Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...
Ebook131 pages2 hours

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செக்கச் செவேலென மாணிக்கக்கற்களை ஒரே அளவில் தீட்டிவைத்தாற்போல் காட்சியளித்த மாதுளை முத்துக்களை பீங்கான் தட்டில் பக்குவமாய் உதிர்த்துவைத்தாள் பிருந்தா. எதிர் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த மந்தாகினியிடம் தட்டை நீட்டினாள். 

"அக்கா! இந்தா சாப்பிடு" 

"இப்பத்தான்டி டிபன் சாப்பிட்டேன்"

"ஆமா! நீ சாப்பிட்ட மூணு இட்லி உனக்கே போதாது பிறகு குழந்தைக்கு எப்படி போதும் ஒழுங்காய் சாப்பிடு" பிருந்தா அதட்ட, சலிப்பாய் நாளிதழை மடித்துவைத்தாள் மந்தாகினி. 

"எனக்கு மாமியார் நீதான்டி! கொண்டா!" 

"பொறுமையாய் மென்று சாப்பிடு ஒரு முத்துகூட மிச்சம் வைக்கக்கூடாது" 

"சரி மாமியாரே!" என்றவாறே இருக்கையில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்ட மந்தாகினி ஒன்பது மாத கர்ப்பிணி, இரு கைகளிலும் வண்ணமயமான வளையல்கள் குலுங்க, தாய்மைக்கே உரிய பூரிப்பில் மிக அழகாகக் தெரிந்தாள் சற்று பெரிதாய் தெரிந்த வயிற்றில் மென்மையாய் தன் வலக்கரத்தை வைத்தாள் பிருந்தா.

'"செல்லக்குட்டி! அம்மாவைத் தொந்தரவு பண்ணாம இருங்க! சித்தி வேலைக்குப் போயிட்டு வரட்டுமா? பைம்மா!"

"ஏய்! உதைக்குதுடி! நீ பேசுறது கேட்குது போலிருக்கு!"

"பின்னே? ரெண்டு மாதமாய் தொடர்ந்து பேசுறேனே... என்குரல் அவருக்கு புரியாதா? அக்கா! நீ வேணாபாரேன். வெளியே வந்ததும் அவன் என்னைத்தான் முதலில் தேடுவான். நீ எல்லாம் ரெண்டாம்பட்சம்தான்" 

"அடிப்பாவி! அப்போ அத்தான்?" 

"அவரு மூன்றாம்பட்சம்..." 

"இது அநியாயம்! அக்கிரமம்! பெற்ற அப்பனை மூன்றாவது மனிதனாய் ஆக்கிவிட்டாயே..." என்றவாறே உள்ளே நுழைந்தான் லஷ்மணன், கணவனைக் கண்டதும் கையிலிருந்த தட்டை குறுமேசையின் மீது வைத்துவிட்டு மந்தாகினி எழ முயற்சிக்க, சட்டென மனைவியை நெருங்கி அமர வைத்தான் "உட்காரு உட்காரு இப்படியெல்லாம் சட்டுன்னு எழுந்துக்காதே!" 

"வாங்கத்தான்... ஒரு நாளைக்கு ரெண்டுவாட்டி உங்க  பொண்டாட்டியைப் பார்க்காமல் இருக்க முடியாதா?" 

"முடியவே முடியாது மச்சினியே! ஒரு ஆளாய் இருக்கும் போதே என்மனைவியை பாராமல் இருக்கமுடியாது இப்போது இரண்டு நபராய் இருக்கும் போது வராமல் இருப்பேனா?" 

"வாங்க! அத்தை மாமால்லாம் நல்லா இருக்காங்களா?"

"நல்லா இருக்காங்கடா! நீ சாப்பிட்டியா?" 

"ம் இப்பத்தான் சாப்பிட்டேன். அதுக்குள்ளே இவ மாதுளையை உடைச்சித் தந்திட்டா எப்பப் பார்த்தாலும் அதைத் தின்னு இதை சாப்பிடுன்னு டார்ச்சர் பண்றாங்க" 

"தேங்க்ஸ் பிருந்தா!" 

"எதுக்கு அத்தான்?" 

"என் மைனவியை கண்ணாய் பார்த்துக்கொள்வதற்கு!"

"அதை உங்க மனைவிகிட்ட சொல்லுங்க, சாப்பிட ரொம்ப கஷ்டப்படுறா. ரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுபோச்சுன்னு சொல்லிடுறா." 

"ஏய்! ரொம்ப சாப்பிட முடியலடி!" 

"சரி! கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடு. அதிலயும் பழங்கள் கண்டிப்பாய் சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க" 

"பிருந்தா சொல்றதை அப்படியே செய் மந்தா!" 

"ஆமா! அவ நாலு புள்ளைகளை பெத்தவ பாருங்க" 

"அடடே! வாங்க மாப்பிள்ளை! எப்போ வந்தீங்க?"- கங்காதரனும் உமையாளும் கையில் பூஜைத் தட்டோடு வீட்டுக்குள் வந்தனர். 

"வாங்க மாமா! இப்பத்தான் வந்தேன். கோவிலுக்கு போயிருந்தீங்களா?" 

"ஆமா மாப்பிள்ளை! இன்னிக்கு கிருத்திகை உங்க அத்தை கோவிலுக்கு போகாமல் ஒரு வாய் தண்ணிகூட குடிக்க மாட்டாளே!" 

"சும்மா இருங்க! மாப்பிள்ளை! கை அலம்பிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம்" 

"அம்மா! நீங்க உங்க மாப்பிள்ளையை உபசரித்து அனுப்புங்கள் நான் கிளம்புறேன்" 

"சாப்பிட்டியா?" 

"ஆச்சும்மா. அக்கா! நீ இதுதான் சாக்குன்னு இதை சாப்பிடாம வெச்சிடாதே! ஒழுங்கா சாப்பிடு" 

"சரிடி!" 

"சரி அத்தான் பை!" 

"வெயிட் பிருந்தா! பார்மஸிக்குத்தானே போகிறாய்? நானே ட்ராப் பண்ணிடுறேன்" 

"இல்ல அத்தான் நான் கலெக்டர் ஆபீசுக்கு போக வேண்டியதிருக்கு" 

"கலெக்டர் ஆபீசுக்கா? ஏன்" 

"சமூக சேவை பண்ணப்போகிறாளாம். நீங்க வந்து சாப்பிடுங்க" 

"சமூக சேவையா? ஏன் பிருந்தா? பார்மஸியை மூடிவிட்டாயா" 

"அத்தான்! என்ன நக்கலா?" 

"இல்ல... திடீர்னு சமூக சேவையில் இறங்கிவிட்டாயே! அதனால் கேட்டேன்" 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223026600
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

Read more from Kalaivani Chokkalingam

Related to பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

Related ebooks

Related categories

Reviews for பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிருந்தாவனமும் நந்தகுமாரனும்... - Kalaivani Chokkalingam

    1

    மையிட்ட கண்ணோடு

    மான் விளையாட மௌனத்தில்

    ஆழ்ந்திருந்தாளோ தேவி!

    செக்கச் செவேலென மாணிக்கக்கற்களை ஒரே அளவில் தீட்டிவைத்தாற்போல் காட்சியளித்த மாதுளை முத்துக்களை பீங்கான் தட்டில் பக்குவமாய் உதிர்த்துவைத்தாள் பிருந்தா. எதிர் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த மந்தாகினியிடம் தட்டை நீட்டினாள்.

    அக்கா! இந்தா சாப்பிடு

    இப்பத்தான்டி டிபன் சாப்பிட்டேன்

    ஆமா! நீ சாப்பிட்ட மூணு இட்லி உனக்கே போதாது பிறகு குழந்தைக்கு எப்படி போதும் ஒழுங்காய் சாப்பிடு பிருந்தா அதட்ட, சலிப்பாய் நாளிதழை மடித்துவைத்தாள் மந்தாகினி.

    எனக்கு மாமியார் நீதான்டி! கொண்டா!

    பொறுமையாய் மென்று சாப்பிடு ஒரு முத்துகூட மிச்சம் வைக்கக்கூடாது

    சரி மாமியாரே! என்றவாறே இருக்கையில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்ட மந்தாகினி ஒன்பது மாத கர்ப்பிணி, இரு கைகளிலும் வண்ணமயமான வளையல்கள் குலுங்க, தாய்மைக்கே உரிய பூரிப்பில் மிக அழகாகக் தெரிந்தாள் சற்று பெரிதாய் தெரிந்த வயிற்றில் மென்மையாய் தன் வலக்கரத்தை வைத்தாள் பிருந்தா.

    செல்லக்குட்டி! அம்மாவைத் தொந்தரவு பண்ணாம இருங்க! சித்தி வேலைக்குப் போயிட்டு வரட்டுமா? பைம்மா!

    ஏய்! உதைக்குதுடி! நீ பேசுறது கேட்குது போலிருக்கு!

    பின்னே? ரெண்டு மாதமாய் தொடர்ந்து பேசுறேனே... என்குரல் அவருக்கு புரியாதா? அக்கா! நீ வேணாபாரேன். வெளியே வந்ததும் அவன் என்னைத்தான் முதலில் தேடுவான். நீ எல்லாம் ரெண்டாம்பட்சம்தான்

    அடிப்பாவி! அப்போ அத்தான்?

    அவரு மூன்றாம்பட்சம்...

    இது அநியாயம்! அக்கிரமம்! பெற்ற அப்பனை மூன்றாவது மனிதனாய் ஆக்கிவிட்டாயே... என்றவாறே உள்ளே நுழைந்தான் லஷ்மணன், கணவனைக் கண்டதும் கையிலிருந்த தட்டை குறுமேசையின் மீது வைத்துவிட்டு மந்தாகினி எழ முயற்சிக்க, சட்டென மனைவியை நெருங்கி அமர வைத்தான் உட்காரு உட்காரு இப்படியெல்லாம் சட்டுன்னு எழுந்துக்காதே!

    வாங்கத்தான்... ஒரு நாளைக்கு ரெண்டுவாட்டி உங்க பொண்டாட்டியைப் பார்க்காமல் இருக்க முடியாதா?

    முடியவே முடியாது மச்சினியே! ஒரு ஆளாய் இருக்கும் போதே என்மனைவியை பாராமல் இருக்கமுடியாது இப்போது இரண்டு நபராய் இருக்கும் போது வராமல் இருப்பேனா?

    வாங்க! அத்தை மாமால்லாம் நல்லா இருக்காங்களா?

    நல்லா இருக்காங்கடா! நீ சாப்பிட்டியா?

    ம் இப்பத்தான் சாப்பிட்டேன். அதுக்குள்ளே இவ மாதுளையை உடைச்சித் தந்திட்டா எப்பப் பார்த்தாலும் அதைத் தின்னு இதை சாப்பிடுன்னு டார்ச்சர் பண்றாங்க

    தேங்க்ஸ் பிருந்தா!

    எதுக்கு அத்தான்?

    என் மைனவியை கண்ணாய் பார்த்துக்கொள்வதற்கு!

    அதை உங்க மனைவிகிட்ட சொல்லுங்க, சாப்பிட ரொம்ப கஷ்டப்படுறா. ரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுபோச்சுன்னு சொல்லிடுறா.

    ஏய்! ரொம்ப சாப்பிட முடியலடி!

    சரி! கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடு. அதிலயும் பழங்கள் கண்டிப்பாய் சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க

    பிருந்தா சொல்றதை அப்படியே செய் மந்தா!

    ஆமா! அவ நாலு புள்ளைகளை பெத்தவ பாருங்க

    அடடே! வாங்க மாப்பிள்ளை! எப்போ வந்தீங்க?- கங்காதரனும் உமையாளும் கையில் பூஜைத் தட்டோடு வீட்டுக்குள் வந்தனர்.

    வாங்க மாமா! இப்பத்தான் வந்தேன். கோவிலுக்கு போயிருந்தீங்களா?

    ஆமா மாப்பிள்ளை! இன்னிக்கு கிருத்திகை உங்க அத்தை கோவிலுக்கு போகாமல் ஒரு வாய் தண்ணிகூட குடிக்க மாட்டாளே!

    சும்மா இருங்க! மாப்பிள்ளை! கை அலம்பிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம்

    அம்மா! நீங்க உங்க மாப்பிள்ளையை உபசரித்து அனுப்புங்கள் நான் கிளம்புறேன்

    சாப்பிட்டியா?

    ஆச்சும்மா. அக்கா! நீ இதுதான் சாக்குன்னு இதை சாப்பிடாம வெச்சிடாதே! ஒழுங்கா சாப்பிடு

    சரிடி!

    சரி அத்தான் பை!

    வெயிட் பிருந்தா! பார்மஸிக்குத்தானே போகிறாய்? நானே ட்ராப் பண்ணிடுறேன்

    இல்ல அத்தான் நான் கலெக்டர் ஆபீசுக்கு போக வேண்டியதிருக்கு

    கலெக்டர் ஆபீசுக்கா? ஏன்

    சமூக சேவை பண்ணப்போகிறாளாம். நீங்க வந்து சாப்பிடுங்க

    சமூக சேவையா? ஏன் பிருந்தா? பார்மஸியை மூடிவிட்டாயா

    அத்தான்! என்ன நக்கலா?

    இல்ல... திடீர்னு சமூக சேவையில் இறங்கிவிட்டாயே! அதனால் கேட்டேன்

    பார்மஸிக்கு அடிக்கடி ஒரு வயசான பாட்டி வருவாங்கத்தான் பாவம்! அதுக்கு யாரும் இல்ல அதான் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யலாம்னு போறேன். இன்னிக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள். அதனால கலெக்டரை நேர்ல சந்திச்சு மனு கொடுக்கணும் அந்தம்மாவுக்கு படிப்பறிவு கிடையாது. நான்தான் கூட்டிட்டு போகணும்.

    நல்ல விஷயம்தான்! போயிட்டு வா!

    பை அத்தான்! அப்பா! அங்கே கூட்டம் எப்படி இருக்கோ! வர லேட்டாகும்னு நினைக்கிறேன். நீங்க சாப்பிட்டுட்டு கொஞ்சநேரம் கடையில போய் உட்காருங்கப்பா

    சரிம்மா!

    அம்மா! போயிட்டு வர்றேன் அக்காவை ஜாக்கிரதையாய் பார்த்துக்கங்க

    சரி சரி! நீ கவனமா போயிட்டுவா- என்ற அன்னையிடம் கையசைத்துவிட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் பிருந்தா.

    மந்தாகினி குரல் கொடுத்தாள்

    ஏய்! வண்டி சாவி இங்கே இருக்கு

    இருக்கட்டும். அந்த அம்மாவால டூவீலர்ல உட்காரமுடியாது நான் ஆட்டோ பிடிச்சி கூட்டிட்டுப் போறேன்

    சரி போயிட்டு வா!- என்றதும் வீட்டை விட்டு வெளியேறி. வீதியில் இறங்கி நடக்கத் துவங்கினாள்.

    மனுவை நேற்றே எழுதியாயிற்று இனி அந்த அம்மாளை அழைத்துக் கொண்டு போகவேண்டியதுதான். மணிக்கட்டைத் திருப்பிப்பார்த்தாள். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. தாமதமாகி விட்டதே! நடையை எட்டிப்போட்டு பிரதான சாலையை அடைந்து காலியாய் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறினாள்.

    மகாலஷ்மி நகர் போகணும்

    சரிம்மா!- ஆட்டோ வேகமெடுக்க, கைப்பையைத் திறந்து அலைபேசியை எடுத்தாள். தன் மருந்தகத்தில் பணிபுரியும் ரமணியைத் தொடர்பு கொண்டாள்.

    ரமணி!

    குட்மார்னிங் மேடம்!

    குட்மார்னிங்! கடைக்கு வந்திட்டியா?

    வந்திட்டேன் மேடம்!

    ஜானி?

    நான் வருவதற்கு முன்னமே அவர் கடையைத் திறந்திட்டார் மேடம்!

    ஓ.கே. அப்பா வருவாங்க. நீ வழக்கமாய் வர்ற மருந்துகளை மட்டும் வாங்கி வை மற்றவற்றை நான் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    சரிங்க மேடம்!

    நான் வர பனிரெண்டு மணிகிட்ட ஆயிடும் பார்த்துக்கோ!

    ப்ரீயா இருந்தால் ரிட்டர்ன் பண்ண வேண்டிய மருந்துகளை தனியா எடுத்து வையுங்க சிவா வந்தாருன்னா ஒரு பைவ் தௌஸண்ட் கொடுத்திரு பில் வாங்கி வெச்சிடு

    ஓகே மேடம்!

    சரி! வெச்சிடுறேன்- என்றவாறே தொடர்பை துண்டித்த போது மகாலெஷ்மி நகரின் சந்துக்குள் நுழைந்தது ஆட்டோ!

    அதோ! ஒரு நாய் நிக்குதே! அந்த வீடுதான்- பிருந்தா சுட்டிக்காட்டிய வீட்டை நெருங்கி ஆட்டோ நிற்க, வீட்டை பூட்டிவிட்டு வெளித்திண்ணையில் தயாராய் அமர்ந்திருந்த மணியம்மாள் பிருந்தாவைக் கண்டதும் சுருக்கம் விழுந்த முகத்தில் புன்னகையோடு எழுந்தாள்.

    வந்துட்டியாம்மா? நேரமாகிப்போச்சே... மறந்திட்டியோன்னு நினைச்சேன்

    அது எப்படிம்மா மறப்பேன்? வீட்ல கொஞ்சம் வேலை அதான் லேட்டாயிருச்சி நான் சொன்ன பேப்பர் எல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்களா?

    இதோ இருக்கும்மா- கையிலிருந்த மஞ்சள் நிற

    Enjoying the preview?
    Page 1 of 1