Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dinasari Ennai Anusari
Dinasari Ennai Anusari
Dinasari Ennai Anusari
Ebook87 pages50 minutes

Dinasari Ennai Anusari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழிலதிபரான பாட்ரிக் தனது இரட்டை மகள்களான ஜோல்மா மற்றும் பிரமிளா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒரு சமயம் பாட்ரிக் தன் மூத்தமகள் ஜோல்மாவின் இழிவான நிலைப்பற்றி அறிந்து வீட்டைவிட்டு வெளியனுப்புகிறார். பாட்ரிக் தனது சொத்து முழுவதையும் பிரமிளாவிற்கு எழுதிவைத்து மரணமடைந்துவிடுகிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த ஜோல்மா தீட்டும் சதித்திட்டம் என்னென்ன? இதற்கிடையில் ராபர்ட் என்பவன் யார்? ஜோல்மா தன் சகோதரி பிரமிளா உடன் அனுசரித்து வாழ்வாளா? இறுதியில் ஜோல்மாவின் நிலை என்ன? வாசித்து தெரிந்துகொள்வோம்...

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580100606636
Dinasari Ennai Anusari

Read more from Devibala

Related to Dinasari Ennai Anusari

Related ebooks

Reviews for Dinasari Ennai Anusari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dinasari Ennai Anusari - Devibala

    https://www.pustaka.co.in

    தினசரி என்னை அனுசரி

    Dinasari Ennai Anusari

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ‘இரவு மணி எட்டரை!’

    ‘அந்த நாலுமாடிக் கட்டிடம், ப்ளோரஸன்ட் பூக்களை தன் உடம்பு முழுக்க மாலையாக அணிந்துகொண்டிருக்க,

    அதன் வாசலில் தன் ஜாவாவை நிறுத்திவிட்டு இறங்கினான் வசந்த்.

    வண்டியை பூட்டிவிட்டு ஒரு சிகரெட்டை உதட்டில் கவ்விக்கொண்டே, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான்.

    அது ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்போல இருந்தது.

    நாலுமாடிக் கட்டிடத்தில் சகலமும் இருந்தது. கடைகள், ரெஸ்ட்டாரெண்ட் என்று கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்க, நிதானமாக நடந்து, உள்ளே நுழைந்தான்.

    பேஸ்மென்டை விரும்பிய படிகளை, மெல்லத்தொட்டு கீழே இறங்கினான்.

    எட்டுப் படிகளைக் கடந்ததும், ஒரு காரிடார்போல பிரிந்தது, இரண்டு பக்கமும்.

    வலதுபக்க மூலையில் –

    ‘CLEOPATRA DANCE HALL’ நியான் கண்கள் திறந்து, திறந்து மூட,

    உடம்பை ‘லேசாக ஒருமுறை உதறிக்கொண்டு, அதன் பக்கமாக நடக்கத் தொடங்கினான்.’

    நடக்கும் வேளையில் வசந்த்பற்றிய ஒரு சின்ன அறிமுகம்:-

    ஏறத்தாழ ஆறடி உயரத்தை (அதற்குக் குறைவான உயரமே உங்கள் கதாநாயகன் இருக்கக்கூடாதா? - கீதா சுப்ரமணியம், கோவை) அணிந்துகொண்டு, அதற்கேற்ற உடம்புமாக, கம்பீரமாக இருந்தான். வெள்ளை நிற சூரிதார் - ஜிப்பா அவனது கறுப்பு நிறத்தை கேலி செய்ய, மீசையில்லாமல், நீளமான கண்களோடு அசப்பில் நம்மூர் ரகுவரன்போல தோன்றினான். உருவ வர்ணனை மட்டும் இப்போதைக்குப் போதும். அவன் குணாதிசயங்கள், அடுத்துவரும் பாராக்களில், உங்களுக்கே தெரிந்துவிடும்.

    டான்ஸ் ஹால் வாசலில் டிக்கெட் கவுண்டரில் பணம்கொடுத்து, டிக்கெட் வாங்கும்போதே, உள்ளே காபரே ஆடப்போவது யார் என்று போர்டு பார்த்தான். வாயில் நுழையாத பெயருடன், காலை ‘பராக்’ என்று விரித்துக்கொண்டு ஒருத்தி காமத்துடன் சிரிக்க,

    சிகரெட்டை வீசிவிட்டு,

    உள்ளே நுழைந்தான்.

    ஏஸியின் குளிர் அந்தநேரத்தில், அவசியமில்லாமல் இருந்தது.

    காலியாக இருந்த ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துகொண்டான்.

    இசைக்குழு தன் வேலையைச் செய்துகொண்டிருக்க,

    இன்னும் ஹால் நிரம்பவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள்...

    பேரர்வந்து பவ்யமாய் நிற்க,

    ‘ஷிவாஸ் ரீகல், சிக்கன் 65, க்வாட்டர், பொட்டட்டோ சிப்ஸ், பிக்கிள்ஸ்.’

    மளமளவென ஆர்டரைக் குறித்துக்கொண்டு பேரர் விலக,

    சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். கண்களை இறுக மூடிக்கொண்டான்.

    மெலிதான ஜாஸ் இசை, காதில் நூல் பிடித்ததுபோல சீராகச்சென்று இறங்க,

    ‘காலம் கலிகாலம்!’ என்றொரு வார்த்தை காதில் விழுந்தது.

    ‘யாரது? காபரே ஹாலில், கர்நாடகமான வார்த்தைகள்.’ சிரிப்புவந்தது.

    ‘ஒரு பொம்னாட்டி, இங்கெல்லாம் வருவாளா? பார்த்தா பையனாட்டம் இருக்கா பாரு’

    பக்கத்து மேஜையில் பேச்சுகள்.

    ஆர்வத்தை அடக்கமாட்டாமல், கண்களைத் திறந்து பேச்சுவந்த திசையில் கவனித்தான்.

    வேட்டி கட்டிக்கொண்டு, சூழ்நிலைக்குப் பொருந்தாத இரண்டு முதிர் இளைஞர்கள் (?) பார்வையை ஒரே திக்கில் செலுத்த,

    வசந்த் அதே பக்கம் பார்த்தவன்,

    அதிசயப்பட்டான்.

    ‘பெண்தான்!’

    ‘காபரே ஹாலில், ஒரு பெண்!’

    இவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சிகரெட்டை உருவி, லைட்டரில் ஜோதினை உண்டாக்கினாள்.

    ‘அரகரா’ என்றது கிழட்டு மேஜை.

    சுவாரசியம் பிடித்துவிட்டது வசந்த்துக்கு.

    ‘புகைக்கும் பெண்கள் அவனுக்குப் புதிதல்ல ஆனால், காபரே ஹாலில், எந்த ஒரு துளையும் இல்லாமல்,

    Enjoying the preview?
    Page 1 of 1