Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!
இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!
இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!
Ebook160 pages1 hour

இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில்லென்ற காற்று முகத்தில் மோத கண்விழித்தான் ரவி. கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தோஷ் புன்னகைத்தான். 

"நான்தான்டா கண்ணாடியை இறக்கிவிட்டேன். இயற்கைக் காற்றோட சுகமே தனிதான். அதான் ஏ.சி.யை நிறுத்திட்டேன். வெளியே பார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை பசுமைதான். இதைப் பார்த்தாலே போதும்டா. மனசுக்கு நிறைவா இருக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த எனர்ஜிக்காகத்தான் மாதம் தோறும் எங்க ஊருக்கு ஓடி வந்திடுவேன். நீயும் பாரு அப்புறம் எங்க ஊரைவிட்டு வெளியேறவே மாட்டே" தன் கிராமத்தின் பெருமையை சந்தோஷ் கூற ரவி பார்வையை வெளியே வீசினான். 

உண்மைதான் அத்தனையும் பசுமை, குளுமை. செழிப்பான தென்னை மரங்கள் வரிசையாய் தங்கள் தலையில் கொழுத்த இளநீரோடு நிற்க, பனைமரமும், தேக்குமரமும் வரிசையாய் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளியைப் பார்க்கையில் நிஜமாகவே உள்ளம் குளிர்ந்தது. 

"டேய்! மெதுவாப் போடா. உண்மையிலே உங்க ஊர் ரொம்ப அருமையா இருக்கு." பார்வையை விலக்காமலேயே ரவி சொல்ல காரின் வேகத்தைக் குறைத்தான் சந்தோஷ். 

"ரவி! இது நம்ம ஊர் இல்ல. அதுக்கு இன்னும் இருபது கிலோ மீட்டர் போகணும். இதெல்லாம் நம்ம ஊரைச் சுத்தி இருக்கிற கிராமங்கள். நீதான் பெரிய ரசிகனாயிற்றே. அதனாலதான் இந்த சுற்றுப் பாதையில் வந்தேன். அதோ தெரியுது பார். அதுதான் கண்மாய், அதான்டா கம்மாக்கரைன்னு சினிமாவில் சொல்வாங்களே அதுதான். வருஷம் பூரா தண்ணி வற்றவே செய்யாது. ஆழம் அதிகம்தான். ஆனா அதுல குளிக்கிற சுகமே தனிதான். இந்தப் பக்கம் உள்ள எல்லா கிராமங்களுக்கும் இதுல இருந்துதான் தண்ணீர் போகும். அந்த வரப்புமேல ஏறி நடந்தாலே நம்ம வீட்டுக்குப் போயிடலாம். அவ்ளோ நீளம்."

கண்களில் கிடைத்த அனைத்துக் காட்சிகளையும் ரசனையோடு பார்த்துக் கொண்டான் ரவி. பட்டணத்தில் இது போன்ற பசுமையும் அமைதியும் கிடையாது. பசுமைக்காக என்று சாலையில் நடுவே வைக்கப்பட்டிருக்கும் செடிகள் கூட புழுதியாலும், வாகனப் புகையாலும் மங்கிப் போய் தானிருக்கும். எப்போதும் கேட்கும் இரைச்சல் சில சமயம் இதமாகவும் பலசமயம் தலைவலிக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.

வரிசையாய் நெருக்கமாய் எழுந்து நிற்கும் கட்டிடங்கள் காற்றைக்கூட சுலபமாய் வீச விடுவதில்லை. அதனாலேயே மின் விசிறி, குளிரூட்டப்பட்ட அறை என அனைத்தும் இயந்தரத்தனமாகவே ஆகிவிட்டது. ஆனால் கிராமம் கிராமம்தான். எத்தனை அமைதி. என்ன சுகாதாரமான காற்று. ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் எத்தனை இடைவெளி. 

ஒவ்வொரு வீட்டின் முன்பும் வேப்பமரமும், முருங்கை மரமும், கொய்யா மரமும் செழிப்பாய் பரந்து விரிந்திருந்தது. செம்பருத்தியும் மல்லிகைக் கொடியும் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. வாசலில் அழகாய் சாணி மெழுகி பெரிய பெரிய கோலமிட்டு அதன் நடுவே மஞ்சள் நிறத்தில் பூசணிப்பூவை சாணியில் சொருகி அழகு பண்ணியிருந்தது அற்புதமாய் இருந்தது. 

வியப்பாய் நண்பனை அழைத்தான் ரவி. "சந்தோஷ் பாரேன் எவ்ளோ பெரிய கோலம். எல்லாப் பூக்களும் கம்பிகளுமாய் வளைந்து நெளிந்து... அடேயப்பா! கிராமத்தில்தான்டா உண்மையான ஓவியர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் எங்கே போய் இதைக் கற்றுக் கொள்கிறார்கள். சந்தோஷ்" 

"ம். காலேஜூக்குப் போய் கத்துக்குவாங்க. போடா இவனே இதெல்லாம் நம்ம பெண்களோட கூடப்பிறந்த திறமைடா. சின்ன வயசுல இருந்தே அவங்களோட திறமையை வளர்த்துப்பாங்க. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்வாங்களே அந்த மாதிரிதான் இதுவும். 

இந்தக் கோலங்களைப் பார்த்தே பிரமிச்சிட்டியே. எங்க ஊர்ல திருவிழா நடக்கும்போது வெப்பாங்க. அப்போ பார்க்கணும் நீ. தெருவையே அடைத்து விதவிதமாய் கலர்க் கலராய் நிறைய கோலம் போட்டிருப்பாங்க. தெருவில நடக்கவே முடியாது. எந்தக் கோலத்தை முதல் பரிசாகத் தேர்ந்தெடுப்பதுன்னு நாங்களே திணறிடுவோம். அவ்ளோ அற்புதமா இருக்கும்..." 

"அப்போ எல்லோருக்கும் பரிசு கொடுத்திட வேண்டியதுதானே"

"ஆமா! அப்படித்தான் செய்வோம். பாவம்! அதிகாலையிலேயே எழுந்து பொறுமையா அழகா கோலம் போட்டு கலர் பொடி தூவி முதுகு ஒடிய கஷ்டப்படுவாங்களே. அதனால எல்லாருக்கும் பரிசு கொடுத்திடுவோம்." 

"என்ன பரிசு கொடுப்பீங்க?" 

"முன்னெல்லாம் தட்டு கிண்ணம்னு சிம்பிளாக் கொடுப்போம். இப்போ சில்வர்குடம் கொடுப்போம். முதல் பரிசுக்கு மட்டும் பெரிய பாத்திரம் கொடுப்போம்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 20, 2023
ISBN9798223350972
இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!

Read more from Kalaivani Chokkalingam

Related to இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!

Related ebooks

Reviews for இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இளைய இதயங்கள்... இனிய ராகங்கள்..! - Kalaivani Chokkalingam

    1

    சில்லென்ற காற்று முகத்தில் மோத கண்விழித்தான் ரவி. கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தோஷ் புன்னகைத்தான்.

    நான்தான்டா கண்ணாடியை இறக்கிவிட்டேன். இயற்கைக் காற்றோட சுகமே தனிதான். அதான் ஏ.சி.யை நிறுத்திட்டேன். வெளியே பார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை பசுமைதான். இதைப் பார்த்தாலே போதும்டா. மனசுக்கு நிறைவா இருக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த எனர்ஜிக்காகத்தான் மாதம் தோறும் எங்க ஊருக்கு ஓடி வந்திடுவேன். நீயும் பாரு அப்புறம் எங்க ஊரைவிட்டு வெளியேறவே மாட்டே தன் கிராமத்தின் பெருமையை சந்தோஷ் கூற ரவி பார்வையை வெளியே வீசினான்.

    உண்மைதான் அத்தனையும் பசுமை, குளுமை. செழிப்பான தென்னை மரங்கள் வரிசையாய் தங்கள் தலையில் கொழுத்த இளநீரோடு நிற்க, பனைமரமும், தேக்குமரமும் வரிசையாய் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளியைப் பார்க்கையில் நிஜமாகவே உள்ளம் குளிர்ந்தது.

    டேய்! மெதுவாப் போடா. உண்மையிலே உங்க ஊர் ரொம்ப அருமையா இருக்கு. பார்வையை விலக்காமலேயே ரவி சொல்ல காரின் வேகத்தைக் குறைத்தான் சந்தோஷ்.

    ரவி! இது நம்ம ஊர் இல்ல. அதுக்கு இன்னும் இருபது கிலோ மீட்டர் போகணும். இதெல்லாம் நம்ம ஊரைச் சுத்தி இருக்கிற கிராமங்கள். நீதான் பெரிய ரசிகனாயிற்றே. அதனாலதான் இந்த சுற்றுப் பாதையில் வந்தேன். அதோ தெரியுது பார். அதுதான் கண்மாய், அதான்டா கம்மாக்கரைன்னு சினிமாவில் சொல்வாங்களே அதுதான். வருஷம் பூரா தண்ணி வற்றவே செய்யாது. ஆழம் அதிகம்தான். ஆனா அதுல குளிக்கிற சுகமே தனிதான். இந்தப் பக்கம் உள்ள எல்லா கிராமங்களுக்கும் இதுல இருந்துதான் தண்ணீர் போகும். அந்த வரப்புமேல ஏறி நடந்தாலே நம்ம வீட்டுக்குப் போயிடலாம். அவ்ளோ நீளம்.

    கண்களில் கிடைத்த அனைத்துக் காட்சிகளையும் ரசனையோடு பார்த்துக் கொண்டான் ரவி. பட்டணத்தில் இது போன்ற பசுமையும் அமைதியும் கிடையாது. பசுமைக்காக என்று சாலையில் நடுவே வைக்கப்பட்டிருக்கும் செடிகள் கூட புழுதியாலும், வாகனப் புகையாலும் மங்கிப் போய் தானிருக்கும். எப்போதும் கேட்கும் இரைச்சல் சில சமயம் இதமாகவும் பலசமயம் தலைவலிக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.

    வரிசையாய் நெருக்கமாய் எழுந்து நிற்கும் கட்டிடங்கள் காற்றைக்கூட சுலபமாய் வீச விடுவதில்லை. அதனாலேயே மின் விசிறி, குளிரூட்டப்பட்ட அறை என அனைத்தும் இயந்தரத்தனமாகவே ஆகிவிட்டது. ஆனால் கிராமம் கிராமம்தான். எத்தனை அமைதி. என்ன சுகாதாரமான காற்று. ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் எத்தனை இடைவெளி.

    ஒவ்வொரு வீட்டின் முன்பும் வேப்பமரமும், முருங்கை மரமும், கொய்யா மரமும் செழிப்பாய் பரந்து விரிந்திருந்தது. செம்பருத்தியும் மல்லிகைக் கொடியும் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தது. வாசலில் அழகாய் சாணி மெழுகி பெரிய பெரிய கோலமிட்டு அதன் நடுவே மஞ்சள் நிறத்தில் பூசணிப்பூவை சாணியில் சொருகி அழகு பண்ணியிருந்தது அற்புதமாய் இருந்தது.

    வியப்பாய் நண்பனை அழைத்தான் ரவி. சந்தோஷ் பாரேன் எவ்ளோ பெரிய கோலம். எல்லாப் பூக்களும் கம்பிகளுமாய் வளைந்து நெளிந்து... அடேயப்பா! கிராமத்தில்தான்டா உண்மையான ஓவியர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெண்கள் எங்கே போய் இதைக் கற்றுக் கொள்கிறார்கள். சந்தோஷ்

    "ம். காலேஜூக்குப் போய் கத்துக்குவாங்க. போடா இவனே இதெல்லாம் நம்ம பெண்களோட கூடப்பிறந்த திறமைடா. சின்ன வயசுல இருந்தே அவங்களோட திறமையை வளர்த்துப்பாங்க. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்வாங்களே அந்த மாதிரிதான் இதுவும்.

    இந்தக் கோலங்களைப் பார்த்தே பிரமிச்சிட்டியே. எங்க ஊர்ல திருவிழா நடக்கும்போது வெப்பாங்க. அப்போ பார்க்கணும் நீ. தெருவையே அடைத்து விதவிதமாய் கலர்க் கலராய் நிறைய கோலம் போட்டிருப்பாங்க. தெருவில நடக்கவே முடியாது. எந்தக் கோலத்தை முதல் பரிசாகத் தேர்ந்தெடுப்பதுன்னு நாங்களே திணறிடுவோம். அவ்ளோ அற்புதமா இருக்கும்..."

    அப்போ எல்லோருக்கும் பரிசு கொடுத்திட வேண்டியதுதானே

    ஆமா! அப்படித்தான் செய்வோம். பாவம்! அதிகாலையிலேயே எழுந்து பொறுமையா அழகா கோலம் போட்டு கலர் பொடி தூவி முதுகு ஒடிய கஷ்டப்படுவாங்களே. அதனால எல்லாருக்கும் பரிசு கொடுத்திடுவோம்.

    என்ன பரிசு கொடுப்பீங்க?

    முன்னெல்லாம் தட்டு கிண்ணம்னு சிம்பிளாக் கொடுப்போம். இப்போ சில்வர்குடம் கொடுப்போம். முதல் பரிசுக்கு மட்டும் பெரிய பாத்திரம் கொடுப்போம்.

    இல்லடா! அது போதாது. இவங்க திறமையை மெச்சுறமாதிரி நீங்க தங்கத்தில் ஏதாவது கொடுக்கலாமே. கோல்டு காயின் இல்ல, மோதிரம் அட்லீஸ்ட் மூக்குத்தியாவது கொடுக்கலாமே என்ற ரவியை வியப்பாய்ப் பார்த்தான்.

    என்னடா விளையாடுறியா? தங்கம் விலை தெரியாம பேசுறியா? ஒரு கிராம் தங்கமே ரெண்டாயிரம் ரூபாயாகப் போகுது எங்க கிராமத்துல மட்டும் ஆயிரத்துக்கு மேல குடும்பம் இருக்கு. எப்படிக் கொடுக்க முடியும். கணக்குப் போட்டுப் பாரு. என்றான் சந்தோஷ்.

    அப்படியா? யாராவது ரிச் பேமிலிக்காரங்க இதைச் செய்யலாமே.

    அடப்போடா. அவங்கள்லாம் பாட்டுக் கச்சேரி, டான்ஸ் புரோகிராம்னா ஸ்பான்ஸர் பண்ணுவாங்க. நான் வருஷம் தோறும் அன்னதானம் பண்ற பொறுப்பை ஏத்துப்பேன்.

    அப்போ இனிமே உங்க ஊர் திருவிழாவுக்கு நீ கிளம்பும் போது சொல்லு. நான் பணம் தர்றேன். நீ சென்னையிலேயே மொத்தமா கிப்ட்டை வாங்கிட்டு வந்துடு என்ற ரவியைப் பார்த்து பிரமித்துப் போனான் சந்தோஷ்.

    மச்சான்! என்னடா இவ்ளோ பெரிய மேட்டரை இவ்ளோ சிம்பிளாச் சொல்லி முடிச்சிட்டே. நிஜமாவே சொல்றியா?

    பின்னே! இதுல போய் யாராவது விளையாடுவாங்களா? என்ன பெரிய அமவுன்ட். நம்ம ஒரு மாத இன்கம்தானே. திறமை இருப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் சந்தோஷ். அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்கல்ல?

    கிரேட். ரவி நீ பெரிய ஆள். எனக்குகூட இது தோணலியே. என்றவாறு ஒரு பெரிய தென்னந்தோப்பின் அருகே ஓரமாய் காரை நிறுத்தினான்.

    என்னடா நிறுத்திட்ட? இதுக்குள்ளயா வீடு இருக்கு?

    இல்லடா இது நம்ம தோப்பு. அப்பா இங்கதான் இருப்பாங்க. வா ரெண்டு இளநீர் சாப்பிட்டுப் போகலாம். சும்மா கற்கண்டு மாதிரி இனிக்கும் என்றவாறே காரை விட்டு இறங்கினான்.

    இல்லடா எனக்கு வேண்டாம். நீ போய் குடிச்சிட்டு வாடா

    ஏன்டா?

    இல்ல அப்பாவுக்கு நான் வர்றது தெரியுமா?

    ஆமா! நேத்தே போன் பண்ணிச் சொல்லிட்டேன். ஏன் கேட்கிற?

    எ... எல்லாத்தையும் சொல்லிட்டியா? தவிப்பாய்க் கேட்டான் ரவி.

    சேச்சே! என்னடா நீ. இத்தனை வருஷம் பழகியும் என்னைப் புரிந்துகொண்டது இவ்வளவுதானா? அதை எப்படிச் சொல்வேன். ஒன்றும் சொல்லவில்லை.

    அப்போ நான் இங்கே ஏன் வந்தேன் என்று கேட்பார்களே?

    ஆமான்டா. அதுக்குத்தான் என் நண்பன் நம்ம ஊருக்கு வந்து விவசாயத்தைப் பத்தியும் கிராமத்து மக்களோட வாழ்க்கை முறையையும் ஆராய்ச்சி பண்ணப் போறான். கொஞ்ச நாள் நம்ம வீட்டுலதான் தங்குவான். நானும் கூட இருந்து ஊரைச் சுத்திக்காட்டப் போறேன்னு சொல்லியிருக்கேன்.

    அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?

    என்ன சொன்னாங்களா? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். மாசத்தில ரெண்டே நாள் மட்டும் அவங்ககூட இருக்கிற புள்ள கொஞ்சநாள் இருக்கப் போறான்ற சந்தோஷம். அதுவும் புள்ளையோட சிநேகிதன் கூட வர்றானாம். நம்ம ஊரைப்பத்தி ஏதோ ஆராய்ச்சி செய்கிறானாம்னு ஊரெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    உண்மையாகவா சந்தோஷ்? அப்போ என்கிட்ட எதுவும் கேட்கமாட்டாங்களே. தர்ம சங்கடமா எதுவும் சொல்லிடமாட்டாங்களே.

    என்னடா நீ. இந்த மாதிரி நீ டென்ஷனாகக்கூடாதுன்னுதானே நம்ம வேலையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். இங்கு வந்தும் ஏன் பதட்டப்படுகிறாய்? நீ எதையும் நினைச்சு வருத்திக்காதே. அப்புறம் உங்க அம்மாவுக்கு நான் கொடுத்த வாக்கு என்னாவது?

    அம்மா என்றதும் ரவியின் முகம் வாடியது. அம்மா பாவம்டா. இதுவரை நான் அம்மாவை விட்டுப் பிரிஞ்சதே இல்லை. புறப்படும்போது அழுதுவிட்டார்கள் பாவம் அம்மா கண்கலங்கியவனை தோளில் தட்டிக் கொடுத்தான்.

    பீல் பண்ணாதேடா. இது நிரந்தரமான பிரிவில்லப்பா. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும். நீ பழைய மாதிரி ஜம்முன்னு மாறியதும் உன் அம்மா முன்னால கொண்டு போய் நிறுத்திடுறேன். சரியா. உனக்கு எப்பவெல்லாம் தோணுதோ. அப்ப போன்ல பேசிக்கோ. செல்போன் கிளியரா கிடைக்காட்டி வீட்டுலயும் போன் இருக்கு. அதுல பேசிக்கலாம். முதல்ல மத்ததெல்லாம் மறந்திடு. இப்பத்தான் புதுசா பிறந்திருக்கிறதா நினைச்சுக்கோ. வா வா முதல்ல கீழே இறங்கு. கார்க் கதவைத் திறந்துவிட்டான்.

    தயக்கமாகவே இறங்கினான் ரவி. சுற்றுப்புறம் அமைதியாக இருக்க தோட்டத்தில் பம்பு செட் தண்ணீர் விழும் சத்தம் தெளிவாகக் கேட்டது. நடுநடுவே தொம் தொம் என்ற ஓசை கேட்க சந்தோஷை ஏறிட்டான்.

    தேங்காய் பறிச்சுப் போடுறாங்கடா. அது விழுற சத்தம் தான்

    ஓஹோ. சரிடா. நீ முன்னே போ. நான் டாய்லெட் போயிட்டு வர்றேன்.

    சரிடா ரொம்ப தூரம் போயிடாதே. இங்க யாரும் வரமாட்டாங்க. அப்படி ஓரமா போ. நான் போயி அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன் வா என்றவாறு மரத்தால் ஆன பெரிய கதவைத் திறந்துகொண்டு சந்தோஷ் உள்ளே செல்ல ரவி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே ஒதுங்கினான்.

    அங்கே ஒரு பெண் அமர்ந்து ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்க விலகி நடந்தான். ஏர் கலப்பையோடு நாலைந்து விவசாயிகள் கடந்து போயினர். உழைத்து உரமேறிய உடம்பு. வயதானவர்களாக இருந்தாலும் நடையில் கம்பீரம் தெரிந்தது. துளியும் தள்ளாட்டம் இல்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1