Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suvaasam Unnodu
Suvaasam Unnodu
Suvaasam Unnodu
Ebook109 pages39 minutes

Suvaasam Unnodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Suvaasam Unnodu

Read more from N.C.Mohandass

Related to Suvaasam Unnodu

Related ebooks

Related categories

Reviews for Suvaasam Unnodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suvaasam Unnodu - N.C.Mohandass

    1

    பெண் வாசத்தை அனுபவிக்கவும் ஒரு யோக்யதை வேணும்!

    முகத்தில் வெளிச்சம் தாக்கி, மண்டைக்குள் மின்சாரம் பாய்ந்தது போலருக்கவே- விக்கி, ‘விடிஞ்சிருச்சா?’ என்று போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்தான்.

    கண்களைத் திறக்க முடியாமல் வெயில் கூசிற்று: ஏ... யார்றா கர்ட்டனைக் கழட்டினது? மனுஷன் தூங்க வேணாம்?

    எய்! மனுஷப் பிறவி எடுத்திருக்கிறதால தூங்கறியா... இல்லை தூங்கறதுக்காக நீ மனுஷப் பிறவி எடுத்திருக்கியா...?

    துவைக்க வேண்டி கர்ட்டனைக் கழற்றிக்கொண்டிருந்த பழனி, ‘ஹ்... ஹ்... ஹ்...’ என்று வாய்க்குள்ளே சிரிப்பை அடக்கினான். எழுந்திரு நாயே

    மணி என்ன? என்று விக்கி லுங்கியைத் தேடினான். எங்கேடா?

    அதுவும் வாஷிங்மெஷினில்

    மகாபாவி! கட்டின லுங்கியை உருவும் கபோதி! விட்டா- கட்டின பொண்டாட்டியையே கட்டில்லருந்து தள்ளிட்டுப் போயிருவீங்க!

    ஆமாம்டா... பதினொண்ணரை வரை தூங்கினால் ரூமு விளங்குமா...?

    ஸாரிக்கா! ராத்திரி டி.வி. பாத்து - இண்டர்நெட்டில் மூழ்கி...

    "ஆமா - இன்டர்நெட்டில் என்ன பாப்பிங்கன்னு தெரியாதாக்கும். ஏண்டா இப்படி வீணாப் போறீங்க! ஜாஸ்மின் டாட் காம்! அனுஷ்யா டாட் செக்ஸ் டாட்...! சீக்கிரம் குளிச்சு ரெடியாகு... மெஸ்ல பிரியாணி! வெள்ளிக்கிழமையாவது நல்லா சாப்பிடுவோம்!!

    வெள்ளிதான் - அரபுநாடுகளில் வார விடுமுறை. அரசாங்க அலுவலகங்களுக்கு வியாழன், வெள்ளி! தனியார்களுக்கும். இவர்களை மாதிரி கான்ட்ராக்ட் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஒரு நாள்தான்.

    அந்த ஒரு நாளில் நிம்மதியாய்த் தூங்கணும்; நண்பர்களைப் பார்க்க சிட்டிக்குப் போகணும்; கண்ணுக்கு இதமாய் சுத்தணும்; வாஷிங், கிளீனிங் எல்லாம் அன்றுதான்.

    இன்னும் கொஞ்ச நேரம் போனால், சீட்டு விளையாட ஒரு சோம்பேறிக் கும்பல் வந்துவிடும்.

    வெளியே மசூதியிலிருந்து அல்லாகு அக்பர்... என்று தொழுகை காற்றில் தவழ்ந்து வந்தது. நேரந்தவறாமல் நடக்கும் தொழுகையும், பக்தியும் அவனுக்கு அங்கு பிடித்தமான ஒன்று. மனிதன் வேறு எதற்குப் பயந்தாலும் பயப்படாவிட்டாலும், கடவுளுக்குப் பயப்படுகிறான்.

    கெட்டது செய்யாதே- பிறருக்குத் தீங்கு விளைவிக்காதே - ஊழல் பண்ணாதே - பிறர் பொருள் தொடாதே - கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய் - கொலை, கொள்ளை செய்யாதே என்று நேராய் சொல்வதைவிட இவற்றைச் செய்தால் பாவம்; தெய்வம் உன்னைத் தண்டிக்கும் எனும் போது அடங்குகிறான். அடங்குகிறோம்.

    கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் இருக்கும் பயம் கண்ணுக்குத் தெரியும் மனிதனிடம் இருப்பதில்லை. பக்திக்குக்கூட ஒரு கட்டுப்பாடும் - கட்டளையும் தேவையாயிருக்கிறது. இந்தந்த நேரம் தொழுகை எனும்போது அனைவரும் ஆஜராகிவிடுகின்றனர்.

    தொழுகையையும், பிரார்த்தனையையும் கவனிக்கும் போது விக்கிக்கு ஊர் நினைப்பு எடுப்பதுண்டு. அங்கேயிருந்தால் தினம் கோயிலுக்குப் போகாவிட்டாலும் வாரம் ஒருமுறை போகலாம். வீட்டிலேயே பஜனை!

    கோயில் என்பது பக்திக்காக மட்டுமில்லாமல், வியாபாரம், லுக் விடுதல் எனப் பல விஷயங்களுக்கும் பலனுள்ளதாக இருக்கின்றது. வேறு எந்த மதத்தையும்விட இந்து மதத்திற்கு விசால மனது. இங்கே எல்லாம் நம் விருப்பம் நினைத்தபோது பிரார்த்திக்கலாம். விழுந்து வணங்கலாம். கோயிலைச் சுற்றி உருளலாம். மொட்டை, காவடி, வேல் குத்தலாம்!

    ஊரில் இருக்கும்போது கோயில் மட்டுமில்லை; கல்யாணம், சினிமா, கடைவீதி என்று சந்தோஷம் தருவதற்குப் பல வழிகள். இங்கே எல்லாமே வறட்சி. குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட்டு வந்து - பாலைவனக் கானல்! பணத்திற்காகப் பலதையும் இழக்க வேண்டியுள்ளது.

    என்ன யோசனை...? சீக்கிரம் போய் - பழக்கமிருந்தா பல் தேய்ச்சுட்டுக் குளிச்சுட்டு வா... மெஸ்ஸுக்குப் போகணும்...

    இதோ ஆச்சு! என்று அவன் படுக்கையை மடிக்க, ஒரே கப்பு! கட்டிலுக்குக் கீழ் பூச்சிகள் ஓடிப்பிடித்து விளையாண்டன. நகமும் சதையும் போல, ஜெ.வும் சசியும் போல, நாயும் வாலும் போல- பேச்சிலரும் பூச்சிகளும் பிரிக்க முடியாதவர்கள்.

    வெளியே அனல் காய, உள்ளே பாக்ஸ் ஏஸியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. இடையிடையே மெஷினின் இரைச்சல் வேறு.

    பாத்ரூம் போய் பைப்பைத் திறக்க, கொதித்தது. இதே குளிர் நாளில் ஜில்! விரல்களெல்லாம் மதமதத்துப் போகும். ஒன்றுக்கொன்று முரணான காலாவஸ்தை! எல்லாம் பணம் இல்லாவிட்டால் இங்கே யார் வரப் போகிறார்களாம்!

    ஹாலில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்தோணி, (இடுப்பில் ஒரு முழம் துண்டு, உள்ளே நைந்து போன ஜட்டி) லிஃப்ட் பக்கம் சலசலப்பு கேட்க, கதவின் ஸீத்ரு கண்ணாடியில் எட்டிப் பார்த்து, ஆஹா... என்று வடிவேலு ஸ்டைலில் உச்ச் கொட்டினான்.

    வந்து பாருடா... எதிர்த்த ப்ளாட்டுக்குப் புதிதாய் ஒரு குயில்!

    எங்கே நகரு என்று பழனி தன் தடி உடலை இடித்துக்கொண்டு நோக்கினான். அங்கே பனியனும் ஸ்கர்ட்டுமாய், உருண்டை முகம், உருண்டை உடல், எல்லாம் உருண்டையாய்!

    ஒரு பிலிபைனி பெண், தன் வார்ப்புக் கூந்தலைப் படரவிட்டு, வாசம் பரப்பிக் கொண்டிருந்தாள்.

    அவர்கள் எல்லாம் உருவத்தில் ஒரே மாதிரி பிம்பம். ஒரே மாதிரி கட்டையான கால்கள்! முழங்காலுக்குக் கீழ் தோலோடு தோலாய் ஸ்லாக்ஸ் அணிந்து - ஆண்டவா! ஏண்டா எங்களை இப்படி சோதிக்கிறாய் என்று பழனி உருகினான்.

    இது புச்சு இல்லேபா... பழசுதான்! கொஞ்சமிரு என்று அந்தோணி யதேச்சையாய் கதவைத் திறக்கிற மாதிரி திறந்து குப்பையை வெளியே கொட்டுகிற மாதிரி பக்கட்டுடன் வெளியே போனான்.

    - அவள் புன்னகைக்க, ஹாய்... ஹலோ! என்றான்.

    அவளும் ஹாய்! என்று இளித்து, முடியைக் கோதிக்கொண்டு, ஹவ் ஆர் யூ? என்றாள். உடன் கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்து படார்!

    அவனுக்கு உடலெல்லாம் ஐஸ் பூத்து, செம கட்டை என்று பொருமினான்.

    மெல்லப் பேசுடா... கட்டை விளக்கமாறு தூக்கப் போகுது!

    சேச்சே! இவ அந்த மாதிரி இனமில்லே. பார்த்தியா - என்னைப் பார்த்து ஹவ் ஆர் யூன்னு கேட்டதை?

    Enjoying the preview?
    Page 1 of 1