Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naathavadivanavale Kannamma
Naathavadivanavale Kannamma
Naathavadivanavale Kannamma
Ebook394 pages4 hours

Naathavadivanavale Kannamma

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125904125
Naathavadivanavale Kannamma

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Naathavadivanavale Kannamma

Related ebooks

Reviews for Naathavadivanavale Kannamma

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naathavadivanavale Kannamma - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    நாதவடிவானவளே கண்ணம்மா

    Naathavadivanavale Kannamma

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    1

    திரையை மேலே எடுக்கலாமா? என்று சைகையில் சபா செகரட்டரி கேட்க, தன்னைச் சுற்றி அமர்ந்துள்ள வயலின், மிருதங்கம், கஞ்சிரா மற்றும் மோர்சிங்க் கலைஞர்களை ஜாடையாகப் பார்த்தாள் ரேவதி.

    அனைவரும் 'சரி’யென்று மெளனமாக தலை அசைக்க, சபா செகரட்டரியை நோக்கி கண்ணால் ஜாடை காட்டி விட்டு, தன் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தாள் ரேவதி.

    இரண்டு நொடிக்குப் பிறகு, கைதட்டல் வானைப் பிளக்க, கைகளைக் கூப்பி, தன் முன் அமர்ந்த அனைவரையும் மனதார வணங்கினாள்.

    மிகப் பெரிய சபா ஹாலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம், நாற்காலிகளில் இடம் கிடைக்காமல் கீழே தரை முழுவதும் இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள்.

    அனைவரின் பார்வையும் ரேவதி மீதுதான் இருந்தது. தங்க நிற பட்டுப் புடவையில் மிகச் சிறிய ரோஜாப்பூக்கள் அள்ளித் தெளித்தது போல் ஒரு டிசைன் புடவை, அதில் கையகல ஜரிகை பார்டர்.

    தங்க நிற ரவிக்கைக்கு பங்கம் வராதபடி, மெல்லிய நீளமான தங்க செயின். அதில் சிவப்புக் கற்கள் பதித்த டாலர், அவள் புடவை மீது புரண்டது.

    காதில் சிவப்பு கற்கள் பதித்த குடை ஜிமிக்கி. அதற்கேற்றாற் போல் சிறு சிவப்பு கற்கள் பதித்த நெக்லஸ் அவள் கழுத்தை அலங்கரித்தது.

    தேனினும் இனிய குரலில் 'வாதாபி கணபதிம் பஜே’ என்று ஹம்ஸத்வனி ராகத்தில் கச்சேரியை துவக்கினாள்.

    மிருதங்கமும், வயலினும், கடமும், மோர்சிங்கும் போட்டிப் போட கச்சேரி களை கட்டியது.

    ரேவதிக்குப் பின்புறம், தம் பூராவிற்குப் பின்னால் முகத்தை மறைத்தபடி இருந்த பானுமதி லேசாகப் புன்னகைத்தாள்.

    முதல் பாட்டிலேயே இன்றைய கச்சேரி கூட்டத்தை கட்டிப் போட்டு விட்டாள் ரேவதி. இன்றைய தவம் ஒரு பெரும் வெற்றியை அளிக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

    தவமா? என்று ஒரு முறை பானு கேட்டாள்.

    ஆமாம், பானும்மா. ஒவ்வொரு கச்சேரியும் ஒரு தவம்தான். இறையருள் இருந்தால்தானே ஒரு சிக்கல் இல்லாமல் கச்சேரி நிறைவாக இருக்கும்.

    ரேவதியின் பதிலைக் கேட்டபடி வந்த சங்கரன் சபாஷ் ரேவதி சின்ன வயதிலேயே உனக்கு ஒரு ஆழமான பார்வை என்றார்.

    என்ன அங்கிள் இது, அம்மா இதைத்தானே தினமும் சொல்வாங்க என்றாள் ரேவதி.

    ஒரு நிமிடம் கண்களை மூடிய சங்கரன் ஆமாம் ரேவதி, உங்க அம்மா ஒரு பெரிய தீர்க்கதரிசி. உன்னை விட்டுப் போயிடுவோம்னு தெரிஞ்சுதானோ என்னவோ உன் அப்பா, அம்மா இரண்டு பேரும் உன் ஆறு வயசுக்குள்ளேயே உனக்கு எல்லாம் கத்துக் கொடுத்திட்டாங்க என்றார்.

    சற்றே முகம் வாடிய ரேவதி நான் அதிர்ஷ்டம் இல்லாதவ அங்கிள். அதான் அவங்களை என்கிட்டே இருந்து கடவுள் பிரிச்சிட்டாரு என்று மெல்லிய குரலில் ரேவதி கூறுவதைக் கேட்ட பானுமதி என்ன சித்தப்பா இது, இன்று மாலை கச்சேரி இருக்குது. அதற்குள்ளே ரேவதியைக் கண் கலங்க வைக்கலாமா? என்று கேட்டபடி ரேவதியை அணைத்துக் கொண்டது நினைவில் தோன்ற, பானு லேசாக அசைந்து நினைவலைகளை நிறுத்தினாள்.

    ரதி ஜன்மமிதிரா ஓ ராமா என்று வராளி ராகத்தில் தியாகராஜ க்ருதியை எடுத்து கல்பனா ஸ்வரத்துடன் மிக சிறப்பாக பாடிய ரேவதி அடுத்து நாற்பதாவது நிமிடத்திலிருந்து தமிழ் பாடல்களைப் பாடத் துவங்கினாள்.

    கூட்டம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருக்க தன்னையும் மறந்து, தன்னைச் சுற்றியுள்ளதையும் மறந்து எப்ப வருவாரோ கோபாலக்ருஷ்ண பாரதியின் ஜோன்புரி ராகத்தில் மூழ்கி முத்தெடுத்தாள் ரேவதி.

    காதருகில் அவள் அசைவிற்கு ஏற்ப ஜிமிக்குகள் ஆட, கோவை செவ்வாயிலிருந்து வரும் தென்றலான இசையை முன் வரிசையில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த சஷாங்க் அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

    அவனருகில் அவன் தாய் சரோஜாவும் தந்தை கணேசனும் கச்சேரியில் லயித்து இருந்தார்கள்.

    பிளாஸ்கிலிருந்து இதமான வெந்நீர் எடுத்துத் தந்த பானுமதி, ரேவதி அதை குடிக்கையில் சற்றே கூட்டத்தை நோக்கினாள்.

    அட, இன்றைக்கும் வந்திருக்கானே என்று மனதில் எண்ணினாள்.

    ஏங்க, நம்ப சஷாங்க் இந்த பெண் மேலே உயிரையே வெச்சிருக்கான். சரியான சாய்ஸ் தானே என்று தன் கணவரின் காதில் சரோஜா முணுமுணுத்தாள்.

    ம்... சரி, சரி வீட்டிற்குப் போய் பேசலாம் என்று மனைவியை அடக்கிய கணேசன் லேசாக முன் பக்கம் சாய்ந்து தன் மகனை நோக்கினார்.

    வைத்தக் கண்ணை எடுக்காமல், சிறு புன்னகையுடன் ரேவதியை முழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த சஷாங்கைப் பார்த்து மனதில் சிரித்துக் கொண்டார்.

    சஷாங்க் எப்பவும் இப்படிதான், நினைத்ததை அடையும் வரை ஓய மாட்டான். அது படிப்பிலும், தொழிலிலும் அவனுக்கு அளித்த வெற்றிகள் ஏராளம்.

    எதிலும் ரசனை கொண்ட பார்வை. இதோ, இப்பொழுது கூட கச்சேரிக்கென்று சரிகை கோடிட்ட வேஷ்டியும், மெல்லிய சிவப்பு கலர் ஜிப்பாவும் கச்சேரிக்காக அவன் தேர்ந்தெடுத்த உடை.

    வாட்ட சாட்டமான உருவம், அதற்கேற்ற உயரம் என்று அவன் உள்ளே வருகையில் பல பெண்கள் அவனை வெறித்துப் பார்த்ததை அவர் கண்டார்.

    'இன்றைக்கு பெண்கள் ரொம்ப மாறிட்டாங்க' என்று மனதில் எண்ணியபடி கச்சேரியை ரசித்தபடி 'ரேவதி எப்படிப்பட்ட பெண்?' என்று யோசிக்கத் துவங்கினார்.

    *****

    2

    பானும்மா, நாளை கச்சேரிக்கு ரோஸ் நிற பட்டுப் புடவையும் அதுக்கு மேட்சாக நகைகளை வெச்சிருங்க, நெக்லஸ் வேண்டாம். புடவையில் அதிகமான ஜரிகை இருக்கும் என்ற ரேவதி குட்நைட் அங்கிள் என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு மாடிக்குச் சென்று விட்டாள்.

    இது கச்சேரி சீஸன், அனைத்து சபாக்களும் விடாப் பிடியாக ரேவதியின் கச்சேரி வைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் தவம் இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

    ஆனால் கச்சேரி சீஸனுக்கு நான்கு மாதங்களே முன்பிலிருந்து எதைப் பாடுவது, எந்த சபாவில் பாடுவது, எந்தப் புதுப்பாட்டை அரங்கேற்றுவது போன்றவற்றை தீர்மானித்து, தினமும் அசுர சாதகம் செய்யும் ரேவதியை சங்கரனும் பானும்மாவும் மட்டுமே அறிவர்.

    சங்கரன் அனைத்து போன் கால்களையும் கையாண்டு, பேசி தேதிகளை சரி பார்த்து, முன் பணம் வாங்கி, ரேவதியிடம் கலந்தாலோசிக்க காத்து இருப்பார் என்றால் பானுமதி புது புடவைகள், ரவிக்கைகள் அதற்கேற்ற நகைகள் என்று தேடி அலைவாள்.

    ரேவதி அனைத்தையும் மறந்து இசை உலகில் மூழ்கி விடுவாள். கர்நாடக சங்கீதத்தில் கடந்த 5 வருடங்களாய் முடி சூடாராணியாக திகழும் இவளுக்கு தமிழ் பாடல் மீது தீராத தாகம்.

    சீஸனில் அனைவரும் தெலுங்கு க்ருதிகள் மீது கவனம் வைக்க ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக தமிழ் பாடல்களை எப்படி அரங்கேற்றலாம் எனும் யோசனையில் ஆழ்ந்து விடுவாள்.

    சித்தப்பா, இன்றைக்கும் அந்த பையன் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தான் பானுமதி கூறினாள்.

    ம்... ரேவதி கவனித்தாளா?

    ம்ஹூம்... ரேவதிக்கு தானுண்டு தன் பாட்டுண்டு. அவ்வளவுதான் உதட்டை பிதுக்கினாள் பானுமதி.

    சரி, கச்சேரி சீஸனில் எதுவும் பேசி அவள் மனசை பாழடிக்க வேண்டாம்.

    எனக்குத் தெரியாதா? ஆனால் இன்றைக்கு தன் அம்மா, அப்பாவோடு வந்திருந்தான்.

    ஓஹோ! வெறும் ரசிகனாகக் கூட இருக்கலாம்.

    இல்லை சித்தப்பா. எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவன் நடை உடை பாவனையெல்லாம் பணக்காரத் தோரணையில் இருக்கிறது. அவன் நம்ப ரேவதியைப் பார்க்கும் பார்வை எனக்கு வித்தியாசமாகப் படுகிறது.

    நாளை, நானும் கச்சேரிக்கு வரேன், ரேவதிக்கு எதுவும் சொல்ல வேண்டாம், அங்கே வந்து அவனைப் பார்க்கிறேன்.

    ரேவதிக்கும் இருபத்தி இரண்டு வயதாகிறது. நாம் தானே அவளுக்கு முயற்சி செய்து திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.

    அவள் என் குழந்தை. அவள் சாதாரண ரேவதியாக இருந்திருந்தால் இந்நேரத்திற்கு திருமணம் செய்திருப்பேன். இரண்டு குழந்தைகளோடு குடும்பத்திற்கு உழைத்துக் கொண்டிருப்பாள். இப்பொழுது அவள் மிகப் பெரிய சங்கீத ராணி. அது மட்டுமல்ல சினிமாவிலும் கர்நாடக சங்கீத பாடல் என்றால் கூப்பிடு ரேவதியை என்று புகழ் பெற்றுக் கொண்டு இருக்கிறாள். இப்பொழுது அவளை மணக்க பலர் முன் வருவார்கள். இனி என் பொறுப்பு கூடுகிறது. நல்லவன், வல்லவன் என்பது மட்டுமல்ல அவளது தெய்வீகக் கலையை போற்றுபவனாக இருக்க வேண்டும். தாய், தந்தையில்லாத பெண் பெருமூச்சு விட்டார் சங்கரன்.

    கவலைப்படாதீங்க சித்தப்பா, அவளுக்கு தீராத வலியை கொடுத்த அதே கடவுள்தான் உங்களையும், என்னையும் காண்பித்தான். இசை எனும் மிகப்பெரிய வரத்தை அளித்திருக்கிறான். வாழ்க்கையிலும் வெற்றி அடைய செய்வான் என்றாள் பானுமதி.

    அன்று கச்சேரியில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் சஷாங்கை பார்த்தாள் பானுமதி.

    நல்ல ஆணழகன் தான். கூரான நாசி, அறிவை பறை சாற்றும் நெற்றி, எதிராளியை அலசி எடுக்கும் பார்வை நம்ப ரேவதிக்கு ஏற்றவன்தான்!

    கோட்டீஸ்வர ஐயரின் 'மறவாதிரு மனமே' பாடலின் கேதார ராகத்தின் ஆலாபனையில் தானும் கிறங்கி, தன்னெதிரில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களையும் கிறங்க வைத்துக் கொண்டிருந்த ரேவதியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தான் சஷாங்க்.

    அருகில் சரோஜா பாடலை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

    கைத்தட்டல் விண்ணைப் பிளக்க சூப்பர், இல்லைம்மா சஷாங்க் குனிந்து கேட்டான்.

    ம்... உனக்கு உன் ரேவதி என்ன செய்தாலும் சூப்பர் தான் இல்லையா?

    எப்படிம்மா, என் மனசை படம் பிடிச்சது போல கண்டு பிடிச்சீங்க?

    தம்பி, பெற்ற தாய்க்குத் தெரியாம எதையும் மறைக்க முடியாது என்று தன் அருகிலிருந்து வந்த குரலைக் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினான் சஷாங்க்.

    யார் சார் நீங்க? நாங்க அம்மாவும் பிள்ளையும் பேசறதை ஒட்டுக் கேட்கிறீங்க அப்படீன்னு கேட்கப் போறீங்க சரியா? என்று புன்னகைத்தபடி சங்கரன் சஷாங்கின் அடுத்த நாற்காலியிலிருந்து பேசினார்.

    சற்றே கோபத்துடன் திரும்பிய சஷாங்க் பேசிய பெரியவரை உற்றுப் பார்த்தான்.

    60 வயதிற்குள் இருக்கும், சராசரி உயரம் கொண்டவர். தலையிலும், காதோரத்திலும் தெரிந்த வெள்ளை முடி அவளுடைய கம்பீரத்தைக் கூட்டியது.

    ஐ ஆம் சாஷாங்க் என்று கை நீட்டிய சஷாங்கின் கண்களை உற்று நோக்கியபடி வணக்கம். என் பெயர் சங்கரன், நான் ரேவதியின் கார்டியன். என் வீட்டில் வளர்ந்த குழந்தை தான் ரேவதி என்றார் சங்கரன்.

    சற்றே திகைப்புடன் அவரை நோக்கி சஷாங்க் வாயைத் திறந்து பேசு முன்னர் சொல்ல வல்லாயோ கிளியே என்று பாரதியாரின் கிளி விடு தூது பாடலைப் பாட ஆரம்பித்தாள் ரேவதி.

    *****

    3

    அங்கிள், கச்சேரி எப்படியிருந்தது? என்றபடி சப்பாத்தியை தால் உடன் சாப்பிடத் துவங்கினாள் ரேவதி.

    என்ன ரேவதி, இன்றைக்கு பேசுகிற மூடில் இருக்கிறியா என்றபடி தானும் சாப்பிடத் துவங்கினார்.

    என்ன அங்கிள், உங்களுக்குத் தெரியாதா? நாளை மறுநாள் எனக்கு கச்சேரி கிடையாது. அதனால கொஞ்சம் உங்களோடு பேசலாம்னு நினைச்சேன் என்ற ரேவதி ஏறிட்டுப் பார்த்தாள்.

    தெரியும்மா ரேவதி. சும்மா உன்னைக் கிண்டல் செய்யறார் சித்தப்பா என்று பானுமதி மேலும் இரண்டு சப்பாத்திகளை பரிமாறினாள்.

    போதும் பானும்மா! இவ்வளவு சாப்பிட்டா குண்டாகி விடுவேன். மூச்சு வாங்கும் என்றாள் ரேவதி.

    இதோ பார் ரேவதி, நீ குண்டாவதும், நான் ஒல்லியாவதும் இந்த ஜன்மத்தில் கிடையாது அதனால நீ எது வேணா வெட்டலாம். பரிதாபப்பட வேண்டிய ஜென்மம் நான்தான்!

    பானும்மா, நீங்களா பரிதாபமானவங்க? ராத்திரி ஃப்ரிட்ஜ்ல தேடறீங்க. ஐஸ்க்ரீம் வெட்டறீங்க, எல்லாம் எனக்குத் தெரியும்.

    இதப் பாருங்க சித்தப்பா, ஒண்ணும் தெரியாத பாப்பான்னு நினைச்சேன். எல்லாம் கவனிச்சு, இப்படி மானத்தை வாங்கறா. இது நியாயமா?

    இது மட்டுமில்லை பானும்மா. இன்று அங்கிள் என் கச்சேரிய கேட்கறதை விட்டு, தன் பக்கத்திலே இருந்த வரை முறைச்சுகிட்டே இருந்ததையும் கவனிச்சேன்.

    சங்கரன் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்த, பானுமதி ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்று புலம்ப ஆரம்பித்தாள்.

    இதென்ன அநியாயமாக இருக்கு? நான் மாய்ஞ்சு, மாய்ஞ்சு மணிக்கணக்குல் தம்பூரா மீட்டி என் விரலே தேய்ஞ்சு போச்சு. இவ என்னடான்னா யாரையோ நோட்டம் விட்டுட்டே பாடியிருக்கா.

    ஸ்டாப், ஸ்டாப் பானும்மா, நான் அங்கிளைத்தான் பார்த்தேன். வேறே யாரையும் நான் பார்க்கலியே.

    அப்படியா, அப்பொழுது என் அருகில் இருந்தவரை கவனிக்கலியா? சங்கரன் கேட்டார்.

    என்ன சித்தப்பா இது? உங்ககிட்டே கறுப்பா, குட்டையா அசிங்கமா ஒருத்தர் உட்கார்ந்துட்டு இருந்தாரே. அப்படிப்பட்ட ஆளுங்களை எல்லாம் நம்ம வீட்டு இளவரசியின் பார்வையில் படுமா?

    சற்றே ஏறிட்டுப் பார்த்த ரேவதி இல்லை அங்கிள். உங்க அருகிலே நல்லா களையாக சந்தனக் கலர் ஜிப்பா போட்டுகிட்டு இருந்தாரே என்றாள்.

    அப்படி வா வழிக்கு. அப்போ நம்ம இளவரசியோட கண் இளவரசன் மேலே பட்டுடிச்சு என்ற பானும்மாவை முறைத்தாள் ரேவதி.

    ஏய், என்ன இது, இவ்வளவு நேரம் என்னை கிண்டலடிச்சுகிட்டு இருந்தீங்களா? சே, சே, நான் ஏன் அந்த ஆளைப் பார்க்கப் போகிறேன்? அங்கிள் முகத்துல என் பாட்டுக்கு என்ன உணர்வுகள் வருதுன்னு சின்ன வயசிலிருந்து அவரைப் பார்த்துகிட்டே தானே கச்சேரி செய்வேன். முதல் தடவையாக யாரோ ஒருவரோட பேசறாரு அப்படீன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அதான் பார்த்தேன்.

    பானும்மா போதும். இனியும் ரேவதியைக் கிண்டல் செய்யாதே என்றபடி ரேவதியை வாஞ்சையுடன் பார்த்தார்.

    ரேவதி, நீ நினைத்தது சரிதான். இந்தப் பையன் உன் ஒவ்வொரு கச்சேரிக்கும் தவறாமல் வருகிறான். அதுவும் முதல் வரிசையில் உட்கார்ந்து உன் கச்சேரியை ரசிக்கிறான் என்று பானும்மா கூறினாள். அதான் உன்னிடம் பேசணும்னு நினைச்சேன் என்றார்.

    ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் இருந்த ரேவதி மெதுவாக எழுந்தாள்.

    வேண்டாம் அங்கிள். எனக்குத் திருமணம் வேண்டாம். எனக்கு நீங்களும், பானும்மாவும் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. என்னை உங்ககிட்டேயிருந்து பிரிச்சா நான் செத்துருவேன் அங்கிள் என்று கூறிவிட்டுச் சென்றாள்.

    என்ன சித்தப்பா இது? நாம ஒண்ணு கேட்டால், அவள் ஒண்ணு சொல்கிறாள், நாம் பேச ஆரம்பிச்ச வேளையே சரியில்லை என்று அலுத்துக் கொண்டாள் பானுமதி.

    சங்கரன் எதுவும் பேசவில்லை. மெதுவாக அவர் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

    தன் நண்பன் ராமநாதனும் அவன் மனைவி ராஜம்மா தன் கூடப் பிறந்தவர்களாக கருதி வாழ்ந்த காலம்.

    ராமநாதன் பால்ய சிநேகிதன். சிறு வயது முதல் இருவரும் ஒன்றாகவே பள்ளியை முடிக்க ராமநாதன் சட்டம் படிக்கச் சென்றார். சங்கரன் சி.ஏ. செய்ய ஆசைப்பட்டதால் கல்லூரியில் பி.காம். படிக்கத் துவங்கினார்.

    சட்டம் முடித்து ஒரு சீனியரிடம் ராமநாதன் சேர, நான்கு வருடங்களில் சீனியரின் மகள் ராஜம்மாவை கரம் பிடித்தார்.

    சங்கரன் சீ.ஏ, கோல்ட் மெடலிஸ்டாக வெளிவர, மிகச் சிறந்த கம்பெனியில் பணியில் சேர, மும்பை சென்றார்.

    சென்னை வந்தால், பாதி பொழுது ராமநாதன் வீட்டில் தான் கழியும். ராஜம்மாவின் மென்மையும், இனிமையான குரலையும் ஒன்றாகக் குழைத்து ரோஜாப்பூ போன்று பிறந்த பெண் குழந்தையைப் பார்த்து, சீராட்டுவதற்கு என்றே அடிக்கடி சென்னைக்கு வரத் துவங்கினார்.

    அண்ணா, அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் ராஜம்மா குழந்தையை சங்கரனிடம் தந்துவிட்டு தன் தினசரி பணிகளில் மூழ்கி விடுவாள்.

    ஏதாவது ஒரு ராகத்தின் பெயர் தான் வைக்கணும் என்று அடம் பிடித்த ராஜம்மாவிற்கு 'ரேவதி' மிகவும் பிடித்திருந்தது. வேதமே ரேவதி ராகத்தில் இருக்குது தெரியுமா? அதுபோக குழந்தை ரேவதி நட்சத்திரம் என்றாள்.

    ரேவதி, நட்சத்திரம் மீன ராசி தெரியுமா? மீன் போல கண்கள் என் மகளுக்கு. மீன் மாதிரி சாமர்த்தியமாக நழுவி விடுவாள் பார் என்று பெருமையுடன் கூறினார் ராமநாதன்.

    அவருக்குத் தெரியுமா, தரையில் போட்ட மீனாக தவிப்பாள் தன் மகள் என்று.

    *****

    4

    ரேவதி, என் செல்லம்! நடந்தால் பட்டு பாதம் வலிக்குமே என்று சதா தூக்கி வைத்துக் கொள்வார் சங்கரன்.

    அண்ணா, நீங்க செல்லம் கொடுத்து கெடுத்துடுவீங்க. பெண் குழந்தையை அதட்டி, மிரட்டிதான் வளர்க்கணும் என்பாள் ராஜம்மா.

    என்னது, என் செல்லத்தை அதட்டி, மிரட்டுவதா? யார் என் பட்டுக் குட்டியை மிரட்டினாலும், சீவிடுவேன் சீவி என்று பொய்யாக சங்கரன் மிரட்ட, வீடே கலகல எனும் சிரிப்பொலியால் உயிர்த்தெழும்.

    ராமநாதன் இருந்தால் கேட்கவே வேண்டாம், ஒரே அமர்க்களம்தான்!

    குட்டி இளவரசியாக தங்கத் தாம்பாளத்தில் வைத்து வளர்க்கப்பட்டாள் ரேவதி.

    முதல் முதலாக பள்ளி செல்ல ரேவதி தயாராக, இதற்காக சங்கரன் மும்பையிலிருந்து பறந்து வந்தார்.

    அங்கிள், என் யூனிஃபார்ம் எப்படியிருக்குது? என்று மழலை மொழியில் ரேவதி வினவ, உனக்கென்னடி செல்லம், சும்மா சூப்பரா இருக்கே என்று சங்கரன் தூக்கிக் கொள்ள, ராமநாதன் புன்னகையுடன் வண்டியை பள்ளி நோக்கி செலுத்தினார்.

    அடுத்த மாதம் என்னை ஜெர்மனிக்கு அனுப்பறாங்க - ராமநாதன் பேச்சைத் துவங்கினார்.

    ஏய், என்னப்பா இது ஒரு குண்டைத் தூக்கிப் போடறே?

    கம்பெனி எல்லா வசதியும் செய்யுது. ராஜம்மா, ரேவதிக்கு டிக்கெட் எடுத்துக் கொடுக்கறாங்க. தங்கற வசதியும் தராங்க. நல்ல சம்பளம், இங்கே எனக்கும், ராஜம்மாவிற்கும் உன்னை விட்டா யார் இருக்காங்க? நீயோ இன்னும் திருமணம் செய்துக்கலை, நினைச்சா ஜெர்மனி வந்திடலாம்.

    என்ன இது, உன் பிரச்சனையைப் பேசுகிறோம் என்று பார்த்தால் மெதுவாக என் திருமணம்னு பேச ஆரம்பிச்சுட்டே, ரேவதி குட்டியைப் பிரிஞ்சு நான் எப்படிடா இருப்பேன்?

    ராமநாதன் சிரித்தபடி அதான் சீக்கிரம் நாங்க கிளம்பறதுக்குள்ளே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கச் சும்மா ஜாலியாக ஹனிமூனுக்கு ஜெர்மனி வந்திடலாம்.

    ஸோ, போகணும்னு தீர்மானம் எடுத்தாச்சு இல்லையா?

    ஆமாம், முடிவெடுத்தாச்சு. இனிமேதான் ராஜம்மா கிட்டே பேசணும்.

    என் திருமணத்தைப் பற்றிய பேச்சு வேண்டாம் ராம். என் அண்ணன் இறந்த பிறகு என் அண்ணி, அவங்க மகள் பானுமதி இரண்டு பேரும் என் பொறுப்பில் இருக்காங்கன்னு உனக்குத் தெரியாதா? அதனால் திருமணம் செய்து கொள்ளணும் எனும் எண்ணமேயில்லை தீர்மானமாகக் கூறினார் சங்கரன்.

    ஸோ, முடிவெடுத்தாச்சு இல்லையா?

    ஆமாம், முடிவெடுத்தாச்சு சங்கரன் குரலிலும் அழுத்தம்.

    ஜெர்மனிக்குக் கிளம்பும்பொழுது. ராஜம்மா பிழியப் பிழிய அழுததை இன்று நினைத்தாலும் சங்கரின் கண்கள் பனிக்கும்.

    ரேவதியை விட்டுப் பிரிவது பெரும் பாரமாக இருந்தது. ரேவதியை விட 15 வயது பெரியவள் தன் அண்ணன் மகள் பானுமதிக்கு அப்பொழுது தான் திருமணம் முடித்து இருந்தார்.

    எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேளாது அண்ணி பிறந்த கிராமத்திற்குச் சென்று சேர்ந்துவிட, தனிமை சங்கரனை வாட்டியது.

    இப்பொழுது இருப்பது போல கைபேசிகளும், கணினியும் கிடையாது என்பதால் கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் அவரது தனிமையை போக்கியது.

    மாதம் தவறாமல் ராஜம்மாவின் கடிதமும் ரேவதியின் புகைப்படத்தோடு அவரைத் தேடி வந்து விடும், அவர் மனம் வாழ்த்தும்.

    ஆம், ராஜம்மாவும் ராமநாதனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பது அவருக்கு பெருத்த நிம்மதியை அளித்தது.

    அதற்குள் பானுமதியின் கணவர் சுந்தருக்கு ஜெர்மனி செல்ல ஒரு வாய்ப்பு அவருடைய நிறுவனம் அளித்தது.

    மாமா, பானுமதியையும் என்னோடு மூன்று மாதம் அழைத்துப் போகலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால்... நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைக்கிறது சுந்தரின் குரலில் இருந்த வருத்தம் அவரை திகைப்படைய வைத்தது.

    என்ன சுந்தர், என்ன சொல்றீங்க? பானுமதிக்கு என்ன ஆச்சு? சங்கரன் பதறினார்.

    அவளுக்கு ஒண்ணுமாகலை மாமா, ஆனால் பானுமதி உங்களை தாத்தாவாக ஆக்கியே தீரணும்னு முடிவு பண்ணிட்டா. நான் தடுக்கவா முடியும்? ஸோ, நீங்க இன்னும் ஏழு மாதத்திற்குள் தாத்தாவாக ஆகப் போறீங்க?

    சுந்தரின் கலகல சிரிப்பும், தனக்குள் எழுந்த மகிழ்ச்சியும், பானுமதியிடம் இருந்த நாணமும், சந்தோசமும் இன்று நினைத்து பெருமூச்சு விட்டார்.

    அன்று இருந்த மகிழ்ச்சி, அடுத்த 15 நாட்களில் இனி வாழ்க்கையில் அறவே இருக்காது என்று அவருக்கு அப்பொழுது தெரியாது.

    விதியின் விளையாட்டை யார்தான் கணிக்க இயலும்? அடுத்த வாரமே சுந்தர் ஜெர்மனியின் 'ம்யூனிக்' நகருக்கு கிளம்ப, பானுமதி கண்களில் ஈரம் கசிய தன்

    Enjoying the preview?
    Page 1 of 1