தினரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி விட்டனர்.

    நீங்க எங்கே வேலையா இருக்கீங்க? அன்று ஒருநாள் அவள் கேட்டாள்.

    'இந்தியன் பேங்க்ல வேலையா இருக்கேன். சொந்த ஊர் மதுரை. மறுபடியும் சொந்த ஊருக்கே மாறுதல் கேட்டிருக்கிறேன். மதுரை அல்லது வடமாநிலம் எங்காவது போக வேண்டியிருக்கும்."

    மனைவி, குழந்தைகள்..?

    "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. என்னுடன் இங்கே தாயார் இருக்கிறாள். கூடப் பிறந்தவர்களில் மூத்த சகோதரன் டெல்லியிலும் அதற்கு அடுத்து எனக்கு இளையவர்களான ஒரு தங்கை, தம்பி எல்லோரும் மதுரையிலும் இருக்கிறார்கள்.

    அவன் அவளிடம் கேட்டான். 'நீங்க என்ன செய்யறீங்க?"

    நான் பி.ஏ. வரை படித்தேன். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். கூடப் பிறந்த தங்கைகள் இரண்டு பேர் இருக்காங்க. சரியான வேலை ஒன்னும் கிடைக்கல. வீட்டோட ஒரு குடிசைத் தொழில் மாதிரி சமையலுக்கும் சாப்பாட்டுக்கும் தேவைப்படும் பல பொடி வகைகளைத் தயாரித்து வியாபாரம் செய்கிறோம். இதை எங்க அப்பா ஆரம்பிச்சு வச்சார். அதையே நாங்களும் தொடர்ந்து செய்கிறோம்.

    கல்யாணம்.

    எனக்கடுத்தது ரெண்டு பேரும் தங்கைகள். வேறு ஆணில்லாத குடும்பம். மூத்தவளா பிறந்து விட்டேன். தங்கைகளின் எதிர்காலத்திற்கு ஓர் உத்திரவாதம் ஏற்படுத்தாமல் நான் மட்டும் திருமணம் செய்து கொண்டு போய்விட முடியுமா? குடும்பத்தில் ஓர் ஆண் துணை இல்லையென்பதே மனதில் நிறையப் பலவீனங்களை உண்டாக்கி விடுகிறது.

    ஒரு குடும்பத்தை ஆணினால் மட்டும்தான் பாதுகாக்க முடியும்னு நினைக்கிறீங்களா?

    நான் அப்படி நினைக்கவில்லை. நமது ஹிந்து குடும்பங்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றன. மாத வருமானம், மாதச் சம்பளம் என்று பெருவாரியான நமது குடும்பங்கள் ஆணைத் தானே நம்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை மாறும் வரை இந்த ஊசலாட்டம் தவிர்க்க முடியாது. எப்பொழுது ஓர் ஆணின் பாதுகாப்பினால்தான் குடும்பம் நிலைத்து நிற்கமுடியும் என்கிற எண்ணத்திலிருந்து விடுபடுகிறார்களோ அப்பொழுதுதான் எல்லோருக்குமே நல்லது. அப்படி அந்த எண்ணத்திலிருந்து வெளியே வரப் பெண்கள் முயற்சிக்கும் போது ஆண்களினால் செய்யப்படும் பல கடமைகளையும் நாம் ஏற்கவேண்டும். பதவிதான் வேண்டும். பொறுப்புகள் வேண்டாம் என்று நழுவக்கூடாது இல்லையா?

    ரொம்ப யதார்த்தமாப் பேசறீங்க?

    "அதுதானே சார் உண்மை. அம்மா சாதம் போடுவாள். அம்மா குளிப்பாட்டி விடுவாள். அம்மா அழகா டிரஸ் பண்ணிவிடுவாள். வேணும் என்பதைச் செய்து கொடுப்பாள் என்றும்...

    அப்பா சட்டைத் துணி வாங்கிக் கொடுப்பார். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார். கல்லூரிக்குப் பணம் கட்டுவார். கஷ்டப்பட்டு வேலை வாங்கிக் கொடுப்பார். வீட்டுத் தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவார். கல்யாணம்.. செய்து வைப்பார். வீடு கட்டுவார்... என்று அந்த அப்பா என்ற மனிதர்மேல் எவ்வளவு எதிர்பார்ப்புகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். இதில் பொய் எங்கே இருக்கிறது... நடைமுறையில் நாம் பார்க்கும் உண்மைதானே. இதை மாற்றமுடியுமா? ஒரு குழந்தையின் சின்ன மனதில் இந்த எண்ணம் ரொம்ப ஆரம்பத்திலேயே முளைக்க ஆரம்பித்து விடுகிறதே. இதை இல்லையென்று மறுக்க முடியுமா?"

    "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆணாதிக்கம் என்று குறைப்பட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் அவன் ஆதிக்கம் செலுத்தும் எல்லா இடங்களையும் பெண்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1