Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesu Vizhiye Pesu
Pesu Vizhiye Pesu
Pesu Vizhiye Pesu
Ebook95 pages34 minutes

Pesu Vizhiye Pesu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Pesu Vizhiye Pesu

Read more from N.C.Mohandass

Related to Pesu Vizhiye Pesu

Related ebooks

Related categories

Reviews for Pesu Vizhiye Pesu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesu Vizhiye Pesu - N.C.Mohandass

    1

    செந்தில் மெனுகார்டை டேபிளில் வைத்துவிட்டு, என்ன சாப்பிடறீங்க சார்? என்று அந்த தம்பதிகளைப் பார்த்தான்.

    அதுகள் தம்பதிகளா இல்லை தள்ளிக்கொண்டு வரப்பட்டதா என்று தெரியவில்லை. அவன் அதுபற்றி கவலைப்படவில்லை. கவலைப்பட அவன் யார்? அவன் அந்த ஹோட்டலின் ஊழியன்! கொஞ்ச நேரத்திற்கு அவர்களின் பணி ஆள்!

    அவன் பேனா எடுத்து, பாக்கெட்டிலிருந்து புக் எடுத்து வைத்துக்கொண்டு நிற்க, அவர்களுக்குள் அப்போதுதான் ஆலோசனை ஆரம்பித்திருந்தது. அவன் அவளை இடித்தவண்ணம் இது வேணுமா அது வேணுமா என்று கன்னத்தில் கிள்! அவள் அதை அனுபவித்து அவனது கையைத் தட்டி விடல்.

    சொல்லு டார்லிங்!

    இதெல்லாம் அங்கு சகஜம். அதுவும் பேமிலி ரூம்! ஏஸி என்பதால் விளக்குகளும் மந்தம். அந்த சன்ன இருட்டில் ஒட்டி உரசி உஷ்ணப்படவும் சில்மிஷம் செய்யவுமே அங்கு வருபவர்கள் உண்டு.

    பட்சணம் ரெண்டாம் பட்சம்தான்!

    இதையெல்லாம் வீட்டில் வெச்சுக்கக்கூடாதா? பொது இடத்தில் நான்குபேர் பார்க்க, இந்த வழிசல்கள் தேவையா? என்கிற கோபம் அவனுக்குள் எழும். அடக்கிக் கொள்வான். இப்போதும் அடக்கிக்கொண்டு, ஆர்டர் சார்!

    நீ போயிட்டு அப்புறமா வாப்பா! என்றான். என்னவோ காவிரிப் பிரச்சினையைப் பேசப் போவதுபோல்.

    ஓகே சார்! என்று செந்தில் அடுத்த டேபிளுக்குப் போனான். இவர்கள் இன்னமும் குழாசல். ஒரு முடிவுக்கு வந்ததாய்த் தெரியவில்லை. தண்ணீர் கொண்டுபோய் வைத்தான். சாஸ்!

    கஸ்டமர்களின் மனநிலை விசித்திரமானது. அவசர அவசரமாய் வருவார்கள். எதையாவது கொண்டு வா என்று ஆர்டர் பண்ணி, தயாரித்து வர ரெண்டு நிமிடம் தாமதித்தாலும் வாட்சைப் பார்த்தபடி கத்துவர். ஆனால் கொண்டு வந்த பின்பு ஒரு மணி நேரம் சுவைப்பர்.

    முன்பின் ஹோட்டலுக்கே போனதில்லை என்கிற மாதிரி என்ன இருக்கு? என்று வழக்கமான கேள்வி. அங்கே போர்டில் பளிச்சென எழுதப்பட்டிருக்கும். அது அவர்களின் கண்ணில் படாது. பார்ப்பதில்லை. வரிசையாய் அயிட்டங்களை அடுக்கினதும் சரி, வயிறு சரியில்லை; இட்லி எடுத்துவா! என்பார்கள்.

    அவனுக்கு கடுப்பாகி விடும். இட்லிதான் என்கிற முடிவுடன் வருபவருக்கு மத்த அயிட்டங்களைப் பற்றின கவலை ஏன்? ஹோட்டலில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிவதில் அப்படி என்ன ஒரு ஆர்வம்?

    வெயிட்டர் என்பதற்கு பதில் இந்தத் தொழிலுக்கு பேஷண்ட் என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பொறுமை தேவை.

    செந்தில் அந்த தம்பதிகளைக் கண்டுக்காதது போல நகர, தம்பி! இப்படி வாப்பா! நாங்க வந்து எவ்ளோ நேரமாச்சு - கவனிக்கவே மாட்டேன்றியே!

    சொல்லுங்க சார்!

    டொமோட்டோ சூப் சிக்கன் ஃப்ரை! ஆலு பரோட்டா...

    ஆர்டர் எடுத்துக்கொண்டான். கஸ்டர்மகளைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. சற்று முகம் சுளித்தாலே முதலாளியிடம் வத்தி - இல்லை: கொள்ளியே வைத்து விடுவர். அல்லது டிப்ஸில் கை வைப்பர்.

    விரும்பியோ விரும்பாமலோ டிப்ஸ் என்பது அங்கு ஒரு எதிர்பார்ப்பாகவே அமைந்து விட்டிருக்கிறது. டிப்ஸ் கிடைக்கும் என்பதைக் காரணம் காட்டியே சம்பளமும் அங்கு குறைவாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மூச்!

    உள்ளுக்குள் வெந்தாலும் வெளியே முகம் மலர சிரிக்கணும். வெளியே சிரித்தால்கூட செந்திலுக்கு அவர்களைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

    உன்னிடம் பணமிருக்கலாம், பதவியிருக்கலாம். ஆனால் முதலில் மனிதனாக நடந்து கொள். பிறகு ‘பணத’னாகலாம்! தன்மானம் எழும். தன்னை சீண்டினவர்களை அவன் சும்மா விடுவதில்லை. பதிலுக்கு அவர்களை சின்னதாய் ஒரு தாக்கு தாக்கினால்தான் அல்லது மனம் ஆறும்.

    என்ன செய்யலாம், எப்படி கவிழ்க்கலாம் என்று பார்ப்பான். அவர்கள் பைக்கில் வந்திருந்தால் ஓடிப்போய் காற்றை உஸ்ஸ்! அல்லது அவர்கள் கிளம்பும்போது சட்டைக்கு பின்புறம் இங்க் தெளித்து விடுவான்.

    இந்த குரூர குணம் அவனுக்குள் திடீரென தோன்றிய ஒன்றல்ல. சின்ன வயதிலிருந்தே - அடிபட்டு - அவமானப்பட்டு அடிமனதின் ஆழத்தில் அது புரையோடி விட்டிருந்தது.

    அவன் சூப் கொண்டு வந்து வைத்துவிட்டு திரும்பும்போது இளைஞன் ஒருவன் பெண் ஒருத்தியுடன் கைகோர்த்தபடி உள்ளே வர- -

    தலைகொள்ளாமல் பூவும், வாய் கொள்ளாமல் புன்னகையுமாம் தெரிந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு பந்த்! ஆயிரம் வாட்ஸ் மின்சாரம்! உடன் தலையைச் சுற்றுகிற மாதிரி இருந்தது.

    இந்து! நீயா...? என்று கத்த வேண்டும் போலிருந்தது. சமாளித்துக்கொண்டு அருகில் போய், யெஸ் சார்! என்றான். வந்தவன் இந்துவைப் பார்க்க, இந்து செந்திலைப் பார்த்தும் கூட பதறியதாக தெரியவில்லை. அவளது முகத்தில் எந்தவித அதிர்ச்சியோ, மாற்றமோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவனை முன்பின் பார்த்த பாவமே காட்டவில்லை.

    செந்திலுக்கு அவளை உற்றுப் பார்க்க முடியவில்லை. பார்த்தால் ‘என்ன மேன் இது அநாகரீகம்... முன்பின் நீ பொம்பிளையையே பார்த்ததில்லையா?’ என்று கேட்பர். அசிங்கம்.

    அவனுக்கு வியர்த்துப் போயிற்று. மெனு கார்டைக் கொடுத்துவிட்டு கவுண்டருக்கு வந்தான். தலைவலிக்கிற மாதிரி இருந்தது. மேற்கொண்டு அங்கே நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

    பக்கத்து டேபிளைக் கவனித்த கணேசனிடம் "அந்த டேபிளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1