Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nijamai Sila Nimidangal!
Nijamai Sila Nimidangal!
Nijamai Sila Nimidangal!
Ebook122 pages57 minutes

Nijamai Sila Nimidangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதா - தீபக் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சில காரணங்களால் இருவருக்கும் இடையில் டைவர்ஸ் ஆகி விடுகிறது. தீபக் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்கிறான். மூன்று வருடம் கழித்து சுதாவின் வீட்டிற்கு தீபக் வருகிறான். பழைய காதலுடன் அவளுடன் பேசுகிறான். சுதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சுதா-தீபக் இவர்கள் ஏன் பிரிந்தார்கள்? சுதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன? மறுபடியும் தீபக் சுதாவை சந்திப்பதற்க்கு காரணம் என்ன? என்று கதைக்குள் சென்று படிப்போம்.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137106125
Nijamai Sila Nimidangal!

Read more from R. Sumathi

Related to Nijamai Sila Nimidangal!

Related ebooks

Reviews for Nijamai Sila Nimidangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nijamai Sila Nimidangal! - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நிஜமாய் சில நிமிடங்கள்!

    Nijamai Sila Nimidangal!

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சுதா… ஈவினிங் என்னோட ஷாப்பிங் பண்ண வர்றேயில்லே?

    சுதாவின் முகத்திற்கு எதிரே குனிந்து கேட்டாள் ராதிகா.

    சுதா புன்னகையுடன் கணினியிலிருந்து கண்களை எடுத்து ராதிகாவைப் பார்த்து சிரித்தாள்.

    ஷாப்பிங்? மாசக் கடைசியில் என்ன ஷாப்பிங் பண்ணப்போறே? ரெண்டு நாளா என்னப் போட்டு தொந்தரவு பண்றே?

    சோர்வாக விரல்களை முறித்துக் கொண்டாள். நான் சொல்றேன் என்றபடி தன் இடத்திலிருந்து எழுந்து வந்தாள் காயத்திரி.

    சுதா, மாசக் கடைசியில் எதுக்கு ஷாப்பிங்க்னு கேக்கரியா? நெக்ஸ்ட் வீக் இவளுக்கு மேரேஜ் அனிவர்ஸரி. புருஷனுக்கு டிரஸ் எடுக்கனுமாம். எங்களையெல்லாம் கூப்பிட்டா. ஒருத்தியும் வரத் தயாராயில்ல. அதான் உன்ன கெஞ்சிக்கிட்டு இருக்கா

    ஏண்டி… பொழுதுக்கும் இவ கூட சேர்ந்து கூத்தடிக்கறிங்க. அவகூட ஷாப்பிங் போனா என்ன?

    போடி…? இவ கூட ஷாப்பிங் போறதா? ஐய்யோ சாமி. ஒரு தடவை இவ கூட ஷாப்பிங் போய் நான் பட்டபாடு? அதைக் கேட்டின்னா…

    யேய்… சும்மாயிருக்க மாட்டே? ராதிகா முறைத்தாள்.

    ஏய்… சும்மாயிரேண்டி. பாவம் ராதிகா. நாம யாரும் அவ கூட ஷாப்பிங் வரமாட்டோம்னு தெரிஞ்சுதான் ஒரு வழியா சுதாவை கரெக்ட் பண்ணி வச்சிருக்கா. எதையாவது சொல்லி அதை கெடுத்திடாதே. சுதாவுக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸா இருக்கட்டுமே…

    இன்னொருத்தி காயத்ரியின் வாயை அடைத்தாள்.

    ஆனாலும் காயத்திரி வாயை மூடவில்லை. மூடிய கையை உதறிவிட்டு பேசிக் கொண்டேயிருந்தாள்.

    இருந்தாலும் ராதிகாவுக்கு புருஷன் மேல எவ்வளவு லவ்? மேரேஜ் அனிவர்ஸரிக்கு புருஷனுக்கு டிரஸ் எடுக்க அவளே போறா.

    காயத்திரி சொல்லவும் ராதிகா அவள் பக்கம் திரும்பி சிரித்தாள். என்னோட ஹஸ்பண்டுக்கு எல்லாமும் நாந்தான் செலக்ட் பண்ணனும். நான் செலக்ட் பண்றது எப்படியிருந்தாலும் அதுதான் அவருக்குப் பிடிக்கும் ராதிகா பெருமைப்பட்டுக் கொண்டாள்.

    ஆஹா… எத்தனை அன்பு? புருஷன்னா இப்படியில்ல இருக்கணும். எனக்கும்தான் ஒருத்தர் இருக்காரே. எனக்கு எது பிடிக்காதோ அதைத்தான் செய்வார். நான் போட வேண்டாம்னு சொல்ற டிரஸ்ஸைத்தான் போட்டுக்குவார். இதனாலேயே ரெண்டு பேருக்கும் சண்டை வரும் காயத்திரி அலுத்துக் கொண்டாள்.

    இதற்கிடையில் புகுந்தாள் சுதா.

    ஆமா! இந்த புருஷன்மார்களெல்லாம் ஆரம்பத்துல நமக்குப் புடிச்சமாதிரியெல்லாம் நடந்துப்பாங்க. சின்ன சின்ன விஷயத்துல கூட நமக்குப் புடிச்சமாதிரி நடந்துக்கறவங்க போகப் போக நமக்கு எது புடிக்கலையோ அதைத்தான் செய்வாங்க. எனக்கு இந்த புருஷன் செண்டிமெண்ட்லயெல்லாம் நம்பிக்கை இல்லை. ப்ச் அலட்சியமாக சொன்ன சுதாவை ராதிகா இரக்கமும், இளக்காரமும் கலந்த ஒரு பார்வை பார்த்தவாறே சொன்னாள்.

    புருஷன் செண்டிமெண்டெல்லாம் உனக்கென்னடி தெரியும்? கல்யாணம் பண்ணிப் பாரு அப்புறம் புரியும் சுதா சாய்ந்து அமர்ந்து அவளை ஏளனமாகப் பார்த்து சிரித்தாள்.

    இதப்பார், என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த கல்யாணம்கறதே ஒருத்தரை ஒருத்தர் அடிமைப்படுத்த விரும்பி ஏத்துக்கற அடிமை சாசனம். காலம் முழுவதும் ஒருத்தரை ஒருத்தர் தன் காலடியில வீழ்த்தற முயற்சிதான் இந்த கல்யாணத்துல நடக்குது. இதுல அன்பு, பாசம், காதல் இதெல்லாம் வெறும் பொய். கற்பு, புனிதம், கலாச்சாரம் இதெல்லாம் வெறும் ஹம்பக்.

    காயத்திரி இடுப்பில் கை வைத்தபடி அவளெதிரே வந்து நின்றாள்.

    அப்போ… கல்யாண வாழ்க்கை ஹம்பக்னா… இப்பவெல்லாம் புதுசா ஒரு நாகரிகம் கிளம்பியிருக்கே… லிவ்விங்-டு-கெதர் வாழ்க்கை. அது உனக்கு ஓ.கே வா?

    இந்த கேள்வியை காயத்திரி முன் வைத்ததும் சுதா மிகவும் உற்சாகமாக நிமிர்ந்து அமர்ந்தாள். ஏதோ பட்டிமன்றத்தில் பேசுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.

    கண்டிப்பா ஓ.கே. நிம்மதியா மூச்சு விடற வாழ்க்கை லிவ்விங்-டு-கெதர் வாழ்க்கை. அடைச்சு வச்ச ரூம்ல மூச்சு முட்ட வாழற வாழ்க்கை கல்யாண வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை லிவ்விங்-டு-கெதர் வாழ்க்கையில யாரும் யாரையும் டாமினேட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஒருத்தர் கருத்தை இன்னொருத்தர் மேல திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கவில்லையா எந்த வலியும் இல்லாம வேதனையும் இல்லாம பிரிஞ்சுடலாம். நல்ல நண்பர்களா வாழறதுதான் ஒரு நல்ல வாழ்க்கையா எனக்குத் தோணுது.

    நீ சொல்றதெல்லாம் நம்ம நாட்டுக்கு, நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராது…

    கலாச்சாரம், என்னடி கலாச்சாரம்? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கறதுதான் உண்மையான கலாச்சாரம். புருஷன் செத்ததும் உடன்கட்டை ஏறினது நம்ம கலாச்சாரம். புருஷன் செத்ததும் மொட்டையடிச்சுக்கிட்டு வெள்ளை புடவை கட்டினது கலாச்சாரம். இப்ப அதையெல்லாம் நாம மாத்தலையா?

    கரெக்ட். எனக்கென்னவோ இவ சொல்றதுதான் சரின்னு படுது. பேசாம நான் என் புருஷனை டைவெர்ஸ் பண்ணிட்டு அவர் கூடவே லிவ்விங்-டு-கெதர் வாழ்க்கை வாழலாம்னு இருக்கேன்

    காயத்திரி இப்படி சொல்ல அனைவரும் சிரித்தனர்.

    இதப்பாரு, நீ இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா ஒருத்தனும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஏற்கெனவே உனக்கு முப்பது வயசாயிட்டு, பாவம் அந்த பிரபுதான் உன்னை சுத்திக்கிடிருக்கான். நீ இந்த மாதிரியெல்லாம் பேசினே அவனும் ஓடிடுவான்.

    மறுபடியும் அனைவரும் கொல்லென சிரித்தனர்.

    அனைவரும் சிரிக்கவே சுதாவின் முகம் ஏனோ இறுகியது. அவர்கள் பிரபுவைப் பற்றி பேசினதாலா இல்லை அவளுடைய வயதைப் பற்றி பேசியதாலா? ஏதோ ஒன்று.

    ஏய்… பிரபுவும் நானும் நல்ல ஃபிரண்ட்ஸ். என் கூட படிச்சவன். தப்பு தப்பா பேசாதீங்க… சுதா சுள்ளென விழுந்தாள்.

    நீ வேணா அவனை ஃபிரெண்டுன்னு சொல்லிக்கலாம். ஆனா அவந்தான் அவன் மனசை திறந்து கொட்டிட்டானே. நீதான் அவனை ஏத்துக்க மாட்டேங்கறே!

    "அவனோட

    Enjoying the preview?
    Page 1 of 1