Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nere Vaa Nere Po
Nere Vaa Nere Po
Nere Vaa Nere Po
Ebook92 pages31 minutes

Nere Vaa Nere Po

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Nere Vaa Nere Po

Read more from N.C.Mohandass

Related to Nere Vaa Nere Po

Related ebooks

Related categories

Reviews for Nere Vaa Nere Po

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nere Vaa Nere Po - N.C.Mohandass

    1

    ஒரு கல்யாணம் மந்திரியின் தலைமையில் நடக்கிறது என்றால் எத்தனை முஸ்தீபுகள் செய்ய வேண்டியிருக்கிறது! எத்தனை அல் ‘லொள்’ பட - வேண்டியுள்ளது! எச்சரிக்கை நடவடிக்கைகள்! ஏதோ ஒரு கட்சித் தொண்டன் அல்லது மாவட்ட செயலாளருக்கு மைத்துனரின் சகலை திருமணம் என்றால் கூட ஒதுக்கிவிடகூடாது. முடியாது. ஓட்டு சார் - ஓட்டு!

    உள்ளூர் மந்திரியாயிற்றே!

    என்னவோ மந்திரி நடத்தி வைத்தார் என்று சொல்லிக் கொள்வதில் அப்படி ஒரு கௌரவம். (வேண்டாத!). மந்திரி நடத்தி வைப்பது ஒரு புறம் என்றாலும், சும்மா வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார் என்றாலும் கூட அமளிதான்!

    அதிகாரிகள் என்னவோ அவர்கள் வீட்டு கல்யாணம் போல ஓடி ஓடி செயல்படணும். மந்திரி வரும் நேரம், வந்து நிற்கும் இடம், கார், மேடை, போடப்படும் மாலைகள்! கட்அவுட்கள் மறக்கப்பட்டிருந்தாலும் வரவேற்பு போஸ்டர்களுக்கு பஞ்சமில்லையே! தோரணங்கள்! வருக... வருக! வாழ்க! தங்கமே! சிங்கமே!

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்கள் பிரசவ வேதனையில் முன்னேயும் போக முடியாமல், பின்னேயும் நகராமல் இரைந்துக் கொண்டிருக்க அதன் சமீபத்திலிருந்த அந்த திருமண மண்டபத்தில் அதைவிட அதிக இரைச்சல்! பந்தல் வேலைகள்! அலங்காரங்கள்!

    போலீஸ் அதிகாரிகள் வயர்லெஸ் சகிதம்! ஆர்.டி.ஓ., தாசில்தார் இன்னும் வேண்டப்பட்ட, வேண்டப்படாத மற்றும் மணியடிக்க வந்த அதிகாரிகள் என்று ஒரே ஆர்ப்பாட்டம்!

    மண்டபத்து நபர்களை அழைத்து, இதுதானே மணமேடை? இங்கிருந்து நூறு அடி தூரத்திற்கு யாரும் கிட்ட வரக்கூடாது தெரிஞ்சுதா?

    சரிங்க.

    கார் நிறுத்தும் இடத்திலிருந்து கார்ப்பெட் வேணும். அந்த பக்கம் டஸ்ட் பின் பார்த்தேன். அதை மாத்திருங்க!

    அது கான்கிரீட் சார்!

    பரவாயில்லை. இடிச்சிருங்க! ஒரே நாத்தம்! ரோடில் குண்டு குழி கூடாது! மந்திரிக்கு யாரும் முன் அனுமதியில்லாம மாலை, சால்வை அணியக்கூடாது! அதுக்கு நேரமுமில்லை. அவற்றை நாங்க அனுமதிக்க முடியாது!

    ஏங்க!

    நாட்டில் கலவரம் பெருத்துப் போச்சு! வன்முறையாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு சதி! பத்தாததுக்கு சாதி கலவரம் வேற! அதனால நாங்க ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு! கல்யாணம் ஒன்பது மணிக்குதானே!

    இல்லே சார் எட்டு டூ ஒன்பது!

    மந்திரி ஒன்பதுக்கு வரார். ஒன்பது இருபதுக்கெல்லாம் போயிருவார். என்ன தெரிஞ்சுதா?

    மண்டபத்து மானேஜர் சரி சரியென்றார். உள்ளுக்குள் அவருக்கு கடுப்பு. இதுக்குதான் அரசியல், மந்திரி சம்பந்தப்பட்ட கல்யாணங்களை புக் - பண்ணுவதில்லை.

    மந்திரியின் பாதுகாப்பு கருதி அரசாங்க அலுவலர்கள் அங்கே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்க -

    நாளை கல்யாணத்தை நடத்தி வைக்க வரும் மந்திரி ராஜசேகரனை தீர்த்துக்கட்ட வேண்டி வேறு ஒரு கூட்டம் சத்தமின்றி திட்டம் வகுத்துக் கொண்டிருந்தது என்பது இங்கே பின் குறிப்பு.

    ஹோட்டல் சங்கம்

    கலெக்டர் ஆபீஸை பார்க்க வேண்டி டவுன் பஸ்கள் பாய்ந்து கொண்டிருக்க, தலையில் சிகப்புடன் போலீஸ் வண்டிகள் வாசலில் காவலிருந்தன...

    வாசலில் ஆங்காங்கே தொண்டர்களின் கும்பல். மனுவோடும், மாலையோடும் பொதுஜனம்! காவலாளி பொதுஜனத்தை மட்டும் விரட்டி ஒதுக்கிக் கொண்டிருந்தார்.

    மூன்றாம் மாடியில் தனது ராசியான 324ல் ராஜசேகர் எலக்ட்ரிக் ஷேவரில் மும்முரம். நிலைக் கண்ணாடி வழியே பின் பக்கம் நிற்கும் பி.ஏ. வை முறைத்து - ஏன்ய்யா இப்படி தொல்லை பண்றீங்க? கல்யாணம், காது குத்து சமைஞ்சதுன்னு எதுக்கு ஒத்துக்கிறயாம்? மந்திரிக்கு வேறு வேலையே இல்லேன்னு நினைச்சியா...? என்று கத்தினார்.

    வந்து... தவிர்க்க முடியலிங்க. நம்ம சாதி பையன்! உங்க தேதிக்காக அந்த ஜெகன் நாலு முறை கல்யாணத்தை தள்ளி வைச்சிருக்கான். நீங்க போகலேன்னா நல்லாருக்காது. அவன் கட்சியோட தீவிர உழைப்பாளி! வேறு எதுக்காக இல்லேன்னாலும் நம் சாதிங்கிறதுக்காகவாவது நீங்க தலைகாட்டி தானாகனும்!

    ஆமாம்! ஜெயிச்சு வந்ததும் நம் சாதின்னு உரிமை கொண்டாடுவானுங்க. ஓட்டு கேட்கப்போனால் கறாராய் துட்டு பேசுவானுங்க. சரி, சரி பையனை பத்தின குறிப்புகளை எழுதிக்கொடு நாலு வார்த்தை பேசியாகணுமே!

    ரயில்வே ஸ்டேஷன்.

    கூலி மற்றும் ஆட்டோக்களின் ஆக்ரமிப்பிலிருந்து தப்பித்து ஜனங்கள் சிதறிக் கொண்டிருந்தனர். ஸ்ரீரங்கம் வண்டிகள் பாய்ந்து வந்து நின்று பறந்தன.

    கூட்ஸ் பாலத்தில் புகை. வழியெல்லாம் பழக்கடைகள், பழைய புஸ்தகங்கள்! மிதுன், வெயில் கிளாஸை மடக்கி பாக்கட்டில் திணித்துக்கொண்டு அந்த ஹோட்டலில் நுழைந்து ரூம் இருக்கா? என்றான்.

    அவனுக்கு முப்பது வயது. ஜீன்ஸ்! பனியன்! மானேஜர் லெட்ஜரை புரட்டி அவனைப் பார்க்காமல் சிங்கிளா டபுளா... எத்தனை நாளைக்கு? என்றார்.

    சிங்கிள் ஒரு நாள் மட்டும்!

    அட்வான்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1