Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனவுகள் வாழ்க்கை அல்ல...
கனவுகள் வாழ்க்கை அல்ல...
கனவுகள் வாழ்க்கை அல்ல...
Ebook125 pages46 minutes

கனவுகள் வாழ்க்கை அல்ல...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டுக்குள்ளும் வாசலுக்குமாய் கைகளைப் பிசைந்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் சகுந்தலா. உள்ளத்தின் படபடப்பு வியர்வையாய் வெளியேற புடவைத் தலைப்பால் கழுத்தையும் நெற்றியையும் ஒற்றியபோது கையில் பையோடு வந்துசேர்ந்தார் தேவநாதன். 

"சகுந்தலா! அவங்க வந்துடலையே!" 

"இல்லங்க! ஆனா புறப்பட்டுட்டதா போன் பண்ணிட்டாங்க." 

"நல்லது இந்தா! இதுல பால் பாக்கெட், ஸ்வீட், பூ எல்லாம் இருக்கு. ரம்யாவுக்கு இந்த பூவை வெச்சிவிடு. அவங்க வரும்போது நல்லதா ஒரு புடவையை கட்டிட்டு இருக்கச் சொல்லு. மாப்பிள்ளையோட அம்மாவுக்கு சுடிதார் போடுறதெல்லாம் பிடிக்காது போலிருக்கு. மொதல்ல கொஞ்சம் தண்ணி குடு" என்றவாறே கையிலிருந்த பையை மனைவியிடம் கொடுத்துவிட்டு சட்டையின் மேல் பொத்தானை கழற்றிவிட்டு மின்விசிறியைப் போட்டுக் கொண்டு அப்பாடா என்றவாறே இருக்கையில் அமர்ந்தார். 

சகுந்தலாவின் முகம் வெளுத்துவிட, மீண்டும் வாசலை ஏறிட்டாள். மகள் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாது போக, உள்ளே பயப்பந்து எழுந்து நெஞ்சை அடைத்தது.

'இந்தப்பெண் எங்கே போய்விட்டாள்? இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து நிற்பார்களே... என்ன செய்வேன் நான்?' மனைவி இன்னும் வாசலருகேயே நின்று கொண்டிருக்க, நெற்றியைச் சுருக்கினார் தேவநாதன். 

"சகுந்தலா!" 

"ம்... ம்? என்னங்க?" 

"உங்கிட்ட தண்ணி கேட்டேன்" 

"இதோ... தர்றேங்க!" 

"இந்தாங்க மாமா தண்ணி!" என்று சொம்பை நீட்டிய மருமகளிடம் புன்னகையோடு வாங்கிக் கொண்டார். 

"நன்றிம்மா! உன் அத்தைக்கு என்னாச்சு? கூப்பிடுறது கூட காதில் விழாத அளவுக்கு யாரை எதிர்பார்க்கிறாள்?" 

"அது வந்து மாமா" தயக்கமாய் தொடங்கிய மருமகளை அவசரமாய்த் தடுத்து கையிலிருந்த பையை அவள் கையில் கொடுத்தாள். 

"உமா! நீ போய் பாலைக் காய்ச்சி வைம்மா. அவங்க வந்ததும் காபியைக் கலந்துக்கலாம்" 

"சரிங்க அத்தே!" 

"பூ இருக்கு. நீ கொஞ்சம் வெச்சுக்க" 

"சரி!'" 

"ரம்யா கிளம்பிட்டாளாம்மா? அப்புறம் அவங்க வந்து நின்னபிறகு தலையை பின்னுறேன் பவுடர் போடுறேன்னு சொல்லிட்டு நிற்கப்போறா" சின்னச் சிரிப்போடு சொல்லிவிட்டு தண்ணீரைக் குடிக்கத் தொடங்கிய கணவனை சற்று பயமும் பதட்டமுமாய் பார்த்தாள் சகுந்தலா. 

உமா மௌனமாய் உள்ளே சென்றுவிட, தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர்ந்த தேவநாதன் இன்னும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு குழப்பமாய் எழுந்தார். 

"சகுந்தலா!" 

"ம்? என்னங்க?" 

"என்னாச்சு உனக்கு? இன்னும் பத்து நிமிஷத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க. நீ என்னன்னா முகத்தைக் கூட கழுவாம துணியை மாத்தாம இப்படி நின்னுட்டு இருக்க? யாரை எதிர்பார்க்கிற?" 

"அது ஸ்ரீதரன்... வந்துட்டானான்னு தேடிட்டு இருக்கேன்"

"ஏன்? எதையாவது வாங்கிட்டு வரச்சொன்னியா?" 

"இல்... ஆமா... இல்லங்க!" 

"என்ன சொல்ற நீ?" எரிச்சலாய் கேட்டவரிடம், தயக்கமாய்.

"என்னங்க!" என்றழைத்தபோது சகுந்தலாவின் குரல் அழுகைக்கு தயாரானது. 

"என்ன?" 

"ரம்யாவை... இன்னும்... காணோம்ங்க" 

"எ...ன்ன?" 

"ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்னு போனவ இன்னும் வரலைங்க!" 

"என்ன? ஆபீசுக்கு போனாளா? ஏன்டி... ரெண்டு நாள்ல கல்யாணத்தை வெச்சிகிட்டு அவளை ஆபீசுக்கு அனுப்பினே?" கணவனின் குரல் கோபத்தில் உயர, அவசரமாய் தலையசைத்து மறுத்தாள். 

"அய்யோ இல்லங்க! நான் அனுப்பல... அவதான் ராஜினாமா கடிதத்தை கொடுத்திட்டு கணக்கை முடிச்சிட்டு வர்றேன்னு போனா"

"என்ன? அதைத்தான் பத்துநாளுக்கு முன்னாலயே முடிச்சாச்சே!"

"என்ன? என்னங்க சொல்றீங்க?" 

"நீயும் உமாவும் ஊருக்கு போயிருந்தீங்களே. அன்னிக்கு நான்தானே அவளைக் கூட்டிட்டு போய் ரிஸைன் பண்ணிட்டு வந்தோம்? அவ சொல்லலையா?" 

"அய்யய்யோ... அப்போ எங்கிட்ட பொய் சொன்னாளா? பாவி மக! எங்கே போனாளோ தெரியலையே!" சகுந்தலா பெருங்குரலெடுத்து அழத்துவங்க, உள் அறையிலிருந்து ஓடிவந்து மாமியாரை பற்றிக்கொண்டாள் உமா. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223649311
கனவுகள் வாழ்க்கை அல்ல...

Read more from Kalaivani Chokkalingam

Related to கனவுகள் வாழ்க்கை அல்ல...

Related ebooks

Related categories

Reviews for கனவுகள் வாழ்க்கை அல்ல...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனவுகள் வாழ்க்கை அல்ல... - Kalaivani Chokkalingam

    1

    வீட்டுக்குள்ளும் வாசலுக்குமாய் கைகளைப் பிசைந்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் சகுந்தலா. உள்ளத்தின் படபடப்பு வியர்வையாய் வெளியேற புடவைத் தலைப்பால் கழுத்தையும் நெற்றியையும் ஒற்றியபோது கையில் பையோடு வந்துசேர்ந்தார் தேவநாதன்.

    சகுந்தலா! அவங்க வந்துடலையே!

    இல்லங்க! ஆனா புறப்பட்டுட்டதா போன் பண்ணிட்டாங்க.

    நல்லது இந்தா! இதுல பால் பாக்கெட், ஸ்வீட், பூ எல்லாம் இருக்கு. ரம்யாவுக்கு இந்த பூவை வெச்சிவிடு. அவங்க வரும்போது நல்லதா ஒரு புடவையை கட்டிட்டு இருக்கச் சொல்லு. மாப்பிள்ளையோட அம்மாவுக்கு சுடிதார் போடுறதெல்லாம் பிடிக்காது போலிருக்கு. மொதல்ல கொஞ்சம் தண்ணி குடு என்றவாறே கையிலிருந்த பையை மனைவியிடம் கொடுத்துவிட்டு சட்டையின் மேல் பொத்தானை கழற்றிவிட்டு மின்விசிறியைப் போட்டுக் கொண்டு அப்பாடா என்றவாறே இருக்கையில் அமர்ந்தார்.

    சகுந்தலாவின் முகம் வெளுத்துவிட, மீண்டும் வாசலை ஏறிட்டாள். மகள் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படாது போக, உள்ளே பயப்பந்து எழுந்து நெஞ்சை அடைத்தது.

    ‘இந்தப்பெண் எங்கே போய்விட்டாள்? இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து நிற்பார்களே... என்ன செய்வேன் நான்?’ மனைவி இன்னும் வாசலருகேயே நின்று கொண்டிருக்க, நெற்றியைச் சுருக்கினார் தேவநாதன்.

    சகுந்தலா!

    ம்... ம்? என்னங்க?

    உங்கிட்ட தண்ணி கேட்டேன்

    இதோ... தர்றேங்க!

    இந்தாங்க மாமா தண்ணி! என்று சொம்பை நீட்டிய மருமகளிடம் புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.

    நன்றிம்மா! உன் அத்தைக்கு என்னாச்சு? கூப்பிடுறது கூட காதில் விழாத அளவுக்கு யாரை எதிர்பார்க்கிறாள்?

    அது வந்து மாமா தயக்கமாய் தொடங்கிய மருமகளை அவசரமாய்த் தடுத்து கையிலிருந்த பையை அவள் கையில் கொடுத்தாள்.

    உமா! நீ போய் பாலைக் காய்ச்சி வைம்மா. அவங்க வந்ததும் காபியைக் கலந்துக்கலாம்

    சரிங்க அத்தே!

    பூ இருக்கு. நீ கொஞ்சம் வெச்சுக்க

    சரி!’

    ரம்யா கிளம்பிட்டாளாம்மா? அப்புறம் அவங்க வந்து நின்னபிறகு தலையை பின்னுறேன் பவுடர் போடுறேன்னு சொல்லிட்டு நிற்கப்போறா சின்னச் சிரிப்போடு சொல்லிவிட்டு தண்ணீரைக் குடிக்கத் தொடங்கிய கணவனை சற்று பயமும் பதட்டமுமாய் பார்த்தாள் சகுந்தலா.

    உமா மௌனமாய் உள்ளே சென்றுவிட, தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர்ந்த தேவநாதன் இன்னும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு குழப்பமாய் எழுந்தார்.

    சகுந்தலா!

    ம்? என்னங்க?

    என்னாச்சு உனக்கு? இன்னும் பத்து நிமிஷத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க. நீ என்னன்னா முகத்தைக் கூட கழுவாம துணியை மாத்தாம இப்படி நின்னுட்டு இருக்க? யாரை எதிர்பார்க்கிற?

    அது ஸ்ரீதரன்... வந்துட்டானான்னு தேடிட்டு இருக்கேன்

    ஏன்? எதையாவது வாங்கிட்டு வரச்சொன்னியா?

    இல்... ஆமா... இல்லங்க!

    என்ன சொல்ற நீ? எரிச்சலாய் கேட்டவரிடம், தயக்கமாய்.

    என்னங்க! என்றழைத்தபோது சகுந்தலாவின் குரல் அழுகைக்கு தயாரானது.

    என்ன?

    ரம்யாவை... இன்னும்... காணோம்ங்க

    எ...ன்ன?

    ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்னு போனவ இன்னும் வரலைங்க!

    என்ன? ஆபீசுக்கு போனாளா? ஏன்டி... ரெண்டு நாள்ல கல்யாணத்தை வெச்சிகிட்டு அவளை ஆபீசுக்கு அனுப்பினே? கணவனின் குரல் கோபத்தில் உயர, அவசரமாய் தலையசைத்து மறுத்தாள்.

    அய்யோ இல்லங்க! நான் அனுப்பல... அவதான் ராஜினாமா கடிதத்தை கொடுத்திட்டு கணக்கை முடிச்சிட்டு வர்றேன்னு போனா

    என்ன? அதைத்தான் பத்துநாளுக்கு முன்னாலயே முடிச்சாச்சே!

    என்ன? என்னங்க சொல்றீங்க?

    நீயும் உமாவும் ஊருக்கு போயிருந்தீங்களே. அன்னிக்கு நான்தானே அவளைக் கூட்டிட்டு போய் ரிஸைன் பண்ணிட்டு வந்தோம்? அவ சொல்லலையா?

    அய்யய்யோ... அப்போ எங்கிட்ட பொய் சொன்னாளா? பாவி மக! எங்கே போனாளோ தெரியலையே! சகுந்தலா பெருங்குரலெடுத்து அழத்துவங்க, உள் அறையிலிருந்து ஓடிவந்து மாமியாரை பற்றிக்கொண்டாள் உமா.

    அத்தே! சத்தம் போடாதீங்க. அக்கம்பக்கம் கேட்டால் கூட்டம் கூடிடும்!

    உமா... அவ எப்பம்மா போனா?

    காலையில நீங்க வேலைக்குப் போனதுமே கிளம்பிட்டா மாமா

    ஏம்மா! நீயாவது தடுத்திருக்கக் கூடாதா? எங்கே போனாள்னு தெரியலையே!

    நான் குளிக்கப் போயிருந்தேன் மாமா. அத்தைகிட்ட சொல்லிட்டு போயிருக்கிறாள்

    இப்ப அவளை எங்கேன்னு போய் தேடுறது?

    நீங்க எங்கேயும் போகவேண்டாம் மாமா. அவர் ரம்யாவோட ஆபீசுக்குத்தான் போயிருக்கார் உமா சொல்லிக்கொண்டிருந்த போதே ஸ்ரீதரனின் இருசக்கர வாகனம் வந்து நிற்கும் ஒலி கேட்டு சகுந்தலா சடக்கென நிமிர்ந்தாள்.

    இதோ! எம்புள்ள வந்துட்டான். அவன் கூட்டிட்டு வந்திருப்பான்... ஸ்ரீஸ்ரீ, ரம்யா வந்துட்டாளாப்பா என பரபரப்பாய் வாசலை நெருங்க, இருண்ட முகத்தோடு உள்ளே நுழைந்தான் ஸ்ரீதரன்.

    எப்பா! ரம்யா எங்கேப்பா? ரம்யா எங்கே?

    அவ ஆபீசுக்கு வரலையாம்மா!

    என்ன?

    அவ பிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் விசாரிச்சுப் பார்த்தேன். யாருக்கும் தெரியல. போனையும் ஸ்விட்ச்-ஆப் பண்ணி வெச்சிருக்கா

    ஐயோ... என்னப்பா சொல்ற? என்னங்க! அவ... அவ அப்படி எங்கே போயிருப்பா? எனக்கு பயமா இருக்கே!

    இந்த பயம் அவளை வெளியே அனுப்பும்போது இருந்திருக்கணும். காலையில் போனவ மணி ஆறாகப்போகுது. இன்னும் வரவில்லைன்னா... தேவநாதன் பேச்சை முடிக்கும் முன் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

    என்னங்க! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போலிருக்கே... இப்ப என்னங்க பண்றது?

    முதல்ல கண்ணைத் துடை! அவங்களை வரவேற்று உட்காரவைப்போம். பிறகு பேசிக்கலாம். என்றவாறே முகத்தை இயல்பாக்கியவாறே அனைவரும் வாசலை அடைய, இன்னொரு காரும் வந்துநிற்க, அனைவரின் பார்வையும் திரும்பியது.

    முதலாவது வந்து நின்ற காரில் மாப்பிள்ளை வீட்டார் நான்கைந்து பேர் இறங்கிநிற்க, அடுத்ததாய் வந்து நின்ற காரில் இருந்து இறங்கியவர்களைக் கண்டதும் சகுந்தலாவின் தலையில் இடி இறங்கியது. மாலையும் கழுத்துமாய் வந்திறங்கிய மகளைக் கண்டு கண்கள் இருள அப்படியே மயங்கிச்சரிந்தாள்.

    2

    ஊர் மொத்தமும் தத்தம் வேலையை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்க குழுமிவிட, சகுந்தலா தெருவென்றும் பாராமல் தரையில் அமர்ந்து அழுதுபுலம்பிக் கொண்டிருந்தாள். உமா மாமியாரைத் தேற்ற இயலாமல் தானும் அழ, நெஞ்சைப்பற்றிக் கொண்ட தேவநாதன் உயிரற்ற சடலமாய் அசைவற்று நின்றிருந்தார்.

    மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவர்களை சமாளிக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன். இலவசமாய் திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலோடு கூடிநின்ற மக்களின் முன்பாய் தன் மனம் கவர்ந்தவனையே மணம்முடித்து வந்து நின்ற ரம்யா காட்சிப்பொருளாய் நின்று கொண்டிருந்தாள்.

    பாரு! எவ்வளவு திண்ணக்கமா நிற்கிறா பாரு உன் தங்கச்சி? ரெண்டு நாள்ல கல்யாணத்தை வெச்சிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திட்டு வந்து நிற்கிறோமேன்னு கொஞ்சமாவது வெட்கப்படுறாளா பாரு?

    அவ ஏன் அண்ணி வெட்கப்படப்போறா. அதான் நம்மளை வெட்கப்பட வெச்சிட்டாளே? ஊர்ல நாட்டுல நானும் எவ்வளவோ பொண்ணைப் பார்த்திருக்கேம்மா. இப்படி ஒரு அமுக்கினியை பார்த்ததே இல்ல. ஊமைக்கோட்டான் மாதிரி இருந்தாளே... இன்னிக்குப்பாரு என்ன காரியம் பண்ணியிருக்கா?

    சும்மாவா சொன்னாங்க ஊமை ஊரைக்கெடுக்கும் பெருச்சாளி பேரைக்கெடுக்கும்னு

    "அய்யோ! இந்த கேடுகெட்டவளை நம்பி பத்திரிகை அடிச்சி ஊர்முழுக்க கொடுத்திட்டோமே! நாளைக்கே சாதிசனமெல்லாம் மொத்தமா

    Enjoying the preview?
    Page 1 of 1