Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Mugam
Innoru Mugam
Innoru Mugam
Ebook136 pages49 minutes

Innoru Mugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணிவான வணக்கங்கள்.
பாண்டிய நாயகி! எனும் இந்தச் சரித்திரத் தொடர் எனது ஒரு எளிய முயற்சி. அமரர் கல்கியும், சாண்டில்யனும், கோவியும், விக்கிரமனும் வலம் வந்திருக்கும் உலகில் நானும் வலம்வர மேற்கொண்ட ஒரு சின்ன தவம்.
இது எத்தனை ஆழமானது-விசாலமானது நேர்த்திமிக்கது, காலத்தால் நிலைத்து நிற்கக்கூடியது என்பதெல்லாம் இனித் தெரியவரும்.
என் வரையில் காதலுக்கும் வீரத்துக்கும் சம அந்தஸ்து தந்து செயல்பட்டிருக்கிறேன்.
பொதுவில் சரித்திரம் என்றாலே அதில் கற்பனைச் சரக்குக்கு மிகுந்த இடம் தாராளமாக அளிக்கலாம். அதிலும் கல்வெட்டுக் குறிப்புகளாலும், சாசனங்களாலும் மட்டுமே அறியப்பெறும் விஷயங்களில் யூகமும் கற்பனையும் மட்டுமே பிரதான இடத்திலா இருக்கும். உண்மையும் ஆதாரமும் பூச்சரத்து நாராய் கண்ணுக்குத் தெரியாமல் தான் இருக்கும்.
ஓர் எழுத்தாளன் தன் திறனையும் கற்பனையையும் காட்ட சரித்திரக் கதை இடமளிக்கின்ற மாதிரி வேறு எதுவும் அளிப்பதில்லை.
ஆராய்ச்சி மனதுக்கும் சரித்திரத்தில் தான் பிரதான பணி இருக்கிறது.
இதனால் எல்லாம்தான் துணிந்து இந்த பாண்டிய நாயகியை நான் எழுதினேன்.
இந்தத் தொடரின் அடி ஆதாரம் மிக மெலிவானது; சொற்பமானது. பராந்தக பாண்டியன் ஒரு ராஜ ராஜ சோழன் அளவோ, சேரன் செங்குட்டுவன் அளவோ பிற்காலப் பாண்டியர்கள் போன்றோ பிரசித்தி மிக்கவனாய்ச் சரித்திரக் குறிப்புகளில் காணப்படவில்லை.
ஆனால், சைவம் தழைத்த பாண்டிய மண்ணில் அவனொரு வைணவனாய் வாழ்ந்தான் என்பது ஆச்சரியம் தரும் ஒரு மின்வெட்டுச் செய்தியல்லவா?
இதன் பின்னால் எழுப்ப வேண்டிய வினாக்களும் ஏகமல்லவா? அது மட்டுமா? அவன் தாய் குறுநிலத் தேசமான கெங்கநாட்டவள், தகப்பன் கோச்சடையனோ வீரபாண்டியன் இருவருக்கும் பிறந்த நெடுஞ்சடையனோ வைணவதாசன்!
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?
மட்டுமா?
சோழ மண்டலம் கடந்து நிற்கும் பல்லவனோடு தீராப்பகை... காலமெல்லாம் அவனுடன் யுத்தம். அவனை அடக்கி வெற்றி கண்ட தீரம்... என்று கண்ணில் பட்ட குறிப்புகள் வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக எனக்குப் படவில்லை.
ஊக்கத்திற்கும், ஆய்வுக்கும் இடமளிக்கும் விஷயமாகத்தான் எனக்குத் தோன்றின.
ஆழ்வார்கள் தலையெடுக்க இந்தக் காலத்தில் மதுரைக்குள் கிரிதிருமால் நதி ஓடியதன் சான்றாக இன்றும் அந்த நதிப்பாதை இருப்பதைப் பார்த்தபோது கற்பனைக் சிறகின் அசைப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கூடல் அழகனின் திருவருளும் கூடியதால் இந்தப் பாண்டிய நாயகி ஜனித்தாள் என்று கருதுகிறேன்.
இந்தத் தொடரில் பராந்தகனின் காதல் உள்ளத்தை நான் விரித்துப் பார்த்த அளவு அவனது மற்ற பக்கங்களை நான் பார்த்திடவில்லை. பராந்தகனின் அண்டை அயல் உறவு. ராஜ்ஜியம் புரிந்த விதம் இவன் காலத்தில் தமிழுக்குக் கிட்டிய மரியாதை ஆன்மிகம் தழைத்த பாங்கு என்றெல்லாம் விரித்துப் பார்த்தால் எங்கே வெறும் விளக்கச் சித்திரமாகி வேகமும் விறுவிறுப்பும் மட்டுப்படுமோ என்கிற பயம் கூட நான் மற்ற விஷயங்களை ஆழமாகக் காணத் தடை செய்தன.
எனவே இதனுள் அது இல்லாதது குறித்து ஆழ்ந்து நோக்குபவர்கள் வருத்தம் தவிர்க்க வேண்டுகிறேன் கன்னி முயற்சியாதலால் ஊக்கமிகு விமரிசனங்களை எதிர் நோக்குகிறேன். ஊனங்கள் இருப்பின் சுட்டுங்கள் அது இனிவரும் தொடர்களில் நீங்கும்.
வாசக நெஞ்சங்களிலும் இதற்கோர் இடம் கிட்டியதை அவ்வப்போது எனை நெருங்கிய விமரிசனங்களால் உணர்ந்தேன்.
பணிவன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132405341
Innoru Mugam

Read more from Nc. Mohandoss

Related to Innoru Mugam

Related ebooks

Related categories

Reviews for Innoru Mugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Mugam - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    இன்னொரு முகம்

    Innoru Mugam

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஹாலில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு தாம்பாளங்களும் தாம்பூலங்களும் அணிவகுத்திருந்தன. அவற்றைச் சுற்றிலும் பட்டுப் புடவைகளின் சலசலப்பு. சாம்பிராணியின் கும்!

    ஒரு பக்கம் வீடியோவில் விருந்தினர்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். விடிந்தால் கல்யாணம்!

    மாலை ஒரு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு.

    நான்கு மணியிலிருந்தே டிபனும் காபியும் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தன. பின்பக்கம் சமையல் புகைந்தது. வாழை இலைகள் கூறு போடப்பட்டுக் கொண்டிருந்தன.

    அறைக்குள் அலங்காரச் சிலைபோல் பூமா அமர்ந்திருந்தாள்.

    அவளது முகத்தில் வாட்டமில்லை. தலைமுழுக்க மல்லிகைப் பூ! கழுத்து கொள்ளாமல் நகைகள்! ஜரிகை மின்ன பட்டுப்புடவை! ஆனாலும் கூட அவளது கண்களில் தெளிவில்லை. கல்யாணத்தில் சந்தோஷமோ உற்சாகமோ அவற்றில் வெளிப்படவில்லை.

    ஜன்னல் வழி அவளது கண்கள் வெறித்திருந்தன.

    முகப்பில் வேன் ஒன்று பால் கேன்களை இறக்கிக் கொண்டிருந்தது. அம்மாடி... இத்தனை கேன்களா?

    இவ்ளோ பால் என்றால் - கல்யாணத்திற்கு எத்தனை ஆயிரம் பேர்கள் வருவார்கள்! அப்பா - ஆடம்பரமாய் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே சிறப்பாக அமைந்தாக வேண்டும்!

    பெற்ற மகள்களின் மேல் உயிரையே வைத்திருக்கிறார். பிஸினஸில் கொழிக்கிறார். அவற்றின் வெற்றியை காட்டிக்கொள்ள இது அருமையான சந்தர்ப்பம்!

    என் வசதியைப் பார்! என் மகளைப் பார்! அவளுக்கு நான் செய்திருக்கும் நகைகளைப் பார்! என் மாப்பிள்ளையைப் பார்! என் மாப்பிள்ளை அழகானவர். கம்பீரமானவர். எனது பிஸினஸ்களையெல்லாம் கவனித்துக் கொள்ளப் போகிறவர் - என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

    இதெல்லாம் இயல்பான ஆசைகள்... நியாயமான கனவுகள்.

    ஆனால் அவரது கனவுகள் பலிக்குமா... ஆசைகள் நிறைவேறுமா?

    என்னக்கா... மாப்பிள்ளையைத் தேடுகிறாயா...?

    பூமா சுதாரித்துக்கொண்டு திரும்ப, தங்கை பாலிகா அவளைக் கட்டிக்கொண்டு ரியலி... யு லுக் ஸ்மார்ட், என்று அவளது கன்னத்தில் கிள்ளினாள்.

    சீ விடுடி

    பின்னே இருக்காதா...? நல்ல உத்தியோகம்! கம்பீரமான மாப்பிள்ளை இன்னுங் கொஞ்ச நேரத்துல அழைச்சு வந்திருவாங்கக்கா!

    நான் கேட்டேனா?

    ஆமாம், இப்போது இப்படித்தான் சொல்லுவ! தாலி ஏறினதும் அவரை விட்டு அகல மாட்டாய்! இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்வாய்!

    நீ உதைப்படப் போகிறாய்

    பரவாயில்லை, சும்மா சொல்லு! கட்டிக்கப் போறவனைப் பார்க்கணும், பேசணும்னு தோண்றது இயல்புதான். தப்பில்லே. அதுவும் ஒரு திரில். அக்கா! உன் முகம் ஏன் இஞ்சி தின்ற மாதிரி இருக்கு... பயமா...?

    ஆமாம்னு வெச்சுக்கோயேன்!

    ஏன் - ஏன் பயப்படணும்?

    பயம் மட்டுமில்லேடி, பதற்றம். படபடப்பு. தவிப்பு!

    இதெல்லாம் ஏன்னுதான் கேக்கறேன்.

    என்னமோ தெரியலே. மனசு கிடந்து அடிச்சிக்கிது. இந்த வரனாவது நிலைக்கணுமே... இந்த கல்யாணமாவது நடக்கணுமேன்னு பிராத்தனை!

    நீ கவலைப்படாதே. ஜாம் ஜாம்னு நடக்கும்.

    எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.

    ஏனிந்த தாழ்வு மனப்பான்மை? சும்மா அதுவும் இதுவும் நினைச்சு மனசை கலக்கிக்காமல் கல்யாணப் பொண்ணாய் லட்சணமாயிரு!

    பூமா உடன் மௌனமாகிப் போனாள். அவளது கண்கள் நனைந்திருந்தன. அவள் அழகுதான். படித்தவள்தான். வசதி படைத்தவள். இருந்தும் கூட இரண்டு முறை அவளது திருமணம் தட்டிப் போயிற்று.

    முதல் முறை நிச்சயித்த மாப்பிள்ளைக்கு கார் விபத்து. இரண்டாவது மாப்பிள்ளை எலக்ட்ரிக் ஷாக் அடித்து மரணம்!

    அவள் தளர்ந்து போனாள். இரண்டு வரன்களும் இறந்து போக, பூமாவிற்கு ராசியில்லாதவள் என்கிற பட்டம்! அதன்பின் அவளை கட்டுவதற்கு யோசித்தனர்.

    ஒரு வருடத்திற்குப் பிறகு கண்ணன் என்பவன் வந்திருக்கிறான். அவனுக்கு பூமாவை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. அவனை சரியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவளுக்கும் திருப்தி.

    பாலிகா சொன்னதை வைத்து கண்ணனை பூமா தன் மனதிற்குள் உருவகப்படுத்தி வைத்திருந்தாள். அந்த உருவத்திற்கு தினம் தினம் பூஜை. பிரார்த்தனை.

    அக்கா! ஏன் பேஸ் தடித்திருக்கிறாய்?‘ரிலாக்ஸ்

    அவருக்கு எதுவும் ஆகாதில்லே - என் ராசி இவரையும்...

    ராசியாம்... ராசி! ஸ்டுப்பிட் அவர் பாதுகாப்போடு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். நீ பேசுகிறாயா...?

    சீ வேணாம்

    விடிஞ்சால் தாலி ஏறப்போகிறது. புருஷன்! கமான் என்று பாலிகா அவளை இழுத்துக் கொண்டு ஆபீஸ் ரூமுக்குப் போனாள். போன் நம்பர் சுற்றும் போது யாருக்கும்மா போன்? என்று பெரிசு ஒன்று பொக்கை வாய் காட்ட,

    தோழிக்கு தாத்தா! லைன் கிடைச்சிருச்சி நீ பேசு... ஹலோ! மிஸ்டர் கண்ணன் இருக்காரா... ஒரு நிமிஷம்!

    பாலிகா ரிஸிவரை பொத்தி பேசுக்கா என்று தூண்டினாள்.

    உடன் பூமாவுக்கு வியர்த்துப் போயிற்று. நாணம், வேணாண்டி... வெச்சிரு

    லைனில் இருக்காரு. பேசு

    ஹலோ... நான் பூமா! அதற்கு மேல் அவளுக்கு வார்த்தைகள் வரைவில்லை. எதிர்முனை,ஹலோ... ஹலோ! பூமாவா... வாட் எ சர்ப்ரைஸ்! என்ன விஷயம் சொல்லுங்க

    பூமா உடன் ரிஸீவரைப் பாலிகாவிடம் கொடுக்க, அவள் வாங்கி,அத்தான்! சௌக்கியமா... ரெடியாயிட்டிங்களா...?

    ஓ... என்ன? குரல் வித்தியாசமாயிருக்கு?

    அது வந்து... தொண்டையில் கீச் - கீச்! நீங்க என்ன கலர் டிரஸ்? எப்போ புறப்படறீங்க - உங்களைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கேன்!

    உடன் பூமா குறுக்கிட்டு, சார்! இது நானில்லை. ஏமாந்திராதீங்க. என் தங்கை பாலிகா!

    ஓ... நாட்டி! ஸாரி!

    ஸாரி என்ன கலர்னு கேட்கறீங்களா? அக்கா கோல்ட் கலரில் பட்டுப்புடவை. ரெட் பார்டர்! ப்ளவுஸும் ரெட்

    போதும், போதும் வெச்சிரு, என்று பூமா போனை பிடுங்கி வைத்தாள்.

    ஆனாலும் கூட உனக்கு கொழுப்பு ஜாஸ்தி!

    மாமி ஒருத்தி,பூமா! உன்னை எங்கெல்லாம் தேடறது... இங்கே என்ன பண்றே... போய் ரெடியாகு... என்று விரட்டினாள்.

    அக்கா ரெடி மாமி! மாப்பிள்ளையைதான் காணோம்! அக்கா! நீ போ. நான் நகைக்கடை வரை போய் வந்திடறேன்.

    யாருடன்...?

    மாமியுடன்தான்.

    மாமி மட்டுந்தானா... இல்லே...

    ரகுவும்தான். போதுமா - திருப்திதானே! என்று இடித்துவிட்டு பாலிகா கீழே வந்தாள்.

    மரத்தடியில் நின்றிருந்த காரில் சரிந்தபடி ரகு அப்போது மாலை பேப்பர் ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தான். அவன் முப்பது வயது - தூக்கி வாரின முடி! கோர்வையான பற்கள்! ஆறடி! அவன் அந்த குடும்பத்தின் டிரைவர்.

    டிரைவர் மட்டுமில்லை

    Enjoying the preview?
    Page 1 of 1