Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மணியே மணிக்குயிலே...
மணியே மணிக்குயிலே...
மணியே மணிக்குயிலே...
Ebook239 pages1 hour

மணியே மணிக்குயிலே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அநியாயத்துக்குப் பயப்படுறியே கிஷோர். இந்தப் பயம் எல்லாத்திலயும் இருந்திருக்கணும். பொண்ணுங்ககிட்டதான் உன் வீரத்தைக் காட்டுவியா?" 

"நீ... நீ என்ன சொல்றே?" 

"சொல்றேன். வா... முதல்ல லெட்டரை வை!" கூடவே எழுந்து கிஷோரின் அறைக்குள் நுழைந்து தலையணைக் கடியில் கடிதத்தை வைக்கச் சொன்னான். 

"வெச்சிட்டேனே! இப்பவாவது சொல். நீ யார்?"

"சொல்றேன். எல்லா ஜன்னலையும் மூடு."

"எ... எதுக்கு?"

"எதிர் கேள்வி கேட்காதே."

"இல்ல... கேட்கல!" அவசரமாய் ஜன்னலை மூடினான். 

"ம். இப்போ எனக்குச் சூடா ஒரு கப் காபி போட்டுக் கொண்டு வா." 

"என்ன?"

"ஏன்... காபி போடத் தெரியாதா?"

"முதல்ல நீ யாருன்னு சொல்லு."

"சொல்லிட்டாப் போச்சு. ஜெகனைத் தெரியுமா?".

திக்கென நிமிர்ந்தான். "யாரு? ஜெ... ஜெகனா?" 

"ஆமாம். தெரியாதுன்னு சொல்லித் தப்பிக்கலாம்னு நினைக்காதே." 

"தெ... தெரியும்." 

"அவன் கட்டிக்கப் போற பொண்ணையும் தெரிஞ்சிருக்கணுமே...!" 

"ஸ... ஸார்! நீங்க யாரு?" 

"அந்தப் பெண்ணோட தாய்மாமா. புரியல்ல... என் அக்கா பொண்ணு..." சுப்பிரமணி நிதானமாய்ச் சொல்ல, சர்வமும் நடுங்கிப் போனான் கிஷோர். - 

"ஸார்... அது வந்து... நாங்க வேணுமின்னே...!"

"நான் எதுவுமே கேட்கலையே கிஷோர்!" 

"இல்லை ஸார். அன்னிக்குக் கொஞ்சம் அதிகமா டிரிங்க்ஸ் சாப்பிட்டிருந்தோம்." 

"அதிகமாக சாப்பிட்டா பொண்டாட்டின்னு நினைச்சி உன் அம்மாகிட்டப் போவியா?" 

"ஸார்." 

"வாயை மூடுடா நாயே. உங்க மூணு பேருக்குமே இன்னிக்குத்தான் சங்கு." 

"வேண்டாம் ஸார். தெரியாம பண்ணிட்டோம். மன்னிச்சிடுங்க." 

"தெரியாம பண்ணினா... அது தப்பு இல்லையா? பாதிப்பு இல்லையா?" 

"தப்புதான் ஸார்." 

"ம்... அதுக்குத்தான் இந்த தண்டனை. நீயே தற்கொலை பண்ணிக்க...!" 

"ஸார். ப்ளீஸ். என்னை விட்டுடுங்க...!" 

"சரி. முதல்ல ஒரு காபி கொடு. பிறகு பார்க்கலாம்." 

"ஸார்... என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க." 

"முதல்ல காபி போடுப்பா. வா... நான் கிச்சன் வாசல்ல நிற்கிறேன்." 

உடல் மொத்தமும் நடுங்க எழுந்தான் கிஷோர். கூடவே நடந்தபடி சொன்னான் சுப்பிரமணி. 

"இதோ பார் கிஷோர். கத்திக் கூச்சல் போடலாம். தப்பிச்சுப் போகலாம்னு முயற்சி பண்ணாதே. பேசாம நான் சொன்னபடி கேட்டு நட." 

"ச... சரிங்க ஸார்."  

"ம்... போ. சரியா அஞ்சே நிமிஷத்தில காபியோட வா. நான் வாசல்ல நிற்கிறேன். போ." 

சற்றே பயமாய் கிச்சனுக்குள் கிஷோர் நுழைய கதவைச் சத்தமில்லாமல் மூடினான் சுப்பிரமணி. பரபரவென வெளியேறி வாசல் கதவையும் சாத்திவிட்டு கேட்டை நெருங்கி வெளியேறுகையில் அந்தச் சத்தம் கேட்டது. 

'டொம்ம்ம்...' என கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறும் ஓசை. பகல் நேர அமைதியைக் கலைத்து அக்கம்பக்கத்தவர் வீடுகளில் சலனம் தெரிய வெகுதூரம் போய் விட்டிருந்தான் சுப்பிரமணி. 

நேராக பெட்ரோல் பங்க் சென்று, "ஸார்! நான் வெளியூரு. வண்டியில வந்தேன். பெட்ரோல் தீர்ந்து போச்சு. ஒரு ரெண்டு லிட்டர் பெட்ரோல் கேன் ஏதாவது இருந்தா தர்றீங்களா?" என்றான். 

"வண்டியைத் தள்ளிட்டு வந்திருக்கலாமே...!" 

"பெரிய வண்டி. வெயிலும் ஜாஸ்தியா இருக்கு. தள்ளிட்டு வர முடியல்ல..."  

"சரி, ராமு. அந்த ரெண்டு லிட்டர் வாட்டர் கேனை எடுத்திட்டு வாடா!" கடைப் பையன் காலியான வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு வர, ஊழியர் அதில் பெட்ரோலை நிரப்பினார். 

பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியின் கண்கள் செந்தணலாய் கனன்றது. நெஞ்சு விம்மியது. 

"மாமா... எரியுது மாமா... எரியுது மாமா... என்னைக் கொன்னுடச் சொல்லு மாமா... எரியுது மாமா!" காதிற்குள் ஒலித்த குரலில் உடல் துடிக்க, கண்களில் நீர் தளும்பியது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 20, 2023
ISBN9798223520832
மணியே மணிக்குயிலே...

Read more from Kalaivani Chokkalingam

Related to மணியே மணிக்குயிலே...

Related ebooks

Reviews for மணியே மணிக்குயிலே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மணியே மணிக்குயிலே... - Kalaivani Chokkalingam

    1

    சாலையோரமாய்ப் பரந்து விரிந்திருந்த கொன்றை மரத்தின் அடியில் பொறுமையாய் நின்று கொண்டிருந்தான் சுப்பிரமணி. செக்கச் செவேரென்று பூத்திருந்த கொன்றை மலர்கள் காற்றின் அசைவிற்கேற்ப தனது மலர்களை உதிர்த்து அவனைப் பூத்தூவி வாழ்த்தியது.

    தான் செய்யப் போகும் காரியத்தை இயற்கையே ஆசிர்வதித்து வாழ்த்தி அனுப்புவதாக எண்ணிக் கொண்ட சுப்பிரமணிக்கு முப்பது வயது. மாநிறம். களையான கம்பீரமான முகம். உயரமாய் அதற்கேற்ற பருமனாய், பார்க்கும் யாவரும் மதிக்கும் தோற்றம். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தான்.

    நேரமாகிக் கொண்டே இருக்க, வானத்தை அண்ணாந்து பார்த்தான். சூரியனைப் பார்த்தே நேரத்தைக் கணக்கிட்டுப் பழகியிருந்ததால் காலை பதினொரு மணி என்பதை உணர்ந்து கொண்டான். எதிரே இருந்த வீட்டைக் கவனித்தான்.

    பங்களா டைப் வீடுதான். வரிசையாய் இருந்த அனைத்துமே பெரிய வீடுகள்தான். ஆள் அரவமின்றி அமைதியாய் இருந்தது. வீட்டின் முன் ஏராளமான விதவிதமான பூச்செடிகள், கொடிகள் பல நிறங்களில் பூத்துக் குலுங்கின.

    திடீரென வீட்டின் உள்ளே சலசலப்பு தெரிய சட்டென உஷாராகி மரத்தின் பின்னே மறைந்து கொண்டான். கண்கள் மட்டும் கூர்மையாய்த் தன் எதிரே இருந்த வீட்டை ஆராய, அந்த வீட்டின் அகலமான கேட் இரண்டாய் விரிந்தது.

    மற்றவர்கள் காரில் ஏறி அமர கார் கதவின் ஓசை கேட்டது. அடுத்த நிமிடத்தில் கார் புறப்பட்டு வெளியேற, ஒரு இளைஞன் கேட்டைச் சாத்தினான். கார் வேகமெடுத்துக் கிளம்ப, சுப்பிரமணி மரத்தை விட்டு நகர்ந்து சாலையின் இருபுறமும் நோட்டமிட்டான்.

    வெகு அமைதி. எங்கோ கரைந்த காகத்தின் ஒலியைத் தவிர துளியும் ஓசையில்லை. திருப்தியாய் புன்னகைத்து விட்டு, நிமிர்ந்த நடையோடு கொஞ்சமும் தயக்கமில்லாமல் சாலையைக் கடந்து அந்த வீட்டை அடைந்தான்.

    தன் சொந்த வீட்டினுள் நுழைபவன் போல் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்து முதல் வேளையாய் கேட்டைச் சாத்தி தாழிட்டான். இரண்டு நாட்களாய் துப்பறிந்ததில் இந்த வீட்டிற்குக் காவலாளியும் இல்லை. காவலாய் இருந்த நாயும் சமீபத்தில்தான் இறந்து விட்டது என்பதையும் அறிந்திருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறி கதவைத் தட்டினான்.

    வீடே அதிரும்படியாய் ஆங்கிலப் பாடல் அலறிக் கொண்டிருக்க, கதவைத் தட்டுவதை நிறுத்தி, அழைப்பு மணியை அழுத்தினான். இப்போதும் பலனில்லாமல் போகவே விடாமல் அழுத்தினான்.

    யாரது? கொஞ்சமும் டீஸன்ஸ்ட் இல்லாம? கோபமாய்க் கேட்டவாறு கதவைத் திறந்தான் அந்த இளைஞன். அப்போதுதான் குளித்திருப்பான் போலும். உடல் முழுக்க ஈரமாய் இருக்க, பூத்துவாலையால் இடுப்பில் கட்டியிருந்தான்.

    ஹு ஆர் யூ மேன்? இப்படியா பெல் அடிப்பது?

    சுப்பிரமணி புன்னகைத்தான். மன்னிச்சிடுங்க ஸார். பாட்டுச் சத்தத்தில் கேட்காதுன்னு கூட கொஞ்ச நேரம் அழுத்திட்டேன்.

    நல்லா அழுத்தின... ஆமா யார் நீ? கேட்டுக் கொண்டே தலையைத் துவட்ட ஆரம்பித்தான்.

    ஸார்! என் பேர் மணி. பக்கத்து வீட்லதான் இருக்கேன்... சுப்பிரமணி சொன்னதும் அவனை மேலும் கீழுமாய்ப் பார்த்தான் அந்த இளைஞன்.

    ஈஸிட்? நான் பார்த்ததே இல்லையே...!

    நான் கிராமத்தான். சும்மா சொத்துக்காகத்தான் இந்த வீட்டைக் கட்டிப் போட்டிருக்கேன். அடிக்கடி வந்துட்டுப் போவேன்... ஒரு தரம் பார்த்திருக்கீங்க.

    நானா? ஓ.கே. இப்ப என்ன வேணும்? நான் கொஞ்சம் அவசரமா வெளியே கிளம்பிட்டு இருக்கேன்... என்றான் பொறுமை இல்லாமல்.

    ஒரு முக்கியமான விஷயம். உள்ளே போய் பேசுவோமா?

    குழப்பமாய்ப் பார்த்தான் அவன். என்ன முக்கியமான விஷயம்? அதுவும் என்கிட்ட... உங்களை நான் பார்த்ததே இல்லையே! ஞாபகம் இல்ல...!

    சரி. உங்க பேர் தானே கிஷோர்.

    ஆமா.

    அப்போ உங்ககிட்டதான் பேசணும். உள்ளே போலாமா? கிஷோரின் பதிலை எதிர்பாராமல் சுப்பிரமணி உள்ளே நுழைய லேசாய் எழுந்த கோபத்தோடு அவனைத் தொடர்ந்தான் கிஷோர்.

    ஹலோ! என்ன விஷயம்? சட்டுன்னு சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு.

    சொல்றேன். டவலோட நிற்கிறீங்களே... போய் துணியை மாத்திட்டு வாங்க.

    முதல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்க.

    தம்பி! நீங்க நிறைய படிச்சிருக்கீங்களோ?

    ஆமா.

    எனக்கு ஒரு உதவி செய்யணுமே... நீங்க?

    உதவியா... என்ன உதவி?

    முதல்ல துணியை மாத்திட்டு வாங்க சொல்றேன்... சுப்பிரமணி சொல்ல எரிச்சலாய்த் தன் அறையை நோக்கிச் சென்றான் கிஷோர். கதவைச் சாத்தியதும் சுப்பிரமணி எழுந்து போய் கிச்சனுக்குள் நுழைந்து ஒரே நிமிடத்தில் - வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

    கதவைத் திறந்துவிட்டு வந்த கிஷோர், பனியன் ஷார்ட்ஸோடு சுப்பிரமணியை நெருங்கினான். ம்... சொல்லுங்க. என்ன விஷயம்?

    ஸார்! எனக்கு ஒரு கடிதம் எழுதித் தரணும்.

    என்ன... லெட்டரா?

    ஆமா ஸார். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

    அதுக்கு?

    அவசரமா ஒரு லெட்டர் எழுதணும். நீங்க படிச்சவராச்சே... அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு வந்தேன்.

    நம்பிக்கையின்றிப் பார்த்தான் கிஷோர். யாருக்கு எழுதணும்?

    எங்க அக்கா மகளுக்கு...

    வாட்? என்ன லவ் லெட்டரா?

    அப்படின்னு சொல்ல முடியாதுங்க. மன்னிப்பு லெட்டர்னு வெச்சுக்கலாம்.

    புரியலை.

    நான் சொல்றேன். நீங்க எழுதுங்க. உங்களுக்கே புரியும்.

    உங்க அக்கா மகன்னா... ஸாரி! எனக்கு இங்கிலீஷ்ல எழுதித்தான் பழக்கம்.

    பரவாயில்லங்க. இங்கிலீஷ்லயே எழுதுங்க. அதுவும் படிச்ச பொண்ணுதான். இங்கிலீஷ் புரியும்.

    என்ன? படிச்ச பொண்ணா?

    ஆமாங்க... இந்தாங்க பேப்பர், பேனா. எழுதுறீங்களா?

    ம்... என்றவாறு சோபாவில் அமர்ந்து டீப்பாயின் மேல் இருந்த நாளிதழை எடுத்து, அதன் மீது பேப்பரை வைத்துக் கொண்டு நிமிர்ந்தான் கிஷோர்.

    சொல்லுங்க.

    நான் சொல்றதை அப்படியே எழுதிடுங்க. குறுக்கே எதுவும் கேள்வி கேட்டா சொல்ல வேண்டியதை மறந்திடுவேன்.

    ம்... சொல்லுங்க.

    எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன். அதுக்கு மன்னிப்பே இல்லை. என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும் போலிருக்கு. அதனால நானே என் உயிரை போக்கிக் கொள்கிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல...!

    எழுதிக் கொண்டிருந்த கிஷோர் அதிர்ச்சியாய் நிமிர்ந்தான். விழிகளில் திகில் பரவ, ஹலோ! என்ன இது? தற்கொலைக் கடிதம் மாதிரி இருக்கு! என்றான்.

    ஆமா ஸார். தற்கொலைக் கடிதம்தான்.

    என்ன விளையாடுறீங்களா? நீங்க தற்கொலை பண்ணிக்க நான் லெட்டர் எழுதணுமா?

    இல்லை கிஷோர்! நீதான் தற்கொலை பண்ணிக்கப் போறே... அதனாலதான் உன் கைப்பட எழுதச் சொன்னேன்... என்றான் சுப்பிரமணி அமைதியாய்.

    ஹேய்! யார் நீ? நான் ஏன் தற்கொலை செய்யணும்? நீ என்ன பைத்தியமா? முதல்ல வெளியே போ.

    நான் போவது இருக்கட்டும். முதல்ல லெட்டர்ல கையெழுத்துப் போடு.

    யூ இடியட்! என அவசரமாக கடிதத்தைக் கிழிக்க முயல, அவசரப்படாதே கிஷோர். இங்கே பார்! என வலது கையை விரித்துக் காட்டினான்.

    திகைப்பாய் பார்த்த கிஷோர் பயத்தில் உறைந்து போனான். கறுப்பாய் சின்னதாய் ரிமோட் கண்ட்ரோல்.

    ஏய்! ஏய் என்ன இது? எழ முயற்சித்தான்.

    பதறாதே... உட்கார். நான் சொல்ற மாதிரி செய்தா உன் உடம்பு சிதறாது. இல்லன்னா... இதை லேசா அழுத்தினாப் போதும். பீஸ் பீஸா சிதறிடுவ... எப்படி வசதி?

    நோ... நோ... நீ என்ன சொன்னாலும் செய்யறேன்.

    ம்... வெரிகுட். லெட்டர்ல கையெழுத்துப் போடு.

    ஏன்?

    எதிர் கேள்வி கேட்டா எனக்குக் கோபம் வரும். பட்டனை அழுத்...

    நோ... போடுறேன்... போடுறேன்...! அவசரமாகக் கையெழுத்திட்டு சுப்பிரமணியிடம் நீட்டினான்.

    அதுதானே உன் ரூம்?

    ஆமாம்.

    வா... வந்து உன் கட்டில்ல இல்லன்னா டேபிள்ல வை.

    திருதிருவென விழித்தான் கிஷோர். என்ன முழிக்கிற? பாம் எங்கே இருக்கும்னு பார்க்கிறியா? இந்த டீப்பாய்க்கு அடியிலதான் இருக்கு. பார்க்கணுமா?

    இல்ல... வே... வேண்டாம்.

    அநியாயத்துக்குப் பயப்படுறியே கிஷோர். இந்தப் பயம் எல்லாத்திலயும் இருந்திருக்கணும். பொண்ணுங்ககிட்டதான் உன் வீரத்தைக் காட்டுவியா?

    நீ... நீ என்ன சொல்றே?

    சொல்றேன். வா... முதல்ல லெட்டரை வை! கூடவே எழுந்து கிஷோரின் அறைக்குள் நுழைந்து தலையணைக் கடியில் கடிதத்தை வைக்கச் சொன்னான்.

    வெச்சிட்டேனே! இப்பவாவது சொல். நீ யார்?

    சொல்றேன். எல்லா ஜன்னலையும் மூடு.

    எ... எதுக்கு?

    எதிர் கேள்வி கேட்காதே.

    இல்ல... கேட்கல! அவசரமாய் ஜன்னலை மூடினான்.

    ம். இப்போ எனக்குச் சூடா ஒரு கப் காபி போட்டுக் கொண்டு வா.

    என்ன?

    ஏன்... காபி போடத் தெரியாதா?

    முதல்ல நீ யாருன்னு சொல்லு.

    சொல்லிட்டாப் போச்சு. ஜெகனைத் தெரியுமா?.

    திக்கென நிமிர்ந்தான். யாரு? ஜெ... ஜெகனா?

    ஆமாம். தெரியாதுன்னு சொல்லித் தப்பிக்கலாம்னு நினைக்காதே.

    தெ... தெரியும்.

    அவன் கட்டிக்கப் போற பொண்ணையும் தெரிஞ்சிருக்கணுமே...!

    ஸ... ஸார்! நீங்க யாரு?

    அந்தப் பெண்ணோட தாய்மாமா. புரியல்ல... என் அக்கா பொண்ணு... சுப்பிரமணி நிதானமாய்ச் சொல்ல, சர்வமும் நடுங்கிப் போனான் கிஷோர். -

    ஸார்... அது வந்து... நாங்க வேணுமின்னே...!

    நான் எதுவுமே கேட்கலையே கிஷோர்!

    இல்லை ஸார். அன்னிக்குக் கொஞ்சம் அதிகமா டிரிங்க்ஸ் சாப்பிட்டிருந்தோம்.

    அதிகமாக சாப்பிட்டா பொண்டாட்டின்னு நினைச்சி உன் அம்மாகிட்டப் போவியா?

    ஸார்.

    வாயை மூடுடா நாயே. உங்க மூணு பேருக்குமே இன்னிக்குத்தான் சங்கு.

    வேண்டாம் ஸார். தெரியாம பண்ணிட்டோம். மன்னிச்சிடுங்க.

    தெரியாம பண்ணினா... அது தப்பு இல்லையா? பாதிப்பு இல்லையா?

    தப்புதான் ஸார்.

    ம்... அதுக்குத்தான் இந்த தண்டனை. நீயே தற்கொலை பண்ணிக்க...!

    ஸார். ப்ளீஸ். என்னை விட்டுடுங்க...!

    சரி. முதல்ல ஒரு காபி கொடு. பிறகு பார்க்கலாம்.

    ஸார்... என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க.

    முதல்ல காபி போடுப்பா. வா... நான் கிச்சன் வாசல்ல நிற்கிறேன்.

    உடல் மொத்தமும் நடுங்க எழுந்தான் கிஷோர். கூடவே நடந்தபடி சொன்னான் சுப்பிரமணி.

    இதோ பார் கிஷோர். கத்திக் கூச்சல் போடலாம். தப்பிச்சுப் போகலாம்னு முயற்சி பண்ணாதே. பேசாம நான் சொன்னபடி கேட்டு நட.

    ச... சரிங்க ஸார்.

    ம்... போ. சரியா அஞ்சே நிமிஷத்தில காபியோட வா. நான் வாசல்ல நிற்கிறேன். போ.

    சற்றே பயமாய் கிச்சனுக்குள் கிஷோர் நுழைய கதவைச் சத்தமில்லாமல் மூடினான் சுப்பிரமணி. பரபரவென வெளியேறி வாசல் கதவையும் சாத்திவிட்டு கேட்டை நெருங்கி வெளியேறுகையில் அந்தச் சத்தம் கேட்டது.

    ‘டொம்ம்ம்...’ என கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறும் ஓசை. பகல் நேர அமைதியைக் கலைத்து அக்கம்பக்கத்தவர் வீடுகளில் சலனம் தெரிய வெகுதூரம் போய் விட்டிருந்தான் சுப்பிரமணி.

    நேராக பெட்ரோல் பங்க் சென்று, ஸார்! நான் வெளியூரு. வண்டியில வந்தேன். பெட்ரோல் தீர்ந்து போச்சு. ஒரு ரெண்டு லிட்டர் பெட்ரோல் கேன் ஏதாவது இருந்தா தர்றீங்களா? என்றான்.

    வண்டியைத் தள்ளிட்டு வந்திருக்கலாமே...!

    பெரிய வண்டி. வெயிலும் ஜாஸ்தியா இருக்கு. தள்ளிட்டு வர முடியல்ல...

    சரி, ராமு. அந்த ரெண்டு லிட்டர் வாட்டர் கேனை எடுத்திட்டு வாடா! கடைப் பையன் காலியான வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு வர, ஊழியர் அதில் பெட்ரோலை நிரப்பினார்.

    பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியின் கண்கள் செந்தணலாய் கனன்றது. நெஞ்சு விம்மியது.

    மாமா... எரியுது மாமா... எரியுது மாமா... என்னைக் கொன்னுடச் சொல்லு மாமா... எரியுது மாமா! காதிற்குள் ஒலித்த குரலில் உடல் துடிக்க, கண்களில் நீர் தளும்பியது.

    2

    "அண்ணா! மணி என்னாகுது? நீ இன்னும் கடைக்குக் கிளம்பலியா?" கோபமாய்க் கேட்டாள் திலோத்தமா. செல்போனை குடைந்து கொண்டிருந்த சுரேந்தர் நிமிர்ந்தான். பக்கத்து வீட்டில் ஸ்பீக்கர் அலற, சத்தமாய்க் கேட்டான்.

    கடைக்கா? என்ன வாங்கணும்?

    சமையலுக்குக் காய்கறி வாங்கணும்னு காலையில இருந்து சொல்லிட்டு இருக்கேனே...!

    என்ன விளையாடுறியா? என்னால போக முடியாது.

    ஏன்? போனா உன் கிரீடம் இறங்கிடுமா?

    இதோ பார். நானே டென்ஷனா இருக்கேன். நீ வேற விளையாடாதே!

    என்ன ஆச்சு அண்ணா?

    இந்தக் கிஷோருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. காலையிலயே கிளம்பி ரெடியா இரு. ஒரு முக்கியமான வேலை இருக்குன்னான். இன்னும் வரல்ல...

    போன் பண்ணிக் கேளேன்.

    அப்பவே இருந்து ட்ரை பண்றேன். பெல் அடிக்குது. எடுக்க மாட்டேங்குறான்.

    இன்னும் தூங்கிட்டு இருப்பாரோ?

    இல்ல... அவன்தான் எனக்குப் போன் பண்ணி எழுப்பினான். -

    சரி விடு. குளிச்சு ரெடியாகிட்டு வரட்டும். அதுக்குள்ள நீ கடைக்குப் போயிட்டு வந்துடுண்ணா.

    இதோ பார். நீ வீட்லதானே இருக்க. பொடிநடையா போய் வாங்கிட்டு வந்திடு. நான் கிஷோர் வந்ததும் கிளம்பணும்.

    சரி. காசு கொடு. அப்படி எங்கேதான் சுத்தப் போவீங்களோ... உங்க மூணு பேருக்கும் கல்யாணமான பிறகுதான் உங்க ஆட்டம் அடங்கும்! முணுமுணுத்துக் கொண்டே சுரேந்தரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

    "அண்ணா! நான்

    Enjoying the preview?
    Page 1 of 1