Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adukkalai Arasiyal
Adukkalai Arasiyal
Adukkalai Arasiyal
Ebook52 pages24 minutes

Adukkalai Arasiyal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆசைக்கும் சில வரைமுறைகள் உண்டு. தம் பெற்றோர்களின் பணத்தில் செழிப்பாக வாழ நினைப்பவர்கள் அவர்களை சரிவர கவனிப்பதில்லை.
அத்தகைய பெற்றோர்கள் எடுக்கும் சில முடிவுகள் வயதில் மட்டுமல்ல அனுபவத்திலும் பெரியவைகள் என்பதை தேவிபாலாவிற்கே உரிய விறு விறுப்பான நடையில் வாசிக்கலாம்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606552
Adukkalai Arasiyal

Read more from Devibala

Related to Adukkalai Arasiyal

Related ebooks

Reviews for Adukkalai Arasiyal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adukkalai Arasiyal - Devibala

    https://www.pustaka.co.in

    அடுக்களை அரசியல்

    Adukkalai Arasiyal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அதெல்லாம் சரிப்படாதுங்க!

    ஏன் சரிப்படாது? அதுல என்ன கஷ்டம்? சொல்லு பாக்கலாம்!

    அப்படியே உங்களுக்கு வரப்போற மொத்தப் பணத்தைக் குடுத்துடப் போறீங்களா?

    ஆமாம்!

    அஞ்சு லட்சத்தையுமா?

    ஆமாம்னு சொல்றேன்...

    எனக்கு இதுல சம்மதமில்லீங்க! இந்தக் காலத்துல வயசான யாருமே முட்டாளா இல்லை! நமக்குப் பிடிமானம் பணம்தான். அதையும் குடுத்துட்டு, என்ன செய்யப் போறம்?

    என்னைக் கொஞ்சம் பேச விடறியா?

    சொல்லுங்க!

    இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு ரிடையர்மென்ட்! இல்லையா?

    ஆமாம்!

    நான் ரிடையரானா மொத்தப் பணம் அஞ்சு லட்சமும், பென்ஷனா கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாயும் கிடைக்கும்!

    சரி!

    நமக்கு மகன் இல்லை! சரோஜினி ஒரே ஒரு பொண்ணுதான்!

    நீங்க விஷயத்துக்கு வாங்க!

    சரோஜினி போன வாரம் இங்கே வந்திருந்தப்ப என்ன சொன்னா?

    அம்மா யோசிக்கத் தொடங்கினாள்.

    அப்பா! வாடகை குடுத்து மாளலை! திடீர்ன்னு ஐநூறு ரூபா அடிச்ச அடில ஏத்திட்டான். ரெண்டு பேர் சம்பாதிச்சாலும் வைத்யச் செலவு, வீட்டு பட்ஜெட், பசங்க படிப்புனு மூச்சு முட்டுது!

    நீ வந்த விஷயத்தைச் சொல்லும்மா!

    சொந்தமா ஒரு வீடு கட்டிடலாம்னு அவருக்கு ஆசை!

    செய்ங்க!

    நீ இருடி! இருக்கற செலவுகளை சமாளிக்க முடியலைங்கற! சொந்த வீடு கட்ட பணத்துக்கு எங்கே போவ?

    அப்பாவைத்தான் நம்பியிருக்கேன்!

    நான் எவ்ளோம்மா செய்யணும்?

    மாக்ஸிமம்பா! உங்களைவிட்டா எங்களுக்கு யாருப்பா இருக்கா?

    சரி! மாப்ளைக்கிட்ட பார்த்துக்கச் சொல்லு! ஃப்ளாட் தானே?

    ஆமாம்பா!

    "தேட ஆரம்பிங்க! நான் பண விஷயம் பத்தி யோசிச்சு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1