Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அமுதை பொழியும் நிலவே!
அமுதை பொழியும் நிலவே!
அமுதை பொழியும் நிலவே!
Ebook125 pages45 minutes

அமுதை பொழியும் நிலவே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தோழியர் புடைசூழ வெட்கமும், பூரிப்புமாய் மணவறையை நெருங்கிக் கொண்டிருந்தாள் மதிவதனா. 

"ஏய் பொண்ணு வருது பொண்ணு வருது" என கூட்டத்திற்குள் சின்னதாய் சலசலக்க திருமணத்திற்கென்று வந்த கூட்டம் மொத்தமும் மதிவதனாவை திரும்பிப் பார்த்தது. பலரது கண்களில் வியப்பு, மலைப்பு சிலரது கண்களில் பொறாமையோடு கூடிய இயலாமை. ஒரு சிலரது கண்களில் மட்டும் பரிதாபம் இழையோடியது. 

இவை எதையும் கவனியாத மதிவதனா தரையை பார்த்தே நடந்து வர, உடன் வந்த தோழி உமா, காதோரமாய் கிசுகிசுத்தாள். 

"மதி!" 

"ம்?" 

"மாப்பிள்ளை சூப்பரா இருக்காருடி. லேசா நிமிர்ந்து பாரு" 

"ஷ்! சும்மா இருடி! யாராவது பார்த்திடப் போறாங்க" 

"யார் பார்த்தால் நமக்கென்ன? மேடைக்கு போனப்புறம் மாப்பிள்ளையை நேராய் பார்க்க முடியாது. பாருடி!" 

"வேண்டாம். நான் போட்டோவில பார்த்திட்டேனே!" 

"அதை விட நேர்ல அழகா இருக்காருடி பட்டு வேஷ்டி சட்டையில், ரோஜாப்பூ மாலையோட சும்மா ஜம்முன்னு இருக்காரு. எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்கு" 

"உதைவாங்கப் போற" அடிக்குரலில் அதட்டியவளின் அருகே ஓடி வந்தார் ராகவன். 

"என்னம்மா இவ்வளவு லேட்டாக்கிட்டீங்க? முகூர்த்தத்துக்கு நேரமாச்சுன்னு ஐயர் நாலுதரம் சொல்லிட்டார்" 

"அங்கிள்! எல்லா கல்யாண வீட்லயும் ஐயர் சொல்ற மந்திரம்தான் இது" 

"ஏம்மா! விளையாடுற நேரமா இது? சீக்கிரமா வாங்கம்மா" என சற்று பதட்டமாய் முன்னே நடக்க, உமா கேலியாய் சிரித்தாள். 

"மதி! உன்னை விட உன் அப்பாதான் டென்ஷனா இருக்காங்க"

"எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற டென்ஷன் இது. நீ கொஞ்ச நேரம் உன் ரேடியோ கமென்ட்ரியை ஆப் பண்ணு. நீ வா மதி!"- சக தோழியர் உமாவின் வாயை அடைத்து விட்டு மணவறையில் மணமகனின் அருகே மதிவதனாவை அமர வைத்தனர். 

பட்டுப்புடவையை சரி செய்து விட்டு தோழியர்கள் பின்னால் நின்று கொள்ள, மதிவதனாவிற்குள் படப்படப்பு கூடியது. தோழியருடன் பேசிக் கொண்டிருந்த வரையில் எந்த பதட்டமும் இல்லை. இப்போது தனியாக ஒரு அந்நிய ஆடவனுடன் உரசியபடி அமர்ந்திருக்கையில் உடல் உதறத் துவங்கியது. 

அவளது பதட்டத்தை தணிக்கும் வகையில் புரோகிதர் அவள் கையில் உதிரிப்பூக்களை கொடுத்து சில மந்திரங்களை சொல்ல, அவர் சொன்னவற்றை மணமக்கள் இருவரும் திருப்பிச் சொன்னார்கள். சுற்றிலும் உள்ள பேச்சுக் குரல்களையும், நாதஸ்வர ஓசையையும் தாண்டி அமுதனின் மெல்லிய ஆண்மை நிரம்பிய குரல் மதிவதனாவின் காதில் நுழைந்து உடலை சிலிர்க்க வைத்தது. 

தன் முன்னே நீண்ட அவனது கரங்கள் மட்டுமே கண்ணில் பட, அவனது முகத்தைப்பார்க்க எழுந்த ஆவலை அடக்கிக்கொண்டாள். 'ஆயுள் முழுக்க பார்க்கப் போகிறோமே! பிறகென்ன அவசரம்? பொறு மனமே!'- தனக்குத்தானே சொல்லிக் கொண்டபோது மணமகனின் கரங்களில் மாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர். 

"கெட்டிமேளம்! கெட்டிமேளம்"- என்றதும் அவரது கட்டளைக்காக காத்திருந்ததுபோல் மேளதாளங்கள். உச்சஸ்தாயில் முழங்க, சுற்றமும் நட்பும் தூவிய அட்சதை மழையின் நடுவே அமுதனின் மனைவியானாள் மதிவதனா. 

புகைப்படக்காரர்களின் ஒளி மின்னல்கள் கண்களை கூசச் செய்ய, தன் நெற்றியில் திலகமிட்ட கணவனை முதன் முதலாய் நேராய் பார்த்தாள். உமா சொன்னது உண்மையான வார்த்தை என்று புரிந்தது. 

நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் வைத்த அமுதனும் தன் மனைவியை நோக்க, சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள். மெல்லிய புன்னகையோடு தலையில் சிதறியிருந்த அட்சதைகளை தட்டி விட்ட அமுதனை, அவனது நண்பர் கூட்டம் கைகுலுக்கி வாழ்த்த அனைவரிடமும் சிரிப்போடு கை குலுக்கினான். 

சிரிக்கும்போது அவனது அழகு இன்னமும் கூடி விட, மதிவதனா இமைக்க மறந்து கணவனை நோக்க, பின்னால் நின்ற உமா மெதுவாய் கிள்ளினாள். 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223201106
அமுதை பொழியும் நிலவே!

Read more from Kalaivani Chokkalingam

Related to அமுதை பொழியும் நிலவே!

Related ebooks

Related categories

Reviews for அமுதை பொழியும் நிலவே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அமுதை பொழியும் நிலவே! - Kalaivani Chokkalingam

    1

    தோழியர் புடைசூழ வெட்கமும், பூரிப்புமாய் மணவறையை நெருங்கிக் கொண்டிருந்தாள் மதிவதனா.

    ஏய் பொண்ணு வருது பொண்ணு வருது என கூட்டத்திற்குள் சின்னதாய் சலசலக்க திருமணத்திற்கென்று வந்த கூட்டம் மொத்தமும் மதிவதனாவை திரும்பிப் பார்த்தது. பலரது கண்களில் வியப்பு, மலைப்பு சிலரது கண்களில் பொறாமையோடு கூடிய இயலாமை. ஒரு சிலரது கண்களில் மட்டும் பரிதாபம் இழையோடியது.

    இவை எதையும் கவனியாத மதிவதனா தரையை பார்த்தே நடந்து வர, உடன் வந்த தோழி உமா, காதோரமாய் கிசுகிசுத்தாள்.

    மதி!

    ம்?

    மாப்பிள்ளை சூப்பரா இருக்காருடி. லேசா நிமிர்ந்து பாரு

    ஷ்! சும்மா இருடி! யாராவது பார்த்திடப் போறாங்க

    யார் பார்த்தால் நமக்கென்ன? மேடைக்கு போனப்புறம் மாப்பிள்ளையை நேராய் பார்க்க முடியாது. பாருடி!

    வேண்டாம். நான் போட்டோவில பார்த்திட்டேனே!

    அதை விட நேர்ல அழகா இருக்காருடி பட்டு வேஷ்டி சட்டையில், ரோஜாப்பூ மாலையோட சும்மா ஜம்முன்னு இருக்காரு. எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்கு

    உதைவாங்கப் போற அடிக்குரலில் அதட்டியவளின் அருகே ஓடி வந்தார் ராகவன்.

    என்னம்மா இவ்வளவு லேட்டாக்கிட்டீங்க? முகூர்த்தத்துக்கு நேரமாச்சுன்னு ஐயர் நாலுதரம் சொல்லிட்டார்

    அங்கிள்! எல்லா கல்யாண வீட்லயும் ஐயர் சொல்ற மந்திரம்தான் இது

    ஏம்மா! விளையாடுற நேரமா இது? சீக்கிரமா வாங்கம்மா என சற்று பதட்டமாய் முன்னே நடக்க, உமா கேலியாய் சிரித்தாள்.

    மதி! உன்னை விட உன் அப்பாதான் டென்ஷனா இருக்காங்க

    எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற டென்ஷன் இது. நீ கொஞ்ச நேரம் உன் ரேடியோ கமென்ட்ரியை ஆப் பண்ணு. நீ வா மதி!- சக தோழியர் உமாவின் வாயை அடைத்து விட்டு மணவறையில் மணமகனின் அருகே மதிவதனாவை அமர வைத்தனர்.

    பட்டுப்புடவையை சரி செய்து விட்டு தோழியர்கள் பின்னால் நின்று கொள்ள, மதிவதனாவிற்குள் படப்படப்பு கூடியது. தோழியருடன் பேசிக் கொண்டிருந்த வரையில் எந்த பதட்டமும் இல்லை. இப்போது தனியாக ஒரு அந்நிய ஆடவனுடன் உரசியபடி அமர்ந்திருக்கையில் உடல் உதறத் துவங்கியது.

    அவளது பதட்டத்தை தணிக்கும் வகையில் புரோகிதர் அவள் கையில் உதிரிப்பூக்களை கொடுத்து சில மந்திரங்களை சொல்ல, அவர் சொன்னவற்றை மணமக்கள் இருவரும் திருப்பிச் சொன்னார்கள். சுற்றிலும் உள்ள பேச்சுக் குரல்களையும், நாதஸ்வர ஓசையையும் தாண்டி அமுதனின் மெல்லிய ஆண்மை நிரம்பிய குரல் மதிவதனாவின் காதில் நுழைந்து உடலை சிலிர்க்க வைத்தது.

    தன் முன்னே நீண்ட அவனது கரங்கள் மட்டுமே கண்ணில் பட, அவனது முகத்தைப்பார்க்க எழுந்த ஆவலை அடக்கிக்கொண்டாள். ‘ஆயுள் முழுக்க பார்க்கப் போகிறோமே! பிறகென்ன அவசரம்? பொறு மனமே!’- தனக்குத்தானே சொல்லிக் கொண்டபோது மணமகனின் கரங்களில் மாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர்.

    கெட்டிமேளம்! கெட்டிமேளம்- என்றதும் அவரது கட்டளைக்காக காத்திருந்ததுபோல் மேளதாளங்கள். உச்சஸ்தாயில் முழங்க, சுற்றமும் நட்பும் தூவிய அட்சதை மழையின் நடுவே அமுதனின் மனைவியானாள் மதிவதனா.

    புகைப்படக்காரர்களின் ஒளி மின்னல்கள் கண்களை கூசச் செய்ய, தன் நெற்றியில் திலகமிட்ட கணவனை முதன் முதலாய் நேராய் பார்த்தாள். உமா சொன்னது உண்மையான வார்த்தை என்று புரிந்தது.

    நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் வைத்த அமுதனும் தன் மனைவியை நோக்க, சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள். மெல்லிய புன்னகையோடு தலையில் சிதறியிருந்த அட்சதைகளை தட்டி விட்ட அமுதனை, அவனது நண்பர் கூட்டம் கைகுலுக்கி வாழ்த்த அனைவரிடமும் சிரிப்போடு கை குலுக்கினான்.

    சிரிக்கும்போது அவனது அழகு இன்னமும் கூடி விட, மதிவதனா இமைக்க மறந்து கணவனை நோக்க, பின்னால் நின்ற உமா மெதுவாய் கிள்ளினாள்.

    ஏய்! ரொம்ப ஜொள்ளு விடாதே! வீடியோவில் அப்படியே பதிவாகிடும்

    ஐயோ! மதிவதனா பதறி தலையை குனிந்து கொள்ள, அவள் புறமாய் திரும்பினான் அமுதன்.

    என்னாச்சு?- மெலிதாய் மிக மெலிதாய் கேட்ட கேள்விதான் என்றாலும் அந்தக் குரலில் இறங்கிப் போனாள் மதிவதனா.

    என்னாச்சு மதி?

    ஓ... ஒண்ணுமில்ல, சு...ம்...மாதான்

    பொண்ணும், மாப்பிள்ளையும் அக்னியை மூனு முறை வலம் வந்திடுங்கோ புரோகிதர் தன் வேலையை முடித்து விட்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டே கூற, அமுதன் திடுக்கென நிமிர்ந்தான்.

    அப்பா...-அவசரமாய் தவிப்பாய் தந்தையை அழைக்க, ராகவனும், ராமமூர்த்தியும் பார்வையால் அவனை அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு, புரோகிதரை நெருங்கினர்.

    சாமி! நீங்க புறப்படுங்க. மத்த சடங்கையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்

    தம்பதிகள் இன்னும் அக்னி வலம் வரலையே

    அது பையனுக்கு கால்ல கொஞ்சம் அடிபட்டிருக்கு. அதனால அக்னியை தொட்டு வணங்கினாலே போதும்- ராமமூர்த்தி குரலை தழைத்துக் கொண்டு கூற, மதிவதனாவின் நெற்றி சுருங்கியது.

    தலையை நிமிர்த்தாமலே தன் அருகில் அமர்ந்திருந்தவனின் கால்களை பார்த்தாள். அணிந்திருந்த பட்டு வேஷ்டி அவனது கால்களை முழுமையாய் மறைத்திருக்க, சற்றே குழம்பிப் போனாள்.

    ‘அக்னியை வலம் வர முடியாத அளவுக்கு பெரிய காயமா? எப்போது பட்டது? எப்படி பட்டது? ஏன் இதைப்பற்றி தனக்கு யாரும் தெரிவிக்கவில்லை?’ மதிவதனா குழம்பிக் கொண்டிருக்கையிலேயே புரோகிதர் விடை பெற்றுச் சென்று விட, மேடையேறிய உறவினர் கூட்டம் கொடுத்த பரிசுப் பொருட்களை உட்கார்ந்த நிலையிலே வாங்கிக் கொண்டு புகைப்படத்திற்காக புன்னகைத்தான் அமுதன்.

    மற்றவர்களுக்காக தானும் புன்னகைத்த போதும் மதிவதனாவின் முகம் சுத்தமாய் வெளுத்திருந்தது.

    ‘புகைப்படத்திற்காக கூட எழுந்து நிற்க முடியாத அளவிற்கு பலத்த அடியா? மணவறைக்கு எப்படி வந்திருப்பான்? திருமணச்சடங்கு முடிந்த பிறகு எப்படி தன்னுடன் நடந்து வீட்டிற்கு வருவான்?’

    மேடம்! ஸ்மைல் ப்ளீஸ்!

    மதி! சிரிடி! போட்டோகிராபர் சொல்றார் பார்

    உ... மா!- மெதுவாய் அழைத்தாள் மதிவதனா.

    என்ன மதி?

    என்ன இது? இவரால எழுந்து நிற்க முடியாது போலிருக்கே? எனக்கு பயமா இருக்கு

    அதான் கால்ல அடிபட்டிருக்குன்னு சொல்றாங்கள்ல

    இ... இல்ல உமா! எனக்கென்னவோ, பயமா இருக்கு- என நடுக்கமாய் உமாவின் கரத்தைப் பற்றிக் கொள்ள, ராகவன் சின்ன செருமலோடு புன்னகைத்தார்.

    அட என்னம்மா நீங்க? என்ன தான் உயிர்த் தோழிகளா இருந்தாலும் மணமேடையில கூட இப்படி பிரியாம நின்னா எப்படி? ஏம்மா உமா!

    சொல்லுங்க அங்கிள்!

    நீயும் உன் தோழிகளும் போய் சாப்பிடுங்கம்மா. மாப்பிள்ளையோட சொந்தக்காரங்க எல்லாம் மேடைக்கு வர்றாங்க. நாம நின்னா இடைஞ்சலா இருக்கும்- ராகவன் சொல்ல, தோழியரோடு சேர்ந்து மதிவதனாவின் முகமும் மாறியது.

    அப்பா...

    ஷ்! நீ மாப்பிள்ளை பக்கமா திரும்பும்மா. நீங்க போய் சாப்பிடுங்கம்மா. போயிட்டு வாங்க- தோழியர் அனைவரும் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு தங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1