Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inaiyana Ilamaaney
Inaiyana Ilamaaney
Inaiyana Ilamaaney
Ebook107 pages32 minutes

Inaiyana Ilamaaney

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சம்பத் மற்றும் மதுராணி இருவரும் கல்லூரி நண்பர்கள். சம்பத் மதுராணியை விரும்பினாள் மதுராணியோ சுரேந்தர் என்பவரை விரும்பி மணம் முடித்து கொள்கிறாள். சம்பத் வேலை செய்யும் கம்பனிக்கு இண்டர்வியூக்காக மதுராணி வருகிறாள் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். சம்பத் சுரேந்தரை ஒரு பெண்ணுடனும் ஒரு குழந்தையுடனும் பார்கிறான். சம்பத் சுரேந்தரை நல்லவன் இல்லை. அவனுக்கு இன்னொரு குடும்பம் இருக்கின்றது என்பதை நிரூபித்தானா? யார் அந்த ஸ்டெல்லா? மதுராணியின் நிலை என்ன?

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580137107241
Inaiyana Ilamaaney

Read more from R. Sumathi

Related to Inaiyana Ilamaaney

Related ebooks

Reviews for Inaiyana Ilamaaney

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inaiyana Ilamaaney - R. Sumathi

    https://www.pustaka.co.in

    இணையான இளமானே

    Inaiyana Ilamaaney

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    சம்பத் திகைப்பாக அவளைப் பார்த்தான். அவனுடைய கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

    எதிரே நிற்பவள் மதுராணியா?

    மார்போடு தன் சான்றிதழ்களை அணைத்தபடி நின்றிருந்த அவளுக்கும், அவனைக்கண்டு அதே திகைப்பு என்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது இருவரின் பிரமிப்பிலும் தெரிந்தது.

    மது... மதுராணி அவனுடைய இதழ்கள் ஓசையின்றி உச்சரித்தன. அவள் வியப்பாக புருவம் உயர்த்தினாள். விழிகளை அறையை சுற்றி ஒருமுறை சுழற்றிவிட்டு அவன்மேல் நிறுத்தினாள். அவனுடைய உடை உட்கார்ந்திருந்த கம்பீரம் அவளை இன்னும் புருவம் உயர்த்தவைத்தது.

    சம்பத்... சம்பத் நீ... இந்த கம்பெனிகு எம்.டியா? அவள் படபடப்புடன் கேட்டாள்.

    அவன் அவளை உட்காரும்படி இருக்கையைக் காட்டினான். அவள் அமர்ந்ததும் அவளை ஒருகணம் உற்றுப்பார்த்தான்.

    அப்படியே இருக்கிறாள்! அதெப்படி? கொஞ்சமும் குறையாத அழகு. கூடியிருந்ததைப்போல் இருந்ததே தவிர குறையவில்லை. பருத்தி சேலை. ஆனால் அதை அவள் ஒருத்திக்குத்தான் நேர்த்தியாக உடுத்த தெரியும் என்பதைப்போல் கம்பீரம் காட்டியது.

    அவனை வாட்டி வதைத்த விழிகள்! ஏட்டிக்கு போட்டி பேசும் இதழ்கள். முகத்தை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பெருமூச்சு.

    அவன் முற்றிலும் மறந்து நின்ற வேளையில் சொர்க்கத்தை திறந்து கொண்டுவந்த தேவதையாக இந்த அலுவலகத்தின் கதவை திறந்து கொண்டுவந்து நிற்கிறாள்!

    மது... எப்படியிருக்கே?

    ம்... நல்லாயிருக்கேன். இந்த வேலை கிடைச்சா இன்னும் நல்லாயிருப்பேன். அவள் மென்மையாக சிரித்தாள். தொடர்ந்தாள்.

    சம்பத் உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீட்ல நீ இருப்பேன்னு. அப்படியே திகைச்சுப் போயிட்டேன் தெரியுமா? நீ இவ்வளவு பெரிய கம்பெனிக்கே முதலாளியாயிருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. எப்படி... எப்படி இந்தளவுக்கு உயர்ந்தே? அவள் பிரமிப்பாக அவனைப் பார்த்தாள்.

    சம்பத் கையிலிருந்த பேனாவை விரல்களுக்கிடையே உருட்டியபடி சிரித்தான்.

    நான் சொன்னேனா? இந்த கம்பெனிக்கு நான்தான் முலாளின்னு சட்டென்று மதுராணியின் பிரமிப்பு மாறியது. மறுகணம் அலட்சியமான பாவனை ஓடியது.

    அப்போ நீ முதலாளி இல்லையா?

    இல்லை, இங்கே நான் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். எம்.டி.க்கு அடுத்தபடி நான்தான். எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவை. அதுக்குத்தான் இந்த இன்டர்வியூ. எங்க எம்.டி. சிங்கப்பூர் போயிருக்கார். அதனால நான் இண்டர்வியூ பண்றேன்.

    அப்போ... இந்த வேலை எனக்கே கிடைக்கும்படி செய்யேன். அவள் உரிமையோடு கெஞ்சினாள்.

    சம்பத்... ப்ளீஸ்... என்னை பஸ் ஸ்டாப் வரைக்கும் டிராப்பண்னேன். கல்லூரி நாட்களில் அடிக்கடி ஓடிவந்து கெஞ்சும் அதே பாவனை.

    அதெப்படி... உன்னை இன்டர்வியூ பண்ணாமலே சொல்ல முடியும்? முதல்ல உன்னோட சர்டிபிகேட்ஸையெல்லாம் கொடு. அவன் கை நீட்டினான்.

    இப்படி ஒரு நிலையை நினைச்சு எனக்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கு

    எதுக்கு வெட்கமாயிருக்கு?

    காலேஜ்ல நீ என்னைப் பார்த்து காப்பியடிச்சு எழுதுவே. எப்பவும் நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயோ அரியர்ஸ் வைக்காத வருஷமே கிடையாது. நீ இன்னைக்கு என்னை இன்டர்வியூபண்ணுறே...? கொடுமையில்லே இது. சட்டென்று சம்பத் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டான்.

    இதப்பாருங்க மதுராணி... இங்க நான் அதிகாரி. நீங்க கேன்டிடேட். அவ்வளவுதான்.

    மதுராணியிடம் எவ்வித இறுக்கமும் இல்லை மாறாக அவளுடைய கடுமை அவளுக்குள் சிரிப்பை பொங்க வைத்தது. வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டாள்.

    அவளுடைய சான்றிதழ்களை புரட்டிக் கொண்டே வந்தவன், ம்... கல்யாணத்துக்குப் பிறகு நிறைய கோர்ஸ் பண்ணியிருக்கே போலிருக்கு... என்றான்.

    அவள் படித்திருந்த கம்ப்யூட்டர் சம்பந்தமான சான்றிதழ்களை ஆச்சரியமாக பார்த்தான்.

    ம்... எல்லாம் என் கணவரோட வற்புறுத்தலால் படிச்சது. அவள் சலிப்போடு சொன்னாலும் தன் கணவனுடைய சாதனையை வெளிக்காட்டும் விதமாக இருந்தது.

    ஏதோ ஒன்று மனதில் அறைந்ததைப் போலிருந்தது சம்பத்திற்கு. இனம் புரியாத அமைதி அவனை அழுத்தியது.

    அவளுடைய தகுதிகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டவன் ஓ.கே.! நீ வெளியில வெயிட்பண்ணு. என்றான்.

    அப்போ... வேலை எனக்குத்தானே. அவள் ஆர்வமாக கேட்க அவன் முறைத்தான்.

    இன்டர்வியூ பண்ணி ரிசல்ட்டை ஒப்படைக்க வேண்டியது மட்டும்தான் என் வேலை. செலக்ட் பண்றது எம்.டி. தான்.

    என்னமோ எம்.டி.க்கு ரைட் ஹேண்ட் மாதிரி பேசினே? எனக்காக கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணக்கூடாதா?

    நீ முதல்ல வெளியில வெயிட்பண்ணு.

    அப்போ எனக்குத்தான் வேலை அவள் சந்தோஷமாக தோளை குலுக்கினாள்.

    நான் உன்னை வெயிட்பண்ண சொல்றது நாம பர்சனலா பேச! வேலைக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை.

    அதுனாலும் உங்க எம்.டி. என்னைத்தான் செலக்ட்பண்ணுவார்

    அவ்வளவு நம்பிக்கையா?

    உனக்கே அவர் வேலை கொடுத்து ரைட் ஹேண்டா வச்சிருக்கும் போது எனக்கு வேலை கொடுத்து லெப்ட் ஹேண்டா கூட வச்சுக்க மாட்டாரா? பொறாமைப்புடிச்சு நீ இடையில புகுந்து கலைக்காமயிருந்தா சரி முறைத்துவிட்டு அவள் வெளியேறிப்போனாள்.

    சம்பத் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1